அயோக்கியர்களா? அல்லது முட்டாள்களா?
நடை, உடை, பாவனை, மற்றவர்களை நடத்துதல் ஆகிய சகல காரியங்களிலும் கோவில், சத்திரம், சாவடி முதலிய சகல இடங்களிலும் பேதமும், பிரிவினையும் வைத்து அதன் மூலமே மக்களின் இழிவையும் சிறுமையையும் நிலைநிறுத்தி ஒருவனுக்கு ஒருவனைக் கீழ்மைப்படுத்தி வைத்திருக்கும் முறைகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும், அதற்கு ஆதரவளிப்பவர்களை அடக்க வேண்டும் என்றும் சொன்னால், அதை வகுப்புவாதம் என்று சொல்லுவதும், அந்தப்படியான பேதத்தையும் இழிவையும் சிறுமைகளையும் நிலைநிறுத்த வேண்டுமென்று சொல்லுவதும் வகுப்புவாதம் அல்ல என்றும் சொல்லப்படுமானால் சொல்லுகின்றவர்கள் அயோக்கியர்களா அல்லது கேட்டுக் கொண்டிருக்கிறவர்கள் முட்டாள்களா என்று கேட்கின்றோம்.
- பகுத்தறிவு, தலையங்கம், 02.12.1934
Comments
Post a Comment