குஜராத் முதன்மை மாநிலமா? மோ(ச)டிப் பிரச்சாரம்
மோடியைப் பிரதமராக்க அவர் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்து குஜராத்தை முதல் மாநிலமாக உயர்த்திக் காட்டினார் என்றும், அப்படி இந்தியாவையும் முன்னேற்றுவார் என்றும் ஒரு உலக மகா பொய்யைத் திட்டமிட்டுப் பரப்பி, ஊடகங்களின் உதவியோடு அதை ஊதிப் பரப்பி, மக்களை மயக்கி, ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தனர். ஆனால், குஜராத்தில் அப்படியொரு உன்னத வளர்ச்சி ஏற்பட்டதா? இல்லவே இல்லை. இதோ உண்மை விவரம் பாருங்கள்.
திட்டக்கமிஷன் ஆதாரங்களோடு வெளியிட்டுள்ள விவரங்களின்படி,
மாநில உள்நாட்டு உற்பத்தி (Net State Domestic
Product) மற்றும் அந்நிய நேரடி முதலீடு (FDI inflow) இரண்டும் குஜராத்தில் குறைவாகவே உள்ளது. பின் தங்கிய மாநிலங்களான ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற தொழில் துறையில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு பின்தங்கிய நிலையில்தான் குஜராத் உள்ளது.
தனிநபர் வருவாயில் ஆறாவது இடத்தில்தான் உள்ளது. குஜராத்தைவிட அய்ந்து மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. வறுமை நிலையில் அய்ந்தாவதாகவும் அதிக காலம் உயிர்வாழ் நிலையில் (life
expectancy)
எட்டாவது இடத்திலும் குஜராத் உள்ளது. மனிதவள வளர்ச்சியில் குஜராத் 10ஆவது இடத்தில் தான் உள்ளது. இதைவிட 9 மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. கல்வியில் குஜராத் ஆறாவது இடத்தில் உள்ளது.
குஜராத் மாநிலத்தில் வாழும் குழந்தைகளில் 80ரூ பேரும், பெண்களில் 55ரூ பேரும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு சத்தற்று ஊட்டமில்லாது உள்ளனர்.
பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணை மீதான மதிப்பு கூட்டல் வரி (எயடரந யனனநன கூயஒ) நாட்டிலேயே பிற மாநிலங்களை விட குஜராத்தில் தான் அதிகம். அதாவது 15% அங்கே வரி. இதன் விளைவு என்ன? எல்லா விலைகளும் உயரத்தானே செய்யும்?
வேலை நிறுத்தங்கள் கதவடைப்புகள் உட்பட தொழிலாளர் போராட்டங்கள் அதன் வழி அமைதியின்மை அதிகம் நிகழ்ந்த இடம் குஜராத் மாநிலம் தான்.
பொது விநியோகம் மிக மோசமாக உள்ள மாநிலம் குஜராத் தான் என்று கள ஆய்வுகளும் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.
தொழிலாளர் வாழும் பகுதிகள் அதிகம் மாசடைந்து காணப்படுவது குஜராத் மாநிலத்தில் தான்.
அரசு மின் உற்பத்தியைக் குறைத்து, தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் அவலமும் குஜராத்தில் தான் அதிகம். சுகாதாரத்திற்கு மனிதர்களுக்கான தலா செலவு (ஞநசஉயயீவைய நயடவா நஒயீநனேவைரசந) குஜராத்தில் மிகக் குறைவு. அப்படியென்றால் அங்கு சுகாதார நிலை, நோய்த் தடுப்புத் திறன் எந்த அளவிற்கு மோசமாய் இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
குறைந்த எண்ணிக்கையிலான படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகள் உள்ள மாநிலம் குஜராத்தான். சுகாதாரத்துறை மிகவும் பின்தங்கியிருப்பதற்கு இது நல்ல அடையாளம்.
கர்ப்பிணி பெண்கள், பிறந்த குழந்தைகள் இறப்பு வீதம் குஜராத்தில் தான் அதிகம். மருத்துவ வசதியும், சிகிச்சையும் மக்களுக்கு சரியாகக் கிடைக்கவில்லை, அந்த அளவிற்கு சுகாதாரத்துறை பின் தங்கியுள்ளது என்பதற்கு இதுவோர் சிறந்த எடுத்துக்காட்டு.
அய்ந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளில் இரண்டில் ஒரு குழந்தை போதிய சத்துணவு இன்றியும்; நான்கில் மூன்று குழந்தைகள் இரத்த சோகையுடனும் குஜராத் மாநிலத்தில் உள்ளன.
- (06.04.2014 “The
Week” இதழில் மேலும் கூடுதல் விவரங்களைக் காணலாம்).
இப்படி அடித்தட்டு மக்களையெல்லாம் வஞ்சித்து, நலிவுறச் செய்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கி அவர்களை வளர விட்டதுதான் மோடி குஜராத்தில் செய்த சாதனை! இது சாதனையா அடித்தட்டு மக்களுக்குச் செய்த துரோகம் அல்லவா?
கிராம கழிவறை வசதியைப் பொருத்தவரை குஜராத் மிக மோசமான நிலையில் உள்ளது. 2012-13 இந்திய ஊரக வளர்ச்சி அறிக்கையின்படி இந்திய கிராமங்களில் உள்ள குடும்பங்களில் அய்ந்தில் ஒன்றுக்கு குடிநீர், மின்சாரம், கழிவறை வசதி இல்லாத நிலை உள்ளது என்றும் கிராமப்புறங்களில் 18% மக்களுக்கு மட்டுமே இவ்வசதிகள் உள்ளன என்றும் கூறியுள்ளது. ஆனால், இவற்றில் குஜராத்தின் நிலை இன்னும் மோசம். இவ்வசதி பெற்ற நான்கில் ஒரு குடும்பங் கூட கிடையாது. கேரளாவில் 71% மக்கள் இவ்வசதியைப் பெற்றிருக்கின்றனர். இன்னும் சில மாநிலங்களில் (13 மாநிலங்களில்) குஜராத்தைவிட அதிக வசதியைப் பெற்றிருக்கின்றன.
மலம் அள்ளும் மக்களுக்காகப் போராடும் மணவ் கரிமா (ஆயயேஎ ழுயசஅய) என்னும் அமைப்பு, அண்மையில் குஜராத்தில் ஆய்வு மேற்கொண்டதில், மாநகராட்சி சார்பில் தலையில் மலத்தைச் சுமந்து செல்லும் தொழிலாளர்கள் பணி செய்வது கண்டறியப்பட்டுள்ளது. 1993ஆம் ஆண்டிலே இது சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்ட பின்பும் குஜராத்தில் இந்த இழிநிலை நீடிக்கிறது என்றால் இதுதான் முதன்மை மாநிலமா?
அதேபோல் மனிதவள வளர்ச்சிக் குறியீட்டில் குஜராத் தேசிய சராசரி வளர்ச்சியை விடக் கீழ்நிலையில் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி, நாட்டின் வளர்ச்சி அட்டவணையில் குஜராத் 12ஆவது இடத்தில் உள்ளது.
உண்மைகள் இப்படியிருக்க முதல் மாநிலமாக்கினார் என்ற பொய்யைக் கவர்ச்சியாய்ச் சொல்லி ஆட்சியைப் பிடித்த முதலாளிகளின் ஏவலர்கள் இவர்கள்! எனவே, எச்சரிக்கையாய் இருந்து நாட்டை இவர்களிடம் மீட்க வேண்டும்!
ஓராண்டு பா.ஜ.க. ஆட்சி உருப்படியாய் சாதித்ததென்ன?
பா.ஜ.க.வினரும், அவர்களின் ஆதரவாளர்களாய் அணிவகுத்து நின்ற ஊடகங்களும் பொதுத் தேர்தலின் போது என்ன முழங்கினார்கள்? பி.ஜே.பி.
பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் வளர்ச்சி உலகே வியக்கும் வண்ணம் உச்சத்திற்கு உயரும்; தொழில்வளம் பெருகும்; வேலைவாய்ப்பு லட்சக்கணக்கில் உருவாக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்; விவசாயிகளின் வாழ்வும், வேளாண்மையும் வளர்ச்சி பெற்று வளங்கொழிக்கும்; கருப்புப் பணம் முழுக்கக் கைப்பற்றப்படும்; கல்வி வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பெருகும்; ஏழைகளுக்கு, உழைப்பாளிகளுக்கு ஏற்றம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அடுக்கக்கடுக்காய் அலங்காரமாய் அறிவித்தனர்.
மோடி ‘T’ கூ அறிவித்தார். Talent,
Tradition, Trade & Tourism, Technology. பல. அதாவது திறமை, பாரம்பரியம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அளவு கடந்த வளர்ச்சி ஏற்படும் என்றார்.
ஆனால், ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும், அவர்கள் அறிவித்ததில் இதுவரை சாதித்ததென்ன? நிறைவேற்றியது என்ன? ஆட்சியின் தலைமையில் உள்ள மோடி இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலே பேசிக் கொண்டிருக்கிறாரே ஒழிய, எதிலும், எங்கும் எந்த வளர்ச்சியும் வரவில்லை.
உண்மையில் உள்ளத்தில் நேர்மை, நாணயம், உண்மையில் இருந்து, மக்களின் மீது அக்கறை இருக்குமானால், திட்டங்களை அறிவிக்கின்றவர்கள் அதற்கான நிதி, வளம் இவற்றை எப்படிப் பெறப் போகிறார்கள்; எப்படி? எவ்வளவு காலத்திற்குள்? செய்யப் போகிறார்கள். எங்கெங்கு நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை உறுதியாய் சொல்ல வேண்டுமல்லவா? இதுவரைச் சொன்னார்களா? அதிலிருந்து தெரியவில்லையா இவர்கள் அறிவிப்பெல்லாம் ஏமாற்று என்பது?
நாட்டை நகர்மயமாக்கல்; உள்கட்டமைப்புகளை விரிவாக்கல்; பணிநீக்கத்தைக் கட்டுக்குள் வைத்தல்; ஊழல் ஒழிப்பு என்று ஒய்யாரமாய் முழங்குகிறார்களே ஒழிய இவற்றை செய்வதற்கான எந்தத் திட்டமும், அதற்கான ஆதாரங்களும் எதுவும் இன்றி அறிவிக்கின்றனர். இதுதான் பாசிச அரசின் பச்சையான ஏமாற்று வேலை என்பது!
மக்களாட்சி தத்துவத்திற்கு மக்களால் மக்களுக்காக மக்களே என்று விளக்கம் தருவதுபோல, பாசிச பி.ஜே.பி.
ஆட்சியின் தத்துவம் இதுதான். அதாவது, கார்ப்பரேட் முதலாளிகளால் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக கார்ப்பரேட் முதலாளிகளே ஆள்வது தான். இங்கு மோடி, ராஜ்நாத் எல்லாம் அவர்களின் ஏவலர்களே! இது பி.ஜே.பி.
ஆட்சியின் ஒருபக்கம். மறுபக்கம் ஆர்.எஸ்.எஸ்.ன் ஏவலர்களாய் செயல்பட்டு, அவர்களின் இலக்கை நிறைவேற்றுவது.
ஆக ஒருபுறம் கார்ப்பரேட் மறுபுறம் இந்துத்துவா. இது தான் பாசிச பி.ஜே.பி.
ஆட்சியின் இருபக்கங்கள். அவர்களின் செயல்பாடுகள் இதைச் சார்ந்துதான் இருக்குமேயல்லாமல், வேறு எதையும் இவர்களிடம் எதிர்பார்ப்பது ஏமாளித்தனமேயன்றி வேறில்லை!
பி.ஜே.பி.
ஆட்சி பதவியேற்ற அன்றிலிருந்து அவர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கினால், இந்த இரட்டை இலக்கிலே அவர்கள் செயல்படுவதைக் காணலாம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்னென்ன வரிச் சலுகையுண்டோ அத்துணையும் அள்ளி அள்ளி வழங்கப்பட்டு விட்டது. அவர்கள் எளிதில் கொள்ளையடிக்க என்னென்ன உதவி வேண்டுமோ அத்தனையும் அளிக்கப்பட்டு விட்டது. இறுதியில் ஏழை விவசாயிகளின் நிலத்தையும் பிடுங்கி அவர்களுக்கு உரிமையாக துடியாய் துடிக்கிறார்கள். நாட்டின் வளங்கள் முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், ஏழை விவசாயிப் பயன்படுத்தும், பொருட்களும், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களும் விண்ணை முட்டி உயர்ந்து செல்கின்றன.
ஆக, வல்லவன் வாழ்கிறான். இல்லாதவன் இருக்கும் இடம் தெரியாமல் மடிகிறான் என்பதே இவர்கள் ஆட்சியின் பலன்.
ஏழை விவசாயின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு விட்டது; ஏழைகளின் கல்வி பறிக்கப்பட்டு விட்டது; வேலை வாய்ப்பு ஒழிக்கப்பட்டு விட்டது; இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டு விட்டது. குலக்கல்வி கொல்லைபுறம் வழியாக வந்து கொண்டிருக்கிறது. பணமும் செல்வாக்கும் உள்ளவனுக்கு ஒரு நீதி, அவை இல்லாதவர்களுக்கு அநீதி என்ற நிலை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
மறுபக்கம், மதச்சார்பின்மை கொள்கை அடியோடு கைவிடப்பட்டு, மற்ற மதத்தினர் ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.இன் அடிப்படை நோக்கங்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவர்கள் ஆட்சியேற்ற நாள்தொட்டு இப்பணி மட்டும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியேற்றவுடன் சமஸ்கிருத் திணிப்பிற்கு முன்னுரிமை கொடுத்து அறிவிப்புகள் செய்தார்கள். சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாகக் கொண்டுவர முதலில் இந்தியை கொண்டு வரவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.
சிந்தாந்தப்படி ஜுன் 2014இல் ஹிந்தித் திணிப்பை அறிவித்தனர். மத்திய அரசின் அலுவலகங்கள், சமூகவலைத் தளங்கள், இரயில்வே என்று எல்லாவற்றிலும் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டு, அதிகாரிகள் ஹிந்தி கற்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. பதவி உயர்விற்கு ஹிந்திப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டது. அடுத்து சமஸ்கிருத வாரம் அறிவிக்கப்பட்டு, மத்திய அரசின் கீழ் இயங்கும் எல்லா பள்ளிகளிலும் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.
அதன்பின், பாடத்திட்டத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டது. வரலாற்றை, இதிகாசங்களை இவர்களுக்கு ஏற்ப மாற்றி அதை பாடத்திட்டத்தில் சேர்த்தனர். இந்தப் பணியைச் செய்ய குழு அமைத்து அதில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அதிகம் அமர்த்தினர். ஆர்.எஸ்.எஸ்.
தலைவரும் எழுத்தாளருமான தீனாராவ் பத்ராவின் நூல்களைச் சேர்க்க இக்குழு முடிவு செய்தது.
பகவத்கீதையை தேசிய நூல் ஆக்கும் முயற்சி, பின்னர், நாடாளுமன்றத்தில் காந்தியைக் கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்கும் முயற்சி.
இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் மீண்டும் இந்துமதத்திற்கு மாற்றப் போகிறோம் என்ற தீவிர நடவடிக்கைகள்.
ஒவ்வொரு இந்துத் தாயும் 4 பிள்ளைகள் பெற வேண்டும் என்ற பிரச்சாரம். தேவாலயங்களும், மசூதிகளும் நாடு முழுவதும் தாக்கப்படும் வன்முறை. கிறித்தவர் பள்ளிகள் மீது தாக்குதல்.
இராமனை வணங்காதவர்களெல்லாம் தப்பாமல் பிறந்தவர்கள் என்ற வெறித்தனப் பேச்சு!
கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல் நாளில் எல்லாம், ராமர் சிலை வைக்க வேண்டும் என்று ஆதித்யநாத் ஜோதி என்ற சாமியாரின் முழக்கம்!
சிறார் தொழிலாளர் சட்ட திருத்தம் என்ற பெயரில் கொல்லைப்புற வழியாகக் குலக்கல்வியைக் கொண்டு வரும் முயற்சி.
காதலர்கள் சென்றால் தாக்குவது.
மாட்டுக்கறி சாப்பிட தடைவிதிப்பது.
தாலியைக் கழற்றினால் தடை கேட்பது
கருத்துக் கூறினால் குண்டு வீசுவது
பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களை நொறுக்குவது.
அறிவுப் பிரச்சாரம் செய்தால் தடுப்பது. ஆனால் பார்ப்பான் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையில் புரளுவது!
இதுதானே நடக்கிறது இந்த ஓராண்டாய்! இன்னும் நான்காண்டுகள்! நாசமாய் போச்சு!
சாயும் பக்கம் சாயும் மந்தை மனநிலையில் மக்கள் வாக்களித்தால் விளைவு இப்படித்தான் இருக்கும்! எனவே, செய்த தவற்றிற்கு மாற்றாய் மதவெறி ஆட்சியின் மனித எதிர் செயல்களை, மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இளைஞர்கள் எதிர்த்து முறியடித்து மனிதம் காக்க வேண்டும். மத இணக்கம் பேணி, மதவெறியை ஒழிக்க வேண்டும்; மதச்சார்பின்மையை வளர்க்க வேண்டும்.
வேடம் கலைந்தது!
வீறுகொண்டெழுவோம்!
இந்நூல் 2000இல் வெளியிடப்பட்டு மக்களுக்குப் பெரிதும் விழிப்பூட்டியது. இந்நூலின் வழி நாம் விடுத்த வேண்டுகோளின்படி மக்கள் பி.ஜே.பி.யை நிராகரித்தனர். அதற்கு முதன்மைக் காரணம் தந்தை பெரியார் ஊட்டிய விழிப்பும், திராவிடர் கழகத்தின் உழைப்புமேயாகும்!
14 ஆண்டுகளுக்குமேல் அவர்கள் முயற்சிகள் எதுவும் பலிக்காத நேரத்தில், பெரும் நிறுவனங்களும், முதலாளிகளும், ஊடகங்களும் ஒன்று சேர்ந்து, மக்களை மயக்கி, ஏய்த்து, மூளைச் சலவை செய்து, மோடி என்ற தனிநபரை பெருக்கிப் பெரிதாக்கி, வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மாற்று என்று கவர்ச்சி காட்டி மக்களைத் திசை திருப்பினர்.
காங்கிரஸ் செய்த தவறுகள் இவர்களுக்குப் பெரிதும் கை கொடுக்க, பிரச்சார வீச்சில் மக்கள் வீழ, பெரும் எண்ணிக்கையில் வென்று பி.ஜே.பி.
ஆட்சியைப் பிடித்துள்ளது.
மோடி வந்தால் அப்படியே மாறிவிடப் போகிறது, இந்தியா எழுந்து உட்காரப் போகிறது; எல்லோருக்கும் விரைவில் வேலை கிடைக்கப் போகிறது. தொழில் வளர்ச்சி பெருகி, வருவாய் எல்லோருக்கும் வரப் போகிறது என்று ஆவலோடு எதிர்நோக்கினர் ஏமாளி மக்கள்.ஆனால், நடந்தது என்ன?
ஓராண்டு பி.ஜே.பி.
ஆட்சி முடியப் போகிறது! வளர்ச்சி வந்ததா? கருப்புப் பணம் அயல்நாட்டிலிருந்து வந்து சேர்ந்ததா? வேலைவாய்ப்பு கிடைத்ததா? சொன்னதில் ஏதாவது அவர்களால் செய்யப்பட்டதா? இல்லை! இல்லை! எதுவும் இல்லை!
மாறாக என்ன நடந்தது?
அவர்களின் உண்மையான திட்டங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேற்றப்படுகின்றன.
ஆட்சிக்கு வந்த 10 நாட்களில்,
சமஸ்கிருதம் ஆட்சிமொழி
பகவத்கீதை தேசிய நூல்
மானியங்கள் ரத்து
100 நாள் வேலைக்கு முடிவு
விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிப்பு
பிற மதத்தார் மீது தாக்குதல்
இந்துக்களைத் தவிர மற்றவரெல்லாம் வெளியேற வேண்டும்!
மாட்டுக்கறியை சாப்பிடக் கூடாது!
மாட்டு மூத்திரத்தை மருந்தாக்கு!
சோதிடத்தை விஞ்ஞானமாக்கு!
கல்வியையும், இராணுவத்தையும் காவி மயமாக்கு!
என்று ஆர்.எஸ்.எஸின், ஆரியப் பார்ப்பன ஆதிக்கச் செயல் திட்டங்கள் ஒவ்வொன்றாக அரங்கேறுகின்றன.
பெண்ணுரிமை அறவே மறுக்கப்படுகிறது. பெண்களை கலாச்சாரம் என்ற போர்வையில் வீட்டிற்குள் அடக்க முயற்சி நடக்கிறது. காதலர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். மதவெறிக் கும்பல் தாதாக்களாக சுற்றிவருகிறார்கள்!
வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் இல்லாமல், மதவெறிச் செயல்பாடுகளே மும்முரமாக நிறைவேற்றப்படுகின்றன.
கண்ணைமூடிக் கொண்டு, ஊடகங்கள் உசுப்பிவிட்ட திசையில் வாக்களித்த மக்கள் ஏமாந்து நிற்கிறார்கள்.
இதை நாம் சொல்லவில்லை. அவர்களுக்கு ஆதரவான ஆனந்தவிகடன் பத்திரிகையே எழுதியுள்ளதைப் பாருங்கள்.
முதலீடே முதலீடு!
முதலீடு எல்லோரையும் மயக்கும் கவர்ச்சிகரமான சொல். உள்நாட்டு/வெளிநாட்டு நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறதோ, அந்த அளவுக்கு நாடு வளர்ந்து வருகிறது என்பது பரவலானவர்களின் நம்பிக்கை. இப்படி முதலீடு செய்ய வருபவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் திறந்துவிடுபவர்தான் நல்ல பிரதமர்(!). வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பிரதமர். நரசிம்மராவ் போட்டுக்கொடுத்த பாதையில் மோடியின் பயணமும் தொடர்கிறது. இந்தியாவில் புதிய பொருளாதாரப் பாதையை நாங்கள் தொடங்கியுள்ள நிலையில் முதலீடு செய்ய உங்களை அழைக்கிறோம் என எல்லா நாடுகளுக்கும் சென்று அழைக்கிறார் மோடி. அவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது அரசு. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நிறைவேற்ற எடுக்கப்படும் பகீரதப் பிரயத்தனங்கள் இதனால்தான். ஊருக்குத் தெரியாத உதாரணம் ஒன்று உண்டு.
ஒரு தனியார் செல்பேசி நிறுவனம் 3,200 கோடி ரூபாய் வருமானவரி கட்டவேண்டும். கட்டத் தேவை இல்லை என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டுமல்லவா மத்திய அரசு? 3,200 கோடி எவ்வளவு பெரிய தொகை. ஆனால், மேல் முறையீடு செய்வது இல்லை என மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது. வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எங்கள் முடிவுகள் அனைத்தும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், சட்டத்துக்கு உட்பட்டதாகவும் இருக்கும் என்ற தகவலை, உலகமெங்கும் உள்ள முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க அரசு விரும்புகிறது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சொல்லியிருப்பதற்கு என்ன பொருள்? இங்கே வாருங்கள்.... யார் நிலத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள், தொழில் செய்யலாம். வருமானவரி கூடக் கட்டத் தேவை இல்லை என்பதுதானே!
சமீபத்தில் அமெரிக்கா சென்ற மோடி, இந்தியாவில் முதலீடு செய்துவரும் 20 பெரிய நிறுவனங்களிடம் பேசி வந்துள்ளார். அவர்கள் பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார்கள். இந்த வாக்குறுதிகளில் 50 சதவிகிதம்கூட ஒப்பந்தம் ஆவது இல்லை என்பதுதான் குஜராத் யதார்த்தம்! ஒருவேளை ஒப்பந்தமானாலும் தொழில் தொடங்கப்படுவது இல்லை. தொழில் தொடங்கினாலும் சொன்ன அளவுக்கு லாபம் ஈட்டுவது இல்லை. சர்க்கரை என எழுதினாலே இனிக்கும் என்பதைப் போலத்தான் இதுவும்!
காங்கிரஸ் குக்கரில் பா.ஜ.க.
சோறு!
பேரை மாற்றி புதுப்புனுகு பூசுவது, தமிழ் மக்கள் அதிகமாகப் பார்த்ததுதான். அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என தி.மு.க.
வைத்தால் புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என ஜெயலலிதா நாமகரணம் சூட்டுவார். இதுதான் இப்போது மத்தியிலும் நடக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களுக்குத்தான் புதுப் பெயர் சூட்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உற்பத்திக் கொள்கையாக மன்மோகன் சிங், சோனியாவால் அறிவிக்கப்பட்டதுதான் மோடி சொல்லிவரும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம். மன்மோகன் சிங் காலத்தில் உருவாக்கப்பட்ட நிர்மல் பாரத் என்ற திட்டம்தான் மோடியின் தூய்மை பாரதம், மக்கள் நிதித்திட்டம் என மோடி சொல்லிவருகிறார். காங்கிரஸ் அரசு, அதை அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் நிதி உள்ளடக்கத்துக்கான இயக்கம் என அறிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கிராமப்புற மின் விநியோகத் திட்டத்துக்கு மாற்றாக வந்திருப்பதுதான் தீனதயாள் உபாத்யாயா கிராமப்புற ஜோதி திட்டம். இப்படித்தான் திட்ட கமிஷன் நிதி யோக் ஆனது.
பேர் வைப்பதில் கருணாநிதியையும் மிஞ்சிவிட்டார் மோடி!
அன்று எதிர்ப்பு; இன்று ஆதரவு!
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எதையெல்லாம் பா.ஜ.க. எதிர்த்ததோ, அதையெல்லாம் இன்று விழுந்து விழுந்து அமல்படுத்துகிறது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைபவர்களுக்குக் கிடைக்கும் மானியத்தை, பணமாகச் செலுத்தும் நேரடி பணம் பெறும் திட்டம் காங்கிரஸால் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஏழை மக்களின் எதிர்காலத்துடன் விளையாடும் விளையாட்டு இது. மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள் என பா.ஜ.க.
கருத்து கூறியது. ஆஹா...
இதனால் மானியச் சுமை குறைகிறது என இப்போது சொல்கிறார் மோடி. ஆதார் அட்டையை பா.ஜ.க.
விமர்சித்தது. மாநில அரசுகளின் பங்கு குறித்து குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடி சந்தேகம் கிளப்பிக் கொண்டிருந்தார். இன்று ஆதார் அட்டையை தங்களின் முகமாகக் காட்டிக் கொள்கிறார்கள். இதுதான் தர்க்கரீதியான பொருளாதாரச் சிந்தனை என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இப்போது சொல்கிறார். எனவே, இவர்கள் மாற்றுப் பாதையில் அல்ல... காங்கிரஸ் பாதையிலேயே போகிறார்கள்!
தேய்ந்துபோன தேர்தல் வாக்குறுதிகள்!
வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்ட கறுப்புப் பணத்தை 100 நாட்களில் மீட்போம் என்றார் ராஜ்நாத் சிங். அதைவிட ஒரு படி மேலேபோன மோடி, ஒவ்வோர் இந்தியனுக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றார். இன்றோ 100 நாட்கள் அல்ல... அதைக் காட்டிலும் மூன்று மடங்கு நாட்கள் ஆகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை. கேட்டால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர் பட்டியலை வெளியிடுவது நாட்டுக்கு நல்லது அல்ல எனச் சொல்கிறார்கள். உச்ச நீதிமன்றம் உச்சந் தலையில் கொட்டிய பிறகு அதற்கான குழு அமைக்கப்பட்டதே தவிர, அந்தக் குழுவும் ஆராய்ச்சிதான் செய்து கொண்டிருக்கிறது. புதுச் சட்டம் வந்துள்ளது. ஏற்கெனவே இருந்த சட்டங்களை செயல்படுத்தாததால்தான் கறுப்புப் பணமே வெளியேறியது. புதுச் சட்டங்களை அமல்படுத்துபவர்களும் பழைய ஆட்கள்தானே? 100 நாட்களில் மீட்போம் எனச் சொல்லவே இல்லை எனத் திரும்பத் திரும்ப அமைச்சர் வெங்கய்யா நாயுடு சொல்வதே சந்தேகமாக இருக்கிறது. தனியொரு மனிதராக நின்ற ராம்ஜெத் மலானிதான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்.
இதேபோலத்தான் லோக்பால் பிரதமர் உள்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முறைகேட்டை விசாரணை நடத்தும் இந்த அமைப்பை, வரவிடாமல் காங்கிரஸ் தடுத்தது. ஆட்சி முடியும்போது ஒரு குழு போட்டு, தனது கடமையை முடித்தது. அந்தக் குழுவின் தலைவரான முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், தனக்கு இதில் விருப்பம் இல்லை எனச் சொல்லிவிட்டார். பா.ஜ.க.
வந்து ஒரு வருடம் ஆகியும் கோமா நிலையில்தான் இருக்கிறது லோக்பால். நான் பிரதமரானால் முதல் வேலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க குழு அமைப்பேன் என்றார் மோடி. அப்படி ஒன்று நடக்கவே இல்லை. விவசாயிகளின் நலனுக்கு, கடுமையாக உழைப்பேன் என்றார். நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிடம் கேட்கத் தேவை இல்லை என்ற சட்டம்தான் வந்தது, அகில இந்திய அளவில் விவசாயிகளை அரசுக்கு எதிராக ஓரணியில் திரளவைத்ததுதான் மோடியின் சாதனை!
மதம் பிடித்து ஆட்டுவது!
பா.ஜ.க.வின் நிறமும் குணமும் மதம்தான் என்றாலும், ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும்போது அடக்கி வாசிப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தனது இயல்பு முழக்கங்களை மோடி மறந்தும் உச்சரிப்பது இல்லை. ஆனால், அவருக்குக் கீழே இருப்பவர்கள் நித்தமும் வீசும் வார்த்தைகள் குண்டுகளாக வெடித்து, இந்தியச் சமத்துவத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. ராமர் கோயிலைக் கட்டியே தீருவோம், 370 ஆவது சட்டப்பிரிவை நீக்குவோம், முஸ்லீம்கள் குடியேறியவர்கள், சிறுபான்மையினருக்குத் தேசப்பற்று இல்லை, கோட்ஷே... தேசபக்தர், அவருக்குக் கோயில் கட்டுவோம்... இப்படி வம்புதும்பு மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்கள் பலர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப் பிரமாணம் எடுத்த அமைச்சர்கள், பகவத் கீதையை தேசிய நூல் ஆக்குவோம், சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவோம் எனப் புறப்படுகிறார்கள். இவைஅனைத்தும் எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்ட பிறகுதான் திரும்பப் பெறப்படுகிறதே தவிர, இப்படி ஏதாவது கருத்தைச் சொன்னதும் பிரதமரே கண்டித்து நடவடிக்கை எடுத்தார் என்ற சூழ்நிலை இல்லை. குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் வேலையாக இது போய்க்கொண்டிருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உள்ள மதச்சார்பின்மை, சோஷலிசம் என்ற சொற்கள் இல்லாமல், குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படுகிறது. கேட்டால், 1950 இல் உள்ள லோகோவை எடுத்துவைத்துவிட்டார்கள் என்கிறார்கள். வாஜ்பாய், அத்வானி, ஜோஷி ஆகியோர் கோலோச்சிய 10 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்ட லோகோவை இப்போது போட்டால் ஏற்றுக்கொள்வார்களா?
இந்திய முஸ்லீம்கள், இந்தியாவுக்காக வாழ்பவர்கள்; இந்தியாவுக்காக, உயிரையும் கொடுப்பார்கள் என,
பிரதமர் மோடி பேட்டியளித்தார் (22.9.2014). இது மனதில் இருந்து வந்த வார்த்தைகளாக இருந்தால், அதுதானே கட்சிக் கொள்கையாகவும் கட்சியினர் கருத்தாகவும் இருக்க முடியும். ஆனால், இதற்கு மாறாகவே குரல்கள் திட்டமிட்டு எழுப்பப்படுகின்றன.
இந்தியா இதுவரை மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது. இது இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்கு நீடிக்கும் என எங்களுக்குத் தெரியவில்லை என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நீடிப்பதும் நீடிக்காமல் போவதும் மோடி கையில்தான் இருக்கிறது. மதவாதம் என்பது, அவர் பேசும் வளர்ச்சிக்கு எதிரானது. சண்டைக்காரன் வீட்டுக்கும் சம்பந்தம் பேச ஆள் வராது என்பது கிராமத்துப் பழமொழி!
தி கிரேட் டிக்டேட்டர்!
கட்சியிலும் ஆட்சியிலும் எல்லாமே மோடி... மோடி... மோடிதான்!
மோடியின் அரசியல் நுழைவுக்கு அடித்தளம் இட்டவர் முரளி மனோகர் ஜோஷி. மோடிக்கு கட்சியில் நெருக்கடி ஏற்பட்டபோது காப்பாற்றியவர் அத்வானி. இவர்கள் இருவரையுமே ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டார் மோடி. குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வைக்க எல்லா முயற்சிகளையும் எடுத்தவர் ராஜ்நாத் சிங். மோடி பிரதமரானதும் பறிக்கப்பட்டது ராஜ்நாத் சிங்கின் தலைவர் பதவிதான். குஜராத்தில் தனக்குக் கீழே இருந்த அமித் ஷாவை அழைத்துவந்து, பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராக்கிவிட்டார் மோடி. தனக்கு அடிபணியும் ஆளை அந்த இடத்தில் உட்காரவைத்த திருப்தி. பா..ஜ.க.வின் அடுத்தகட்டத் தலைவர்கள் என எதிர்பார்க்கப்பட்ட சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, நிதின் கட்கரி போன்றவர்களும் அமைதியாக்கப்பட்டுவிட்டார்கள். நிதின் கட்கரி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்புக் கருவி வைத்தது யார்? என காங்கிரஸ் கட்சியால் கேட்க முடிந்தது. நிதின் கட்கரிக்கு, கவலைப்படக்கூட முடியவில்லை. ராஜ்நாத் சிங்கின் மகனை அழைத்து மோடி கண்டித்தார் என,
ஏதோ ஒரு கிசுகிசு பரவியது. அதை உறுதிப்படுத்துவது மாதிரியே பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஓர் அறிக்கை வெளியானதில் ராஜ்நாத் சிங்கே ஆடிப்போனார். அத்வானி நிலைமையைப் பார்த்து, சுஷ்மா வாயே திறப்பது இல்லை. மத்தியப் பிரதேச சௌகானும், ராஜஸ்தான் வசுந்தரா ராஜே சிந்தியாவும் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார்கள். மோடி சறுக்கினால் பிடிக்க ஆள் இல்லை என்பது, அந்தக் கட்சிக்கும் நல்லது அல்ல... மோடிக்கும் நல்லது அல்ல!
கவர்ச்சிகர முழக்கங்கள் வேண்டாம்!
இந்தியாவில் தயாரிப்போம் என்பது மோடியின் முழக்கங்களில் ஒன்று. நினைத்தால் பெருமிதமாகத்தான் இருக்கிறது. உலகத் தயாரிப்புத் தளத்தில் இந்தியாவின் பங்கு 2012ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி 2.5 சதவிகிதம் மட்டுமே. (அமெரிக்கா 21 , சீனா 18 , ஜப்பான் 11 , கொரியா 7ரூ).
மோடி அறிவித்ததுமே இதனை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் விமர்சித்தார். பொருளாதார மேம்பாட்டுக்கு இது உத்தரவாதம் அளிக்காது. இந்தியாவில் தயாரிப்போம் என்பதை, இந்தியாவுக்காகத் தயாரிப்போம் என மாற்றுங்கள் என்றார். இதேபோலத்தான் முதலீடுகள் குவிந்துவிட்டால், இந்தியா முன்னேறிவிடும் என்பதும், இந்தியாவின் யதார்த்தம் வேறு மாதிரியானது.
குடிசைப் பகுதியில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 5.23 கோடியாக இருந்து 6.55 கோடியாக உயர்ந்துவிட்டதாக மத்திய அரசுதான் அறிவித்துள்ளது. இதில் 43 சதவிகிதக் குடிசைப் பகுதிகளில் குடிநீர் வசதி இல்லை. 63 சதவிகிதப் பகுதிகளில் கழிப்பிட வசதி கிடையாது. இந்த மக்கள் அனைவரும் நிலத்தை, விவசாயத்தை நம்பி இருப்பவர்கள். இவர்கள் நிலைமையைப் பரிசீலிப்பதில் இருந்தே மாற்றத்தைத் தொடங்க வேண்டும். இந்தியாவில் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டுமானால், வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு ஏன் சரியான விலை கிடைக்கவில்லை? விவசாயிகள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை என்றும் தேர்தலுக்கு முன் பேசிய, எழுதிய மோடிதான், ஆட்சிக்கு வந்த பிறகு, பொது கொள்முதல் முறையில் வாங்கப்படும் நெல்லுக்கு, மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக மாறிய மனம் இது.
2022ஆம் ஆண்டு நாடு எல்லா வகையிலும் முன்னேறிவிடும் என மோடி காணும் கனவை நிறைவேற்றும் பாதை இது அல்ல.
குபீர் வளர்ச்சி நிலைக்குமா?
திடீரென வெடித்துக் கிளம்பியவர் மோடி. நின்று நிலைப்பாரா, நிலைக்கும் அளவுக்குச் செயல்படுவாரா என்பதை வருங்காலம்தான் சொல்ல வேண்டும். கடந்த ஓர் ஆண்டு, கிட்டத்தட்ட தேர்தல் காலம்போலவே கழிந்துவிட்டது. அவர் கலந்துகொள்ளும் அரசு விழாக்களின் பேச்சுகளும், தேர்தல்மேடைகளையே நினைவூட்டுகின்றன. சவால்களுக்குப் பஞ்சம் இல்லை. நாடாளுமன்ற நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்கவில்லை. சர்ச்சைக்குரிய விஷயங்களில், மோடி தன் கருத்தை வெளியிடுவது இல்லை. பிரதமர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்கள் தவிர்க்க முடியாததுதான். ஆனால், மாதம்தோறும் அது சுற்றுலாவாக மாறிக் கொண்டிருக்கிறது. அவரது உடை,
படாடோபத்தின் உச்சம். ஒரு தடவை உடுத்தியதை இன்னொரு தடவை பார்க்க முடியவில்லை. 10 லட்ச ரூபாய் கோட் சூட், பலத்த சர்ச்சைக்குப் பிறகே ஏலத்துக்கு வந்தது. அன்பளிப்பாகத் தரப்பட்டது என்றால், எதற்காக? என்ற கேள்விக்கு அவரே பதில் தர முடியவில்லை. நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டால், அது விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலைமையில் என் ஆட்சி இருக்கும் என்றார் மோடி. ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் சென்ற விமானத்தில் அருகில்அதானியும் அவருக்கு 6,300 கோடி ரூபாய் கடன் கொடுக்க வங்கி அதிகாரியும் போனது ஏன்? என காங்கிரஸ் கேட்டதற்கு மோடி இதுவரை ட்விட்ரில் பதில் தரவில்லை.
ஆர்.எஸ்.எஸ்.
தலைவர்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யா, தொழிலதிபர்களிடம் நெருங்கி உறவாடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களில் தொழிலதிபர்களை அழைத்துச் செல்லக் கூடாது. மோடி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக நடந்துகொள்ள வேண்டும் எனச் சொல்லும் அளவுக்குப் போனது.
அனைத்துக்கும் மேலாக மோடியின் மனைவி யசோதா பென், எப்போதும் சுற்றிலும் போலீஸ்காரர்கள் பாதுகாப்பில் இருக்கிறார். எனக்கு எதற்குப் பாதுகாப்பு? யார் பாதுகாப்பு தரச் சொன்னது? எந்த அடிப்படையில் தருகிறீர்கள்? என அவர் குஜராத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு, இதுவரை பதில் இல்லை. அப்பீல் போயிருக்கிறார்.
- அபலைகள் மனதில் கவலைகள் தீரவில்லை! நன்றி: ஆனந்தவிகடன் (13.05.15)
வளர்ச்சிவரும் என்று ஏமாந்து வாக்களித்த வாக்காளர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்? இன்னும் நான்கு ஆண்டுகள்! நாடு தாங்குமா? அடித்தட்டு மக்கள், விவசாயிகள், வேலைதேடும் இளைஞர்கள் இவர்களின் எதிர்காலம் என்ன?
சிறுபான்மை மக்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் என்ன?
கருத்துச் சுதந்திரத்தின் கதி என்ன?
ஒவ்வொரு இந்தியரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
ஏமாந்து வாக்களித்தாகிவிட்டது. மதவாத கட்சியிடம் ஆட்சி வந்தாகிவிட்டது. அதுவும் பெரும்பான்மையுடன் வந்துவிட்டது. அவர்களின் மக்கள் விரோத, மதவெறிச் செயல் திட்டங்கள் ஒவ்வொன்றாய் எட்டிப் பார்க்கின்றன. இந்நிலையில் என்ன செய்ய வேண்டும்?
முப்பெரும் காரியங்களை மக்கள் நலனில், மத இணக்கத்தில், மதச்சார்பின்மையில், நாட்டின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவர்கள் செய்தாக வேண்டும்.
1.மக்கள் விரோத, மதச்சார்பின்மை விரோத செயல்களை, திட்டங்களை, சட்டங்களை எதிர்ப்பது, தடுப்பது முறியடிப்பது. இதற்கு உரிய போராட்டங்களை, மக்களைத் திரட்டி செய்வது.
2.இடையில்வரும் மாநிலத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல்களில் மதவாத சக்திகளைத் தோற்கடிப்பது.
3.மதச்சார்பற்ற கொள்கையுடைய, அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாய் நிற்கக்கூடிய அரசியல் கட்சிகள், தங்களுக்குள் செருக்கு (ஈகோ) கொள்ளாது, சொந்த வெறுப்பைக் கைவிட்டு, ஓரணியில் நின்று அணி அமைப்பது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய அளவில் முனைந்து நின்று செயல்படுவது.
கம்யூனிஸ்ட்கள் தங்களுக்குள் பிரிவைத் தவிர்த்து இப்போதாவது ஒன்றாகி, நான்காண்டுகளுக்குப் பின் கம்யூனிஸ்ட்கள் பங்குகொள்ளும் கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்க (காங்கிரஸ் உட்பட) அயராது தளராது உழைப்பது, முனைவது.
மதவாதமா? ஊழலா எது கேடு இதை எல்லோரும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மக்களும் இதை முதலில் சிந்திக்க வேண்டும்.
ஊழல் இல்லாத ஆட்சியில்லை. இதுதான் உண்மை. தேர்தலுக்கு கணக்கற்று செலவு செய்வதைத் தவிர்க்காமல், பெரிய நிறுவனங்களிடம் நன்கொடை பெறுவதைத் தவிர்க்காமல் ஊழலை ஒழிக்க முடியாது.
முதலில் மதவாதத்தை ஒழிப்போம். அதன் பின் ஊழலை ஒழிப்போம் என்பதே உண்மையான, உகந்த அணுகுமுறையாக இருக்க முடியும்.
மாநிலக் கட்சிகளின் ஆட்சி மாநிலங்களிலும், மதச்சார்பற்ற கட்சிகளின் ஆட்சி மத்தியிலும் என்பதே மக்கள் நலத்துக்கும், பாதுகாப்பிற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் ஏற்றது.
இனிவரும் நான்கு ஆண்டுகள் மதச்சார்பற்ற, விவசாயி நலன்நாடும், அடித்தட்டு மக்களின் மேம்பாடு விரும்பும் அரசியல் கட்சிகள் (காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உட்பட) ஓரணியில் நின்று, தன் முனைப்பைக் கைவிட்டு, பதவி வேட்கையை விலக்கிவைத்து, பி.ஜே.பி.க்கு மாற்றாக வலுவான அணி அமைத்து போராடி, அடுத்தத் தேர்தலில் ஆட்சிக்கு வந்து நாட்டையும் மக்களையும் ஆதிக்கச் சக்திகளிடமிருந்து காக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்!
மக்கள் சரியான மாற்றை விரும்புகிறார்கள். மாற்று இல்லாதபோது மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு வருகிறது. எனவே, மாற்று ஏற்பாடு செய்து மக்களைச் சந்திக்காதது யார் குற்றம் என்பதை ஒவ்வொரு மதச்சார்பற்றக் கட்சியும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து, தொடர்ந்து மக்கள் பிரச்சினைக்குப் போராடி, மக்களுக்கு விழிப்பூட்டி, வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றிபெறலாம். மதவாத சக்திகளை வீழ்த்தலாம்! மதவா அமைப்பிற்கு சரியான பத்திரிகையும், தொலைக்காட்சியும் கட்டாயம் தேவை.
சிந்திப்போம்! செயல்படுவோம்! வெற்றி பெறுவோம்! ஆதிக்கம் அழிப்போம்! மனிதநேயம் காப்போம்; மக்கள் நலம் காப்போம்!
அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாய் நிற்கக்கூடிய அரசியல் கட்சிகள், செருக்கு தவிர்த்து, சொந்த வெறுப்புகளைக் கைவிட்டு, ஓரணியில் நின்று அணியமைப்பது. இதற்கு பொதுவுடைமைக் கட்சிகள் இந்திய அளவில் முனைந்து நின்று செயல்படுவது. பொதுவுடைமை இயக்கத்தார் தங்களுக்குள்ள பிரிவைத் தவிர்த்து ஒன்று சேர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் மத்தியில் ஆட்சியமைக்கும் அளவிற்கு ஒரு வலுவான மதச்சார்பற்ற அணியை முன்னின்று அமைப்பது. ஆகிய மூன்றும் அவசிய அவசர கடமைகள் ஆகும். தவறினால், கம்யூனிசம் வளரக் கூடாது என்பதற்காக பார்ப்பனர்களே கம்யூனிஸ்ட் கட்சியில் நுழைந்து கெடுக்கிறார்கள் என்று பெரியாரின் கூற்று உறுதியாகிவிடும்.
எனவே, இந்நிலையிலும் கம்யூனிஸ்டுகள், விரைந்து, வியூகம் அமைத்து பி.ஜே.பி.யை வீழ்த்தவில்லையென்றால், கட்சி நடத்துவதில் பொருளே இல்லை!
ஊழலை ஒழிக்கிறேன் என்று, மதவாத சக்திகளை வளர்த்துவிடும் செயலை மக்களும் செய்யக் கூடாது. அரசியல்வாதிகள் அத்தனைபேரும் ஊழல் பேர்வழிகள்தான். ஊழல் இல்லாமல் அரசியல் இல்லை
நூல்- பி.ஜே.பி ஒரு பேரபாயம்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment