பெரியார் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம் தொடர்ச்சி



கண்ணன் திருவிளையாடலும் பொய்

பாகவதத்திலுள்ள தெய்வங்களையும் இந்து முன்ஷியார் ஆராய்ச்சி நூல் பொய்யாக்குகிறது.

அதாவதுசிறு குழந்தையான கிருஷ்ணன்கங்கை ஆற்றிலிருந்த பல தலைகளைக் கொண்ட பாம்புடன் சண்டை போட்டு அடக்கி அதை அதன் குடும்பத்துடன் விரட்டினான் என்கிறது பாகவதக்கதைவைதீகக் குழுவினரான இக்கழகத்தார் தொகுத்துள்ள இந்த வேதகால ஆராய்ச்சி நூலில்கிருஷ்ணன் பிறந்த சில ஆண்டுகளில் நரிகளின் தொல்லைக்குப் பயந்து யாதவர்கள் கோகுலத்தை விட்டுப் பிருந்தாவனத்திற்குக் குடியேறினர்அங்கிருந்த நாக சாதித் தலைவனான காளிங்கன் என்பவனைக் கிருஷ்ணன் அடக்கிஅக்காளிங்கனையும் அவனுடைய இனத்தாரையும் வேறிடத்துக்குச் செல்லச் செய்து யாதவர்களை அங்குக் குடியேறச் செய்தான். (பக்கம் 280) மற்றும் அங்குள்ள மக்கள் இந்திர யாக முறையைக் கைவிடச் செய்து இயற்கை வணக்க முறையைக் கைக்கொள்ளச் செய்தான் என்றுள்ளது.

கிருஷ்ணனை அவதாரமாக்கியது மகாபாரதத்திற்கு முன்னே நிகழ்ந்திருப்பதாக இந்நூல் கருதுகிறது (பக்கம் 299).

பார்ப்பனர் - அரச மரபினர் சச்சரவு

பார்ப்பனர்களைவிட நாடாளும் குலத்தோர் (க்ஷத்திரியர்உயர்ந்தவர் எனக் காட்டத்தான் புராணக் கதைகள் தீட்டப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர்ஆனால்இக்கதைகளைத் தீட்டியோர் முனிவர் என்ற ஆரியப் பார்ப்பன வேதிய குலத்தவராதலின்ஆளும் மரபினர் சிறப்பைக் கூறுவதுபோல்அச்சிறப்பின் மறைவிலே ஆரியமதக் கோட்பாடுகளையும் வேதியர் சிறப்புகளையும் நுழைத்தனர் என்பதே பொருத்தமாகும்ஏனெனில்அரசன் எவ்வழியோ அவ்வழிக் குடிகள் என்ற மெய்மொழிப்படிஅரசர் வரலாறுகள் மூலம் ஆரியக் கொள்கைகளை திராவிட மக்களிடையே பரப்பினர் என்பதே உண்மையாகலாம்.

மற்றும்இம்மகாபாரதம் உண்மை சரித்திர வரலாறா என்பதையும் இந்த நூலாசிரியர்கள் சந்தேகிக்கின்றனர்பிற்கால வேத நூல்களில் மகாபாரதம் பற்றிய குறிப்பு இல்லை என்றும்இப்போது கிடைக்கப்பெறும் மகாபாரதம் பிற்காலத் தொகுப்பு என்றும்இவர்களும் ஒப்புக் கொள்கின்றனர்இராமன் கிருஷ்ணனைப் பற்றிய வரலாறு யாதாயினும் ஆரிய கலாச்சாரத்தை இந்தியாவெங்கும் பரப்ப இந்தியாவில் ஆரியர் குடியேற வழிசெய்தஆரியப் போர் வீரர்கள் இவர்கள் என்பதில் சந்தேகமில்லை என்கிறது இந்நூல் பக்கம் (315).

பரசுராமன்

மேற்குக் கரையோரங்களில் முக்கியமாக பம்பாய்கொங்கணம்மராட்டாதுளுவம்கேரள வட்டாரங்களில் ஆரியத்தைப் பரப்பியவன் பரசுராமன்.

கி.மு. 6ஆவது நூற்றாண்டு வாக்கில் அதாவது பாணினி காத்யாயனா என்ற சமஸ்கிருத இலக்கணப்புலவர்கள் காலத்தில்தான் தென்னாட்டாருடன் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறதென்கின்றனர் இந்நூலாசிரியர்கள்எனவேஇராமாயண புராண காலங்களில் இலங்கைவரை ஆரியர் ஆதிக்கம் கொண்டதாக இராமாயணப் புலவர்கள் கூறுவது ஆதாரமற்றதாகிறதுஇராமாயணமும் கட்டுக் கதையாகிறது.

ராட்சதர் - அரசர்நைத்தியர்தானவர்நாகர் ஆகிய இனத்தவர் ஆரியப்படையெடுப்பைத் தடுத்துக் கடும்போர் நடத்திய மக்கள் ஆவர்வேதகால ஆரியரும் இவர்களை மனிதர்களாகத்தான் வர்ணித்துள்ளனர்பின்னர்புராணக் கதைகளைப் புனைந்தவர்களேஇனத்துவேஷத்தால் இழிவுதொனிக்கும் முறையிலும்பல்பொருள் சொற்களிலும் வர்ணித்துள்ளனர் என இவ்வாராய்ச்சி நூலில் காணப்படுகிறது.

மந்திரம் என்றால்தேவனைத் துதி செய்யாது அத்தேவனிடம் வரம் கேட்கும் பாக்கள் என்று யாஸ்கா என்பவர் எழுதியிருக்கிறார். (பக்கம் 34).

ரிக் வேதப் பாக்களைத் தொகுத்தவர்கள் புரோகிதர்களே என்றும்அந்த உரிமையிருந்ததென்றும் இந்நூலில் காண்கிறதுஎனவேவேதங்கள் என்பன புரோகிதர்களின் கைச்சரக்கு - எழுத்துச் சித்திரங்களேயாகின்றன.

மற்றும்வேத ஆரியர்கள் எல்லோரும் ஒரு மாதிரியான மொழி பேசவில்லை என்பதும் விளக்கப்படுகிறது.

பணம் பறிக்கப் பயமுறுத்தும் பாக்கள்

மந்திரங்கள் என்பன புரோகிதர்கள் பணக்காரர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கிப் பார்ப்பனருக்குக் கொடுக்கக் கையாண்ட பயமுறுத்தல் பாடல்கள் என்று இந்நூலில் விளக்கம் தரப்பட்டுள்ளது. (பக்கம் 342).

இதனால்தான் வேத பாடல்களில் கடுமையானகாரசாரமான சொற்கள் புகுத்தப்பட்டுள்ளனவாம்!

இவ்விதம்பணக்காரர்களை அச்சுறுத்திப் பிடுங்கப்படும் பணம் பார்ப்பனர்க்கேயாகும்ஏழைகளுக்குத் தரப்படவில்லை என்றும் ஏழைகளிடம் உண்மையான பரிவுஅனுதாபம் காட்டும் பண்புகள் ரிக்வேதத்தில் இல்லை என்றும் இந்நூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுமற்றும்வேதப்பாடல்கள் எல்லாம் வெறும் சடங்குமுறைப் பாடல் தொகுப்பேயென்கின்றனர்.

தெய்வத்தைப் புகழ்ந்து தலைதடவி அருள்பிச்சை கேட்பதே வேதத்தின் குறிக்கோள்.
யமதர்மராஜனைப் பற்றியோமோட்ச நரகத்தைப் பற்றியோ ஆதி வேதத்தில் குறிப்புக் காணோம் என்பதால்இவை பிற்காலத்துப் பார்ப்பன புரோகிதர்களின் பிழைப்புக்காகப் புனையப்பட்ட கட்டுக்கதையாகிறது.

நாலாயிரப் பிரபந்தம் - நாயன்மார் பாடல்கள் ஆகியவற்றிலுள்ளது போன்றே ரிக் வேதத்திலும் காதல் துறைப் பாடல்களும் கலந்துள்ளனதெளிவுறக் கூறுமிடத்து மத சம்பந்தமற்ற பாடல்களும் ரிக் வேதத்தில் அதிகமுள்ளன.

ரிக் வேதத்தில் பிறவிச் சாதிப் பிரிவு பற்றி யாதொரு குறிப்பும் காணோம்மனுதர்ம சாஸ்திரம்கீதை முதலியவற்றில் தான் பிறவிச் சாதிச் செய்திகள் காணப்படுகின்றனஎனவேபிற்கால பிராமண மதத்தினர்களின் கற்பனையே இந்தச் சாதி வேறுபாடு என்பது வெட்டவெளிச்சமாகிறதுஆரியர்களும் நரபலிக் கோட்பாட்டினராக இருந்துள்ளனர்ஆயினும்பிற்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக மிருகங்களைப் பலியிட்டனர்.

மற்றும்ஆரியர்கள் ஒரே கடவுள் கொள்கை கொண்டவர்களல்லர்ஒவ்வொரு குடும்பமும் தத்தமக்கு ஒவ்வொரு தெய்வத்தைக் கற்பனை செய்து கொண்டும்தத்தமது விருப்பப்படி ஏதோ சந்தப்பாடல்களைப் பாடியும் அந்தத் தெய்வத்திடம் தங்கள் வறுமை நீங்க வரமிருந்து வந்துளர்ரிக்வேதமும் ஒரு தனி முதல் கடவுள் கொள்கை கொண்டதல்ல.

எது கடவுள்?

ஒவ்வொரு ரிஷி என்பவரும்ஒவ்வொரு தெய்வத்தை உண்டு பண்ணிக் கொண்டனர்ரிஷிகளுக்குள் சச்சரவும் கருத்து வேற்றுமையும் ஏற்படும்போதெல்லாம் ஒவ்வொரு புதுத்தெய்வம் உற்பத்தி செய்யப்பட்டுவிடும்ஒவ்வொருவரும் மற்றவரின் தெய்வத்தைக் குறைகூறி வசைபாடி இழிவுபடுத்திப் பேசிச் சச்சரவு இட்டுக்கொள்வர்இவ்விதம் ரிஷிகளுக்குள் ஏற்பட்ட சண்டையே தெய்வங்களுக்குள் ஏற்பட்ட சண்டையாகப் புராணங்களில் கற்பனை செய்யப்பட்டுள்ளதுஇவற்றால் ரிக் வேதம் உண்டான வரலாறும் எப்படியென்று காணமுடியாதுள்ளது என்று இந்நூல் குறிப்பிடுகிறதுஇதிலிருந்து இந்த ரிக் வேதம் ஒரு வேத வியாசராலோ கடவுளாலோ ஆக்கப்பட்டதென பார்ப்பனர் கூறுவது ஆதாரமற்றதாகிறதுபற்பல காலங்களில் பற்பல தலைமுறைகளில் பற்பலர் தத்தமது விருப்புக்கும் அறிவுக்குமேற்ப ஆக்கிய பிரார்த்தனைப் பாடல்களின் தொகுப்பே இந்த வேதங்கள் என்பது தெளிவு.

புரோகிதர்களுக்கே தெரியாது

புரோகிதர் எல்லாக் கடவுள்களையும் (விஸ்வதேவர்களைப்பிரார்த்திப்பதிலிருந்து இந்தப் புரோகிதருக்குக் கடவுளின் நிலவரம் இன்னதென்பதே தெரியாதென்பது புலனாகிறதென்கிறார் மாக்டனல்டு என்பவர்.
இப்போதைய புரோகிதர்களும் இதே போன்றுதானே ஆயிரம் தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி அர்ச்சனையும் பூசையும் நடத்துகின்றனர்இதிலிருந்து இவர்கள் தனி முதற் கடவுளில் நம்பிக்கையற்றவர்களாகின்றனர்இவ்வித அவநம்பிக்கைதான் மதச் சண்டைகளுக்கு மூலகாரணமாகிறதுமெய்யறிவு பெறாமையே அவநம்பிக்கைக்குக் காரணம்.

அறிஞரல்ல

எனவேமதச் சண்டை நடத்திய மத ஆச்சாரியர்களும் குருக்களும் பிறரும் மெய்யறிஞர்கள் அல்லஒரு தனிக்கடவுள் கொள்கையினரல்லஅந்தத் தனிப்பெரும் கடவுளின் அருள் பெற்றவருமல்லஅந்தக் கடவுளின் தன்மையையும் உணர்ந்தவர்களோ அறிந்தவர்களோ அல்ல என்பது தெளிவாகிறதுஇன்னும் தெளிவுறக் கூறுமிடத்துஆஸ்திகர் என்று கூறிக்கொண்டு பல தெய்வ வணக்கம் செய்பவர்கள்கடவுளின் உண்மையறியாதவர்கள்அவர்கள் மொழியின்படி அவர்களே நாஸ்திகர்களாகின்றனர்ஏனெனில்ஒரு தனிக் கடவுள் நம்பிக்கை இல்லாததால்தான் பல தெய்வங்களைப் பிரார்த்திக்கின்றனர்.

அவரவர்களுடைய விருப்பு வெறுப்புப்படிக் கடவுள்களும்அவரவர்கள் வாய் போனபடி மந்திரப் பாட்டுகளும் உற்பத்திப் பெருக்கம் செய்து வந்திருப்பதாலும்ஒருவர் தெய்வத்தில் மற்றவருக்கு நம்பிக்கையில்லாததாலும்இந்த தெய்வம் என்பதே வெறும் கற்பனைப் பித்தலாட்டமாகிறதுமற்றும்மந்திரம் என்று எதனைக் கூறுகிறார்களோ அதில் எந்தவித மகிமையும் கிடையாதுஒருவரைத் திட்டுவதில் எவ்வளவு தெய்வீக சக்தியுள்ளதோ அவ்வளவு தெய்வீக சக்திதான்இந்த ஆள்மிரட்டல் செய்கின்றபணக்காரர்கள் பணத்தைக் கரைக்கச் சொல்லும் சொல்லடுக்குகளில் உள்ளதென்பது வெட்டவெளிச்சமாகிறது.

தலைவர்களே!

மணிச்சுருக்கமாகக் கூறுமிடத்துஇந்த மந்திரமென்பது பணம் பறிப்பதற்கான ஆள்மிரட்டல் அடுக்குச் சொற்களேயாகும்மற்றும்இப்போது ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தலைவர் இருப்பது போல்படைக்குத் தளபதியிருப்பது போல் இந்தப் பார்ப்பனீய தெய்வங்களும் பல்வேறு பிரிவு - கட்சி - ஆரிய முனிவர்களின் கற்பனைத் தலைவர்களேயாவர்மற்றும்கண்காணும் தலைவரைக் குறிப்பிடாதுகண்காணாத கற்பனைத் தலைவர்களை இவர்கள் குறிப்பிட்டிருப்பதால்இவர்கள் மூடநம்பிக்கையில் முழுக்க முழுக்க மூழ்கியிருந்த அறிவுவளம் பெறாத அநாகரிகர்கள் என்பதும் கண்காணாதவற்றை எண்ணிப் பயப்படும் சிறு பிள்ளை மனப்பான்மையினரென்பதும் புலனாகிறது.

பிள்ளைமனக் கற்பனை

அதாவதுசிறுகுழந்தைகள் பூச்சாண்டியை எண்ணிப் பயப்படுவது போலும்பூச்சாண்டியெனக் கூறி பயமுறுத்துவது போலும்இந்த வேத மதத்தினரும் பூச்சாண்டித் தெய்வங்களை கற்பனை செய்து கொண்டுள்ளனர்.

குழந்தைகளின் பூச்சாண்டி என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மைதான் இந்த வேத தெய்வங்களுமென்பதும் தெளிவுபடுகிறதுஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போலஇந்த வேதியர்களின் பயங்கொள்ளி மனதிலும் தன்னம்பிக்கையற்ற உள்ளத்திலும்வளம்பெறாத பிள்ளை மதியிலும் கற்பனை செய்யப்பட்டவைகளே தெய்வங்களாகின்றனஎனவேஇந்தத் தெய்வங்கள் என்பனவெல்லாம் வெறும் மாயை மனமயக்கத்தால் கற்பனை செய்து கொண்டவை என்பதே பகுத்தறிவு காணும் தீர்ப்பு.

இந்த ரிக்வேதப்புலவர்களின் கண்முன்னர் எப்போதும் சோமபானமும்சோம மூலிகைச் செடியும் (கஞ்சா போன்றதுஇருக்குமாம்சோமயாகம்தான் ஆரியர்களின் முக்கிய யாகம்மதுக்குடித் திருவிழா இந்தச் சோமயாகம் போலும்ரிக் வேதத்தில் ஒன்பதாவது பகுதி முழுவதும் இந்தச் சோமபான மகிமை உற்பத்தி முறை பற்றிய வர்ணனைப் பாடல்களையே கொண்டிருக்கிறதுசோமரசச் செடியின் மொக்குகொழுந்துகம்பு முலியவற்றை இடித்துச் சாறெடுத்து வடிகட்டிச் சுத்தமாக்கிப்பாலும் தண்ணீரும் கலந்து இனிப்பாக்கிக் குடிப்பராம்பாலுடனும்மோருடனும்கஞ்சியுடனும் கலந்து தினம் மூன்று வேளை தவறாது உண்பராம்.

