குழந்தையைப்போன்ற பாசம் காட்டினார்
இவர் ஒன்றும் இயக்கத்துக்காரர் இல்லை . சிறுநீரகத் துறையில் மிகப் பெரிய மருத்துவர் . தந்தை பெரியார் அவர்களுக்கு குடல்இறக்க நோய்க்கு அறுவை மருத்துவம் செய்தவர் . அதுமுதல் தந்தை பெரியாரின் பாசமிகுந்த பக்தர் ஆனார் . முன்பின் அறியாத ஒரு மருத்துவர்கூட தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்த மாத்திரத்தில் , சிறிது காலம் பழகிய சூழ்நிலையில் , எந்த அளவுக்குப் பாதிப்புக்கு ஆளானார் என்பதை டாக்டர் பட் அவர்கள் ஆசிரியர் மானமிகு கி . வீரமணி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் உணர முடிகிறது . எத்தனையோ மரணங்களைச் சந்தித்த மருத்துவரை தந்தை பெரியாரின் மரணம் எப்படிப் பாதித்தது - தழுதழுத்த உணர்வை பேனா மையினால் நெகிழ விட்டுள்ளார் . படியுங்கள் - கண்ணீர் உகுக்காமல் இருந்தால் ஆச்சரியம்தான் ! அன்புள்ள திரு . கி . வீரமணி அவர்களுக்கு , சஞ்சலம் நீங்கி மனம் ஒருமுகப்பட்ட பின்பு உங்களுக்கு எழுதுகிறேன் ; அய்யா மறைந்ததை ஒட்டி ஏற்பட்ட துன்ப நினைவுகளில் இருந்து மெள்ள மீண்டு வருவீர்கள் என நம்புகிறேன் . துன்பத்தை ...