உண்மையிலேயே பெரிய மகான்! ஞானி!



தந்தை பெரியார் அவர்கள் 1958இல் சென்னை பொது மருத்துவமனையில் இருந்தார்கள். அவர்களைப் பார்க்க நான் சென்று இருந்தேன். அப்பொழுது தமது சொந்த காரியமாக சென்னை வந்த தஞ்சையைச் சேர்ந்த வக்கீல் குமாஸ்தா சீனிவாச தாத்தாச்சாரி, பெரியாரைத் தானும் பார்க்க விரும்புவதாகக் கூறினார். சரி என்று அவரையும் அழைத்துச் சென்றேன். அய்யாவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு விடை பெற்றோம். அய்யா அந்த அய்யரைப் பார்த்துச் சொன்னார், அவர் குப்புசாமி என் கட்சிக்காரர். என்னைப் பார்ப்பது சாதாரணம். ஆனால் நீங்கள் என்னைப் பார்க்க வந்தது எனக்கு மிகவும் பெருமை! என்று சொல்லி எழுந்து நின்று வழியனுப்பி வைத்தார்.
வெளியே வந்த வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர் மிகவும் அதிர்ந்து போய்விட்டார். நான் என்னவோ நினைத்திருந்தேன். உண்மையிலேயே பெரிய மகான்! ஞானி! அவர் முகத்தில் இருக்கும் தேஜஸ் , அப்பா... உண்மையிலேயே பெரிய மனுசர்! என்ன மரியாதை... என்ன மரியாதை... என்று என் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னார்! மறுநாள் தஞ்சாவூர் கோர்ட்டில் தன்னைச் சந்தித்தவர்களிடத்தில் எல்லாம் சொல்லியிருக்கிறார்.
தந்தை பெரியார் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை