நீங்க என்னவேனா சொல்லுங்க
சிங்களக் குயில் தவமணி தேவி என்று ஒரு நடிகை இருந்தார். அரை நிர்வாணத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாயிருந்தார். ஒருநாள் அந்த நடிகை பெரியாரைப் பார்க்க விடுதலை அலுவலகத்துக்கு வந்துவிட்டார். அய்யாவுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை. அய்யாவின் கட்சி பிடித்திருப்பதாகவும், கொள்கைகள் பிடித்திருப்பதாகவும் நான் சிலோனில் இருந்து வந்து இங்கே படங்களில் நடிப்பதாகவும் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். பெரியாரும், சொல்லுங்கம்மா சொல்லுங்க என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அந்த தேவியின் ஸ்டைலைக் கண்டு நாங்கள் திகைத்துப் போனோம். எங்க திருவள்ளுவர் மாநாடு அடுத்த வாரம் பிராட்வே மைதானத்தில் நடக்கப் போகுதுங்க. அம்மா அவசியம் விஜயம் செய்யணும் என்று அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டதுடன் வாசல்வரை சென்று அவரை வழியனுப்பி வைத்தார். இப்படி ஒரு நடிகை எங்கள் ஆபீஸைத் தேடி வந்ததில் எங்களுக்கெல்லாம் வியப்பு.
அப்பாடி! எவ்வளவு பெரிய கார் வச்சிருக்கு அந்தம்மா?... என்று ஆச்சரியப்பட்டோம். அவரைப் பற்றி நாங்கள் பெரியாரிடம் கூற... அவரோ, நீங்க என்னவேனா சொல்லுங்க. நடிகைன்னா எல்லாம்தான் செஞ்சாகணும். அவங்களுக்கு என் கொள்கையில ஒரு ஆசை வந்தது போல இங்க இருக்கிற எந்த நடிகைக்கு வந்திருக்கு? என்று கேட்டார். மறுவாரம் நடந்த திருவள்ளுவர் மாநாட்டுக்கும் தவமணி தேவி வரத் தவறவில்லை.
- இராம.அரங்கண்ணல்
எழுதிய நினைவுகள் புத்தகத்திலிருந்து
தந்தை
பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர்
Comments
Post a Comment