Posts

Showing posts with the label பி.ஜே.பி ஒரு பேரபாயம்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர் . எஸ் . எஸ் . அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை ( காவியுடை பாசிசம் என்னும் நூலிலிருந்து ) மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ள தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட ,-  தலித் பகுஜன் மக்களை ஏமாற்றிப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படையில் அமைந்த பார்ப்பனீய நடைமுறையைப் பாதுகாப்பதுதான் இந்துத்துவாவின் அடிப்படை நோக்கமாகும் என்பதை , ஆர் . எஸ் . எஸ் . சின் கொள்கைகளையும் , அறிக்கைகளையும்   கூர்ந்து ஆராய்ந்து வந்த எண்ணற்ற கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர் . இந்துத்துவத்தைப் பற்றி   அண்மையில் நான் காண நேர்ந்த ஆர்வமளிக்கும்   ஓர் ஆய்வு அது பெற்றிருக்கவேண்டிய கவனத்தைப் பெறாமல் போனது பெரும் இழப்புக் கேடேயாகும் .  சியாம் சந்தின் காவியுடை பாசிசம் என்ற நூல் ஓர் மதிநுட்பம் நிறைந்த , நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நூலாகும் . சியாம் சந்த் அரியானா சட்டமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்து , கலால் , வரிவிதிப்பு , நகர்ப்புற மேம்பாடு , உணவு , வினியோகம் , சமூக நலம் போன்ற ...