Posts

Showing posts with the label கல்வி பற்றிய சிந்தனைகள்

பள்ளிக்கூடத்தின் அவசியம்

இன்று நம் நாட்டில் நம் பிள்ளைகள் படிக்கப் பள்ளிக்கூடங்களுக்குத் தேவை அதிகமாகி விட்டது . இந்த 4,5 வருஷங்களாகச் சண்டை ஏற்பட்ட பிறகும் மேன்மை தங்கிய கவர்னர் சர் . ஆர்தர் ஹோப் துரை வந்தபிறகும் , பள்ளிக் கூடங்களில் படிக்கும் பிள்ளைகள் அதிகமாக ஆகிவிட்டதுடன் , அதிகமான எண்ணிக்கையுள்ள பிள்ளைகள் பாஸ் செய்து காலேஜ் வகுப்புகளுக்கு யோக்கியதை உடையவர்களாகவும் ஆகிறார்கள் . இந்தப் பிள்ளைகள் பெரிதும் தங்களுக்குப் போதுமான பள்ளிக்கூடங்கள் இல்லாமல் தவிக்கின்றார்கள் . அதிலும் இவ்வருஷம் அதிகமான தவிப்பு . சென்றவாரம் வந்த மெயில் பத்திரிகையில் சென்னை காலேஜ்களில் படிக்க வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை அமோகமாய்ப் பெருகிவிட்டது என்றும் , அனேக காலேஜ்களில் இடமில்லை என்று வெளியில் பலகை எழுதி தொங்கவிட்டிருக்கிறது என்றும் , பிள்ளைகள் இடமில்லாமல் தெருத்தெருவாய் அலைகிறார்கள் என்றும் , உதாரணமாகச் சென்னை பச்சையப்பன் காலேஜுக்கு 600 புதுப்பிள்ளைகள் சேர்க்க வேண்டியதற்கு 2000 விண்ணப்பங்கள் வந்து அப்போதே குவிந்து கிடக்கின்றன என்றும் எழுதி...

நமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்

 இந்நாட்டுத் தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நாம் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள ஏதாவது சாதனமிருக்கிறதா என்று பார்ப்போம். நாம் எப்படித் தெரிந்து கொள்ளுவது? பள்ளியில் படிக்கும்போது ஏதாவது தெரிந்து கொள்ளலாமா என்றால் அங்கு தமிழர்களைப்பற்றி ஒரு சேதியும் கிடையாது. எவ்விதப் பாடப் புத்தகமும் கிடையாது. அரிவரிபால பாடம் படிக்கும்போதும் அய்யர் - பிராமணர் போன்ற வார்த்தைகள் தான் காணப்படுகின்றனவே அன்றித் தமிழர் திராவிடர் என்கின்ற வார்த்தைகளுக்கு அங்கிடமோ அவகாசமோ கிடையவே கிடையாது. மேல் வகுப்புக்கு வந்து அங்கு ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்றாலோ அதற்கும் இடம் இல்லை. தமிழ்நாட்டுக்கு சரித்திரமே இல்லை. இந்து தேச சரித்திரம் என்பதை எடுத்துக் கொண்டால், இராமாயண பாரதமும், அசோகன் மவுரியன் ஆட்சியும், மு°லிம் வெள்ளையர் ஆட்சியும்தான் விளக்கப்படுமே ஒழிய, சேர, சோழ, பாண்டியரைப்பற்றியோ திராவிடர் தமிழ் என்கின்ற ஆட்சியைப் பற்றியோ காண்பது மிகவும் அருமையேயாகும். அவைகள் எந்த வகுப்புக்கும் பாடமாக இல்லை. அப்படி ஏதாவது எங்காவது காண முடிந்தாலும் அது பெரும் பித்தலாட்டமும், மோசடியுமாகத் தான் காணப்படலாமே ...

கல்வி என்றால் என்ன?

தோழர்களே! கல்வி என்னும் விஷயமாய் நான் பேசுவது என்றால், எனக்கு அதிக தைரியம் வேண்டும். ஏனெனில், மக்கள் பெரும்பாலோர் கல்வி என்பதற்கு என்ன பொருள் கொண்டிருக்கிறார்களோ அந்தக் கல்வி எனக்குக் கிடையாது. பிழையற எழுதக்கூடத் தெரியாதவன் - அவையடக்கமாக  நான் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு வல்லினம், இடையினம் கூடச் சரியாகப் பிரயோகிக்கத் தெரியாது. அது மாத்திரமல்ல, ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தை இரண்டு தடவை வருமானால் ஒரு தடவை வல்லினம் போடுவேன்; மறுதடவைக்கு இடையினம் போடுவேன். அந்த மாதிரியான நான், உங்கள் முன் கல்வி  என்பதைப் பற்றிப் பேசுவது என்றால் அது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று பாருங்கள். ஆனாலும் உங்கள் விருப்பத்திற்கும் எனது ஆசைக்குமாக ஏதோ என் அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் அதை அப்படியே ஒப்புக்கொண்டுவிடாமல், நன்றாய் ஆலோசித்து கொள்வது கொண்டு, தள்ளுவதைத் தயங்காமல் தள்ளி விடுங்கள். கல்வி கல்வி என்றால் என்ன? பள்ளிக்கூடத்தில் சர்க்கார் பள்ளிக்கூட அதிகாரிகள் ஏற்படுத்தின திட்டப்படி அவர்கள் குறிப்பிடும் விஷயங்களைக் கொண்ட புத்தகங்களை உருப...