கொடுமை
கற்பை மூன்றாகப் பிரித்தவர்கள் தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக் கற்பு என்று மூன்று டிகிரி கற்பு நிலைகளில், பிறர் நெஞ்சம் புகாள் என்பதுதான் தலைக்கற்பாம்!
பிறர் என்றால் ஆண்கள்தான்!
தந்தை பெரியார் சொன்னார்; அப்படியானால் ஒரு பெண்கூட கற்பு நெறியுடன் உள்ளவராக இருக்கமுடியுமா?
எதிரே வரும் பெண் அழகாக இருக்கிறார்!
என்று நினைத்த மாத்திரத்திலே
(தொடுவதுகூட இல்லை) மகளிர் கற்பு பறந்து விடுகிறதா?
என்ன கொடுமை!
ஆண்களுக்கு இப்படி உண்டா? கற்பு என்ற சங்கிலி தேவை என்றால் அது கணவனையும் மனைவியையும் - (இரு சாராரையும்)
இறுக்கிக் கட்ட வேண்டுமே தவிர, அது ஒருவரை மட்டும் கட்டிப் போட்டால் என்ன நியாயம்? அது மனித நேயமா என்று கேட்டார் தந்தை பெரியார்.
-கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 2
Comments
Post a Comment