பெரும் வாய்ப்பு இழப்பு



திரும்பிப் போகும்போது, என்னை தன் வண்டியில் வரும்படி அழைத்தார். அதில் இருவரும் பயணம் செய்யும் போது, மதுரைப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு இடையூறு இல்லாதபடி திருச்சியிலும் ஒரு பல்கலைக் கழகம் நிறுவுவதானால், இருபத்தைந்து இலட்சம் போல் நான் கொடுக்கலாமென்று முதல் அமைச்சரிடம் தனியாகச் சொல்லுங்கள் என்று பெரியார் கட்டளையிட்டார். அச்செய்தியை உரியவரிடம் சேர்த்துவிட்டேன். மீண்டும் சில ஆண்டுகளுக்குப்பின், இதே செய்தியை பெரியார் சார்பில் கொண்டு போய்ச் சேர்த்தேன். பயன்படுத்திக் கொள்ளவில்லை. தமிழர்கள், தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதில், உலகப் பரிசுக்கு உரியவர்கள் ஆயிற்றே!
சிக்கனக்காரராகிய பெரியாரின் நிதி உதவி, கல்லூரி அமைக்க மட்டுமே என்று எண்ணிவிடக் கூடாது. சமூக வளர்ச்சிக்கும் கை கொடுத்தது.
திருச்சி பொது மருத்துவமனையில் குழந்தைகள் பகுதிக்குக் கட்டடம் அமைக்க, பெரியார் ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடை வழங்கினார். அவர், ஈரோடு, அரசினர் மருத்துவமனையில், புதுக் கட்டடம் கட்டவும் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கினார்.
எத்தனைக் கலப்புத் திருமணங்களுக்கு, சீர்திருத்தத் திருமணங்களுக்கு பெரியார் பண உதவி செய்துள்ளார்! பெரியாரால் அல்லவா பல்லாயிரம் புரட்சியாளர்கள் தலை நிமிர்ந்து நடக்கிறார்கள் என்பதை நன்றியோடு நினைப்போர் ஏராளம்.
என் ஒருவனுக்கே, பெரியார் தம் பணத்தில், நெ.து. சுந்தர வடிவேலு பகுத்தறிவுப் பரிசுக் கட்டளையை ஈரோடு சிக்கைய்யா கல்லூரியில் நிறுவியதை எண்ணினால் உள்ளம் உருகுகிறது.

தந்தை பெரியார் தன்னலமின்றி வாழ்நாள் முழுவதும் பொது நலம் பேணும் தலைவராக விளங்கினார். அரசியல் நாகரிகத்திற்கு தலை சிறந்த எடுத்துக்காட்டாக மிளிர்ந்தார். வன்முறைக்கு இடம் கொடாது பொது நலம் பேணினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை