தந்தை பெரியாரின் பெருந்தன்மை
3.1.1971 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த பார்ப்பன மாணவர்கள் வெளியில் நின்று கொண்டு கூச்சல் போட்டும், விசிலடித்தும் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். உள்ளே இருந்த தோழர்கள் ஓடி வந்தபோது, பார்ப்பனர்களுக்கே உரித்தான சோதாத் தனத்தில் குதிகால் பிடரியில் அடிபட ஒடி ஒளிந்தனர். பார்ப்பனர்களின் இந்தப் பரிதாப நிலை குறித்து தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை ஒன்றினைக் கூட வெளியிட்டார்கள். அந்த அறிக்கைகூட எவ்வளவுப் பெருந்தன்மையானது; மனிதநேய நோக்குடையது!
பையன்கள் ஓடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது. இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யத் தூண்டி விடுகின்றார்கள். காரணம், தேர்தலில் தோற்று விடுவது உறுதி என்கிற பயமும், ஆத்திரமும்தான். ஆதலால் எதிரிகள் என்ன செய்தாலும், எப்படி நடந்துகொண்டாலும் நம்மவர்கள் கூடுமானவரை கலகம் ஏற்படாமல் அதாவது அவர்கள் எண்ணம் கைகூடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது நமது கடமையாகும்.
(விடுதலை,
1.2.1971)
மற்ற தலைவர்களாக இருந்தால் எப்படி எழுதியிருப்பார்கள்? சமுதாயத்தை வழி நடத்தும் பொறுப்பு தம் தலையில் இருப்பதாக எப்பொழுதுமே கருதக் கூடிய காலக் கதிரவன் அல்லவா - அதனால்தான் ஆத்திரத்தை அடிபணிய வைத்து அறிவுக்கு ஆளுமையைக் கொடுக்கிறார்.
தந்தை
பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment