அய்யாவின் இறுதிப் பேருரை பகுதி - 1
நூல் - அய்யாவின் இறுதிப் பேருரை
பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!
இன்றைய தினம் இந்த இடத்திலே சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாக சென்னையில் 10 நாள்களுக்கு முன்னால் நடந்த மகாநாட்டின் தீர்மானத்தை விளக்கவும், மற்றும் நம்முடைய கடமைகளை எடுத்து விளக்கவும் - அதன்படி பேரறிஞர்கள் பலர் அத்தீர்மானத்தை விளக்கியும், அது சம்மந்தமான மற்றும் பல அறிவு விஷயங்களை உங்களுக்கு நல்ல வண்ணம் எடுத்து விளக்கினார்கள்.
எல்லா விஷயங்களையும் நல்ல வண்ணம் விளக்கினார்கள். என்னையும் ஒரு முக்கியப் பேச்சாளனாக நீங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதினாலே நானும் சில வார்த்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
தோழர்களே, இந்தத் தியாகராயர் நகர் என்னும் மாபெரும் பிரபலமான இந்த நகருக்கு - இதற்கு முன்னால் நான் வந்து - நண்பர்கள் சொன்னார்கள் - பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று. இருக்கலாம், எனக்கு ஞாபகம் வரவில்லை. பக்கத்தில் இப்போது நான் வந்ததாக.
சென்னையில் அடிக்கடி அடிக்கடி பேசுகிறேன். என்ன காரணமோ, இங்கே வரும்படியான வாய்ப்பு ஏற்படவில்லை. இப்பொழுதுதான் வந்திருக்கிறேன். வரும்படியான வாய்ப்பு ஏற்படவில்லை என்றால், அதனால் சில காரியங்களும் குறைவாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
என்னுடைய கருத்துகள் இவ்வளவு தூரம் எட்டியிருக்காத காரணத்தினால், மக்கள் பலருக்குத் தெளிவுபட்டிருக்காது; என்ன விஷயம், நம் கழகம் என்ன; காரியம் என்ன என்று. ஆனாலும், பலருக்குத் தெரிந்து இருக்கலாம்.
என்றாலும், அண்மையில் நடக்கப்போகின்ற கிளர்ச்சியை முன்னிட்டு, சென்னையில் பல பாகங்களிலும் அது விஷயமாகத் தெளிவுபடுத்த பல கூட்டங்கள் போடவேண்டும் என்று தீர்மானித்ததன்படி, பல கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. என்னமோ இது ஒன்று இரண்டுதான் நடந்தது. இன்னமும் நடக்கலாம். ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மற்ற பாகங்களிலும் நடக்கலாம். நடக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
தோழர்களே!
நாம் பேச்சை தொடங்குவதற்கு முன்பாக, நமது நண்பர் உயர்திரு வீரமணி அவர்கள், நம்முடைய கழக லட்சியச் சொல்லை விளக்கினார்கள். நானும் விளக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
அதிலே, நம் கழகத் தோழர்களுக்கு ஒன்றம் கஷ்டம் இருக்காது. புதிதாக வருபவர்களுக்கும், பகுத்தறிவைப்பற்றி கவலைப்படாமல், மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கும் கொஞ்சம் சங்கடம் ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம். என்னடா, கடவுளை இப்படி எல்லாம் சொல்லுகிறான்; இருக்காது என்ற நம்பிக்கை இல்லாதவனையும் அவனையும் நாம் முட்டாள் என்றுதான் சொல்லி ஆகவேண்டும். இல்லை என்றால், அவனையும் முட்டாள் என்றுதான் சொல்லி ஆகவேண்டும்.
ஆனாலும், நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாக வைத்துக் கடவுள் சங்கதி பேசினாலே கொஞ்சம் மரியாதையாகப் பேசுவோம்; மானத்தோடு பேசுவோம். பகுத்தறிவு இல்லாதவர்கள், கொஞ்சம் கடுமையாகத்தான் பேசுவார்கள் - நம்மைவிட மோசமாக.
உதாரணமாக சொல்கிறேன். நாலாயிரப் பிரபந்தம் பாடின ஆழ்வார்கள் - தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடின நாயன்மார்கள் - இந்தப் பசங்க சொன்னதைவிட நாங்கள் அதிகமாகச் சொல்வதில்லை. அதை மனசிலே வைத்துக் கொள்ளுங்கள். நாம் இவனைத்தான் திட்டுகிறோமே தவிர, இவனுடைய புத்தியைத்தான் திட்டுகிறோமே தவிர, அந்தப் பசங்க சொன்னதுபோல, அவர்கள் பெண்டாட்டி, பிள்ளைகளை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை. நீங்கள் நினைக்கனும், என்னடா, இப்படிச் சொல்கிறானே என்று சில பேருக்குக் கோபம் இருக்கும்.