அமிர்தம்

மூவா மருந்துசாவா மருந்துதேவாமிர்தம் என்று சொல்வதெல்லாம் இந்தச் சோமபான (மதுபான)மேயாகும்இது தேவ பானமாம்தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் சாகாத தன்மையையளிப்பதாம்இதற்கு அமிர்தம்சாவா மருந்து என்றும் பெயர்கவிஞர்களுக்குக் கற்பனைச் சக்தியை வளர்ப்பதும் இதுவே என இந்த முன்ஷியார் நூலிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது. (பக்கம் 375).
இந்தச் சோமபான தேவனுக்கு வனஸ்பதி என்றும் பெயராம்.

மக்கள் பழக்க வழக்கங்களே

ஆரிய தேவ வர்ணனைகளை நுணுகிக் கவனித்தால் மக்களுக்குள்ள கோபம் - தாபம் - அன்பு - அழுகை - பகை - உணவு - குடி பழக்க வழக்கங்கள் ஆகிய பலவும் ஆரிய வேதியர் வேதத்தில் பல்வேறு தேவர்களாக உருவகப்படுத்தப்பட்டிருப்பது புலனாகும்.
இத்துடன் மண்மரம்செடிகொடிகல்மலைகாடுஆறுகாற்றுதண்ணீர்தீஅங்கங்கள் ஆகிய யாவும் தேவ கணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

ராட்சதர்கள் எனக் குறிப்பிட்டிருப்பது தஸ்யூகள் - தாசர்கள் எனப்படும் இந்தியப் பழங்குடி மக்களையேயாகும் என்று அந்த முன்ஷி நூலே ஒப்புக்கொள்கிறதுஅசுரர்கள் பெயர் ரிக்வேதத்தின் பிற்பகுதியில் காணப்படுகிறதாம்.

உண்மைகள்

ரிக்வேத புராணக் கோட்பாடுகளை நுணுகிப் பார்த்தால் கீழ்க்கண்ட உண்மைகள் அறியக் கிடக்கின்றன.

1. முக்கிய இயற்கைக் கோள்களையே உயிரும் உடலுமுள்ளனவாக உருவகப்படுத்திக் கொண்டு ஆரியர்கள் வணங்கி வந்தனர்.

2. மரம்செடிகொடிகளையும் தெய்வங்களாக வணங்கினர்.

3. இந்திரனைக்காளையாகவும்சூரியனைக் குதிரையாகவும் ஆரியர் வேதம் உருவகப்படுத்தியிருப்பதால் இவர்கள் மிருகங்களை இந்திரன்சந்திரன்சூரியன் எனப் பெயரிட்டுத் தெய்வமாக்கிக் கும்பிட்டனர் என்பதும் தெளிவாகிறது.

4. நாசம் விளைவிக்கும் சூறாவளிஇடிமின்னல் முதலியவற்றைப் பயங்கர தேவராகக் கருதிஆரியர் அருள் வேண்டி வந்தனர்பாதுகாக்கும்படி மன்றாடியிருக்கின்றனர்.

5. ஆரியர்கள் குறிப்பிடும் வானுலகத் தெய்வம் தேவர் என்பனவெல்லாம் உண்மையில் கிடையாதென்பதும்இவ்வுலகில் காணும் பொருள்களையும்மனிதர் மிருகங்களுக்குள்ள பண்புகளையும்மிருகம்மரம்செடிகொடிகளையும்மழைகாற்றுவெயில்தண்ணீர்நெருப்புமண்மலைகாடு முதலியவற்றையுமே தேவராக ஆரியர்தம் மனத்தில் எண்ணமிட்டுக் கொண்டனரென்பதும் வெள்ளிடைமலையாக விளக்கமாகிறது.

காட்டுமிராண்டித் தெய்வங்கள்

இயற்கைப் பொருள்களுக்கு மனித உடலுருவம் தந்து தேவர்களாக்கியதுடன் விட்டுப்போகவில்லை இந்த ஆரியக் கோட்பாடுமனிதராக்கப்பட்டால் மனிதர்களுடைய நடவடிக்கைகள் விருப்பு - வெறுப்புப் பண்புகள் ஆகிய எல்லாம் சேர்க்கப்படத்தானே வேண்டும் என்று எண்ணினர் போலும்இவ்விதமே சேர்த்தனர்ஆனால்இவ்விதச் சேர்க்கையில் சிறப்புப் பண்புகளைவிடமனிதர்களின் தகாதபண்புகள்இழிகுணங்கள்கேடான நடவடிக்கைகள் ஆகியவைகளையே தேவர்களுக்கு விசேஷ லட்சணமாக்கியுள்ளனர்இதன் உட்கருத்தும் நோக்கமும் என்னதேவர்களை நையாண்டி செய்வதாதேவர்களே இம்மாதிரி கெட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தால்அத்தேவர்களை வணங்கும் அம்மக்களின் ஒழுக்கத்திலும் சந்தேகப்படத்தானே வேண்டும்ஒழுக்கக்கேடர்களுக்கு ஆதரவு தேடபாதுகாப்பளிக்க இம்மாதிரிக் கற்பனை செய்தனர் போலும் என்று கருதத்தானே வேண்டியிருக்கிறதுஇது ஓரளவுக்கு உண்மையாகலாம்நாடோடிகளாகத் திரிந்த அக்கால ஆரிய மக்களின் பழக்கங்கள் அநாகரிகக் காட்டுமிராண்டித் தன்மையில்தான் இருக்கும்பக்குவப்படாதபதப்படுத்தப்படாத இயற்கையுருவ முட்செடிகளாகத்தான் தோன்றியிருக்கும்அக்கால ஆரியர்கள் பண்பாட்டுப் பழக்க வழக்க நடைமுறைக் கோட்பாடுகள் உடையவர்களாக இருந்தனர்சிறந்த நாகரிகமுற்றிருந்த திராவிடப் பெருங்குடி மக்கள் அநாகரிக ஆரிய மக்களைக் கண்டு எள்ளி நகையாடியும் இருப்பர்கண்டித்தும் இருப்பர்தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்தும் இருக்கலாம்.

இத்தகைய கண்டன - தீண்டப்படாத நிலைமையிலிருந்து தப்பத் தங்கள் தேவர்களைச் சாட்சியாக - ஆதாரமாக ஆக்கிதங்களுடைய பழக்க வழக்கத் தகாதப் போக்குகளுக்கு ஆதரவு தேட முற்பட்டுமிருக்கலாம் அந்த ஆரியக் குழுவினர்அதாவது தங்களுடைய தேவர்களிடமே இந்தப் பண்புகள் உள்ளனவெனச் சுட்டிக்காட்டிதங்களுடைய சம்பிரதாயக் கோட்பாடுகளுக்குச் சப்பைக் கட்டுக்கட்ட முற்பட்டனர் போலும்!

இதுஆரியர் இந்தியாவுக்கு வந்த துவக்கக்காலத்திற்கு ஏற்ற வாதமாகலாம்ஆனால்பிற்காலத்தில் அதுவும் மக்கள் நாகரிகச் சிறப்புற்ற அறிவு பண்பட்ட நிலைமையிலும் இத்தகாத பண்புக் கடவுள்கள் எதற்கு எனக் கேள்வி எழுகிறது.

விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் சோறும்தண்டு முண்டுக்காரனுக்குத் தயிரும் சோறும் என்று உள்ளதே தமிழ் மக்களிடையே ஒரு பழமொழிஇந்தக் கோட்பாட்டுக்கு இந்த ஆரியக் கடவுள்கள் தகுந்த உதாரணமாக்கப்பட்டுள்ளனபோக்கிரிகளைக் கண்டு அஞ்சித்தானே மக்களும் அடங்குவர்பணமும் பண்டமும் லஞ்சமாகத் தருவர்சாதுவைக் கண்டால் யாரும் மதிக்கமாட்டர்களேஆதரிக்கமாட்டார்களேஉதவி புரிய மாட்டார்களேஉலகறிந்ததாயிற்று இதுஇந்த உட்கருத்தின் மீதுதான் ஆரிய வேதியரும் பிற்காலத்தில் பிற மக்களை முக்கியமாகத் திராவிட மக்களை வணங்கச் செய்யத் தங்கள் தெய்வங்களுக்கு இந்தப் போக்கிரி இலட்சணங்களைச் சூட்டிக் கொண்டுளர் என்பது விளக்கமாகிறதுஇந்தத் துஷ்ட தெய்வங்களின் பெயரை - போக்கிரி நடவடிக்கைகளைச் சொல்லி மக்களை மிரட்டியும் பயப்படச் செய்தும் பணம் கறந்து சுகவாழ்வு வாழ நம்பகமான வழி இதுவெனக் கொண்டனர் என்றும் துலக்கமாகிறது.

தோத்திரங்கள் மூலமும் புகழ் பாடுவதன் மூலமும் பணமும் பண்டமும் பிரசாதமும் காணிக்கைகளாகத் தருவதன் மூலமும்தான் இந்தத் தெய்வங்கள் திருப்தியடைந்து மகிழ்ச்சியடைந்து கருணை காட்டும் - வரம் அருளும் என்ற கோட்பாட்டைத் தோற்றுவித்தனர்இது உலகறிந்த உண்மையும்யாரும் நம்பக்கூடிய நடப்புச் செயலுமாக உள்ளது.

மக்களிடையேசுற்றத்தாரிடையே அன்பும் ஆதரவும் கூட்டுறவும் ஏற்படப் பணமும் பண்டமும் தருதல் அறிந்ததேஅரசாங்க அதிகாரிகளை வசப்படுத்தவும் இம்முறை கையாளப்படுகிறதல்லவாஎனவேமனிதர் தலையெழுத்தை நிர்ணயிக்கும் - மனிதர்கள் வாழ்க்கையை நிர்வகிக்கும் தலைமை அதிகாரிகளாக இந்தத் தேவர்களைச் சித்தரித்துக் காட்டிப் பூசைபோடவும்காணிக்கை செலுத்தவும் செய்தனர்.

கல்லிலும்மண்ணிலும்மரத்திலும்செம்பிலுமாகிய இந்தத் தேவ உருவங்கள் உண்ணவா போகின்றனபணத்தால் தான் என்ன பலன்அவற்றிற்கு இந்த வேதப் புரோகிதப் பூசாரிகளும் தங்களைவேதப் பிரதிநிதிகளாகவும் பூதேவர்களாகவும் கற்பித்துக் காட்டித் தேவருக்குச் சமர்ப்பித்தவற்றைத் தமக்காக்கிக் கொண்டனர்தாயும் மகளும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வெவ்வேறு தானே என்று வாதிப்பரே தமிழ் மக்கள் உலகறிவோடுஇந்த வாதத்தை ஆரியப் பூசுரர்கள் பொய்யாக்க முற்பட்டு வெற்றியும் பெற்றனர்தமது வாயும் வயிறுமே தேவர்களின் வாயும் வயிறும் என்று பாமர மக்கள் நம்பும்படிச் செய்தனர்இவ்வித நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகக் காட்டுக்கரடி உறுமல் குரல் - சமஸ்கிருத மந்திரங்கள் என்ற கரடுமுரடு உச்சரிப்பு - கழுத்தறுபடும் ஆடு அலறுவது போல் ஒலிக்கும் - வெறி பிடித்தவன் கத்துவது போல் குரலெழுப்பும் சொல்லடுக்குப் பாட்டுக்களையும் தொடுத்துக் கொண்டனர்.

அத்துடன் தெய்வச் சாபம்தெய்வக் கோபம் என்றும் மிரட்டல் வாக்கியங்களைக் கற்பனை செய்து கூறித் தங்கள் கோட்பாடுகளை எதிர்ப்பவர்களையும் வாயடக்கினர்பகுத்தறிவு ஆய்வறிவு விஞ்ஞான அறிவுவளம் பெற்றுள்ள இக்காலத்திலும் இந்த மவுடீகக் கோட்பாடுகளை நம்புவோர் ஏராளமாயிருக்கும்போதுஅறிவு வளம் பெறாத இளஞ்செடி நிலவரத்திலிருந்த அக்கால (ஆரிய அடிநாள்தெய்வ மந்திர மாய மிரட்டுகளை நம்பியதில் ஆச்சரியம் இல்லையே!

தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கான இந்தப் புரோகிதப் பூசாரிக் கங்காணித் தொழிலைத் தங்களுக்குப் பரம்பரைச் சொத்தாக்கிக் கொள்ளத்தான் மற்ற மக்களின் தாய்மொழிப் பாட்டுகளை ஒதுக்கி மற்ற மக்கள் அறியாத புரிந்துகொள்ளவும் இயலாதபடித் தடுப்புக் கோட்டைக்குள் வைத்துக்கொண்ட சமஸ்கிருத மொழிச் சொல்லடுக்குகளைப் பூசை மந்திரங்களாக்கிக் கொண்டனர்திராவிடர் அம்மந்திரங்களை அறிந்தால் பாவம் என்றும்நரக பிராப்தி என்றும் பயமுறுத்திபிறர் இந்தச் சொல்லடுக்குகளின் அர்த்தத்தை அறியாதபடிச் செய்து விட்டனர்.

பிற்காலத்தில் இம்மந்திரங்களைத் திராவிடர்களும் அறிந்து கொண்டனர்திராவிடப் பெருங்குடி மன்னனான இராவணனும் இந்த வேதங்களை அறிந்திருந்தானென இராமாயணத்தில் வால்மீகியே தீட்டி வைத்திருக்கிறார்இவ்விதம் திராவிட மக்கள் அறிந்ததால்வேதியரின் பிழைப்பில் மண் விழுந்தது போலும்எனவேதான்மனு(தர்ம சாஸ்திரத்தில் சூத்திரர்முக்கியமாகப் பெண்கள் (இவ்விருவரும் அடிமைகளாக இருக்க வேண்டியவர்கள்வேதத்தைப் படிக்கக்கூடாதுவேறுபாட்டுக்களைப் பாடக்கூடாதென தடைச்சட்ட விதியைச் சேர்த்துளர்).

இந்தத் தடைச்சட்ட விதிகளை மீறுபவர்களுக்குத் தண்டனையும் நிர்ணயித்துத் தங்கள் கையாட்களான மன்னர்களைக் கொண்டு தண்டித்து வந்தனர்இந்தத் தண்டனையில் முக்கியமானவை நாக்கறுத்தல்காதிலே கொதிக்கும் உலோகக் குழம்பை வார்த்தல் எனத் தெரிகிறது.

மேலே கூறிய கோட்பாடுகளுக்கு ஆதாரங்கள் முன்ஷிபிர்லாராதாகிருஷ்ணன்வெங்கட்ராம சாஸ்திரி தொகுப்பு நூலான இந்த ஆராய்ச்சி நூலிலும் பரக்கக் காணப்படுகின்றன.

சாப்பாட்டுத் தேவர்கள்

பிராமணா போஜனப் பிரியா என்ற வாசகம் எப்போது யாரால் எதனால் ஏற்பட்டதென்ற வரலாறு இதுவரை புலனாகவில்லைஇந்த மொழிக்கு ஆதாரம் இந்த முன்ஷி ஆராய்ச்சி நூல் காட்டுகிறது.

அதாவதுதேவரின் கருணையை - அருளைப் பெறச் சிறந்த வழி - உபாயம் அத்தேவருக்கு நல்ல சாப்பாடு படைப்பதுதான் என்ற வேதக் கோட்பாட்டைச் சுட்டிக்காட்டியுளர் முன்ஷீக்கள்.

இத்துடன் நன்றி செலுத்தலாகக் காணிக்கைகள் அர்க்கியங்களும் தரப்பட்டனவாம்.
மற்றும்மக்கள் உள்ளத்தில் பார்ப்பனர் தேவரடியார் - ஆண்டவனுக்கு அடிமை என்ற உணர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டதுஇதன் விளைவாக மக்கள் தங்களிடமிருந்த பண்டம் பொருள்களை ஆண்டவனுக்கே உரிமையாக்கிவிடச் செய்யும் துறவுப்பான்மையும் ஏற்படச் செய்யப்பட்டது.

பணப்பறி

முற்றிய பக்தியின் சிறப்புதம்மிடமுள்ள சொத்துக்களைத் துறத்தல் என்ற கோட்பாடு நுழைக்கப்பட்டதுதுறக்கப்பட்ட இந்தச் சொத்துக்கள் யாருக்குபணக்காரர்களை மிரட்டிப் பணம் பறித்து பார்ப்பனருக்குத் தருவதே சமஸ்கிருத வேத மந்திரங்களின் குறிக்கோளென இந்நூலாசிரியர்களே முன்பகுதியில் கருத்துத் தெரிவித்துளரே பறிக்கப்பட்ட பணம் பார்ப்பனப் புரோகிதர்களுக்கே தரப்படுமென்றும்பிற இன ஏழை எளியவர்களுக்கல்லவென்றும்ரிக் வேதம் ஏழைகள் பால் கருணை காட்டுவது பற்றி யாதொன்றும் குறிப்பிடவில்லை என்றும் இந்த வேதகால ஆராய்ச்சி நூலே விளக்கம் தந்துள்ளதுஎனவேதுறவு கொண்டவர்களின் சொத்துகளும் தேவனுக்கு அதாவது தேவரின் வாரிசுதாரரான பூதேவர்களுக்கு உரிமையாகிவிடும்எனவேஇதுவும் புரோகிதர் சுகவாழ்வுத் தந்திரமேயாகிறது.

இவ்விதம் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்வதால் சிறந்த பேரின்பம் கிடைக்கும் என்று ரிக் வேதத்திலும் தீட்டி வைத்துக் கொண்டுள்ளனர்ஆனால்அந்த இன்பம் இந்த மண்ணுலக மானிடவுடலிலே இந்த வாழ்க்கை நிலவரத்திலே காணவியலாதெனவும் கூறிசெத்தபின் அதாவது இந்தவுடல் மண்ணோடு மண்ணாகிய பின் அடையும் இன்பமே மோட்சம் என்றும் கூறித் தங்கள் சுயநல சுகவாழ்வுத் துறைக்குப் பாதுகாப்பும் தட்டிக் கழிக்கச் சாக்குப் போக்குத் தந்திரமும் அந்த வேத விதிகளில் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

யாகம் ஏமாற்றுவித்தை

ஆண்டவனுக்கு அர்ப்பணித்துப் பொருள்கள் எல்லாவற்றையும் வேதியர்களே உண்டு ஏப்பம் விட்டால்அவற்றைக் கொடுத்த பாமர - மவுடீக மக்களும் கூடச் சந்தேகிப்பரேபசித்த வயிறாவது இவ்விதம் எண்ணவும் துணிவுடன் கேட்கவும் தூண்டிவிடலாம்எனவேகாணிக்கை அளித்த பக்தர் கண்காண ஏதாவது தந்திரம் செய்யவேண்டுமென்ற நோக்கத்தால்தான் ஹோமம்யாகம் என்ற பெயரில் நெருப்பு வளர்த்துசில பண்டங்களை அதில் சொரிந்து அவற்றைத் தேவர்களுக்கு அனுப்பிவிட்டதாகக் கண்துடைப்பு நாடகம் - கண் கட்டு வித்தை நடத்தி வந்துள்ளனர்பெரும் பகுதிப் பண்டங்களை அவர்கள் உரிமையாக்கிக் கொள்வதற்கும் பண்டங்களைத் தந்த மக்கள் ஆட்சேபிப்பரே என்ற உட்கருத்தால் பிரசாதம் என்ற பெயரில் சிறு பகுதியை அப்பக்தர்களுக்குக் கிள்ளிக் கொடுப்பர் சுண்டைக்காய் அளவில்இவ்விதம் கிள்ளிக் கொடுக்கும் பண்டத்துக்கு அவிர்ப்பாகம் (தேவ அவிசு தேவப் பிரசாதம்என்றும் பற்பல பெயர்களும் இட்டனர்.

இந்தத் தேவப் பிரசாதத்தை பட்டினி வயிற்றுடன் பட்டினி மயக்க நிலவரத்தில் பக்தியோடு வாங்கிப் பக்தியோடு விழுங்கிவிட வேண்டும் மருந்தை விழுங்குவது போல்மனவேறுபாடுமுகவேறுபாடு கொண்டால் தெய்வக் கோபம்சாபம்பாபம் - நரகம் என்ற அடுக்குச் சொற்களைக் கொண்டு அச்சுறுத்தல் ஒத்திகை நாடகம் நடக்கும்.

தேவரைத் திருப்திப்படுத்தும் உணவை அவர்களிடம் சேர்ப்பதற்காகத்தான் யாகங்கள் என வேத நூல் விளக்கம் தருகிறதுஅதாவதுஇந்த யாகத் தீயின் மூலம் தேவர்களுக்குச் சாப்பாடு அனுப்புகிறார்களாம்.

சூரியனுக்குப் பிரியமான உணவு சூரியனின் வாகனம் என்று எண்ணமிட்டு அஸ்வமேத யாகம் செய்கின்றனராம்தேவர்களைக் கொழுக்க வைக்க இப்பூலோக மக்களை உண்ணாவிரதமிருக்கச் செய்து அவர்கள் பொருளை வாங்கிக் கொள்வதுபோலசூரியனின் குதிரைகளுக்குச் சக்தியூட்டவும் இந்த யாகம் செய்யப்படுவதாகவும் எண்ணப்படுகிறதுஇந்த யாகத்தின் போது பாடப்படும் சுலோகங்கள் பிற்காலத்தில் பற்பலரால் ஆக்கப்பட்டுள்ளனமனிதருக்குப் பிரியமான உணவைத் தேவருக்கும் அளித்து மகிழ்விக்கத்தான் மனிதர் சாப்பிடும் சாப்பாடும் யாகத்தீ மூலம் அனுப்பப்படுகிறதாம்.

அதிலும் சுயநலம்

மன்னர்கள் ஆட்சி ஏற்பட்டபின் இந்த யாகங்கள் அதிகரித்தனநாட்டு நலத்துக்கென்றும் மன்னர் பெருவாழ்வுக்கென்றும் யாகங்கள் கற்பனை செய்யப்பட்டனமற்றும் அந்த அஸ்வமேத யாகம் என்பதை மன்னர்கள் ஏன் செய்கிறார்கள்எவ்வகையில் செய்கிறார்கள்இதை நுணுகிப் பாருங்கள்அசுவமேத யாகம் செய்வதன் நோக்கம் பல நாடுகளுக்கு மன்னர் - மன்னர் (சக்ரவர்த்திஆவதாகும்இது மன்னரின் வெறும் நாட்டாசைக் குறிக்கோள் மாத்திரம் கொண்டதென எண்ணுவதற்கில்லைஇந்த யாகத்தை செய்பவர்செய்யத் தூண்டுபவர் வேதியர்கள்.

எனவேஇந்த யாகத்தில் இந்த வேதியர்களின் நலமும் முக்கிய குறிக்கோளாக இருக்கத்தான் வேண்டும்யாகத்தால் ஏராளமான பண்டமும் பணமும் இந்த யாக வேதியருக்குப்படி கிடைப்பது மேலளவு பலன்ஆனால்அடிப்படை நோக்கம் காரணம் வேறொன்று இருக்கத்தான் வேண்டும்அதாவதுஇராமாயண - பாரத நோக்கமே இதிலுமுள்ளதுஅதாவது ஆரியத்தை வேத மதக் கோட்பாடுகளைப் பார்ப்பனீயத்தை - வேத குலத்தாரின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதும் மன்னர்களைக் கொண்டு வேதியர் எதிரிகளை அடக்கிவேதக் கோட்பாடுகளுக்கு அடிமையாக்குவதும் இதன் உள்நோக்கமெனத் தெளிவாகிறது.

உபநிஷத்துகள்

உபநிஷத்துகள் என்ற சொல்லுக்கு அர்த்தம்ஒருவருடைய பக்கத்திலமர்ந்து கேட்கக்கூடிய விஷயங்கள் என்பதாகும்இதனை வேதாந்தம்வேதத்தின் முடிவு என்பர்.

வேதம் கற்றபின் கற்கக்கூடியவை என்றும்வேதக் கருத்துக்களைக் கொண்டவை என்றும் இதற்கு விரிவுரை கூறுகின்றனர்.

வேதத்திற்கும் இந்த உபநிஷத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று இந்நூல் சுட்டிக்காட்டுகிறது (பக்கம் 468) எனவேபிற்காலத்தில் வேதத்திற்கு முடிவுஅதாவது வேதங்கள் மதிப்பாரற்றுப்போன போதுஇந்த உபநிஷத்துக்களை வேதியர்கள் உற்பத்தி செய்திருக்க வேண்டும் என்பதும் இவைகளும் புராணக் கதைகளின் இனத்தைச் சேர்ந்தவையே என்றும் எண்ணச் செய்கிறதுஇதற்குமுன் ஆரிய வேதியர் கைக்கொண்டிருந்த வேதச் சடங்குகளை எதிர்க்கும் கருத்துக்களும் இந்த உபநிஷத்துக்களில் உள்ளன என்றும் சுட்டிக்காட்டப்படுவதால்வேதக் கோட்பாடுகள் செல்லாக் காசான காலத்தில்நாட்டுமக்களின் கருத்துக்களைத் தழுவி இந்த உபநிஷத்துக்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது.

அக்காலத்திலும் எதிர்ப்பு

மற்றும்க்ஷத்திரியர்கள் (அரச மரபினர்இந்த உபநிஷத் கோட்பாடுகளில் அதிக பங்கு கொண்டாரெனத் தெரிவதால் இது வேதிய எதிர்ப்புக் கோட்பாட்டியல் நூலாகவும் இருக்கவேண்டும் என்பதும் பார்ப்பனீய ஆதிக்கத்தை அக்காலத்து மன்னர்களும் எதிர்த்துதங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் தன்மானவுணர்ச்சியும் கொண்டிருந்தாரெனவும் எண்ணச் செய்கிறதுசாதி வேற்றுமைக் கோட்பாடுகளைமனித சக்திக்குப் புறம்பான கொள்கைகளை ஒதுக்கியும் இந்த உபநிஷக் கொள்கைகள் இருப்பதானதுபழைய வேதிய மதத்திற்குப் பிற்காலத்தில் கடும் எதிர்ப்பு இருந்ததென்பதற்கு ஆதாரமாகிறதுபுராணங்களும் இதேபோல் வேத மதத்தையும் ஆரிய வேதியர் ஆதிக்கத்தையும் எதிர்த்து அரசமரபினர் சிறப்பையும் ஆதிக்கத்தையும் சிறப்பித்தும் தொகுக்கப்பட்ட கதைகளெனவும் முற்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவேஇப்போது உள்ள அச்சுப்பிரதிகளான உபநிஷத்துக்களிலும்இதிகாசங்களிலும்புராணங்கள் என்பவற்றிலும்வேதத்தையும் வேதியரையும சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பகுதிகளும் சாதி வேறுபாட்டுப் பகுதிகளும் பிற்கால இடைச்செருகல் வேலையாக இருக்கலாமென்பது மேற்காட்டிய கருத்தால் அறியக்கிடக்கிறது.


நூல் புரட்டு இமாலய புரட்டு
ஆசிரியர்- தந்தை பெரியார்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

அய்யாவின் இறுதிப் பேருரை பகுதி - 2