Posts

Showing posts with the label சுயமரியாதைத் திருமணம் - ஏன்?

தந்தை பெரியார் அவர்களின் பொன்னுரை

 வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பித் தமது கூட்டு வாழ்க்கையைத் துவக்கிக் கொள்ள ஆசை கொண்டு, அதற்காக ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் - அதற்குப் பெயரே வாழ்க்கை ஒப்பந்தம். வியாபாரம் தொடங்கிய பிறகு ஒப்பந்தம் செய்து கொள்வது பெரும்பாலும் கூட்டாளிகளிடையே அதிருப்தி ஏற்படக் காரணமாய் இருப்பதால், இவர்கள் முன்கூட்டியே ஒப்பந்தத்தைச் செய்து கொள்கிறார் கள். கூடிச் செயலாற்றுதல், கூடி வியாபாரம் செய்தல், கூடிப் பண்ணயம் வைத்தல் ஆகியவற்றிற்குக் கூட்டாளிகள் முன்னாடியே தமக்குள் ஒரு திட்டம் ஏற்படுத்திக் கொள்வது இயற்கையேயாகும்; அறிவுக்கும் பொருந் தியதே ஆகும்; மிகவும் அவசியமாகும். அதுபோலவேதான் வாழ்க்கை நடத்துவதும் வியாரபாரம் நடத்துவது போன்ற ஒரு செயல்தான். வியாபாரத்திற்கு முதலும், உழைப்பும் எப்படித் தேவையோ அதேபோன்று வாழ்க்கைக்கு ஒரு ஆணும், பெண்ணும் அவர்களது இரண்டறக் கலந்த நட்புறவும் தேவையாய் இருக்கிறது. இந்த வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு அறிவு, அன்புப் பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானதாகும். இவற்றில் முரண்பாடு ஏற்படுமாயின் அந்தத் தரு...