தேசிய குற்றம்
உணவின்றி கோடானுகோடி மக்கள் உலகின் பல நாடுகளில் வாடி வதங்கி மடியும்போது,
உணவை இப்படி வீணாக்குவது தேசிய குற்றமல்லவா? (National Crime) தந்தை பெரியார் அவர்களுடன் இருந்த பலருக்கும் தெரியும், அய்யா அவர்கள் சாப்பிட்டு முடித்து ஒரு நோட்டம் விடுவார்கள். யாராவது உணவுப் பண்டத்தை தட்டிலேயோ,
இலையிலேயோ மிச்சம் வைத்துவிட்டால்,
உடனடியாக தயவு தாட்சண்யம் பார்க்காமல் கண்டிப்பார்கள்.
இப்படி வீணாக்குவதைவிட, முதலிலேயே - பரிமாறும்போதே தடுத்து, வேண்டாம் என்று கூறியிருப்பீர்களேயானால், இப்படி வீணாகாதே - இப்படிச் செய்யலாமா?
இது பொறுப்பற்ற செயல் அல்லவா? என்பார்கள்!
- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 6
Comments
Post a Comment