நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் பெரியார்



ஈரோடு முக்கிய பிரமுகரும், நகராட்சி தலைவருமாக நெடுங்காலமாக இருந்தவருமான ராவ் பகதூர் முதலாளி என்று அன்பாக அழைக்கப்படும் கே..சேக்தாவூது சாயபு அவர்கள் இறந்த நிகழ்ச்சி அய்யா பெரியார் அவர்களுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. உடனே அய்யாவிடமிருந்து, இறந்தவர் உறவினருக்கு ஈரோடு வருவதாகவும் இறந்தவர் உடலுக்கு தன் நெஞ்சார்ந்த இறுதி வணக்கம் செலுத்தவேண்டி இருப்பதாகவும் தந்தி கொடுத்தார்.

அதேபோல் அய்யா அவர்கள் காலை 11 மணி அளவில் வந்துவிட்டார். இறந்தவருடைய உடலைப் பார்த்து கண்ணீர் விட்டார். நானும் கூட இருந்தேன். இறுதி ஊர்வலம் காவேரிக் கரை அடக்கம் செய்யும் இடத்திற்கு மாலை புறப்பட்டது. அய்யாவும் உடலை எடுத்து செல்லும் ஊர்வலத்தில் வேனில் வந்தார்கள். என்னை, மயானம் வரை நடந்து போகச் சொன்னார். அப்போது அய்யா சொன்னார். இறந்தவர் என் அன்புக்குரியவர் மட்டுமல்ல; குடும்பத்தில் ஒருவராக இருந்தார். நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டுத்தான் வந்தேன் என்றார். நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் பெரியார் என்றால் மிகையாகாது.
- ஈரோடு எஸ்.ஆர்.சாமி
தந்தை பெரியார் 123ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்







Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை