நான் யாருடைய பாராட்டுக்காகவும் உழைக்கவில்லை -கி.வீரமணி
தமிழக அரசின் சிந்தனைக்கு பெண்களுக்கு மூன்றில் ஒரு பகுதி , தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது . மக்கள் தொகை கணக்கு ( Census ) சரியாக எடுக்கப்படாத காரணத்தால் பிற்படுத்தப்பட்ட மக்கள் , மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை உள்ளடக்கி இம்முறை அது - உயர்நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி கடைப்பிடிக்கப்பட வில்லை . உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஆணை பிறப்பிக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தின்படி , அது கட்டாயமாக்கப்படவில்லை ; விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது . ( இது ஏன் என்பது எல்லோருக்கும் புரிந்த ஒன்றேயாகும் .) இப்போது நடைபெற்றதில் கணிசமான அளவுக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தமிழக முதலமைச்சர் அவர்கள் கூறியுள்ளார் ; அது மகிழ்ச்சிக்குரியதுதான் என்றாலும் , சட்ட ரீதியான உரிமையுடன் இணைந்த பாதுகாப்பே நீண்ட கால பாதுகாப்புக் கண்ணோட்டமாகும் . அந்த மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு சரியான உத்தரவாதம் அளிப்பதாகும் . எனவே முன்கூட்டியே முறையான ஜாதி...