நன்றி எதிர்பாராத பணி
தந்தை பெரியார் என்ற மாபெரும் தலைவரால் பயன்பெற்றவர்கள் - பல் துறைகளில்
- கணக்கில் அடங்கவே அடங்காது! அய்யா அவர்கள் சொல்லுவார்கள்,
நம் மக்களில் பலர், வேலை ஆகவில்லை என்றால்தான் மீண்டும் நம்மை வந்து சந்திப்பார்கள்;
வேலை முடிந்துவிட்டது என்றால்,
அவர்களில் பலர் நம்மைத் திரும்பியே பார்க்கமாட்டார்கள் என்று அனுபவ ரீதியாக, அமைதியாக சிரித்துக்கொண்டே
- ஆத்திரமோ,
வெறுப்போ கொள்ளாமல் கூறுவார்கள்!
நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்டவேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று ஆகும்; அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும் என்று அவர்கள் நடத்திய குடிஅரசு வார ஏட்டில் 1938இல் எழுதினார்கள்!
தமது கழகப் பணியையே Thank less job - நன்றியை எதிர்பார்க்காத பணி என்று தான் மகுடமிட்டுச் சொல்வார்கள்!
- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 1
Comments
Post a Comment