இராசாசியின் பாராட்டு
பொது வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் ஈ.வெ.ராவின் குருவாய், நண்பராய் தோழராய் விளங்கியவரும், பின்னர் பல்லாண்டு காலம் எதிரும் புதிருமாக விளங்கியவருமான மூதறிஞர் இராஜகோபாலாச்சாரியாரும் பெரியாரிடம் அத்தகைய சிறப்பினைக் கண்டார்.
காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி தென்னிந்திய வர்த்தக சபை நடத்திய கூட்டத்தில் பேசிய இராஜகோபாலாச்சாரியார், பெரியார் யோக்கியமானவர், நாணயமானவர் என்றே நான் நினைக்கிறேன். அவருடைய சிலைக்கு அடியில் என்ன எழுதப்பட்டுள்ளனவோ அவற்றைப் பலபேர் ஆட்சேபிக்கின்றனர். ஆனால் நான் ஆட்சேபிக்கவில்லை. ஒருவர் எந்தவிதமான மனிதரோ அதையும் நாம் அறிந்து கொள்வது நல்லதே என்று குறிப்பிட்டார்.
இத்தகைய இழையளவு பொய்யும் கலவாத உண்மை உணர்வு அல்லவா பெரியாரை, காங்கிரசின் வாய்ப்புகளை நொடியில் உதற வைத்தது? ஜாதியை ஒழிக்க வாழ்நாள் முழுதும் போராடச் செய்தது? ஆண் - பெண் ஒரு நிலை சமுதாயத்தை உருவாக்க அறுபது ஆண்டு உழைக்க வைத்தது? கடவுள் நம்பிக்கையைத் தகர்க்க இயக்கம் நடத்த வைத்தது? பெரியாரின் இப்போராட்டங்களில் எது அவருக்கு தனிப்பட்ட முறையில் ஆதாயம்? இல்லாத புகழைச் சேர்த்தது?
Comments
Post a Comment