ஆனால், அவங்கள், நாலாயிரப் பிரபந்தம் பாடியிருக்கிறவன், கடவுள் இல்லை என்கிறவனை கொல்லவேணும்; அதுதான் கடவுள் பக்தனுக்கு அடையாளம் அப்படியென்று அவன் பாடியிருக்கிறேன். தேவாரம் பாடினவன், கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டேயெல்லாம் நான் படுக்கணும்; கடவுளே, எனக்கு அந்த வசதி பண்ணிக்கொடு என்று கேட்டு இருக்கிறான். யார் என்று கேட்பீர்கள்; பேர்கூடச் சொல்வேன் - சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் - பக்தன் என்கிற அந்த அயோக்கியப் பயல். அவன் சொல்லி இருக்கிறான், கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக்கிட்டேயெல்லாம் நான் படுக்கணும் என்று. கடவுளைக் கேட்கிறான், விலக்கி வை என்று.
நாலாயிரப் பிரபந்தத்திலே ஓர் ஆழ்வார் - தொண்டரடிப் பொடி என்கிறவன் - கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் வெட்டு, வெட்டு, வெட்டு என்கிறான். இது பாட்டிலே நடந்தது. காரியத்திலே எவ்வளவு நடந்தது தெரியுமா?
கடவுளைப்பற்றி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கடா என்று சொல்லி, சிந்தியுங்கடா என்று சொன்னான் - அவ்வளவு பச்சையாகக்கூட சொல்லவில்லை, புத்தன். நம்பி விடாதீர்கள், சிந்தியுங்கள் என்றான். கடவுள் நம்பிக்கைக்காரப் பசங்க அவர்களை என்ன பண்ணினார்கள்? வெட்டினார்கள்! வெட்டி, வெட்டி, தலை ஒரு பக்கம், முண்டம் ஒரு பக்கம் குவித்தார்கள். இந்த வெட்டினதும், குவித்ததும் கோவிலிலே எல்லாம் இன்னும் சித்திரமாக இருக்கிறது; கல்லிலே அடித்து வைத்திருக்கிறான் - ஒருவன் காலைப் பிடிக்கிறான், ஒருத்தன் தலையைப் பிடிக்கிறான், ஒருத்தன் வெட்டுறான்.
இன்னொரு கூட்டம், சைவக் கூட்டம் - அயோக்கியப் பசங்கக் கூட்டம்; அவனுங்க, கழுவேற்றினார்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம். கழுவு நிறுத்தி - நிர்வாணமாக ஆக்கி - ஆசனத்திலே உட்டு, மூன் தலைக்கு மேல வருகிறாற் போலக் கழுவேற்றினார்கள். எத்தனைப் பேரை, எண்ணாயிரம் பேரை. இன்றைக்கு அது உற்சவம் நடக்கிறது - தினமும்; புராணம் இருக்கிறது; சரித்திரம் இருக்கிறது. ஆனதினாலே, கடவுள் இருக்கிறது என்று சொல்கிற அயோக்கியப் பசங்களைப் போல, நாங்கள், அவ்வளவு அசிங்கமாகப் பேசவில்லை. முட்டாள், மடையன் என்று சொல்லுகிறோம். அதை நாங்கள் ருசுப் பண்ணுவோம். நம் ஜனங்களுக்குப் புரியாததினாலே, என்ன இந்தப் பசங்க இப்படி பேசுகிறார்களே என்று நினைப்பீர்கள். அது புரியாதது என்று சொல்லமாட்டேன் - மானமில்லாத தன்மை.
மற்றும் நண்பர்கள் நமக்கு முன்னே பேசியவர்கள், வீரமணி அவர்கள் ஆதாரங்களையெல்லாம் எடுத்துக்காட்டினார்கள். நாம் வாயிலே சொல்லிட்டுப் போறோம்.
இன்றைய தினம், அரசியலில் இருக்கிற அயோக்கியர்கள், அரசியல் சட்டம் செய்த காலத்தில், நம்மையெல்லாம் தாசி மக்கள் எழுதினார்கள். இதற்குமேலே என்ன வேணும் - கடவுள் நம்பிக்கைக்காரர்கள் அயோக்கியப் பசங்கள் என்று சொல்லுவதற்கு? சட்டம் எழுதி இருக்கானுங்க - தமிழ்நாட்டில் உள்ள மக்கள், நண்பர் வீரமணி சொன்னாப்போல, கிறித்தவன், முஸ்லிம், பார்சி தவிர மற்றவன் எல்லாம் இந்து; இந்துவிலே நூற்றுக்கு இரண்டே முக்கால் பசங்களாய் இருக்கிற பார்ப்பானுங்கதவிர, பாக்கி 98 சொச்ச சில்லரை பேர் 97 பேர் தேவடியாள் மகனுங்க - பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனுங்க - சட்டத்திலே எழுதி வைத்திருக்கானுங்க. இதற்கெல்லாம் காரணம் என்ன? திருப்பிச் சொல்லாத காரணம்; அவனுங்களைக் கண்டிக்காத காரணம். பார்ப்பானைக் கண்டால், வாப்பா, தேவடியாள் மகனே! எப்போ வந்தே என்று கேட்கணும். ஏண்டா அப்படிக் கேட்கிறாய் என்றால், நீ எழுதி வைச்சடா, என்னை தேவடியாள் மகன் என்று. நான் நிஜமாகவே சொல்கிறேன், நீ தேவடியாள் மகன் என்று. அதில் என்ன தப்பு?
நம் பெண்டுகளிடத்திலே போய்ச் சொல்லணும் - அம்மா, விளக்குமாறு எடுக்கொள், இந்த அரசியல் சட்டத்தை எடுத்துக்கோ, தெருவிலே வை - போடு சீவுகட்டையிலே - அதைக் குத்தி குத்தி என்று. ஏம்மா, அரசியல் சட்டத்தை விளக்குமாற்றாலே போடுகிறாய்? அதை எழுதின அயோக்கியப் பசங்க, என்னைப் பார்ப்பானுக்குத் தேவடியாள் என்று எழுதி இருக்கிறான். பின்னே என்ன, அவனைக் கொஞ்சிட்டுப் போகணுமா என்று கேட்கவேண்டும்.
ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், இந்த மாதிரியான - பதிலுக்குப் பதிலான முறையை நாம் எடுக்காததினாலே, நாதி இல்லை நம்மைப்பற்றிப் பேசுவதற்கு - கேள்வி இல்லை நம்மைப்பற்றிப் பேசுவதற்கு. நாளைக்குக்கூட நம் ஆள் சிரிச்சிட்டுப் போவான் - நேற்று வந்தான், நாலு அடி அடித்தான், நன்றாகப் பேசினான், அவ்வளவுதான் என்று நின்று கொள்வான். பார்ப்பான் சொல்வான், நேற்று வந்தான் பார்த்தியா நாயக்கன், அவன் என்னென்ன சொன்னான்; அவன் வீட்டுல கம்ப்ளைன்ட் பண்ணனும்; கவலைப்படுவான், பெண்டாட்டிக்கிட்டே சொல்லிட்டு அழுவான். நமக்கு மான ஈனம் ஒன்றும் இல்லை. நாம் சிரித்துவிட்டுப் போய்விடுவோம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், பழக்கத்திலே நம்மை ஈன ஜாதி என்கிறான். ஏன்டா என்றால், நீ கோவிலுக்குள்ளே வரவேண்டாம்; நீ வந்தால் சாமி தீட்டாகிப் போய்விடும் என்கிறான். என்ன அர்த்தம்? கல்லைத் தொட்டால் தீட்டாகி விடும் என்றால், நம்மை எவ்வளவு கீழ்ஜாதி என்கிறான். சாஸ்திரத்திலே தேவடியாள் மகன் என்கிறான். பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்கிறான். சூத்திரனுக்குப் பெண்டாட்டியே கிடையாது என்கிறான். சூத்திரச்சி எல்லாம் பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன் என்று எழுதி இருக்கிறான். இதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்? இன்னும் அதே மாதிரிப் பல ஆதாரங்கள்.
எத்தனை வருஷமாக இருக்கிறது? இரண்டாயிரம் வருஷமாக இருக்கிறது - மேலேயே சொல்லலாம். நாசமாய்ப் போகட்டும். சுயராஜ்யம் என்கிறார்களே, பரராஜ்ஜியம் இதிலே நம்ம தேவடியாள் மகன் என்று சட்டத்தில் இருக்கிறது - அரசியல் சட்டத்தில் இருக்கிறது. அப்புறம் நமக்கு என்னதான் கதி? நாம் எப்போதுதான் மனுஷன் ஆகிறது? நாடுநம்ம நாடு; பார்ப்பான் எல்லாம் பிழைக்க வந்தவன் இங்கே - இந்த நிலையில் இருக்கிற இவ்வளவு பெரிய சமுதாயம், இந்த 1973 லே சட்டப்படி தேவடியாள் மகன் என்று இருந்தால் - சாஸ்திரப்படி தேவடியாள் மகன் என்று இருந்தால் - அனுபவத்திலே ஈன ஜாதி, நாலாஞ் ஜாதி, தீண்டாத ஜாதி என்று இருந்தால், யார்தான் இதற்குப் பரிகாரம். வேற நாட்டான் நம்மைப்பற்றி என்ன சொல்லுவான்; நம் சங்கதியைச் சொன்னால்.
உலகத்திலே தமிழர்களுக்கு இருக்கிறதைப்போல எத்தனையோ பங்கு முஸ்லிம் இருக்கிறான். அவர்களுக்குள் தேவடியாள் மகனே கிடையாது; ஈன ஜாதியே கிடையாது. எல்லோரும் சகோதரர்கள். ஒருத்தனுக்கு ஒருத்தன் தொட்டுக் கொள்ளுவார்கள்; ஒருத்தன் சாப்பிட்டதில் சாப்பிடுவார்கள்; ஒருத்தன் இலையில் இன்னொருத்தன் சாப்பிடுவான். எச்சில்கூடப் பார்க்க மாட்டான். அதாவது, அவ்வளவு சகோதரத்துவம். அந்த மதத்தின் தன்மை. அதேமாதிரி, பார்ப்பான். கிறித்தவன், கவலைப்படமாட்டான். ஜாதி என்று ஒருத்தனைக் குறை சொல்லமாட்டான். பார்ப்பானும் அதே மாதிரி தங்களுக்குள்ளே மேல் ஜாதி, கீழ்ஜாதி கிடையாது. எல்லாரும் ஒஸ்தி - நாம் எல்லாம் அவனுக்குத் தேவடியாள் மக்கள். இதற்குக் காரணம் என்ன?
நண்பர்கள் ஒன்று சொன்னார்களே, அய்ம்பது வருஷமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல். அதுவும், எதிரே நம்மைப் பார்த்து, சூத்திரன் என்று சொல்லமாட்டான். வீட்டிலே பேசுவான் - இந்தச் சூத்திரப் பசங்க என்றுதான் பேசுவான். இந்த இழிவிலே இருந்து நீங்கணும். ஏதோ சட்டம், சமத்துவம், கடவுள் இருக்கும் என்று சொன்னால், ஏதோ அதை உதைக்கனோம்; கடவுளை நாளைக்குச் செருப்பாலே அடிக்கச் சொல்கிறோம்; பல தடவை அடித்தாயிற்று. நாளைக்கும் அடிக்கச் சொல்கிறோம். நம் தாய்மார்களையும் விளக்குமாற்றாலே போடச் சொல்கிறோம். சட்டத்திலே இருக்கிறதை என்ன பண்ணுகிறது? ஏதோ நாங்கள் கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம்; இன்றைக்கு அவன் வாயை மூடிக்கிட்டு இருக்கிறான். நாளைக்குக் காங்கிரஸ்காரன் வந்துவிட்டான் என்றால், நாளைன்னைக்கு பார்ப்பான் வந்துவிட்டான் என்றால், இல்லைன்னா கம்யூனிஸ்டே வந்துவிட்டான் என்றால், அவன் காசுக்கு என்றால் என்னவேண்டுமானாலும் பண்ணுவானே - அவனல்ல சத்தம் போடணும் எனக்குப் பதிலாக - எங்களைத் தவிர நாதி இல்லையே இந்த நாட்டில். எத்தனை நாளைக்கு நாம் இப்படியே கட்டிக் காத்துக்கிட்டு இருப்போம்!
எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான். ஒழித்தால் ஒழித்துவிட்டுப் போகட்டுமே, எனக்கு ஒன்றும் கவலையில்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிறவர்கள் - நாளைக்கு வெளிப்படையாகப் பேசுகிறான். பேசுகிறவனை மாலைப் போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான். எனவே, தோழர்களே, நம்முடைய நிலைமை உலகத்திற்கே தெரியும் மானக்கேடான நிலைமை. இரண்டாயிரம் வருஷமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிட, இந்த சட்டத்திலே இருக்கிற இந்துலாவிலும் மற்ற அரசியல் சட்டத்திலேயும் - அது பெரிய முட்டாள் தனம். அதைவிட, இதைச் சொல்லி மாற்றச் செய்யாமல், இந்த ஆட்சியிலே நாம் குடிமகனாக இருக்கிறோமே, அது மகாமகா மானக்கெட்டத்தனம். பொறுக்கித் தின்கிறவனுக்கும் இந்த ஆட்சி வேணும் - வேண்டாம் என்று சொல்லவில்லை. மானத்தோடு பிழைக்கிறவனுக்கும் இந்த ஆட்சியை ஒழித்துத்தானே ஆகணும். என்னடா. உன்னாட்டம் நான், என்னாட்டம் நீ! என்னை தேவடியாள் மகன் என்று சொல்றே. மாற்றுகிறாயா? மூட்டை கட்டுகிறாயா? என்று கேட்டுத்தானே ஆகணும். இல்லாவிட்டால், விதி - இன்னும் எத்தனை நாள்களுக்கு இப்படியே இருப்பது. இப்படியே இருப்போம் என்பது என்ன நிச்சயம்? நாம் ஒழிந்தால் நாளைக்கு மாற்றிவிடுகிறான் - மாற்றினானே! நம்முடைய கலைஞர் கருணாநிதி அவர்கள், கல்தான், யார் வேண்டுமானாலும் பூஜை பண்ணலாம்;
ஆனால், முறைப்படி செய்யணும் என்று யாருக்குமே அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட் - சுப்ரீம் கோர்ட் என்றால், பார்ப்பான் கோர்ட் என்று பேர். சிரிக்காதீர்கள், அதிலே தமிழனுக்கு இடமே இல்லை. அப்படிப் போனாலும், அவனுடைய அடிமைதான் அங்கே போவான். அவன் சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் தீர்ப்புப் பண்ணுவான். கர்ப்பக்கிரகத்திற்குள் போவது தப்பு சாஸ்திர விரோதம்! அட முட்டாள் பசங்களா! சாஸ்திரம் என்றால் எது? எப்போது எழுதினது? எவன் எழுதினான்? எவனாவது சொல்லட்டும். ஆகமத்தின்படி எழுதினது என்றான் ஒரு அய்க்கோர்ட் ஜட்ஜ். ஒருத்தனோ இரண்டு மூன்று பேரா - பார்ப்பான்கள் ஆதிக்கம் உள்ளது. பார்ப்பனத்தியால் நியமிக்கப்பட்டவர்கள். என்றைக்கு எழுதினான் ஆகமம்! ஒரு அக்கிரமம், ஒரு அயோக்கியத்தனம் இதற்குமேலே உண்டா? என்றைக்கோ, எவனோ பெயர் தெரியாத அனாமதேயம் - எவனாலேயும் சொல்ல முடியாது. ஆகமத்தை எழுதிவன் எவனடா என்றால், அவன் சொல்லுவான், வசிஷ்டன் எழுதினான், நாரதன் எழுதினான், யக்ஞவல்கியர் எழுதினான், மனு எழுதினான், வெங்காயம் எழுதினான் என்று. இந்தப் பயல்களுக்கு வயசு என்ன?
கவனிக்கணும் தோழர்களே! நாரதன் 5 கோடி வருஷத்துக்கு முன்னே பிடித்து இருக்கிறான். 5 கோடி வருஷம் - ஒவ்வொரு கற்பத்திலேயும் - ஒரு கற்பம் என்றால், 3 கோடி, 4 கோடி 5 கோடி வயசாம். அப்படி 10 கற்பம் - அப்போதெல்லாம் இருக்கிறான் நாரதன். அப்படி என்று ஒருத்தன் இருந்தானா? இருக்க முடியுமா? அதை வைத்துத் தீர்ப்பு பண்றானே கோர்ட்டிலே, அதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் எத்தனை அயோக்கியர்கள்; ஆளப்படுகிறவர்கள் எத்தனை மானங்கெட்ட பதர்கள் - இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இதையெல்லாம்விட அக்கிரம், அய்யா சொன்னாரே இப்போது வீரமணி, இந்து என்கிறானே யார் இந்து? இந்து என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான். நம் தமிழர்க்கு இலக்கியம் என்னென்னமோ இருக்கிறதே; எவ்வளவோ இலக்கியம் இருக்கிறது. பார்ப்பானுடைய இலக்கியங்கள் ஏராளமாக இருக்கிறது. இராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம், அந்தப் புராணம், இந்த புராணம் என்று அவனுக்கு.
நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது - பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம், அது, இது என்று. எதிலேயாவது இந்து என்கிற வார்த்தை இருக்கிறதா? நம் நாட்டிலே, எந்தப் புஸ்தகத்திலாவது உண்டா? இந்து என்கிறவன் எப்படி வந்தான் என்பதற்கு அவன் சொல்கிற கதையே அசிங்கமாய் இருக்கிறதே. சிந்து நதியின் காரணமாக இந்து ஆகி, இந்து என்று அழைக்கப்பட்டான் என்று.
சிந்து நதிக்கும், நமக்கும் எப்போ சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்து நதி என்கிறது. அதை, இந்த நாட்டுப் பழங்குடி மக்களுக்கு இந்து என்று பெயர் என்றான். சொல்லிட்டு மரியாதையாகவாவது போகலையே! இந்து என்றால் இரண்டு ஜாதி. அதிலே ஒருவன் பார்ப்பான்; ஒருவன் சூத்திரன். பார்ப்பான் எல்லாம் மேல்ஜாதி; சூத்திரன் என்றால் கீழ்ஜாதி. சூத்திரன் பெண்டாட்டி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி. இது சட்டத்திலே, சாஸ்திரத்திலே, பழக்கத்திலே என்று சொன்னால், நமக்கு விடியதுதான் எப்போது? ஒரு மனுஷனை, என்னடா, அடே உன் பெண்டாட்டியை... அப்படி என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கொள்கிறான். தனிப்பட்ட மனுஷனே, உன் பெண்டாட்டியை என்று சொன்னால், கத்தியை எடுத்துக் கொள்கிறான். இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்கிறான் - ஒரு பயலுக்கும் மானம் இல்லை. மானம் இருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இருக்க முடியுமா? ஒரு பயல் பூணூல் போட்டுக்கிட்டு நம் எதிரிலே வருவானா? என்னடா அர்த்தம், இந்தப் பயலுக்குப் பூணூல் இருக்கிறது. ஏ, அயோக்கியப் பயலே என்ன அர்த்தம்? நீ பிராமணன், நான் சூத்திரன் என்று அர்த்தம். அப்படி என்றால் என்ன? உன்னுடைய வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு செருப்பாலே - அப்படி என்று ஆத்திரமல்லவா வரும் உனக்கு மானம் இருந்தால். இன்னொருவன் பெண்டாட்டியை என்றால் என்ன ஆத்திரம் வருமோ, அதற்கு மேலே அல்லவா ஆத்திரம் வரணும். உன்னைச் சூத்திரன் என்று ஒருத்தன் சொன்னால்?
நாதி இல்லையே, சொல்றதற்கு ஆள் இல்லையே; சிந்திக்க ஆள் இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே - ஓட்டு வாங்குவதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேன் என்கிறானே. முன்னேற்றக் கழகத்துக்காரன் மற்றவனை எல்லாம் என்னை எல்லாம் வைவான் - இவனுக்கு என்ன கேடு, இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான் என்று. அவனுக்கு ஓட்டுதான் பெரிது. அவன் பெண்டாட்டி, பிள்ளையைப்பற்றி அவனுக்குக் கவலை இல்லை. இன்னும் கொஞ்ச நாள் போனால், வழக்கத்தில் வந்துவிடும் - பெண்டாட்டியைக்கூட கொடுத்து ஓட்டு வாங்குகிறாற்போல். ஏனென்றால், அந்த உத்தியோகமும், அந்தப் பதவியும் அவ்வளவு உயர்வாய்ப் போச்சு.
எந்த சமுதாயம், எவ்வளவு நாம் முன்னுக்கு வரவேண்டியவர்கள். நாதியற்றுப்போய் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம்? சொல்லுங்கள், வெளிநாட்டுக்காரனைப் பார், வெள்ளைக்காரனைப் பாரய்யா! நீ வேட்டி கட்டிக்கிட்டு இருந்தபோது, அவர்கள் ஆம்பளையும், பொம்ளையும் அம்மணமாக இருந்தவர்கள். நீ உன் பெண்டாட்டி, மகள், அக்காள் தங்கச்சி என்று முறை வைத்திருந்தபோது, அவர்களுக்கு அக்காள் தங்கச்சி முறை கிடையாது. அவ்வளவு காட்டுமிராண்டியாய் இருந்தவர்கள். இன்றைக்கு அவர்கள், ஆகாசத்துக்கு அல்லவா பறக்கிறார்கள் - ஆகாசத்துக்கு மேலேயல்லவா போய்விட்டு வருகிறார்கள். சந்திரன் இருக்கிற இடத்திற்கு அல்லவா போய் உட்கார்ந்து விட்டு வருகிறார்கள். 2 லட்சத்து 30 ஆயிரம் மைல் - ஒரு மணிக்கு 5000 மைல் வீதம் அல்லவா பறக்கிறார்கள். இன்னும் அவர்கள் செய்கிற அதிசய அற்புதங்களைப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்குப் புரியாதே!
அமெரிக்காவிற்குப் போய் ஆம்பளையுடைய இந்திரியம் கொண்டுக்கிட்டு வருகிறான். இங்கு சைனாவிலே, ஜப்பானில் போய் பொம்பளையுடைய இந்திரியம் கொண்டு வருகிறான். இரண்டையும் இங்கே கலக்கி, பிள்ளை ஆக்குகிறானே. இப்போது நேற்று, முந்தாநாள் வந்த விஷயத்திலே அவசரப்பட வேண்டியதில்லை. இரண்டு பேருடைய இந்திரியத்தையும் டப்பியிலே வாங்கி வைத்துக்கொள்ளலாம். நமக்கு வேண்டியபோது பிள்ளை உண்டாக்கிக் கொள்ளலாம். 10 வருஷத்திற்கு அப்புறம்; இன்றைக்கே பண்ணிக் கொள்ளவேண்டியதில்லை. இப்படியாக அவன் பண்ணுகிற அதிசயம். அமெரிக்காவிலே இருக்கிறான், 10 ஆயிரம் மைல்; நாம் இங்கே இருக்கிறோம். போனை எடுத்து இப்படி காதிலே வைத்தான் என்றால், ஹலோ என்றால், அப்போதே நமக்கு இங்கே காதில் கேட்கிறதே - அந்த உதடு ஒட்டுறதற்குள்ளே காதில் கேட்குதய்யா, 10 ஆயிரம் மைலிலிருந்து. அதிலே அரைவாசிப் பேருக்குத்தான் கடவுள்; அரைவாசிப் பேருக்கு ஒரு கடவுள்; அதுவும் சந்தேகம், ஆனால் நம்பணும். இந்த முட்டாள் பசங்களுக்கு 1000, 2000, 5000 கடவுள் - ஒரு காரியமும் பண்ண முடியவில்லை இந்தக் கடவுள்களாலே. காரியம் பண்ண முடியவில்லை என்றால், சும்மாவா இருக்கிறோம். அவைகளுக்கு எவ்வளவு கோவில். எத்தனைப் பெண்டாட்டி, வைப்பாட்டி, கல்யாணம், கருமாதிச் செலவு. எத்தனைப் பேருக்குச் சோறு? எவ்வளவு பேருக்கு உற்சவம்?
அரசாங்கம் வரி வாங்குகிறது என்று சொல்கிறானே தவிர, மடப் பயல், இது குட்டிச் சுவராகப் போகிறதே இந்தப் பணம் என்று ஒரு பயல்கூட நினைக்கிறதில்லையே! கோவிலுக்குப் போகாமல் எவன் இருக்கிறான்? கோவிலுக்குப் போகணும், என்கிறான், குளிக்கிறான், முழுகுகிறான், பட்டுக் கட்டிக்கிறான், எட்டிக் குதித்துக்கிட்டுப் போகிறான், ஏன்டா என்றால், தீட்டாகிறது என்கிறான்.
கோவில் கிட்டே போனதும், டக்கென்று வெளியே நின்றுகொள்கிறானே, வாசற்படிக்கிட்டே! ஏன்டா, அங்கே நிற்கிறாய் என்றால், நான் சூத்திரன், உள்ளே போகலாமா? என்கிறான். எப்போது, 1973 லே. நம்ம நாடு, நம்ம சமுதாயம், நமக்கு மானம், அவமானம் என்கிறது ஒன்று இருக்கிறது அப்படின்னு சொல்லமுடியுமா? அது பெரிதில்லையே, அதற்காக யார் பாடுபடுகிறார்கள். நாங்கள்தானே மூணே முக்கால் பேரு; மற்றவன் எல்லாம் வேற வேற கட்சி. ஒரு கட்சிக்காரன்கூட கடவுளைப்பற்றி பேசவேமாட்டான். ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான் அவனுக்கு முதல் வேலை கடவுளை ஒழித்தான், கோவிலை இடித்தான். பாதிரியை எல்லாம் வெட்டினான். இங்கே இருக்கிற கம்யூனிஸ்ட் என்ன பண்ணுகிறான், பொறுக்கித் தின்கிறான்; மற்ற நாட்டுக்காரன் எல்லாம் என்ன பண்ணுகிறான்?
மனுஷனைப்பற்றி எவனுமே பேசுறதில்லையே! சொன்னால் வரும்படியா அதைத்தானே கேட்கிறான்; அதைத்தானே பண்ணுகிறான். இவ்வளவு பண்ணினோம், இவ்வளவு பிரச்சாரம் பண்ணினோம்; இவ்வளவு மகாநாடு எல்லாம் நடத்தினோம் - எவன் எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே - ஆதரித்தால் ஓட்டுப் போய்விடுமே, ஆதரித்தால் அரசாங்கம் என்ன பண்ணுமோ என்று.
அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷனுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது 500 வருஷம் இருக்கலாம். 500 வருஷம் இருக்கலாம்; இப்பொழுது இல்லையே, 52 வயசுதான் இருக்கிறோம். சராசரி எனக்கு இப்பொழுது 95; இன்னும் ஒரு பத்துப் பேர் இருப்பான் 100 வயசானவன். இருக்க முடியவில்லையே, வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னே, அவன் வந்த அன்றைக்குக்கூட நமக்கு 10 வயது இல்லை - 7 வயது இந்த நாட்டுக்குச் சராசரி. அவன் வந்ததற்கப்புறம், அவன் வைத்தியம், ஆஸ்பத்திரி, அவனுடைய முயற்சி, அவனுடைய சுகாதாரம் இதெல்லாம் நமக்கு ஏற்றதற்கு அப்புறம் ................................................................ ... மேல்நாட்டிலே 90 வயசு, 75 வயசு இருக்கிறான்; ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயசு இருக்கிறான். நாமும் இன்னும் 10, 20 வருஷத்திலே 75 வருஷத்துக்கு வந்துவிடுவோம்; வெள்ளைக்காரன் 120 வருஷத்துக்கு வந்துவிடுவான். இப்படியே நாளாக, நாளாக 500 வருஷம் வரைக்கும் இருப்போம். அதற்கு மேலே வேற என்ன வரணும்? இருக்கிறது ஒன்றும் கஷ்டமல்ல - சாகிறதுதான் கஷ்டம். அவ்வளவு வசதிகளை எல்லாம் பண்ணியிருக்கிறோம் நாட்டில். அவ்வளவு அற்புத அதிசயங்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறோம். நமக்கு ஒன்றும் இல்லாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மக்களாய் இருந்ததினாலே.
நாங்கள் வராதிருந்தால் படிப்பு ஏது? சொல்லுங்கள், சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறபோது, நாம் 10 பேருகூட படிக்கவில்லையே, 100-க்கு. அது வந்ததற்கு அப்புறம் ஆரம்பித்தோம், அறிவைப்பற்றி, சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமோ? அய்ந்து கொள்கைகள்.
என்ன கொள்கைகள்?
1. கடவுள் ஒழியணும்
2. மதம் ஒழியணும்
3. காந்தி ஒழியணும்
4. காங்கிரசு ஒழியணும்
5. பார்ப்பான் ஒழியணும்.
அன்றைய முதற்கொண்டு இன்றைய வரைக்கும் இந்த அய்ந்து கொள்கைகள்தான் நடக்கின்றன காந்தியை ஒழித்தான், ஒழித்துவிட்டான். நாம் ஒழிக்கிறதற்கு முன்னே பார்ப்பானே ஒழிந்து போய்விட்டான். காந்தி நம்ம பேச்சைக் கேட்டு நம்ம பக்கம் திரும்பினார். இன்னமும் கடவுளைச் சொல்லி முட்டாள் என்கிறான். உடனே காந்தி, கடவுளுக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லைடா என்றார்; காங்கிரசுகாரன் கடவுளை இப்போது சேர்க்கவேண்டியதில்லை என்றார். சொன்ன 30 நாளில் கொன்று போட்டானுங்கய்யா அவரை! ஓ, இவன் ராமசாமி ஆகிவிட்டான்! அவனுக்காவது நாதி இல்லை; இவன் காந்தின்னா இந்தியாவிற்கே பெரியவன். எல்லாரும் நம்பி விடுவார்கள் என்று சட்டென்று கொன்று போட்டுட்டான் அவரை.
அடுத்தாற்போல ஒழியவேண்டியவன் காங்கிரசு. காங்கிரசு ஒழிந்தது; அது ஒன்றும் உருப்படியாகாது - உருப்படியாகாது; இப்பொழுதே இரண்டு பேர் தொங்குகிறார்களே - இரண்டாகப் பிரிந்தது - ஒன்றுக்கொன்று மானங்கெட்டு திரிகிறது. இப்போது ஒன்றுக்கொன்று சேர்ந்து பார்க்கலாம் என்று. இனி என்ன மரியாதை இருக்கப் போகிறது? என்ன ஆகப் போகிறது. இனி எவன் காங்கிரசை ஆதரிப்பான், பொறுக்கித் தின்கிறவனைத் தவிர? காங்கிரசுக்கு என்ன கொள்கை இருக்கிறதென்று, ஒருத்தன் கேட்பான். இன்றைக்கு இருக்கிற நம்முடைய காமராசர் வாயிலே ஜாதியை ஒழிக்கணும் என்று ஒரு வார்த்தை வருமா? சொல்ல முடியுமா? சொன்னால், அவர் காங்கிரசிலே இருக்கக்கூடாதே!
காங்கிரசு வேலையே ஜாதியைக் காப்பாற்றுவதுதானே முதலில் எடுத்ததும். பார்ப்பானாலே உண்டாயிற்று அவன் நன்மைக்கு அவன் பண்ணிக்கிட்டான். போகிறவன் அதை ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்? காமராசர் நம்மோடு சேர்ந்ததால், கொஞ்சம் காரியங்களைச் செய்தார். பக்தவத்சலம் வாயிலே வருமா ஜாதி ஒழியணும் என்று. இல்லை, சுப்பிரமணியம் வாயிலே வருமா ஜாதி ஒழியணும் என்று. சொன்னாலும், காங்கிரசில் இருக்க முடியாதே! அந்த மாதிரித் திட்டத்தோடு இருக்கிறானுங்க; அது இனிமேல் உருப்படியாகுமா?
முன்னேற்றக் கழகம் ஒழிந்தாலும், காங்கிரசு ஒழிக, ஜாதி ஒழிக என்கிற சீர்திருத்த உணர்ச்சி உள்ளவர்கள்தான் இனி வருவாங்க; அதனாலே, இனி வளம்பெற முடியாது. காந்தியும் போய்ட்டான்; காங்கிரசும் ஒழிந்து போய்ச்சு; கடவுளும் தெருவிலே சிரிப்பாய் சிரிக்கிறது. அதுதான் வீரமணி சொன்னாரு, செருப்பாலே அடித்தார்களே கடவுளை, என்ன ஆயிப்போயிற்று? செருப்பாலே அடித்தான்; அதனாலே ஓட்டுப் பண்ணவேண்டாம் என்று காமராசர் முதற்கொண்டு தப்பட்டை அடித்தார்கள். என்றைக்கும் வராத அளவுக்கு 200 பேருக்கு மேலே வந்துவிட்டார்களே! முன்னேற்றக் கழகத்துக்காரன் 185 பேர்; அவர்களை ஆதரிக்கிறவர்கள் 20 பேர். காங்கிரசு, காந்தி, கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர்கூட வரவில்லையே! சாமியைத் திட்டுகிறான் என்று சொல்லுகிறீர்களே - புத்தி இல்லாமல் சொல்லுகிறோமே தவிர, சாமியைச் செருப்பாலே அடித்த பிரச்சினை மேலே 200 பேர் வந்துவிட்டார்களே. ஆனதினாலே மக்கள் அறிவு பெற்றுக்கிட்டு வருகிறார்கள். பயன்படுத்திக்கொள்ள வேணும். அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும் - தெரியாது வெகுப் பேருக்கு.
எனவேதான், இப்போது நாம் முன்னேற்றம் அடையணும்; மேலே வருவதற்குள்ளே பள்ளத்திலே இருந்து நிலத்து மட்டத்துக்கு வரணும்; அப்புறம் மேலே ஏறணும். இப்போது நாம் பள்ளத்திலே கிடக்கிறோம். என்ன? நாலாவது ஜாதி, அய்ந்தாவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள் இப்படியல்லவா இருக்கிறோம் நாம். இது மாறவேணும், அப்புறம் மேலே போகணும்; மாறாது மேலே போக முடியுமோ? யாரும் கவனிக்கவில்லை. கவனிக்காமல் போனால், நாங்கள் சும்மா இல்லாமல் ஏதாவது ஒன்று போனால் ஒன்றை செய்துகிட்டே இருக்கிறோம். நாளுக்கு நாள் கொஞ்சம் மாறிக்கிட்டேதான் வந்தது. இன்னும் மாறணும். எங்களால்தான் முடியும் என்று இருக்கிறது நிலைமை. வேற எந்தக் கட்சிக்காரனுக்கும் இதிலே கவலை இல்லை. இவங்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய்விடுமே என்று பார்க்கிறான்; மானம் போறதைப்பத்தி அவனுக்கு வெட்கமில்லை. ஆகவே, நாம் மகாநாடு போட்டோம். இந்த மகாநாடு போட்டதற்குக்கூட காரணம் சொன்னாரே! தீண்டாமை இல்லை என்று சட்டத்திலே எழுதிப் போட்டான்; எந்த விதத்திலேயும் தீண்டாமை இல்லை என்று சொல்லிவிட்டான். ஆனால், மதத்திற்கு மதம் உண்டு என்று ஒரு அடையாளம் வைத்துவிட்டான் நிபந்தனை. இல்லாதிருந்தால், நாம் அந்தத் தீர்மானத்தின்மேலேயே எல்லாக் காரியத்தையும் நடத்தி இருப்போம். அதுதான் சொன்னேனே, கோவிலுக்குப் போகலாம் என்று சட்டமே பண்ணினால், அந்தச் சட்டம் செல்லாதுன்னு ஆயிப்போயிற்றே! அதேமாதிரிதானே சாஸ்திரத்திற்கு விரோதமாய் இருக்கிற எந்தக் காரியமும் இனி செலலாது.
Comments
Post a Comment