ஜாதி கெடுதியை உண்டாக்குது
இரண்டாவது தோழர்களே! கஷ்டமான சங்கதி என்னான்னா? முதலிலேயே நான் குறிப்பிட்டுருக்க வேண்டும், சென்ற மாதத்தி லேயே (10-1957)ல் முதுகுளத்தூர் இராமநாதபுரம் ஜில்லாவிலே இரண்டொரு தாலூக்காவைச் சேர்ந்த கிராமங்களிலே ஆதித் திராவிடத் தோழர்களுக்கும் அங்குள்ள மறவர் சமுதாயத் தோழர்களுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டு மிகப்பரிதாபப்படும் படியானஅளவிலே ஆயிரக் கணக்கான வீடுகள் நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டன. அதிலே சந்தேகம் இல்லே. எண்ணிக்கையிலே 4,2 ஏறக்குறைய இருக்கலாமே தவிர கொளுத்தப்பட்டது நிஜம். சொத்துக்கள் நாசமாயின. நூற்றுக் கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டன. இது ரொம்ப பரிதாபகரமான காரியம். இதைப் பற்றி நாமெல்லாம் வருத்தப்படுகிறோம். ஆனால் இந்த சமயத்திலேயே இந்த ஜாதி எவ்வளவு தூரம் கெடுதியை உண்டாக்குது என்கிற தன்மையைத் தெரிஞ்சிகிறதுக்கு இது ஒரு உதாரணம். ஆகையினால் அவைகளுக்காக மிகவும் பரிதாபகரமாக நாம் நம்முடைய அனு தாபத்தைத் தெரிவித்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
மற்றும் தோழர்களே! இன்னும் மற்றும் பல சந்தர்ப்பங்கள் உள்ளன, பல தோழர்கள் பேச வேண்டி இருக்கிறார்கள், பல தீர்மானங்கள் வரும். முடிவுரையில் ஏதாவது பேச வேண்டியிருந்தால் நான் சொல்லுகிறேன் .இப்போ ஒரு குறிப்பு மாத்திரம் சொல்லுகிறேன். முதுகுளத்தூர் கலவரத்தில் உயிரிழந்த மக்களும் வீடுவாசல் சொத்து இழந்த மக்களுக்கும் குறிப்பாக இம்மானுவேல் அநியாயமாகக் கொல்லப்பட்டதற்கும், இம் மகாநாடு வருந்துவதோடு எமது ஆழ்ந்த கருத்தை அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதுடன் அரசாங்கத் தாரையும் அதற்கு வேண்டிய பரிகாரம் செய்யும்படி வேண்டிக் கொள்கிறது. - இந்தத் தீர்மானம் உங்களுடைய மௌனத்தைக் கொண்டே நிறைவேற்றுகிறோம், (மக்கள் சிறிதுநேரம் நிசப்தத்துடன் இருந்தனர் பிறகு) இத் தீர்மானம் நிறைவேறியதாக ஏற்றுக் கொள்ளுகிறேன்.
பார்ப்பன பத்திரிகைகளை பகிஷ்காரம் செய்
அடுத்தாற்போல இதைக் கொஞ்சம் கேளுங்கள், நூத்துக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பல ஆயிரக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டும், பதினாயிரக்கணக்கான ரூபாய் பெறும் படியான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும், இருக்கிற நிலையில் நமது நாட்டு பார்ப்பானப் பத்திரிகைகள் காங்கிரஸ்காரர் தவிர - அரசியல் பேரால் தங்கள் வாழ்க்கையை ஏற்பாடு செய்துகொண்ட எல்லா அரசியல் கட்சிக்காரர்களும், பார்ப்பன பத்திரிகைகளும், கட்டுப்பாடாக கொலை - கொளுத்துதல் - நாசம் முதலிய காரியங்களை கொளுத்தவும் - அடக்கவும் முயற்சி எடுத்துக் கொண்ட அரசாங்கத்தைக் கண்டிப்பதும் அதன் மூலம் முரட்டுத்தனமாய்ப் பலாத்காரத்தில் ஈடுபட்டு நாச வேலைகளை செய்து மக்களுக்கு தங்கள் குற்றங்களை கூட உணர்வதுக்கும் இல்லாமல் உற்சாகம் ஏற்படும்படி எழுதியும் பேசியும் வருகின்றதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு - தமிழ் பொது மக்கள் கூடுமானவரைபார்ப்பனப் பத்திரிக்கைகளைஆதரிக்காமல் பகிஷ்காரம் செய்ய வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. (கைத்தட்டல்). பத்திரிகைகளும் பத்திரிகை நிருபர்களும் தங்கள் தொழில் செய்வதை நேர்மையாக நடந்து கொள்ளுவதில்லை என்பதைக் கண்டுப்பிடித்துக் குறை கூறி, இனியாவது நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை சட்ட சபையில் வற்புறுத்திய உள்நாட்டிலாகா மந்திரியை இம்மாநாடு பாராட்டுகிறது.(கைதட்டல்)
இங்கே இரண்டு விஷயம் உள்ளது, அங்கே செத்துபோனவங்களைப் பற்றி யாரும் சமாதானம் சொல்றோம். நடத்தையைப் பற்றியோ இல்லை, சர்க்கார் மீது குற்றம் சொல்லனும். சர்க்கார் சொன்னான்னு சொல்லனும், என்ன காரணமென்றால்?
சர்க்கார்மேலே பாப்பான்களுக்கு வெறுப்பு. பாப்பான்களுடைய பத்திரிக்கை வெறுப்பு. மற்ற பொது மக்களும் பாப்பானுக்கு அடிமை, எல்லோரும் சேர்ந்து பின்பற்றுகிறார்கள். இதற்காகச் சர்க்கார் பேரிலே நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். எவ்வளவு பொதுமக்களுடைய தீர்மானம் என்பது தெரியுமோ? 145 பேரு மந்திரிகள் பேரிலே நம்பிக்கை. 27 பேர் எதிர்த்து ஓட்டு. இவுங்கதான் நாங்கள் மக்களுக்குப் பிரதிநிதிகள்னு சொல்லுகிறவங்க. அது எப்படியோ போகட்டும். இவுக யோக்கியதை என்னான்னு பாருங்க. இப்படியாகச் செய்கிறாங்க. இரண்டாவது மந்திரியார்கிட்டேபோயி இந்த சங்கதி நடக்கிறபோது, ராமசாமியை ஏன் விட்டுகிட்டு இருக்கிறேன்னு கேட்டாங்க? ஏனெப்பா என்னான்னாங்க? இல்லே, இங்கே அங்கே குத்துன்னான் வெட்டுன்னு சொன்னான்னு, எங்கே சொன்னான்னா? அங்கே சொன்னான். இங்கே சொன்னான்னான். சரி அந்தப்படி சொல்லியிருக்கிறாருன்னு பார்த்தால், தங்கள் சர்க்காரிலே இருந்து ரிப்போர்ட்டு எடுத்திருக்கிறாங்க அதிலே அந்த மாதிரி இல்லே. யாராப்பா சொன்னா? எதிலே சொல்லியிருக்குதுன்னா? யாரு எழுதினது? கொண்டுவா இங்கே? அப்படீன்னு கேட்டபோது முன்னே பத்திரிக்கையிலே நடந்திருக்குது, நீங்கள் கண்டிப்பாகப் பார்ப்பன பத்திரிக்கைகளை ஆதரிக்கவே கூடாது, மற்றப் பத்திரிகைகள் இருக்கின்றன. மற்றதை வாங்கிப் படியுங்கள். என்னா அவுக இவ்வளவு அக்கிரமம் செய்யக் காரணம், பத்திரிகைகளிடையே இருக்கிற ஒரு செல்வாக்குதான், என்ன இருந்தாலும் படிக்க நாலு பேரு இருக்கிறான். வெளிநாட்டான் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறான் என்கிறதைப் பற்றி நான் கவலைப் படுகிறதில்லை, ஏன்னா? எனக்கு வெளிநாட்டிலே ஒண்ணும்சம்பந்தமில்லே.இந்தியாவிலிருக்கிறஎல்லாபத்திரிகை அனைத்திலும் பாப்பான்தான் இருக்கிறான். பேரு நம்மளவன் நடத்துகிறான்னாலும் அதிலேயும் அவன்தான் அதிகம். கட்டுப்பாடாய் புரட்டுப் போடுகிறான்.
சர்க்கார்மேலே பாப்பான்களுக்கு வெறுப்பு. பாப்பான்களுடைய பத்திரிக்கை வெறுப்பு. மற்ற பொது மக்களும் பாப்பானுக்கு அடிமை, எல்லோரும் சேர்ந்து பின்பற்றுகிறார்கள். இதற்காகச் சர்க்கார் பேரிலே நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். எவ்வளவு பொதுமக்களுடைய தீர்மானம் என்பது தெரியுமோ? 145 பேரு மந்திரிகள் பேரிலே நம்பிக்கை. 27 பேர் எதிர்த்து ஓட்டு. இவுங்கதான் நாங்கள் மக்களுக்குப் பிரதிநிதிகள்னு சொல்லுகிறவங்க. அது எப்படியோ போகட்டும். இவுக யோக்கியதை என்னான்னு பாருங்க. இப்படியாகச் செய்கிறாங்க. இரண்டாவது மந்திரியார்கிட்டேபோயி இந்த சங்கதி நடக்கிறபோது, ராமசாமியை ஏன் விட்டுகிட்டு இருக்கிறேன்னு கேட்டாங்க? ஏனெப்பா என்னான்னாங்க? இல்லே, இங்கே அங்கே குத்துன்னான் வெட்டுன்னு சொன்னான்னு, எங்கே சொன்னான்னா? அங்கே சொன்னான். இங்கே சொன்னான்னான். சரி அந்தப்படி சொல்லியிருக்கிறாருன்னு பார்த்தால், தங்கள் சர்க்காரிலே இருந்து ரிப்போர்ட்டு எடுத்திருக்கிறாங்க அதிலே அந்த மாதிரி இல்லே. யாராப்பா சொன்னா? எதிலே சொல்லியிருக்குதுன்னா? யாரு எழுதினது? கொண்டுவா இங்கே? அப்படீன்னு கேட்டபோது முன்னே பத்திரிக்கையிலே நடந்திருக்குது, நீங்கள் கண்டிப்பாகப் பார்ப்பன பத்திரிக்கைகளை ஆதரிக்கவே கூடாது, மற்றப் பத்திரிகைகள் இருக்கின்றன. மற்றதை வாங்கிப் படியுங்கள். என்னா அவுக இவ்வளவு அக்கிரமம் செய்யக் காரணம், பத்திரிகைகளிடையே இருக்கிற ஒரு செல்வாக்குதான், என்ன இருந்தாலும் படிக்க நாலு பேரு இருக்கிறான். வெளிநாட்டான் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறான் என்கிறதைப் பற்றி நான் கவலைப் படுகிறதில்லை, ஏன்னா? எனக்கு வெளிநாட்டிலே ஒண்ணும்சம்பந்தமில்லே.இந்தியாவிலிருக்கிறஎல்லாபத்திரிகை அனைத்திலும் பாப்பான்தான் இருக்கிறான். பேரு நம்மளவன் நடத்துகிறான்னாலும் அதிலேயும் அவன்தான் அதிகம். கட்டுப்பாடாய் புரட்டுப் போடுகிறான்.
இந்தா நேற்று திருச்சிராப்பள்ளி கலெக்டரை கேட்கிறாங்க, இந்த மாதிரி ராமசாமி பேசினானாமான்னு அப்படி பேசினதாக எனக்குச் சங்கதியே இல்லியே, என்னிட்டே இருக்கிற ரெக்கார்டிலே அந்த மாதிரி பேசினதாக இல்லியே அம்மாதிரி சங்கதி வரலேயேன்னு கலெக்டர் சொல்லியிருக்கிறார். இதே மாதிரி கட்டுப்பாடாய் சொல்லியிருக்கிறாங்க, இதையும் கண்டிக்கணும், கண்டிக்காவிட்டால் அப்புறம் என்னதான் மரியாதை இருக்குது, அவன் வளர்ந்து கொண்டேபோனான். எனக்காக அல்ல, என் இன்பத்துக்காக அல்ல, இந்த நாட்டின் அரசியல் வாழ்வு சமுதாய வாழ்வு அந்தப் பசங்ககிட்டே சிக்கிப் போச்சின்னா அவன் எப்படி வேண்டுமானாலும் நடத்துகிறேங்கிறானே. அவனுங்களுக்காகவா விட்டுடுறது, பத்திரிக்கைக்காகவாவிட்டிடறது, இதை நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆகவே இந்த தீர்மானத்துக்கு ஓட்டுக் கொடுக்கிறவர் கை உயர்த்தவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
(மகாநாட்டினர் அனைவரும் கை உயர்த்தினர்) அதைஎதிர்க்கிறவர்கள் யாராவது இருந்தால் (யாரும் கை உயர்த்தவில்லை) யாரும் இல்லை. தீர்மானம் இப்போது நிறைவேற்றி இருக்கிறீங்க, பாப்பான் பத்திரிகை வாங்காதீங்க, ஜாக்கிரதையாய், மற்றதை வாங்கிப் படியுங்களேன்.
(மகாநாட்டினர் அனைவரும் கை உயர்த்தினர்) அதைஎதிர்க்கிறவர்கள் யாராவது இருந்தால் (யாரும் கை உயர்த்தவில்லை) யாரும் இல்லை. தீர்மானம் இப்போது நிறைவேற்றி இருக்கிறீங்க, பாப்பான் பத்திரிகை வாங்காதீங்க, ஜாக்கிரதையாய், மற்றதை வாங்கிப் படியுங்களேன்.
பாப்பான் ஹோட்டலுக்கு போகாம போனா எத்தனைபேரு செத்துப் போயிருக்கிறீங்க? பாப்பான் பத்திரிகை இல்லேன்னா வேறு எத்தனையோ பத்திரிகை இருக்குது, இதே திருச்சிராப்பள்ளியிலேயே தினத்தந்தி ன்னு இருக்குது. இந்த மதுரையிலே தமிழ்நாடு (கருமுத்து தியாகராயச் செட்டியாராலே நடக்குது)சென்னைப் பட்டணத்திலே நவஇந்தியா நடக்குது. தப்போ சரியோ தமிழன் பத்திரிகையை வாங்கிப் படியுங்களேன், அவனது (பத்திரிகையை) வாங்கிப் படிப்பதில் என்ன கட்டாயம், நாளுக்கு நாள் அதைக் குறைக்கணும்.என்னைக்கு இந்த நாட்டிலே பாப்பாரப் பத்திரிகைகள் ஒழிய போகுதோ அன்னைக்குதான் இது நாடு, அப்பதானே மானமுள்ள நாடாவுதுன்னு அர்த்தம்!
அடுத்தத்தீர்மானம் தோழர்களே இந்தத் தீர்மானம் தான், இந்த மகாநாட்டுக்கு இது தான் முக்கியமான தீர்மானம், அதாவது நான் முதலிலேயே சொன்னேனே திருச்சி நிர்வாகஸ்தர் கூட்டத்திலே ஏற்பாடுசெய்தபடி இந்த மாநாடு போட்டு இந்தத் தீர்மானம் முக்கியமாக அமலுக்கு வரவேண்டிய தீர்மானம். வெறும் காகிதத் தீர்மானம் அல்ல, நீளமாய் இருக்கும், இருந்தாலும் நான் விளக்கம் சொல்லுகிறேன்.ஆட்சியில் எல்லா மக்களுக்கும் நீதியும், சுதந்திரமும், சமத்துவமும், சகோதரத்துவமும், வழங்குவது என்பதாக சொல்லிக்கொண்டு மக்களில் ஒருவருக்கொருவர் உயர்வும் - இழிவும் - சுகமும் - கஷ்டமும் உள்ளதான தன்மையுள்ள ஜாதி - மத - பழக்க வழக்க - கலாச்சார -உரிமை மக்களுக்கு வழங்கப்படும் என்பதாக உறுதி கூறி ஏற்பாடு செய்திருக்கும் செய்யப்பட்டிருக்கும் அரசியல் சட்டமானது - போலித் தன்மையும்- புரட்டும் - மோசடியுமானதாகுமென்று இம்மகாநாடு கருதுகிறது.
சட்டத்தில் என்ன இருக்கிறது?
சட்டத்திலே என்ன இருக்கிறது என்றால் முதலில் எடுத்த எடுப்பிலேயே மற்ற நாட்டான் எழுதின பேச்சை எல்லாம் இதிலே உபயோகப்படுத்திட்டாங்க, இதிலே இருக்கிற முறையிலே அந்த ஜனங்கள் கிடையாது. என்னா தெளிவாக இருக்குது? என்னா இருக்குதுன்னா - இந்த constitution அரசியல் அமைப்பிலே என்னா உரிமை மக்களுக்குக் கொடுத்திருக்குதுன்னா, Justice அந்தக் கருத்தை வச்சித்தான் எழுதியிருக்குது. ஆனால் இவுக - நீதி இது. எல்லாருக்கும் ஒண்ணுபோல நீதி வழங்கனும்னுதான் அர்த்தம். செய்யறது வேறே, ஒவ்வொரு ஜாதிக்கு ஒரு நீதின்னு. Liberty சுதந்திரம் - மக்களுக்கு அவரவர்களுக்கு பூர்ண சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறதுன்னு. Equality சமத்துவம் - மக்களுக்கு எல்லாருக்கும் சமத்துவம். ஒருத்தருக்கு ஒருத்தர் உயர்வு - தாழ்வு இல்லாத நிலைமையிலே சமத்துவம், அப்புறம் ரொம்ப அன்பு பலனளிக்கிறதுன்னு, அவுக ஒருமைன்னு சகோதரத்துவம்கிறாங்க, அர்த்தம் பண்ணி இருக்கிறாங்க, எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே சமுதாயமாக அமைப்பது என்று தமிழிலே போட்டிருக்கிறாங்க .இந்த நாலு குணத்தையும் போட்டிருக்கிறாங்க. இந்தப் படி அரசு ஆளப் போவது, அதற்காகச்சட்டம் செய்திருக்கிறோம்ன்னு, அப்படீன்னு எழுதியிருக் கிறாங்க, ஆனால் அந்தப் படிக்கு இல்லே, நீதி சரியா இல்லே, ஜாதிக்கொரு நீதிதான், அதே மாதிரி சுதந்திரம் சிலருக்குச் சுதந்திரம் சிலருக்கு அடிமை, நம்ம நாட்டுக்கு ஒரு சுதந்திரமும் கிடையாது. சமத்துவம் அவுக செய்து வைச்சிருக்கிற சட்டப்படி ஒரு ஜாதி உயர்வு, ஒரு ஜாதி மட்டம்.
மதஆதரவு ஜனங்களை ஏமாற்றுவதற்கு
மதத்துக்கெல்லாம் ஆதரவு அளிக்கணும். அப்படி ஆன பிறகு சகோதரத்துவம் எங்கே இருக்க முடியும்? ஆனதினாலே இந்த வார்த்தைகளைப் போட்டுக்கிட்டது - ஜனங்களை ஏமாற்றதுக்கு. வெளிநாட்டு அரசாங்கத்தார்கள் போட்டிருக்கிற வார்த்தைகள், இவுக அதைக்காட்டி அடிச்சி தாங்களும் அது போன்ற ஒரு சுதந்திர ஆட்சி ஆளச்செய்கிறோம் என மக்களை ஏமாற்றுகிற மோசம் அது. இப்படியாக சொன்ன ஒரு வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு இந்த முறையில் உள்ள தன்மைகளிலே ஜாதி மதத்தை எல்லாம் காப்பாத்திடற வாக்குறுதி மாதிரியிலே மக்களுக்கு ஏற்றபடி மக்களை அரசாளுகிறோம் என்பது புரட்டு.அரசியல் சட்டத்திலே கண்டுள்ள மதச் சார்பைக்காட்டி - மத உரிமை - என்பதில் மதப்பாதுக்காப்பு எல்லா மதங்களுக்கும் நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம், எல்லா மதங்களையும் காப்பாற்றுவதாக உறுதி அளிக்கிறோம், அப்படின்னு சொல்லி இருக்கிறாங்க. எல்லா மதத்தையும் காப்பாத்திறதிலே கிறித்துவ மதத்தைக் காப்பாற்றிகிட்டுப் போகட்டும், எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. இஸ்லாம் மதத்தைக் காப்பாற்றிக்கிட்டு போகட்டும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. அதிலே எதாவது குறைபாடு இருந்தால் அந்த மதக்காரன் கேட்கட்டும். எங்கள் தலையிலே சுமத்தி இருக்கிற இந்து மதத்தையும் காப்பாற்றுகிறேன்னு எழுதப்பட்டிருந்தால் அது எங்களுக்குக்கேடா? இல்லையா? இந்து மதம்ன்னா என்னா?.
வெள்ளைக்காரனுக்கும் பாப்பானுக்கும் வித்தியாசமில்ல
நாலு ஜாதி, நாலு ஜாதின்னா என்னா? ஒரு ஜாதி பெரிய ஜாதி ஒரு ஜாதி கீழ் ஜாதி, அப்புறம் அது அதுக்கு ஒரு ஜாதி பாடுபடற உரிமை- ஒரு ஜாதிபாடுபடாமல் - ஊரான் உழைப்பிலே - சாப்பிடுகிற உரிமை. இதெல்லாம் சாஸ்திரத்திலே இருக்குது, மதத்திலே இருக்குது, ஜாதி அமைப்பிலே திட்டமிருக்குது, ஜாதின்னா என்னா அர்த்தம்? ஜாதின்னா அதுக்கு என்னா திட்டம்? அதுக்கு என்னா நிபந்தனை, இதெல்லாம் இருக்குது, இவ்வளவு முன்ன ஒரு ஜாதியை நான் காப்பாத்திறேன்னா நான் பாப்பானையும் காப்பாற்றனும் - சூத்திரனையும் காப்பாத்தனும்
-பஞ்சமனையும் காப்பாற்றேன்னா - அவனவன் ஜாதிக்குள்ள உரிமைப்படி உள்ள அமைப்புன்னு தானே அர்த்தமாகும். அது எப்படி நமக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய சட்டமாகும்? எல்லா மக்களுக்கும் பொறுத்தமான்னு சொல்லி - எல்லாமக்களுக்கும் சமத்துவம்னு சொல்லி - எல்லா மக்களையும் ஒண்ணுபோலவே பாவிக்கிறேன்னு சொல்லி - என்னத்துக்கு உயர்வு தாழ்வு இல்லே. பொருளே இல்லை - கல்வியிலே இல்லை- உத்தியோகத்திலே இல்லை - அதிகாரத்திலே இல்லை - வாழ்விலே இல்லை - சமுதாயத்திலே இல்லேன்னு அப்படிச் சொல்லிக்கிட்டு எல்லோரையும் நான் காப்பாத்தறேன்னா அதற்கு அர்த்தம் உண்டு. பறையனையும் காப்பாற்றுகிறேன், சக்கிலியையும் காப்பாற்றுகிறேன். பாப்பானையும் காப்பாற்றுகிறேன், சூத்திரனையும் காப்பாற்றிட்டேன்னா -பாப்பான் பாப்பானாட்டம் - சூத்திரன் சூத்திரனாட்டம் - பறையன் பறையனாட்டம் - சக்கிலி சக்கிலியனாட்டம்ன்னா என்னா காப்பாற்ற வேண்டியிருக்குது? இதுக்குநீ என்னாஅய்யரு?நீஎன்னாசெய்யவேணும்? வெள்ளைக்காரனை விட நீ என்ன யோக்கியன்?.
-பஞ்சமனையும் காப்பாற்றேன்னா - அவனவன் ஜாதிக்குள்ள உரிமைப்படி உள்ள அமைப்புன்னு தானே அர்த்தமாகும். அது எப்படி நமக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய சட்டமாகும்? எல்லா மக்களுக்கும் பொறுத்தமான்னு சொல்லி - எல்லாமக்களுக்கும் சமத்துவம்னு சொல்லி - எல்லா மக்களையும் ஒண்ணுபோலவே பாவிக்கிறேன்னு சொல்லி - என்னத்துக்கு உயர்வு தாழ்வு இல்லே. பொருளே இல்லை - கல்வியிலே இல்லை- உத்தியோகத்திலே இல்லை - அதிகாரத்திலே இல்லை - வாழ்விலே இல்லை - சமுதாயத்திலே இல்லேன்னு அப்படிச் சொல்லிக்கிட்டு எல்லோரையும் நான் காப்பாத்தறேன்னா அதற்கு அர்த்தம் உண்டு. பறையனையும் காப்பாற்றுகிறேன், சக்கிலியையும் காப்பாற்றுகிறேன். பாப்பானையும் காப்பாற்றுகிறேன், சூத்திரனையும் காப்பாற்றிட்டேன்னா -பாப்பான் பாப்பானாட்டம் - சூத்திரன் சூத்திரனாட்டம் - பறையன் பறையனாட்டம் - சக்கிலி சக்கிலியனாட்டம்ன்னா என்னா காப்பாற்ற வேண்டியிருக்குது? இதுக்குநீ என்னாஅய்யரு?நீஎன்னாசெய்யவேணும்? வெள்ளைக்காரனை விட நீ என்ன யோக்கியன்?.
சுதந்தரநாடு எல்லா மக்களுக்கும் சுதந்திரம்.எல்லோரும் ஒன்று போல நடத்தறதுன்னா எதிலே நடத்திரே இப்போ? எதிலே எல்லா மக்களையும் எடுத்துகிட்டா? பாப்பான் 100 க்கு 100 பேரு படிச்சிருக்கிறான், பாப்பாத்தி 100க்கு 100 பேரு படிச்சிருக்கா, தமிழன்லே 100க்கு 10பேரு -15 பேரு, தமிழ்ப் பெண்மணிகள் 100க்கு 5 பேரில்லை, ஆதிதிராவிடர் எடுத்துக்கிட்டா ஆம்பளை 100க்கு 5 இல்லே. பொம்பளை 100க்கு ஒண்ணுல்லே, என்னா நீ எல்லாத்தையும் ஒண்ணு போல நடத்தறே? நடத்துறதுக்கு என்னா ஏற்பாடுபண்ணியிருக்கிறே, நாளைக்குச் செய்ய போறேன்னா?
பாப்பான் படிக்காமல் படிக்காத ஜாதி படிக்கணும், சுத்தமாய் அடி ஜாதி படிக்கட்டும், அப்புறம் கணக்குப் போடுவோம். அதை விட்டுப்போட்டு அவன் படிக்கணும் இவன் படிக்கணும், இங்கே அவன் கெட்டிக்காரன், அவனுக்குத்தான் இடம், அவன் இப்படி இவன் இப்படி என்னைக்கு நீ சரி கட்டப்போற எல்லாத்தையும்? எப்படி நீ சமத்துவமாக ஆள்கிறேங்கிறதுக்கு என்னா அர்த்தம்?
பாப்பான் படிக்காமல் படிக்காத ஜாதி படிக்கணும், சுத்தமாய் அடி ஜாதி படிக்கட்டும், அப்புறம் கணக்குப் போடுவோம். அதை விட்டுப்போட்டு அவன் படிக்கணும் இவன் படிக்கணும், இங்கே அவன் கெட்டிக்காரன், அவனுக்குத்தான் இடம், அவன் இப்படி இவன் இப்படி என்னைக்கு நீ சரி கட்டப்போற எல்லாத்தையும்? எப்படி நீ சமத்துவமாக ஆள்கிறேங்கிறதுக்கு என்னா அர்த்தம்?
இந்த பிரச்சினையையே மக்கள் சிந்திக்கிறதில்லை, நினைச்சிட்டாங்க, மக்களைப் பல ஜாதிகளாய்ப் பிரித்து அவர்களுக்கு தொழிலையும் கற்பித்து- ஒவ்வொரு ஜாதிக்கும் தொழில் நிர்ணயித்து - மனுதர்ம சட்டத்திலே இருக்குது, சாஸ்திரத்திலே இருக்குது, அந்த ஜாதி தர்மம் காப்பாத்தறதுதான் என் ஜென்மம் - என காந்தி சொல்லியிருக்கிறார். அதைத்தான் ராமராஜ்யம்-ன்னு அவர் சொல்றா. அந்த ராஜ்யத்துக்குத் தான் அரசியல் சட்டம் வகுத்திருக்கிறாங்க. என்னா போக்கிரித்தனமான -மோசடியான அரசியல் சட்டம் வகுக்கிறாப்பிலே இருந்தால் நம்ம ஆளு எவனும் அதிலே இருக்க வேண்டாமோ? அரசியல் சட்டம் வகுக்க ஆறு பேரை வச்சாங்கன்னா- நாலு பேரு பாப்பான் அதிலே. கொலைக்கார பாப்பானுங்க. நம்ம வீட்டிலே தின்னுகிட்டே ரொம்ப சீர்திருத்தவாதின்னு சொல்லிக்கிட்டே நம்ம கழுத்தை அறுத்தவனுங்க.
அல்லாடி கிருஷ்ணசாமிஅய்யர், K.M.முன்ஷி, T.T.கிருஷ்ணமாச்சாரி செத்துப் போன சூ.கோபால்சாமி அய்யங்கார். என்னா எழுதினாங்க? ஜாதியைக் காப்பாத்திட்டுப் போனான்க. இப்படியாக மோசடியான சட்டமது. இதிலே இந்த சின்னக் காரியத்துக்காகவா பரிகாரம். பரிகாரம் பண்றதுக்காவது இருக்குதான்னு பார்த்தால் அதுக்குக்கூட உரிமையில்லை அச்சட்டத்திலே. அவன் போட்டதுதான். என்னாலேயும் மாத்த முடியாது. மாத்தனும்ன்னா கடினமான நிபந்தனை வச்சிருக்கிறான். ஒரு ஜாதி உயர்ந்தது, ஒரு ஜாதி தாழ்ந்தது என்பதான கருத்துக்களை, அமைப்பை, அந்த மதத்தைக்காப்பதுதான் மதச்சுதந்திரம். சாஸ்திரங்களிலும் மற்ற ஆதாரங்களிலும் கூறுவதும் கொள்கையாகவும் நம்பிக்கையாகவும் கொண்டு உரிமை ஆக்குவதாக ஆகிறது.
ஜாதிக்கிளர்ச்சிதான் சிப்பாய்க் கலகம் மதத்தைக் காப்பாத்துகிறோம்ன்னு சொன்னால் இப்படித்தான் ஆகும். மதம் நாம் இருக்கிறமதம் இந்துமதம். இந்துமதத்தைக் காப்பாத்துகிறோம்ன்னா, இந்துமத ஆதார சாஸ்திர சம்பிரதாயங்களைக் காப்பாத்துவதாகத்தான் அர்த்தம். அதைத்தானே சொல்லுகிறான்- மதத்திலே உயர்ந்திருக்கிறவன் பாப்பான். அதை மாட்டேன்னு சொல்ல முடியாதே? எந்த ஆட்சியும் இந்தப் பாப்பான் சொல்லுகிறபடி வச்சாதான் இந்த ஆட்சி நிலைக்கும்படி செய்தான்களே தவிர- இல்லாட்டா ஆட்சியைக் கவிழ்த்திடறான். 1857லே வெள்ளைக்காரன் ஆட்சிலே சிப்பாய்க் கலகம்- அது என்னாச்சி? ஜனங்கள் ஏதோ ஒரு சுதந்திரக் கிளர்ச்சின்னு நம்பிகிட்டே இருக்கிறான்.
அது என்ன கிளர்ச்சி? ஜாதியைக் காப்பாத்தற கிளர்ச்சி. இதை நாங்கள்தான் சொல்லுகிறோம் அது ஜாதிக்கிளர்ச்சி-ன்னு. மத்தவனெல்லாம் அதைச் சுதந்திரக் கிளர்ச்சிங்கிறான். 1857யை வச்சி நேற்று 1957க்கு நூறாவது ஆண்டுவிழா கொண்டாடியிருக்கிறாங்க- அதைவச்சி நிறையப்புரட்டு. அது சாதிக்காக நடந்தது. அது எப்படி ஒழிஞ்சதுங்கிறதை ஒருவார்த்தை சொல்றேன் கேட்டுக்கங்க.1857லே விக்டோரியா ராணியம்மா பதவிக்கு வந்தாங்க. அந்தப் பதவிக்கு வந்த உடனே இந்த (ஜாதிக்)கலவரத்தை அடக்கிறதுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறாங்க. என்னா அந்த வாக்குறுதி கொடுத்திருங்காங்கன்னா!
மகாசாசனம் இந்துக்களாகிய உங்களுக்கு - உங்கள் ஜாதி - மத - சாஸ்திரப் புராண இதிகாசங்களிலே- நாங்கள் பிரவேசிப்பதில்லை - அவைகளைக் காப்பாத்திக் கொடுக்கிறோம்- அப்படீன்னு வாக்குறுதி கொடுத்தாங்க. அதுக்குப்பேருதான் மகாசாசனம் என்கிறது. எனக்கு தெரியும். சீனிவாசச்சாரியார் - சிவகாமி அய்யர் - இவுக எல்லாம் எங்கள் சுயமரியாதை இயக்கம்ஏற்பட்ட பிறகு, ஜாதிகளைப் பத்தி பேச்சு வந்த காலத்திலே - இதே சீனிவாசாச்சாரியார் எழுதிக் கொடுத்திருக்கிறாங்க - கவர்மெண்டுக்கு. 1857லே நீ கொடுத்தது வாக்குறுதின்னா? இப்போ எப்படி நடக்கிறே, சட்டசபையிலே சமுதாய சம்பந்தமாய்க் கேள்வி வந்தால் ராணி அம்மா கொடுத்த வாக்குறுதி என்னாச்சி? இப்படியே ஜாதியைக் காப்பாற்றுகிற அரசாங்கத்தை ஆதரிக்கிறது. ஜாதிகளை ஒழிச்சி மக்களை சமத்துவமாக்கனும்னா அந்த அரசாங்கத்தை ஒழிக்கிறது. இதுதான்பாப்பானுங்களுடைய தொழில். அந்த முறையிலே இன்றையதினம் கொஞ்சம் ஜாதிக்குக் கோளாறு செய்தாருங்கிற காரணத்தினாலே காமராசர் அரசாங்கத்தை ஒழிக்கிறதுக்கு எல்லா பாப்பானும் கச்சை கட்டிகிட்டு இருக்கிறான், இது இயற்கை. ஆகவே மகாசாசனத்தைக் கொள்கையாகவும் - உரிமையாகவும் - நம்பிக்கையாகவும் கொண்டு மகாசாசனத்தை உரிமையாக்குவதாக ஆகிறது.
இந்த உரிமையானது இந்த நாட்டு இந்து பொதுமக்களால் 100க்கு 3பேர்கள் மேல் ஜாதியாகவும் மத உரிமையை காப்பாற்றுகிறோம்னு சொல்லிட்டா அரசாங்கம் என்னா ஆகுதுன்னா 100க்கு 3பேர் பிராமணர்களாகிறான்? மேல்ஜாதியாகிறாங்க? அதனுடைய நிபந்தனை என்னான்னா? பாடு படாமல் அவன் மற்றவங்க உழைப்பிலேயே சாப்பிடனும். பேனாவைதான் கையிலே எடுக்கணும், மண்வெட்டியைக் கையில் எடுக்கக் கூடாது, இதுதான் ஜாதிக்கு அர்த்தம், 100க்கு 97 மக்களை கீழ் ஜாதியார்கள் என்றும் உடலுழைப்பு வேலை செய்துகொண்டு அடிமையாக்கி பாட்டாளியாய் பாப்பானுடைய தயவில் வாழவேண்டியவர்கள் என்றும் சொல்லப்பட்ட மக்கள் கல்வி-அறிவுக்கும், நீதிநிர்வாக உத்தியோகங்கள் பதவிகளுக்கும் தகுதியற்றவர் களென்று ஆக்குவதாக இருக்கிறது.
சாஸ்திரத்திலே இருக்குது. சூத்திரன் நிர்வாக உத்தியோகம் பார்க்கக்கூடாது, சூத்திரன் படிக்கக்கூடாது, அதை நேரிடையாய் நடத்தாமல் எவ்வளவோ தந்திரமாக நடத்திகிட்டுவருகிறாங்க, அந்த நடப்புதான் இன்னைக்கு நாம 100 க்கு 18 பேரு படிச்சவங்க, பாப்பான் 100க்கு 100பேர் படிச்சவங்க. நமக்கு உத்தியோகம் கிடைக்க கூடாதுங்கிற தந்திரம்தான் பாப்பான்100க்கு 75பேரு ஹைகோர்ட்ஜ்ட்ஜ், நாமலும் மத்தவனும் 100 க்கு 25 பேரு ஹைகோட்ஜட்ஜ், மற்ற உத்தியோகங்களிலேயும் அப்படியே. இந்து மனுதர்ம சாஸ்த்திரத்திலே, சூத்திரன் நிர்வாக அதிகாரம் பண்ணக்கூடாது. பாப்பான் தலைவணங்கி கேட்கிறதுதான். உத்தியோகம் சூத்திரனுக்கு கொடுக்ககூடாது, அதன் படி நடக்கிறாங்க - இதைநான் சும்மா காப்பாற்றுகிறோம்னா, நாங்கள் வீதி கூட்டுகிறதும் - கக்கூசு எடுக்கிறவனாக ஆகிறதும்-பியூனாகவும் - போலீஸ்காரனாகவும் - தான் இருக்கவேண்டியதா? சிந்திக்கணும் நீங்க.
ஆகையால் இந்த மதக் காப்பாற்று உரிமையை அரசாங்கத்தின் அரசு சட்டமாக இருக்க இடம் கொடுக்கக் கூடாது என்று இம்மாநாடு கருதுகிறது, இந்தக் காரியங்கள் சாதாரணமான தன்மையை மாற்றப்படாவிட்டால் இந்தமதத்தைக் காப்பாற்றிக் கொடுக்கிறோம் என்பதிலிருந்து, எல்லா மக்களுக்கும் ஒரு சமத்துவமான மத ஆட்சியை ஆள்கிறோம் என்று சொல்லாவிட்டால் எந்தவிதமான முறையைக் கையாண்டாவது மாற்றித்தரும்படி செய்யவேண்டியது, பொதுமக்களின் இன்றியமையாத கடமையாகிறது என்று இம்மாநாடு கருதுகிறது.தீண்டாமை போகிறதுக்கு எங்கே ஆதரவு? பாப்பான் போகக்கூடாது,பறையன் போகக் கூடாதுன்னா எங்கே அதற்கு ஆதரவு? என்னாயிருந்தால் நீ மதிக்கிறதுக்கு?
நம்மை திருத்திக்கிறதுக்கு இடம் கொடுக்கலே, இந்தக் கஷ்டமான நிலையிலே நாம இருக்கிறோம். ஆனதினாலே மிகுந்த வேதனையோட மனதுக்கு சளிக்காமல் விருப்பத் தோட இந்தச் சட்டத்தை எரிக்க வேண்டுமென்கிற நிலைமைக்கு வந்திருக்கிறோம். இது முதல் வாய்தா இனி அடுத்தாப்பலே எதை எரிக்கிறது, எதை உடைக்கிறது, எதைத் துவக்கிறது என்கிறதை நாம செய்யவேணும். இந்த காரியத்தோட நம்ம ஆயுள் முடிஞ்சிபோச்சீன்னு கருதாதீங்க, ஆகவே அருமைத் தோழர்களே! இந்தச் சட்டத்தை எரிக்கவேண்டும்.
இந்த தீர்மானத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன். வாஸ்தவம்தான், காந்திக்கு அதிகாரம் கொடுக்கிறாப்பிலே, சம்பிரதாயப்படி தோழர் குருசாமி அவர்கள் தீர்மானத்தை பிரேரிப்பார்கள் என்றபடி பிரேரித்தார்கள். (அடுத்த நிகழ்ச்சி தொடர்கிறது). 03-11-1957 ல் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய்கள் அளிப்புவிழாவுக்குப் பின்பு தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களின் முடிவுரை- நன்றியுரை:- வருமாறு:- தோழர்களே! இன்றைய தினம் முக்கியமான நிகழ்ச்சி இனிது நிறைவேறியது.
எனக்குப் பணத்திலே ரொம்ப ஆசை
தோழர்களே! சாதாரணமாக எனக்கு எடை இருந்தால் 7000 ரூபாய்தான் இருக்கலாம், மேலும் 10 - 5 இருக்குமோ என்னமோ தெரியாது, ரொம்ப நாளாச்சி எடைபோட்டு, இவர்கள் இன்றைய தினம் ரூ 7700 போட்டதாகச் சொல்லுகிறார்கள். இருக்கும், ரொம்ப மகிழ்ச்சி, இது வரையிலும் இந்த நாட்டிலே நம்ம தமிழ்நாட்டிலே இப்படிப்பட்ட ஒரு விழா யாருக்கும் நடந்தது இல்லை. நமக்கு நடந்தது பற்றி நான் ரொம்பவும் பெருமைப்பட வேண்டியது நியாயமாகும், இந்த மாவட்டத்திலே முன்பு நான் முதலில் தெரிவித்தது போல எல்லா மாவட்டங்களையும் விட சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஏதோ முயற்சிகள் செய்து நம் இயக்கத்தை வளர்த்ததோடு என்னையும் ஊக்கப்படுத்தி வந்தார்கள். உங்களுக்குத் தெரியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நாகப்பட்டிணத்திலே 75பவுன் கொடுத்தார்கள், ஆண்டுக்கு ஒரு பவுன் வீதம் 75 பவுன் கொடுத்தார்கள்.
பிறகு பல ஊர்களிலே பலவிருந்தது, இந்த ஆண்டு 7700 ரூபாய், எப்போ ஒரு தடவையிலேயே, எனக்கு ரொம்ப பெருமை இது, எனக்குப் பணத்திலே ரொம்ப ஆசை,
(சிரிப்பு) பேராசை எவ்வளவு பெரிய ஆசைன்னு சொல்லமுடியாது. ஏன்னா எவ்வளவு வந்தாலும் திருப்தியாகிறதில்லே, ஆனதினாலே பேராசைன்னு சொல்றேன்,
(சிரிப்பு) ஆனால் அதேசமயத்திலே ஒண்ணு சொல்றேன், இவ்வாறு பேராசைப்பட்டு பணத்தை சேத்தினாலும் அது என்ன பண்றதுங்கிறதுக்கு இன்னும் முடிவேவில்லை. இன்னமும் முடிவு பண்ணலே, பணத்துக்கும் இவ்வளவு ரூபாய் கொடுத்திருக்கிறீங்க, இதை யாருக்கு கொடுக்கிறது, எனக்கு கொடுக்கிறதுன்னு, என்னா பண்றதுன்னு முடிவு பண்ணலே. இது கழகத்துக்கு இருக்குது, இன்னைக்கு ஏன் ஆயுசு வரைக்கும் நல்லா சாப்பிட்டு நல்லா அனுபவிச்சி நல்லா போகலாம்னு நினைக்கிறேனா? நான் செலவு பண்ணுற ஒவ்வொரு காசும் கழகத்துக்கு நஷ்டம், ஏன் இந்த செலவு என்று அவ்வளவு கருத்துடன் இருக்கிறேன். ஏன் இந்த செலவு பண்ணனும் அவ்வளவு கருதுத்துடன் இருக்கிறேன். இதை நான் பாதுக்காக்கணும், பணம் நீங்கள் கொடுக்கிறதிலே இருக்கிற கஷ்டத்தைவிட நான் அதிகமாகக் கஷ்டபடுகிறேன்-இந்தப் பணத்தைக் காப்பாற்றுகிற விஷயத்திலே.
(சிரிப்பு) பேராசை எவ்வளவு பெரிய ஆசைன்னு சொல்லமுடியாது. ஏன்னா எவ்வளவு வந்தாலும் திருப்தியாகிறதில்லே, ஆனதினாலே பேராசைன்னு சொல்றேன்,
(சிரிப்பு) ஆனால் அதேசமயத்திலே ஒண்ணு சொல்றேன், இவ்வாறு பேராசைப்பட்டு பணத்தை சேத்தினாலும் அது என்ன பண்றதுங்கிறதுக்கு இன்னும் முடிவேவில்லை. இன்னமும் முடிவு பண்ணலே, பணத்துக்கும் இவ்வளவு ரூபாய் கொடுத்திருக்கிறீங்க, இதை யாருக்கு கொடுக்கிறது, எனக்கு கொடுக்கிறதுன்னு, என்னா பண்றதுன்னு முடிவு பண்ணலே. இது கழகத்துக்கு இருக்குது, இன்னைக்கு ஏன் ஆயுசு வரைக்கும் நல்லா சாப்பிட்டு நல்லா அனுபவிச்சி நல்லா போகலாம்னு நினைக்கிறேனா? நான் செலவு பண்ணுற ஒவ்வொரு காசும் கழகத்துக்கு நஷ்டம், ஏன் இந்த செலவு என்று அவ்வளவு கருத்துடன் இருக்கிறேன். ஏன் இந்த செலவு பண்ணனும் அவ்வளவு கருதுத்துடன் இருக்கிறேன். இதை நான் பாதுக்காக்கணும், பணம் நீங்கள் கொடுக்கிறதிலே இருக்கிற கஷ்டத்தைவிட நான் அதிகமாகக் கஷ்டபடுகிறேன்-இந்தப் பணத்தைக் காப்பாற்றுகிற விஷயத்திலே.
நல்லவண்ணம் மக்கள் ஆதரவைப்பெற்ற கழகம்
என்னா லட்சியத்தைக் கொண்டு - நமது இயக்கத்திற்குப் பயன்படவேண்டும் - ஆனால் நான் பயன்படுத்தப் போகிறேனா? இல்லை. எனக்கு இந்த சொத்துக் கணக்கு பார்க்கிற வேலைதான் சரியாய் இருக்குது. ஒழுங்காய் இருக்குதான்னு இந்தப் பிரபுக்கள் (மகாநாட்டு மக்களைகாட்டி குறிப்பிடுகிறார்) தான் பார்க்க போறாங்க. இவுகதான் அனுபவிக்கப் போறாங்க. இவுகத்தான் இதை என்னபண்றதுன்னு கணக்குப் பார்க்கப் போறாங்க.என்காலத்திலே சண்டை இல்லாமல் இருக்கிறது.அது ஒண்ணு தானே தவிர மற்றபடி காரியமெல்லாம் எனக்குன்னு ஒண்ணும் நான் திட்டம் கூட போடுகிறதில்லே. ஏதோ நடக்குது. இதிலிருந்து நான் நல்லா உணர்ந்து கொள்ளுகிறேன், நம் கழகம் மக்களுடைய ஆதரவை நல்லவண்ணம் பெற்று இருக்கிறது, முன்னே நான் சொன்னது போல இந்த ஆதரவை நல்ல காரியத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற ஒரு கவலைதான் எனக்கு அது.
இப்பொழுது வரவர ரொம்ப தைரியமாய்ப் போச்சு, இதுக்கு முன்னேயாவது நான் கொஞ்ச காலத்துக்கு முன்பு நினைச்சுக் கொண்டிருந்தேன், என்னத்துக்காக உயிர் வாழனும், ஏதோ வந்தோம் இயற்கையாக வாழ்ந்தோம், சீக்கிரம் முடிவெய்த வேண்டியது தானே கடமை, ஏன் நாம் இந்த பெரும் தொல்லைகளை இழுத்துப் போட்டுகிறது? எவ்வளவு நாளைக்கு இருந்தாதான் என்னா பிரயோஜனம்? என்றெல்லாம் நான் கவலைப்பட்டதுண்டு. இப்பொழுது கொஞ்ச காலமாகவே நான் சொல்லிவருகிறேன், சாவிலே இருக்கணும்கிற ஆசை. உங்களுடைய அன்பையும் பார்க்கிறேன், ஆதரவையும் பார்க்கிறேன். நான் சொல்றதையெல்லாம் உடனுக்குடன் நீங்க கேட்கிறீங்க, அப்புறம் நான் ஏன் சலிப்படைய வேணும் என்னுடைய வாழ்விலே.
என் ஆசையெல்லாம் மக்களின் இழிவு நீங்க வேண்டும்
என்னைத்தவிர - எங்களைத்தவிர - என் கழகத்தை தவிர - நினைக்கவும் கஷ்டப்படுகிறாங்க, பேசவும் பயப்படுகிறாங்க, அப்படி அபாரமான காரியமாகத் தோணுது. நம்முடைய முயற்சிகள், அப்படிபட்ட காரியங்கள் நமக்குச் சாதாரண முறையிலே நடக்கும் படியான ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறபோது ஏன் நாம் அதனுடைய வெற்றியைக் காணுகிறவரை இருக்கக்கூடாது? அது இன்னும் கொஞ்சம் வளர்ச்சியடைந்து நல்ல நிலையிலே ஏன் ஒப்படைக்கக் கூடாது என்கிற ஆசைதான்.நான் வாழவேண்டுமென்று நினைத்ததற்குக் காரணமே தவிர நான் இனி என்ன செய்யப்போகிறேன்? இல்லே பணத்தைக் கொண்டு எனக்கு என்னத் தேவை? இல்லே நான் செலவு பண்ணி எலக்ஷனிலே நிற்கிறேனா? இல்லே பதவி அடைகிறேனா? இல்லே மந்திரி பதவி ஏதாவது கிடைக்குமென்று நினைக்கிறேனா? அவைகளில் ஆசையே இல்லை. எனக்குள்ள ஆசை எல்லாம் நம் மக்களுக்கு இருக்கிற இழிவு நீங்க வேண்டும், இழிவு என்றால் லேசான இழிவல்ல, 2000, 3000 வருஷ காலமாக இருந்து வருகிற இழிவு. இராவணனாலே முடியலே, இரணியனாலே முடியலே, சூரபத்மனாலே முடியலே. இன்னும் அநேக பேரரசர்களாலே முடியலே, அது எல்லாம் இந்தப் பார்ப்பான்களாலே தோல்விடைந்திருக்கிறதாகக் காணுகிறோம்.
ஆதாரங்களிலே எந்த அளவுக்கு பொய்யாய் இருந்தாலும் 3000 வருஷமாக ஒரு இழிவு நிலைச்சி இருக்குதுன்னா உலகத்திலே இல்லாத அதிசயம், அப்படிப்பட்ட ஒரு இழிவை எந்தக் காரணத்தைக் முன்னிட்டாவது ஒழிக்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைச்சால் நாமே பெரிய ஆளு, பெரிய காரியத்தை சாதித்தோம், யாருக்காக? நமக்காக அல்ல. மக்களுக்காக உலகத்துக்காக அந்த ஆசைக்குத்தான் இந்த பணம் இயக்கத்தின் பேராலே மக்களுடைய உங்கள் ஆதரவு மக்களுடைய உழைப்பு எல்லாம் கட்டுப்பட்டதே தவிர வேறே இல்லே.ஆகவே தோழர்களே! இன்றைய தினம் இது ஒரு பெரிய வெற்றி எனக்கு. ஒரு பெருமை என்றெல்லாம் நான் சந்தேகமற ஒப்புக் கொள்ளுகிறேன். மனப்பூர்வமாக என்னை ஆதரித்து இவ்வளவு பெரிய மரியாதை செய்த உங்களை என்னுடைய மனப்பூர்த்தியாக நான் பாராட்டி என்னுடைய நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
காங்கிரஸ் ஆட்சி ஒழியவேணும்
தோழர்களே! இன்றைய தினம் மாலையிலே இங்கே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அது லேசான தீர்மானம் அல்ல. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை நெருப்பு வைச்சி கொளுத்துகிற தீர்மானம், அதற்கு அர்த்தம் என்னவென்றால் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்ற கருத்து உள்ளே இருக்கிறது, (கை தட்டல்) ஏன்? அவர்களுடைய ஆட்சியின் தன்மை அந்த அரசியல் அமைப்பு செய்தது எவ்வளவு புரட்டு, எவ்வளவு சூது எவ்வளவு நம்மை அடக்கி ஆளுகிற ஆதிக்கத்தன்மை இருக்கிறது என்பது நமக்கு நன்றாக விளங்கும், அந்த ஆத்திரத்தினாலேதான் இந்த ஆட்சி ஒழியவேண்டும். இந்தியா பூராவுக்கும் ஒழியணுனு நான் கோரலே, ஒழிய வேண்டியது மக்களுடைய நலனுக்குநல்லதுதான், ஆனால் எனக்கு யோக்கியதை இல்லை, அந்தக் கோரிக்கை எல்லாம் நமக்கு ரொம்ப விரும்புவது. ஆனால் நாம் கோருவது தமிழ்நாட்டிலேயாவது இந்த (காங்கிரஸ் வடநாட்டான் கூட்டு) ஆட்சி ஒழியவேணும், தமிழ் நாட்டைப் பொறுத்த வரைக்கும் வடநாட்டினுடைய ஆதிக்கமோ இந்த பார்ப்பானருடைய ஆதிக்கமோ இவர்களும் இந்த அகம் பாவமான கொடுமையான பார்லிமெண்டுகளோ இல்லாமல் இருக்க வேணும் என்பது தான் என்னுடைய ஆசை, அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்.
மகாநாட்டு தீர்மானங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துக
தோழர்களே! தீர்மானத்தை நீங்கள் இந்த 1957 நவம்பர் மாதம் 26ஆம் தேதி நடத்திக் கொடுப்பீர்களேயானால் அடுத்த ஜனவரியிலே நல்ல பலன் கிடைக்கும். இந்த நாட்டிற்கு என்ன லாபம் என்றால் உலகமெல்லாம் தெரியும், நல்லா பரவும், இந்த நாட்டின் நிலைமை தெரியும், எவனாவது சிந்திப்பான். நாம் அக்கிரமம் பண்ணுகிறோம்மா இல்லை. இந்தக் கூட்டுதான் வட நாட்டானும்- பாப்பானும் சேர்ந்து இந்த மனித தர்மத்திற்கு விரோதமான அக்கிரமம் செய்கிறார்களா என்பதை உலகம் அறியட்டும். பின் மற்றோர் திட்டத்தையும் நிறைவேற்றுவோம்,போராடவேண்டும். அதில் அடங்கி இருக்குது நம்முடைய லட்சியம். எதாவது நாங்கள் விட்டுவிட்டுப் போனாலும் நீங்கள் இந்த - குழந்தைகள் (மாநாட்டில் பெரியார் முன்னிலையில் உள்ளவர்களைக் காட்டி குறிப்பிடுகிறார்) நீங்கள் உங்கள் காலத்திலே முடிவு பெறத்தகுந்த திட்டம் போட வேண்டியது அவசியம், நம்முடைய கடமை. உடனடியாக முடியாவிட்டாலும் இத்தனை வருஷத்திலாவது முடியவேண்டுமென்று திட்டம் போடவேண்டும், அந்த முறையிலேதான் நான் இந்தக் காரியத்தைச் செய்துவருகிறோம்.
தோழர்களே! எனக்கு சந்தோஷத்தினாலே வரலே, களைப்பாய் இருக்கிறது, அடுத்தாப்பிலே நிகழ்ச்சி இருக்குது. நீங்கள் அமைதியாக இருந்து நிகழ்ச்சியை காணுங்கள், நீங்கள் வீடு திரும்பும் போது 26ஆம் தேதி எப்பவரும் எப்பவரும்னு நீங்கள் எதிர் பாருங்கள்! என்று நான் கேட்டுக் கொண்டு மறுபடியும் நாம் மானத்தைப் பெரியதாகவைத்து நடந்துக்க வேணும், இந்த மாவட்டம் எனக்குஅளித்த பெருமை தமிழ் நாட்டில் தலைச்சிறந்த மாவட்டமாகும் என்பதைக் கூறி நன்றி செலுத்துகிறேன். வணக்கம்.
நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி
Comments
Post a Comment