Posts

Showing posts with the label அய்யாவின் இறுதிப் பேருரை

அய்யாவின் இறுதிப் பேருரை பகுதி - 2

இனிமேல்   நாம்   இழிமகன் .  எனவேதான் ,  மாற்றிக்கொள்ளவேண்டிய   அவசியத்திற்கு   வந்துவிட்டோம் ;  அவைகளையெல்லாம்   பார்த்தோம் ,  மாற்றி   ஆகணும் .  சட்டத்திலேயும் ,  சாஸ்திரத்திலேயும்   இருக்கிறதினாலே ,  முதல்லே   அதைக்   கேட்டோம் .  சட்டத்திலே   இருக்கிறது   ஒழியவேணும்   என்றால் ,  சட்டம்   ஒழிந்தால்   உண்டு .  சட்டத்திலே   ஒழிக்கவில்லையானால் ,  ஆட்சியை   ஒழித்தால்தான்   உண்டு .  அவ்வளவுக்கு   நாம்   இப்போது   பக்குவமாகணும் .  ஆட்சியை   ஒழியும்படியாக   இல்லாமல்   பாதுகாத்துக்   கொண்டான் .  தனியாக   இருந்தால் ,  எவனும்   ஒன்னும்   பண்ணமாட்டான் ;  கூட்டாக   இருந்தால்   எல்லாம்   ஒன்று   சேர்ந்துகொள்வார்கள்   என்று  15, 16  நாடுகளாகப்   பிரித்தான் .   அந்தந்த   நாட்டை ,  மற்ற   நாட்டோடு   சம்மந்தமில்லை   ...