ஆர்.எஸ்.எஸ். ஓர் ஆரிய அமைப்பு
இக்கருத்தில் ஆரியர் அல்லாத பெரும்பான்மை மக்களுக்கு (98 சதவீத மக்களுக்கு) விழிப்பு ஏற்பட்டு விட்டால், ஆர்.எஸ்.எஸ்.
கூடாரங்களின் சதித்திட்டங்களையும், தந்திரங்களையும், ஏமாற்றுக்களையும், ஆரிய ஆதிக்கப் பாஸிஸ வெறியையும், அவர்களின் கொடூரச் சிந்தனைகளையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
1. அமைப்பு மற்றும் பதவியின் பெயர்கள்
ஆர்.எஸ்.எஸ்.
- என்பதன் விரிவாக்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம் ஸேவக் ஸங்;
இது சமஸ்கிருதம். அமைப்பின் பெயரே சமஸ்கிருதத்தில் இருப்பதே இது ஓர் ஆரிய அமைப்பு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சமஸ்கிருதம் ஆரியர்களின் மொழி.
ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பின் பதவிப் பெயர்களை ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புகளும் செயல் திட்டங்களும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். அவற்றை நன்றாக கவனியுங்கள். அவையனைத்தும் சமஸ்கிருத வார்த்தைகளே ஆகும்.
2. ஆர்.எஸ்.எஸ்.
தலைவர்கள்
தோற்றுவித்த அய்ந்து பேரும் ஆரியப் பார்ப்பனர்களேயாவர். அதில் முக்கிய பொறுப்பில் அக்காலந்தொட்டு இக்காலம் வரையுள்ளவர்கள் அனைவரும் ஆரியப் பார்ப்பனர்களே! அதுவும் சித்தபவான் பார்ப்பனர்கள்.
3. ஆர்.எஸ்.எஸ்-
வழிபாட்டுப் பாடல்:
Solutations to you, O, Mother land
Where I am born;
Solutations to you O, Land of
Aryas,
Where I have grown;
Solutation to you, O, Sacred land
Where I have
worked.
இப்பாடலின் பொருள்:
நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகின்றேன்.
என்னை வளர்த்த ஆரிய நாடே, உன்னை வணங்குகின்றேன்.
நான் உழைக்கும் புனித நாடே, உன்னை வணங்குகின்றேன்.
1939ஆம் ஆண்டு வரை இப்பாடல் இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் பாடப்பட்டு வந்தது. பின்னர் பிரார்த்தனைப் பாடலை தங்களின் தாய் மொழியான சமஸ்கிருதத்தில் நமஸ்தே சதாவஸ்தே என்று பாடத் தொடங்கினர்.
ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புகள் அனைத்தும் ஆரிய அமைப்புகளே என்பதற்கு இப்பாடல் ஓர் முதன்மையான ஆதாரமாகும்.
பாடலை சமஸ்கிருதத்திற்கு மாற்றியது மட்டுமல்ல. இப்பாடலில் இந்த நாட்டைக் குறிப்பிடும்போது ஆரிய நாடு என்று அழைப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். உண்மையில் இந்த நாட்டிற்குச் சம்பந்தமில்லாதவர்கள், உரிமையில்லாதவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் என்பதை முன்னமே விளக்கியுள்ளேன். அப்படிப்பட்டவர்கள் - பிழைக்க வந்தவர்கள் இந்த நாட்டையே தங்கள் நாடு என்று கூறுவதோடு, தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டவே ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புகளை உருவாக்கினர் இப்படிப்பட்டவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் முழுமையாகக் கிடைத்தால் இது ஆரிய நாடாக ஆகும், நாமெல்லாம் நாலாந்தர குடிமக்கள் ஆவோம் என்பதில் இன்னுமா சந்தேகம்?
4. ஆர்.எஸ்.எஸ்.
சட்டவிதிகள்
The aims and
objects of the sangh are to weld together the diverse groups within Hindu Samaj
and revitalise and rejuvenate the same on the basis of its Dharma and Sanskrit,
that it may achieve an all sided developments of Bharath varsha.” அதாவது, இந்து சமாஜத்தில் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு எழுச்சியூட்டி, இளமை ரத்தம் பாய்ச்ச வேண்டும். இந்து தர்மம் மற்றும் சமஸ்கிருத அடிப்படையில் இது செய்யப்படவேண்டும். இதன் மூலம் பாரதத்தின் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி பெறமுடியும்.
ஆர்.எஸ்.எஸ்.
சட்டவிதிகளில், விதிகளும் ஒழுங்கு முறைகளும் என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவில் காணப்படும் சட்ட விதியே இதுவாகும்.
இந்த நாட்டின் வளர்ச்சியை சமஸ்கிருதமும், இந்து தர்மமுமே உருவாக்க முடியும் என்றால் இவர்கள் யார் என்பதை விளக்கவும் வேண்டுமோ?
சமஸ்கிருதம் இவர்களது மொழி, இந்து தர்மம் என்றால் என்ன? மனுதர்மம். மனுதர்மம் ஆரியர் நன்மைக்கான விதிகளைக் கொண்டது. ஆக, இரண்டும் ஆரியர்களுடையது. ஆக,
ஆரியரும், ஆரிய மொழியும், ஆரிய தர்மமுமே இந்நாட்டின் உயர்வு என்கின்றனர். இந்த நாடோ ஆரிய நாடு என்றனர். ஆக, ஆரியர் - ஆரியர் மொழியின் உயர்வே இந்த நாட்டின் உயர்வு என்பது இவர்களின் கொள்கையென்றால் இந்த அமைப்பு ஆரியப் பார்ப்பன அமைப்பு என்பதில் அணுவளவும் அய்யம் வர வாய்ப்புண்டோ?
ஆர்.எஸ்.எஸ்.
தலைமை:
ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் படுகின்றவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் மட்டுமே. அதிலும் மராட்டியத்தைச் சேர்ந்த அதிதீவிர மத வெறி பார்ப்பனர்களே!
1949ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி உள்துறைச் செயலராக இருந்த எச்.வி.ஆர்.
அய்யங்கார் அவர்களே, சிறைப்பட்டிருந்த கோல்வால்கருக்கு எழுதிய கடிதத்தில் இதைக் குறிப்பிடுகின்றார்.
“also objected
to a nominated Sar - Sangha - Chalak and alleged that many important offiees in
Sangha were held by “Persons belonging to a particuler Community from a certain
area” meaning Maharastrian Brahmins.
அதாவது, ஆர்.எஸ்.எஸ்.
தலைவரை நியமனம் செய்யும்போது, மற்றும் அந்த அமைப்பில் பெரும்பாலான முக்கியப் பதவிகளைப் பெறும்போதும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஆரியப் பார்ப்பனர்களே அமர்த்தப்படுகிறார்கள் என்பதே அக்கடிதப் பகுதியின் சாரம்.
ஆக,
இது ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்டு, ஏமாளி இந்துக்களை பலிகொடுத்து, ஆரிய உயர்விற்காய் ஆரியர்கள் நடத்தும் அமைப்பு என்பது அவர்கள் பதவிகளை அளிக்கும் விதமே பறைசாற்றுகின்றது.
காந்தியார் கொலை:
இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று காந்தியார் சொன்னதற்காகவும், இதனால் இந்து ராஷ்ட்டிர கனவு தகர்க்கப்படுகிறது என்பதற்காக மட்டும் ஆர்.எஸ்.எஸ்.
பார்ப்பனர்கள் காந்தியைக் கொல்லவில்லை. காந்தியாரை அவர்கள் கொன்றதற்கு அதனினும் முதன்மையான காரணம் ஒன்று உண்டு.
இந்தியா முழுமைக்கும், மக்கள் ஒரு மனதாக ஏற்கக்கூடிய தலைவராக ஒரு பார்ப்பனர் அல்லாத ஒருவர் வருவதை பார்ப்பனர்கள் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக காந்தி உருவாகி, உயர்ந்து வந்தார். பார்ப்பனர் அல்லாத, அதுவும் மராட்டிய பார்ப்பனர் அல்லாத ஒருவர் அரசியலில் உயர்நிலைச் செல்வாக்கில் இருப்பதை சகிக்க முடியாமலே காந்தியை மராட்டிய பார்ப்பனக் கூட்டம் கொன்றது.
காந்தி என்ன கொள்கையைக் கொண்டிருந்தாரோ அதே கொள்கையைத்தான் நேருவும் கொண்டிருந்தார். நேரு பார்ப்பனராக இருந்தாலும் மதவெறிக்கு முதல் எதிரியாய் நின்றார். என்றாலும், அவரை குறி வைக்காது காந்தியாரைக் குறிவைத்தது அந்த ஆரியப் பார்ப்பன இனத்தின் பாசம் என்பதையும்; பார்ப்பனர் அல்லாதார் மீது கொண்ட பகைமையென்பதையும் இது காட்டுகிறது.அது மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ்.
ஒரு பார்ப்பன ஆதிக்க அமைப்பு என்பதையும் உணர்த்துகிறது.
வர்ணாஸ்ரம ஆதரவாளர்கள்
ஆர்.எஸ்.எஸ்.
ஓர் ஆரிய பார்ப்பன அமைப்பு என்பதற்கு அவர்கள் வர்ணாஸ்ரம தர்மத்தில் (ஜாதி முறையில்) அவர்கள் கொண்டுள்ள தீவிரமே முக்கிய ஆதாரமாகும்.
இவர்களின் அன்றாடப் பணிகளில் ஜாதி முறையை ஆதரிக்கின்ற, பாராட்டுகின்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
வர்ணாஸ்ரம அமைப்பு ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டது என்று அதன்மீது தேன் தடவிக் காட்டுகின்றனர்.
ஜாதிக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்கலாம் என்பதுதான் வர்ணாஸ்ரம தத்துவம். பிராமணர்கள் தங்கள் அறிவுத் திறமையால் உயாந்தவர்கள்; ஷத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள்; வாணிபம் செய்வதில் வல்லவர்கள் வைசியர்கள். தங்கள் தொழிலைச் செய்வதன்மூலம் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள் சூத்திரர்கள். இதில் இழிவு இல்லை என்கிறார் கோல்வால்கர். (Bunch of Thoughts)
சரிதான், நாங்கள் அர்ச்சகராக இருக்கிறோம், நீங்கள் கொஞ்ச காலத்திற்கு எங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்ய கக்கூஸ் கழுவுங்கள், செத்த மாட்டைத் தூக்குங்கள் என்றால் அவர்கள் சாயம் வெளுத்து, ஆரிய நரித்தந்திரம் நறுக்கென்று தெறித்து விழுகிறது! சூத்திர வேலைதான் சமூகச் சேவை என்கின்றனரே அவர்கள் கொஞ்ச காலத்திற்கு அதைச் செய்வார்களா? அடுத்தவன் இழிவையும் இவர்கள் ஆதிக்கத்தையும் எப்படி மறைக்கிறார்கள் பாருங்கள்!
ஜாதிப்பிரிவில் இழிவு இல்லை, எல்லாம் வேலைப்பிரிவு என்று பித்தலாட்டம் பேசும் இதே கோல்வால்கர், அதே நூலில் என்ன சொல்கிறார் தெரியுமா?
“We (aryans) are
the good, the enlightened people. We were the people who know about the laws of
nature the law of the sprit. We had brought into actual life almost every thing
that was beneficial to mankind. Then the rest of humanity was just bipeds and
so no distinective same was given to us. Sometimes in trying to distinguish our
people from others, we were called the enlightened - the Aryas - and the rest
the melachas.”
- (ஆதாரம்: Bunch of Thoughts)
அதாவது,
நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே, நமக்கென்று குறிப்பிட்ட பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. சில நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் அறிவுத்திறனுடைய ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் மிலேச்சர்கள் (இழிமக்கள்) என்பதே கோல்வால்கர் கூறியது.
ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களையெல்லாம் ஆடு மாடுகளாக, அதனினும் கீழாகக் கருதக் கூடியவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்.,
பி.ஜே.பி.
கூட்டத்தினர் என்பதும் இவை ஆரிய அமைப்பே என்பதும், விளங்கவில்லையா?
ஆர்.எஸ்.எஸ்.
பரிவாரங்களின் தலைமையிடமாக விளங்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், சம்பூர்ணானந்த் சிலையை, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் திறந்து வைத்தபோது, தாழ்த்தப்பட்டவர் திறந்ததால் சிலை தீட்டடைந்து விட்டது என்று கங்கை நீரைக் கொண்டு வந்து தீட்டுக் கழித்தவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்.
மற்றும் அவற்றின் குடும்ப அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
அது மட்டுமா?
நீ மந்திரியாகிவிட்டால், செருப்பு தைப்பது யார்? என்று கோஷம் போட்டவர்களும் இந்த ஆரியப் பார்ப்பனர்களே!
இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற பேராசிரியர்கள். ஆரியப் பார்ப்பனர்கள் என்பதோடு, அவர்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியர்கள்.
ஆர்.எஸ்.எஸ்.
துவக்கப்பட்ட காலத்திலே இதற்கென்று (ஆர்.எஸ்.எஸ்.-க்கென்று) ஒரு கட்டடத்தையே ஒதுக்கியவர் மாளவியா என்ற ஆரியப் பார்ப்பனர்.
ஜாதிவெறி கொண்ட அமைப்பே ஆர்.எஸ்.எஸ்.
என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்.
மேலும்,
தபன்பாசு, பிருதிப்தத்தா உள்ளிட்ட ஆய்வாளர்கள், ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் என்ற ஆர்.எஸ்.எஸ்.
பரிவாரங்களின் - தலைவரை பேட்டி கண்டபோது,
தற்செயலாக உயர்ஜாதி இந்துவின் மீது ஒரு அரிஜன் உடல் பட்டுவிட்டதற்காக, அவன் படுகொலை செய்யப்பட்டால், நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள் என்று கேட்டபோது, கிரிராஜ் மவுனம் சாதித்தார். இதுதான் இவர்களது தர்மம்; இதுதான் இவர்கள் ஜாதியொழிப்பு!
அர்த்த சாஸ்திரமும், மனுதர்மமும்
ஆர்.எஸ்.எஸ்.
கூட்டத்தவர்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் அர்த்த சாஸ்திரத்திலிருந்தும், மனு தர்மத்திலிருந்துமே பெறப்பட்டுள்ளன.
அரசாட்சியில் வேவு பார்த்தல், அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் முழுக்கட்டுப்பாடு, ஆதிக்கம் ஆகியவற்றிற்கு அர்த்தசாஸ்திரமும், கீழ்ச் சாதியினரை எப்படி வைக்க வேண்டும் என்பதற்கு, பெண்களை எப்படி அடிமை கொள்ள வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு மனுதர்மமும் நெறி நூல்களாகும்.
இதிலிருந்தே இவர்களின் ஆட்சியும், இவர்களின் மாட்சியும் சூழ்ச்சியும் எப்படியிருக்கும் என்பதையும், இவர்கள் ஜாதி வெறியின் சகட்டுமேனி என்பதனையும் சந்தேகமின்றி புரிந்து கொள்ளலாம்.
வரலாற்றைத் திரித்தல்
ஆர்.எஸ்.எஸ்.
குடும்பத்தின் அதிகாரப் பீடமான பி.ஜே.பி.
ஆட்சி நடக்கின்ற இடங்களில் எல்லாம், வரலாற்றைத் திரித்து எழுதுகிற முயற்சி நடப்பது கண்கூடு. அயல் நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள், இந்தியாவையே தாயகமாகக் கொண்டவர்கள் என்பதாகத் திரித்து எழுதுகிறார்கள் என்றால், இவர்கள் ஆரிய பார்ப்பனர்களுக்காகவே இந்த அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்களே தவிர மற்ற இந்துக்களுக்காக அல்ல என்பது அகங்கை நெல்லிக்கனியாகத் துலங்கும்!
சமஸ்கிருத ஆண்டு
13 மாத பி.ஜே.பி.
ஆட்சி, அதுவும் நித்தம் நித்தம் செத்துப் பிழைத்த ஆட்சியிலே அவர்களின் இனப்பற்றை மொழிப்பற்றைக் காட்ட தவறவில்லை. 40 ஆயிரம் பேர் கூட பேசாத ஒரு மொழி, வழக்கொழிந்த செத்தமொழியாம் சமஸ்கிருதத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து சமஸ்கிருத ஆண்டு அறிவித்து அம்மொழியை வளர்த்தார்கள். செம்மொழி, தொன்மொழியாம் தமிழுக்கு, 10 கோடிக்கு மேற்பட்டவர்கள் பேசுகின்ற தமிழுக்கு ஆண்டு அறிவிக்க வேண்டும் என்றால் மவுனமாக இருக்கிறார்கள் என்றால், இவர்கள் எந்த பெயரில், எந்த அமைப்பில் செயல்பட்டாலும் அவையனைத்தும் ஆரிய அமைப்புகளே, ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்க அமைப்புகளே என்பதில் எள்ளளவாவது இரண்டாவது கருத்து இருக்க முடியுமா?
வி.எச்.பி.யில் தனிப் பிரிவு
வி.எச்.பி.
என்ற ஆர்.எஸ்.எஸ்.
குடும்ப அமைப்பு பல்வேறு நோக்கங்களுக்காக 18 பிரிவுகளாகப் பிரிந்து செயல்படுகிறது. அதில் ஒரு பிரிவு சமஸ்கிருதத்தைப் போதிக்கவென்று அமைக்கப்பட்டுள்ளது. பத்து நாட்களில் சமஸ்கிருதத்தை எழுதவும் பேசவும் போதிப்பது இதன் நோக்கம். இதன்மூலம் இந்து சாஸ்திரங்களையும், ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தையும் உயிர்ப்பித்துவிடலாம் என்பதே இலக்கு.
இந்து ராஷ்டிரம் எப்படியிருக்கும்?
ஆர்.எஸ்.எஸ்.
பிரிவுகள் அனைத்துமே ஆரியப் பார்ப்பன அமைப்புகளே என்பதைக் கீழ்க்கண்ட குறிப்பு தெளிவாய் விளக்கும்.
ஆர்.எஸ்.எஸ்.
குடும்ப அமைப்புகளுக்கு கொள்கை நூல், சித்தாந்த நூல், வழிகாட்டு நூல் எல்லாமே கோல்வால்கர் எழுதிய சிந்தனைக் கொத்து இதுதான் (Bunch
of Thoughts) என்பதேயாகும். அந்நூலில் 138-139ஆம் பக்கத்தில் கீழ்க்கண்ட கருத்து வலியுறுத்தப்படுகிறது. கதையாக இல்லாமல் கவனமாகப் படியுங்கள்.
தென்னாட்டில் ஒரு ஆங்கில அதிகாரி இருந்தார், அவருக்கு உதவியாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். ஆங்கில அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். தெருவில் பியூனோடு ஆங்கில அதிகாரி சென்று கொண்டிருக்கையில், எதிரே வந்த அந்த நாயுடு ஆங்கில அதிகாரியைப் பார்த்து கை குலுக்கினார். ஆனால், பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத் தொட்டு வணங்கினார். அதைப் பார்த்து வியப்படைந்த ஆங்கில அதிகாரி,
நான் உன்னுடைய பெரிய அதிகாரி, என்னிடம் நீ கை குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூன் காலைத் தொட்டு கும்பிடுகிறாயே இது என்ன பிரச்சினை? என்று கேட்க, அதற்கு அந்த நாயுடு உதவியாளர் பதில் சொன்னார்,
நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாய் இருக்கலாம். ஆனால், நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் (பிராமணர்) ஒரு பியூனாக இருந்தாலும் நாங்கள் வணங்கக் கூடிய பிராமணச் சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழ வேண்டியது எங்கள் கடமை என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம். இதுதான்
R.S.S. இலக்கு - அவர்கள் நூலில் இது சொல்லப்பட்டுள்ளது என்றால் இவர்களின் நோக்கைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்து இந்து சொல்லிக் கொண்டு பார்ப்பனர் அல்லாதவர்கள் அலைகிறார்களே, ஆர்.எஸ்.எஸ்.
மற்றும் பி.ஜே-பி.
அமைக்க நினைக்கிற இந்து ராஷ்ட்ரா எப்படி இருக்கும் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள். இதைச் சொல்வது யார்? அதுதான் முக்கியம்.
ஆர்.எஸ்.எஸ்.
முதற்கொண்டு பி.ஜே.பி.
வரை அனைத்து ஆரியப் பார்ப்பன அமைப்புகளும் யாரைத் தலைவனாக, யாருடைய கருத்துக்களை வழி காட்டுதலாகக் கொண்டு செயல்படுகிறார்களோ அந்த கோல்வால்கர் கூறுகிறார். இந்து ராஷ்டிரம் என்பது ஆரியப் பார்ப்பன ராஷ்டிரமே! என்று.
பிச்சையெடுத்தாலும் பார்ப்பானே வணங்கத் தக்கவன். ஜனாதிபதியாக இருந்தாலும் ஆரிய பார்ப்பனர் அல்லாதார் ஆரியர் காலில் விழவேண்டும்! காரணம், இந்து ராஷ்டிரத்தில் வணங்கத் தக்கவர்கள் ஆரிய பார்ப்பனர்களே! மற்றவர்களெல்லாம் அவர்களது அடிமைகளே! சூத்திரர்களே! இழி மக்களே!
இப்படிப்பட்ட ஒரு இழிவை, மானக்கேட்டை, இந்த அறிவியல் உலகத்திலும் நிலைநாட்ட முற்படுகின்ற ஆரிய பார்ப்பன அமைப்புகளே ஆர்.எஸ்.எஸ்.
குடும்ப அமைப்புகள் அனைத்தும் என்பதை ஆழமாக ஆரியர் அல்லாத மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
இவர்களை மக்கள் எதிரிகளாக, சமுதாய நோய்களாக, ஒதுக்கித் தள்ள வேண்டிய குப்பைகளாகக் கொள்ள வேண்டுமே தவிர, கோலோச்ச விட்டால், அவர்களின் அடிமைகளாக, இழிமக்களாக வாழவேண்டிய, கேவலம் அவலம் வந்தே தீரும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன்.
ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கைத் தலைவன் என்று போற்றப்படும் பால்ராஜ் மதோக் என்பவர்,
ஆரியர்கள்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள். அவர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிக்க வந்தவர்கள் அல்ல என்று கூறுகிறார்.
ரிக்வேதம் என்ற ஆரிய நூலே இவர்கள் அயல் நாட்டிலிருந்து ஓடி வந்தவர்கள் என்பதைச் சுட்டுகின்றது. மாக்ஸ் முல்லர் ஆரியர்கள் அயல் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை ஆய்வு செய்து ஒப்புக் கொள்கின்றார். அணு அளவுகூட சந்தேகத்திற்கு இடமில்லாத அப்பட்டமான உண்மை ஆரியர்கள் அயல்நாட்டினர் என்பது. அப்படியிருக்க, ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்ற அப்பட்டமான பொய்யை, வரலாற்றுத் திரிபை மோசடிக் கருத்தை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைத் தலைவர் எனப்படுபவர் கூறுகிறார் என்றால், ஆர்.எஸ்.எஸ்.
பச்சைப் பார்ப்பன அமைப்பு என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?
மொழிப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்.
கொள்கை அச்சாணி என்று கருதப்படும் கோல்வால்கர் என்ன கூறுகிறார் தெரியுமா?
“As a solution to the problem of ‘lingua fanca’ till
the time Sanskrit takes that place, we shall have to give priority of Hindi on
the score of convenience.”
- (Bunch
of Thoughts 8ஆவது அத்தியாயம் -
பக்கம் 113)
அதாவது, மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது; சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக வருகின்ற வரை ஹிந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இதைவிட ஆரியத்தனம் வேறு இருக்க முடியுமா? இதற்கு முன் குறிப்பிட்டதுபோல, செத்துப்போன, நாற்பதாயிரம் பேர்கூட பேசாத, உலக வழக்கொழிந்த ஒரு மொழியை (சமஸ்கிருதத்தை) இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டுமாம். அவ்வாறு ஆட்சி மொழியாகின்ற வரை இந்தியைப் போனால் போகட்டும் என்று ஆட்சி மொழியாக்க வேண்டுமாம்.
இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளையும்விட சமஸ்கிருதத்தையே ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைப் பிதாமகர் அறிவிக்கிறார் என்றால் ஆர்.எஸ்.எஸ்.
ஓர் ஆரிய அமைப்பு என்பதில் அய்யம் உண்டோ?
இது மட்டுமல்ல, 1952ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் டாக்டர் முகர்ஜி தலைமையில் ஜனசங்கம் நிறைவேற்றிய தீர்மானம் என்ன தெரியுமா?
நாடு முழுவதும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும். அதே நேரத்தில் சமஸ்கிருத எழுத்துக்களை பிரபலப்படுத்த வேண்டும். எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருத எழுத்துக்களையே பொது எழுத்தாக அறிவிக்க வேண்டும். உபநிடதங்கள், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளே இந்தியாவின் இலக்கியங்கள். ஹோலி, தீபாவளி, ரக்ஷபந்தன் ஆகியவையே தேசியப் பண்டிகைகள் என அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
தங்கள் மொழிக்குத் தகுதியே இல்லாமல் போனாலும், ஒரு சதவீதம் பேர்கூட அதை பேசாமல் போனாலும், தங்களுடைய மொழியே கட்டாயம் போதிக்கப்படவேண்டும்; மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருத எழுத்தையே பயன்படுத்த வேண்டும் என்றால் இது எப்பேர்ப்பட்ட அடாவடித்தனம்; ஆதிக்கப்போக்கு, பேட்டை ரவுடிகள்கூட இப்படிப் பேச மாட்டார்களே!
அவர்களது இராமாயணமும் மகாபாரதமுந்தான் இலக்கியங்களாம். நமது திருக்குறள் போன்ற உலக ஒப்பற்ற நூல்களெல்லாம் குப்பைகளாம்!
அவர்களது தீபாவளியும், ஹோலியுந்தான் பண்டிகைகளாம். நமது அர்த்தமுள்ள பொங்கல் எல்லாம் ஒதுக்கப்பட வேண்டியவையாம்.
எது தனதோ அதுவே வாழவேண்டும்; எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் மற்றதெல்லாம் அழியவேண்டும் என்ற ஆரிய அரிச்சுவடி அப்படியே இங்கு பிரதிபலிப்பதைப் பாருங்கள்.
வேதங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன. ஆரியர்கள் வாழவேண்டும். அவர்களுக்கு எதிரானவர்களெல்லாம் நாசமாகப் போகவேண்டும் என்பதுதானே! அதைத்தான் இங்கு தீர்மானமாகப் போட்டுள்ளார்கள்.
ஆக,
ஆர்.எஸ்.எஸ்.
சொல்வதையே ஜனசங்கம் சொல்கிறது; ஜனசங்கம் சொல்வதையே பா.ஜ.க.
செய்கிறது. ஆக இவை பெயரால் வேறுபட்டாலும் அனைத்தும் ஆரிய அமைப்புகளே!
ஆர்.எஸ்.எஸ்.
பரிவாரங்கள் ஆரியத்தின் அடிப்படைத் தத்துவத்திலே - அச்சிலே தான் இயங்குகிறது என்பதைக் கீழ்க்கண்ட ஆதாரம் தெளிவாகக் காட்டுகிறது.
“The R.S.S. ideology is based upon the equation of
Hindus with the Aryans and the characterisation of the vedic age a golden age.”
அதாவது,
இந்துக்கள் என்றால் ஆரியர்கள்தான். பொற்காலம் என்றால் அது வேதகாலம் என்ற சமன்பாட்டின் அடிப்படையில் R.S.S. தத்துவம் இருக்கிறது.
என்று 1980 (ஜனவரி - மார்ச்) வெளிவந்த ளுவயவந யனே ளுடிஉநவைல என்ற ஆய்வு இதழ் கூறியது.
இந்துமதம் என்றாலே ஆரிய மதம்தான். இந்தி என்றால் ஆரியர்கள்தான். இந்துராஷ்ட்ரம் என்றால் அது ஆரிய இராஷ்ட்ரம் என்பதுதான். ஆக, மற்றவர்களெல்லாம் இது அறியாமல் இந்து இந்து என்று தங்களையும் சொல்லிக் கொண்டு செல்வது அறியாமை.
இந்து என்ற கோர்வையில் நம்மையும் பலத்திற்காக கும்பல் காட்ட, பிற மதத்தவரை எதிர்க்க சேர்த்துக் காட்டுகிறார்களே தவிர, உண்மையில் இந்து மதத்திற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை. இந்துமதக் கோட்பாடுகள், வழிபாடுகள், வேதமொழி எல்லாமே ஆரியர்களுடையவையே!
ஆக,
R.S.S.
என்பது ஆரியர்களுக்கான அமைப்பேயன்றி, மற்றவர்களுக் குரியதன்று. ஆரியர் ஆதிக்கத்தை மற்றவர் தோள்மீது ஏறி அமைக்க இந்த அமைப்பை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆக, ஆர்.எஸ்.எஸ்.
என்பது ஏமாந்த மக்களை இந்து என்று பெயர் சூட்டி, வெறியேற்றி, ஒன்று திரட்டி, அப்பலத்தைக் கொண்டு, ஆரிய ஆதிக்க ஆட்சியை அமைத்து, அதன்பின், தோள் கொடுத்தவர்களையே அடிமை கொள்ள முனையும் ஒரு மோசடி இயக்கமே ஆகும்!
நூல்- பி.ஜே.பி ஒரு பேரபாயம்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment