Posts

Showing posts with the label பெரியார் எப்போதும் தேவைப்படுகிறார்!

பெரியார் என்கிற மூச்சுக்காற்று திராவிட சமுதாயத்திற்கு எப்போதும் தேவை!

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு உங்களைச் சந்திக்கின்ற இந்த வாய்ப்பில் , எல்லா கருத்துகளையும் எடுத்து வைக்க முடியாது என்பதற்காகத்தான் , அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் காலத்திலிருந்தே இந்த இயக்கம் ஓர் அருமையான பிரச்சார ஏற்பாட்டைச் செய்து , தொடர்ந்து   சிறுசிறு வெளியீடுகள் , புத்தகங்கள் , ஆராய்ச்சிக்குரிய பெருநூல்கள் இவற்றையெல்லாம் வெளியிட்டு வருகிறோம் . அந்தப் பக்கங்களையும் , அதனுடைய அடக்கத்தையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் , லாபமில்லாமல் ஏறத்தாழ அடக்க விலைக்குத் தரக்கூடிய அளவிற்கு , மக்கள் மத்தியில் கருத்துகளைப் பரப்புவதற்காக கொள்கைகளைப் பரப்புவதற்காக - பல்வேறு நூல்களை அச்சிட்டு இங்கே கொண்டு வந்திருக்கிறோம் . இவற்றை நீங்கள் வாங்கவேண்டும் ; படிக்கவேண்டும் ; பிறருக்கும் கொடுத்துப் பரப்பவேண்டும் . காரணம் இந்தக் கொள்கை என்பது எப்படிப்பட்ட ஆதாரப்பூர்வமான கொள்கை , மறுக்கப்பட முடியாத தத்துவங்கள் , ஏற்கப்படவேண்டிய பகுத்தறிவு கருத்துகள் என்பதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வதற்கு அந்த நூல்கள் உ...