தமிழ்த் தேசியம் சில விளக்கங்கள் சில வினாக்கள்
தமிழன் பரந்து விரிந்த நிலத்திற்குச் சொந்தக்காரன் என்றாலும் தற்போது அவன் எல்லை குமரிக்கும் திருத்தணிக்கும் குறுகிவிட்டது . அப்பகுதியைத் தமிழ்த் தேசியமாக நாம் வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுகிறது . அது நியாயமான உணர்வு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது . தேசிய ஒருமைப்பாடு என்ற உணர்வில் வளர்ந்த காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள் இதில் முரண்படலாம் . சரி . அப்படிப்பட்ட தமிழ்த் தேசியம் எப்படிப்பட்டது ? இதற்கு முதலில் வரையறை வேண்டும் . தமிழ்த் தேசியத்தில் வாழும் தமிழர்கள் யார் என்பதற்கு என்ன வரையறை ? ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ் பேசுவதால் அவர்களைத் தமிழர்கள் என்று தமிழ்த் தேசியம் ஏற்றுக் கொள்கின்றதா ? தமிழ்த் தேசியத்தில் மதநம்பிக்கையாளர்களுக்கு இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது . ஆனால் , அவர்கள் இந்துத்வா வாதிகளாய் இருந்து , தமிழர்களையே இஸ்லாமியர் , கிறித்தவர் என்று பிரித்து , வெறுத்தால் அதற்குத் தீர்வு என்ன ? அப்படிப்பட்ட இந்துத்வா தமிழர்கள் தமிழ்த் தேசியத்தில் ஏற்கப்படுவார்க...