மனிதநேயத்திற்கு மகத்தான சான்றுகள்



இயற்கையின் கோணல் புத்தியால் 60- ஆம் ஆண்டின் நிறைவினைக் கூடக் கொண்டாட இயலாது அண்ணா அவர்கள் மறைந்து புகழ் உடம்பு அடைந்து வரலாறாகி விட்டார்!

பல லட்ச மக்களின் கண்ணீரோடு, அவரை ஆளாக்கிய தலைவர் தந்தை பெரியார்தம் கண்ணீர்த் துளிகளும், அவரது சடலத்தின்மீது விழுந்தனவே - அவை வள்ளுவர் குறளை அல்லவா நினைவூட்டியது!

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து  (குறள் 780)

படைத்தலைவனின் கண்ணீர் படைத்தளபதியின் உடல்மீது விழுவதைவிட பெரும் பேறு வேறு என்னதான் இருக்க முடியும்!

தன்னால் வளர்க்கப்பட்டு ஆளாக்கப்பட்ட அருமைத் தளபதிக்கு வீர வணக்கம் செலுத்தினார் அவர் கண்ட கொண்ட ஒரே தலைவர் பெரியார். அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதே இருவரின் மனிதநேயத்திற்கு மகத்தான சான்றுகள் அல்லவா.


- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 6

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை