அடுத்தவர் மேடையில் ஏறி உன் கொள்கையை என்ன பேசுவது?
திருவரங்கத்தில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம். தலைவர் காமராசர் கலந்துகொண்டார். கழகத் தோழர் ஒருவர் பேசினார். அவர் பேசும்போது அடிக்கடி பார்ப்பனர்... பார்ப்பனர்... என்று அவர்களைக் கண்டித்தார். பொறுமையிழந்த காமராசர், கீழே இறங்கு என்று அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.
அடுத்த நாள் அதே இடத்தில் மீண்டும் கூட்டம். அய்யா அவர்கள் பேசுகிறார்கள். நேற்று இதே மேடையில் நம்முடைய தோழரை காமராசர் மேடையில் இருந்து கீழே தள்ளிவிட்டு விட்டார் என்று கழகத் தொண்டர்கள் ஆத்திரப்படுகிறார்கள். அதற்கு அய்யா அவர்கள் பதில் சொல்லுகிறார்கள்:
காமராசராக இருந்ததால், கீழே பிடித்துத் தள்ளியதுடன் விட்டார். நானாக இருந்தால், அந்தத் தோழரின் கன்னத்தில் அறைந்து இருப்பேன். உனக்கு யோக்கியதை இருந்தால் நீ மேடை போட்டு, உன் கொள்கையைப் பேசு. அடுத்தவர் மேடையில் ஏறி, உன் கொள்கையை என்ன பேசுவது?
- அ.மா.சாமி, தந்தை பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாள்
விடுதலை
மலர்
Comments
Post a Comment