கோர்ட்டில் உருக்கமான காட்சி!



நீதிபதி அவர்களால் இன்று தண்டனையளிக்கப்பட்டவுடன் கோர்ட்டில் கூடியிருந்தவர்கள் அனைவரும் தங்கள் வணக்கத்தை பெரியார் அவர்கட்கு தெரிவித்துக் கொண்டார்கள். சிலர் பெரியார் அவர்களின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தும், சிலர் பெரியாரவர்களின் கரங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டும் வணக்கம் தெரிவித்தனர். கோர்ட்டிலே கூடியிருந்தவர்களில் பலரும் கண்ணீர் வடித்தார்கள். சர்..டி.பன்னீர்செல்வமும் பெரியாரைத் தழுவி கண்ணீர் விட்ட காட்சி மிகவும் உருக்கமாய் இருந்தது. விளம்பர மந்திரியாரின் தம்பி 8ஆவது சர்வாதிகாரி தோழர் சம்பந்தம் அவர்கள் தாரை தாரையாய்க் கண்ணீர் விட்ட காட்சி மிகவும் பரிதாபமாயிருந்தது. ஆனால், பெரியார் அவர்கள் எல்லோருக்கும் மலர்ந்த முகத்துடன் சமாதானம் கூறி இயக்கத்தை நேரிய முறையில் தொடர்ந்து நடத்திக்கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டு எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள்.

தந்தை பெரியார் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை