மரணங்கள் பெரியார் பயணத்தைத் தடுப்பதில்லை!
1933ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மனைவி நாகம்மையாருக்குத் தீராத உடல் நோய் கண்டது. ஈரோடு மிஷன் மருத்துவ நிலையத்தில் சேர்க்கப்பட்டார். ஈ.வெ.ரா. அல்லும் பகலும் உடனிருந்தார். இச்சமயம் திருப்பத்தூரில் வடஆற்காடு ஜில்லா சுயமரியாதை மாநாடு ஒன்று நடைபெற்றது. இதற்கு பெரியார் புறப்பட்டார். நாகம்மையாரின் உடல்நிலை மிக்க மோசமாகிவிட்டது.
உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பத்தூருக்குப் புறப்பட்டு விட்டார். போகவேண்டாம் என்று சிலர் தடுத்தனர். இதை அவர் கேட்கவில்லை. மாநாட்டுக்குச் சென்றுவிட்டார். வீட்டிலுள்ளவர்களின் காயலாவுக்காகவோ, சாவுக்காகவோ இவர் காத்திருப்பதில்லை. இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. இவர்கள் குடும்பத்திற்கு ஒரே பையன். அவன் 10 வயதில் லண்டனுக்குப் படிப்புக்காக அனுப்பப்பட்டான். அவன் திரும்பி வந்து க்ஷயரோகத்தில் இறந்துவிட்டான். அவன் இறக்கும்போது பெரியார் சுற்றுப் பிரயாணத்தில் இருந்தார். தமது மாமனார் இவர் வீட்டில் காயலாயிருந்தார். அவர் இறக்கும்போது சென்னையில் இருக்கிறார். இவர் தமையனார் மனைவி இறந்த அன்றே வெளியூருக்குப் புறப்பட்டு விட்டார். இவரது தாயார் இறப்பதற்கு 1 மணிக்கு முன் சுற்றுப் பிரயாணம் சென்றுவிட்டார். இறந்தவுடன் 130 மைல் கார் சென்று அழைத்து வந்தது. அன்று மாலையே நாகம்மையார் சாவுப் படுக்கையில் இருக்கும்போது திருப்பத்தூர் மாநாட்டுக்குச் சென்றுவிட்டார். வந்ததும் மனைவி இறந்து போனார். இறந்த அன்றே திருச்சிக்குச் சென்று அங்கு ஒரு 144அய் மீறி அரஸ்டு செய்யப்பட்டு விட்டார். திருப்பத்தூர் மாநாட்டில் ஈரோட்டு வேலைத் திட்டத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிவிட்டுத்தான் திரும்பினார்.
தந்தை
பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment