தந்தை பெரியாரிடம் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள்
பொது வாழ்வில் ஈடுபடுவது என்பது எளிமையான காரியம் அல்ல. அண்ணா கூறியது போல் எதையும் தாங்கும் இதயம் பெற்று இருக்க வேண்டும். எதனையும் எதிர்பார்த்தல் இன்றி யாரிடமும், எதையும் எதிர்பார்க்காமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் பிறருக்குச் செய்யும் உதவிகளை மறந்துவிட்டுப் பிறர் நமக்குச் செய்யும் உதவியை என்றைக்கும் நினைவில் வைத்துக் கொண்டு நன்றி செலுத்த வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடுவதைவிடப் பிறருக்கும் நம்மால் இயன்றவரை உதவி செய்து மகிழ்வதே பயனுள்ள வாழ்க்கையாக அமையும். தன்னலம் கருதாது பிறர் நலம் கருதிப் பணி செய்யப் பெரிய உள்ளம் படைத்திருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியாலும்,
பயிற்சியாலும் அத்தகைய உள்ளத்தை நாம் பெற முடியும். பிறருக்கு ஏற்படும் புகழ், உயர்வு, பெருமை இவற்றைக் கண்டு மனம் புழுங்காமல் மகிழ்ச்சி அடைய மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்குப் பிறரால் ஏற்படும் சிறுமைகள்,
துன்பங்கள்,
குற்றச்சாட்டுகள் இவற்றைப் பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும். இதுவே தந்தை பெரியாரிடமிருந்து வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள். இவற்றையே பின்பற்றி வாழ்ந்து வருகிறேன்.
- நீதியரசர் பெ.வேணுகோபால்
தந்தை பெரியார்
128ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment