பெரியார் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம் தொடர்ச்சி
கண்ணன் திருவிளையாடலும் பொய் பாகவதத்திலுள்ள தெய்வங்களையும் இந்து முன்ஷியார் ஆராய்ச்சி நூல் பொய்யாக்குகிறது . அதாவது , சிறு குழந்தையான கிருஷ்ணன் , கங்கை ஆற்றிலிருந்த பல தலைகளைக் கொண்ட பாம்புடன் சண்டை போட்டு அடக்கி அதை அதன் குடும்பத்துடன் விரட்டினான் என்கிறது பாகவதக்கதை . வைதீகக் குழுவினரான இக்கழகத்தார் தொகுத்துள்ள இந்த வேதகால ஆராய்ச்சி நூலில் , கிருஷ்ணன் பிறந்த சில ஆண்டுகளில் நரிகளின் தொல்லைக்குப் பயந்து யாதவர்கள் கோகுலத்தை விட்டுப் பிருந்தாவனத்திற்குக் குடியேறினர் . அங்கிருந்த நாக சாதித் தலைவனான காளிங்கன் என்பவனைக் கிருஷ்ணன் அடக்கி , அக்காளிங்கனையும் அவனுடைய இனத்தாரையும் வேறிடத்துக்க...