வழிகாட்டும் தந்தையே வாழ்க!



பெரியாரோடு நான் கொண்டிருந்த தொடர்பில் இன்றைக்கும் அழியாத செல்வமாக நான் கருதும் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன்.

எனது இளைய மகன் பன்னீர்செல்வத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பெரியார் அப்போது வேலூரில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். திருமணத்திற்கு அவரை அழைக்க நானும் என் துணைவியார் திருமதி புவனேசுவரி, மூத்த மகன் சோமு ஆகியோர் வேலூர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். நமது முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமது அமைச்சரவையில் எனக்கு இடம் அளித்து அமைச்சராக்கி இருந்தார். தந்தை பெரியாருக்கு நானும் எனது துணைவியாரும் மாலை அணிவித்து வணங்கினோம். பெரியார் உள்ளம் மகிழ்ந்து அங்கே குழுமியிருந்த டாக்டர் ஜான்சன், மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். உடன் இருந்த விடுதலை ஆசிரியர் தோழர் வீரமணி அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளிடம் என்னைப் பற்றிக் கூறுகையில், ழடிடெந ஆளைவநச றயள ஞநசலையசள ளுநஉசநவயசல கடிச அயலே லநயசள (மாண்புமிகு அமைச்சர் பெரியாரின் செயலாளராகப் பல ஆண்டு காலம் இருந்தார்) என்று குறிப்பிட்டார்.

உடனே, தந்தை பெரியார் அவர்கள் குறுக்கிட்டு ஆங்கிலத்திலேயே கூறினார்: சூடிவ டிடேல ளுநஉசநவயசல, ரெவ யடளடி டிநேளவ யனே ளஉநசந - செயலாளர் மட்டுமல்ல, உண்மையும் நேர்மையும் மிக்கவர் என்று பெரியார் கூறியதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெரியாரின் இந்த பாராட்டுரையை என் வாழ்நாளில் நான் பெற்ற பெருஞ் செல்வமாகக் கருதுகிறேன்.

ஏனென்றால் தந்தை பெரியார் அவர்கள் மிகவும் சிக்கனமானவர் - பணத்தைக் கூட யாருக்காவது கொடுத்தாலும் கொடுத்து விடுவார் - பாராட்டுரையைக் கொடுக்க மாட்டார். அப்பேற்பட்ட தந்தை பெரியார் என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாகும்!

பெரியார் அவர்கள் ஆற்றிய அரும்பணியின் காரணமாகவும், அறிஞர் அண்ணா அவர்களின் அரிய திட்டங்களாலும் தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் பெருமளவு வெற்றி பெற்றுள்ளது. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கருத்து வேறுபாடு என்று கூறி வந்தோரெல்லாம், அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வரானவுடன் தந்தை பெரியாருக்கு மாலை அணிவிக்கச் சென்றபோது இருவருக்கும் இடையே நிலவிய அன்பையும், பந்த பாசத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
- அமைச்சர் திரு. என்.வி.நடராசன்
தந்தை பெரியார் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்



Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை