இது உண்மையில் மிக அதிகமானதே...



என் கடைக்கு பராரியாய் ஒரு வாலிபன் வந்து வேலை கேட்டான். அவன் மேட்டுப்பாளையத்தில் ஒரு சாயபு கடையில் குமாஸ்தாவாக இருந்ததாகச் சொன்னான். அவனுக்கு, உடனே நான் வண்டிச் சரக்கு விலைபோடும் வேலை கொடுத்து, பிறகு கணக்கு வேலை கொடுத்தேன். சிறிது காலம் பொறுத்து அவன் கல்யாணத்தைப்பற்றி அவன் தாயார் என்னை வந்து கேட்டார்கள். பெண் எங்கே? என்றேன். பெண்ணும் நீங்கள்தான் பார்த்துச் செய்யவேண்டும் என்று சொன்னார்கள். உடனே நான் யோசித்தேன்; ஒரு தாலுகா சேவகம் நாயுடு வீட்டில் அவர் வைப்பாக வைத்துக்கொண்டிருந்த மனைவிக்கு ஒரு மகள் இருந்தது; என் குமாஸ்தா ஒரு வேளாள வகுப்பு, என்றாலும் இதைக் கட்டிக்கொள்ளக் கேட்டேன், சம்மதித்தார். தாலுகா சேவகன் மனைவியும் கொடுக்கச் சம்தித்தார். கலப்பு மணம் என்கிற பெயரில் சதுர், பாட்டுக் கச்சேரி, பல்லக்கு, ஊர்வலம் என்கிற தடபுடலில் அத்திருமணம் நடந்தது. காரணம், திருமணத்திற்கு கடைகளில் பணம் வசூல் செய்தேன். சமபந்தி சாப்பாடு விருந்து நடந்தது; ஊர் பூராவும் கலந்துகொண்டது; இது ஜாதிபேதம் நீக்கல்; சமபந்தி உணவு; கலப்பு ஜாதி மணம்; மூன்றும் கூடியதால் - என் வயதொத்த முதலாளி பிள்ளைகள், குமாஸ்தாக்கள், எனது வாலிப சிநேகிதர்கள் ஆகியவர்கள் மனதில் பெரிய மாறுதல், சீர்திருத்த உணர்ச்சியை ஏற்படுத்தி, காரியத்தில் நடக்கும்படியும் செய்துவிட்டது. எப்போது என்றால், இன்றைக்கு 40, 45 வருடங்களுக்கு முன்னால் - அதுவும் பணக்கார, வைதீக குடும்பத்தில் இருக்கின்ற என்னால் என்றால், இது, உண்மையில் மிக அதிகமானதே . . . . அந்தக் காலத்துக்கு.

நூல்: உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – II







Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை