தஞ்சையில் பெரியார் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா - தொடர்ச்சி

நம்ம நாட்டை நாசமாக்கினது பாப்பான் மாத்திரம் அல்லநம்ம புலவன்களும் சேர்ந்து.
(கைதட்டல்அவன் வடமொழியில் (சமஸ்கிருதத்தில்எழுதி வைச்சிட்டுப் போயிட்டான்பாப்பான் ராமாயணத்தையும்பாரதத்யும்கந்த புராணத்தையும்வெங்காய புராணத்தையும் வடமொழியில் கொண்டாந்திட்டான்வடமொழியில் கொண்டு வந்தது மாத்திரம் அல்லஅதை எல்லாம் நம்ம காதிலே கேட்கக் கூடாதுன்னு (பாப்பான்சொல்லி வைச்சிகிட்டான்அப்படிப் பட்டஆதாரங்களை இந்த முட்டாள் புலவன்கள் தான் தமிழிலே பண்ணி நமக்குள்ளே புக வைச்சிட்டான்இவன் தமிழிலே பண்ணாமலிருந்தால்இவ்வளவு சங்கதி வராது. (சிரிப்புஇதைத் தான் சொன்னால் ஜனங்கள் சட்டுன்னு கேட்பாங்கதமிழிலே பண்ணி தமிழிலே பரிகாரம் பண்ணி காடுமேடு சந்து பொந்தெல்லாம் புக வைச்சி எந்த பாப்பானும்எவனைப் பார்த்தாலும் ராமன்கிருஷ்ணன்கந்தன்முருகன் அவன் இவன் கடவுளு.

நாம வந்துதான் அதைக் குறை சொல்றதுக்கு ஒரு துணிச்சல் நமக்கு வந்ததே தவிரநாம உயிருக்கு துணிஞ்சி பேசிகல்லடிபட்டுசெருப்படிபட்டுமேலெல்லாம் சாணியால் அடிபட்டுமலத்திலே எல்லாம் நாம அடிப்பட்டு அவ்வளவு அடியும்உதையும் எல்லாம் வாங்கிகிட்டும் சொல்லிகிட்டும் இருக்கிறதினாலே இப்ப இருக்கிற ஜனங்களையாவது நாம உண்டாக்கினோம்உங்களுக்குப் பிடிக்குதோஇல்லையோ என் பேச்சை கேட்டுக்கிட்டாவது இருக்கிறீங்க. (சிரிப்புமுடியாதே பேசஅதுக்கு முன்னே (சிரிப்புசெருப்பிலே அடிப்பான்அங்கு இருந்து குறிபார்த்து என் மீது கோழி முட்டையிலே மலம் போட்டுவிர்ருன்னு என் மீது அடிப்பான்வீசுவான் கல்லை விற்று விற்றுன்னு.

அத்தனைக்கும் தப்பிச்சிகிட்டு நண்பர் இங்கே சொன்னாப்பிலே இங்கே இருக்கிறவங்க எல்லாம் நமக்கு பாடிகார்டு ஆகஎந்த ஊருக்கு போனாலும்மாயவரத்திலே இருக்கிற நடராஜன்னுபட்டுக்கோட்டை அழகிரிசாமின்னு இன்னும் ஊர் ஊரா ரொம்ப பேர் இருந்தாங்கஇவங்க எல்லாம் என் கூட வந்து இருப்பாங்க. 40, (43) வருஷமாக (இப்பிரச்சாரம்கத்துகிறோம்பேசுகிறதை ஏற்றுக் கொள்ளத்தான் பக்குமடையச் செய்யத்தான் ஆச்சுதே தவிற நம்புகிற அளவுக்கோ நம்பி நடந்துகிற அளவுக்கோ மக்களைப் பக்குவப்படுத்த நம்மலாலே முடியலேஇந்தத் துறையிலே நாம ஒருவர்தான் பாடுபடுகிறோம்நம்ம ஒரு (திராவிடர்கழகம்தான் பாடுபடுதுநமக்கு விரோதமா 100 க்கணக்கான கழகம் இருக்குதுநம்மளவனே எதிரியாக ஏராளமாய் இருக்கிறான்ஒவ்வொரு பாப்பானும் ஒரு கழகமாஒரு பத்திரிகை மாதிரியாய்ஒவ்வொருத்தனும் பிரச்சாரம் பண்றான்நாங்கள் எத்தனை பேர் பண்ணுவோம்தவிரவும் இதை வைச்சி பிழைக்கிறவங்க அல்லஅவுங்க அவுங்களுக்கு ஒரு வேலைஅவுங்க அவுங்க பிழைக்கிறதுக்கு ஒரு வழிஅதைவிட்டுட்டு இதை ஒரு உற்சாகத்தின் மேலேஒரு இன உணர்ச்சி மேலேஏதோ கொஞ்சம் பாடுபடறாங்க.

நம்மை நம்பறதுக்கு ஆளில்லேகேட்கிறதுக்கு ஆளில்லையேவந்திருக்கிறாங்கஇதோ பேசப் போறாங்கன்னா என்னா அவன் சாமி இல்லேம்பான்பாப்பானை திட்டுவான்இதை போயி ஏண்டா கேட்கிறேஅப்படீன்னு தானே சொல்லிகிட்டு இருந்தான்சிகப்பு துண்டிலே, 1000 பேர் 2000 பேர் இருப்பாங்கபேச ஆரம்பிச்ச உடனேஏதாவது சாமீன்னு பாப்பான்னு சொன்னா கொய்யின்னு எல்லாம் எழுந்திரிச்சிடுவான்போயிடுவான் கூட்டத்தைக் கலைக்கணும்கிறதுக்குப் பாடுபடுவான்இது முட்டாள் தனமான காரியங்களுக்குகாட்டுமிராண்டித் தனமான காரியங்களுக்குநம்ம நாட்டிலே இதற்கு இவ்வளவு ஆதரவு இருக்குதுநாளைக்கு எழுதுகிறானேபத்து லட்சம் வரப் போறாங்க. 5 லட்சம் பேர் வரப் போறாங்கன்னு (மாமாங்கம் பற்றிபத்திரிகையிலே எழுதுகிறான்.

ஒவ்வொரு காரியத்திலேயே மக்களிடையிலே அப்படி இருக்குது.ஆகவே தான் எங்களுடைய பிரச்சாரத்தின் முக்கியத்துவம் மனித சமுதாயத்தை முன்னேற்றமடையச்செய்யணும்தமிழன் மற்ற நாட்டிலே எப்படி இருந்தாலும்தமிழன்தமிழ்நாட்டிலே தமிழன் ரொம்ப கேடு கெட்டவனாய்ப்போயிட்டான்கொஞ்சம் கூடப் பகுத்தறிவை பயன்படுத்துறது இல்லேபாப்பானுக்குப் பயந்துகிட்டு இவனுக்கு நல்ல பிள்ளையாய் ஆகிறதுக்கு உத்தியோகஸ்தர்கள்மந்திரிகள் பதவிக்கு வருகிறவர்கள் எல்லாம் (பாப்பானுக்கு ஆதரவாய்நடந்துக்கிறாங்கஆனதினாலே நாம ஒரு சத்தம் தான்எங்கள் ஒரு கழகம்தான்ஏதோ பலமாய் நாங்கள் சொல்லறோம்சொல்றதை அப்படியே கண்ணை மூடிகிட்டு நீங்கள் நம்புங்கோன்னு நாங்கள் கேட்கிறதில்லேஏதோ ஆராய்ந்து பாருங்கோஉங்கள் அறிவைக் கொண்டு நல்லா சிந்தியுங்கசரி என்று பட்டா நம்புங்கஇல்லாட்டா விட்டுடுங்கோன்னு தான் நாங்கள் சொல்றோமே தவிரஎங்கள் பேச்சை நம்பித்தான் ஆகணும்னு நாங்கள் சொல்லலேஅவுங்க அவுங்களுக்கு உணர்ச்சியாய் பலமாய் கடவுளை நம்புகிறதனாலே நாங்கள் கொஞ்சம் பலமான கடவுள் மறுப்புச் சொற்களினாலே நாங்கள் சொல்றோம்அவ்வளவு தான்.

ஆகவே தோழர்களேகடவுள் இல்லேன்னு நாங்கள் சொல்றதுக்கு கடவுள் மறுப்பு சொல்றதுக்கு கவலைப்பட வேணாம்கடவுள் இருக்குதாநாம சொல்றதெல்லாம் சரியாதப்பாஇல்லைநாம இது வரையிலும் பண்ணிகிட்டு இருக்கிறதெல்லாம் நியாயமாஎன்று நீங்கள் ஒவ்வொருத்தரும் சிந்தியுங்கள்.
அடுத்தாப்போலேஇன்றைய அரசியல் நிலைமையைப் பற்றி சில வார்த்தைகள்சொல்லணும்முக்கியமாகச் சொல்ல வேண்டியதுஎல்லாரும் சமாதானம் சொன்னாங்கநானும் சொல்லறேன்என்னாஇப்போன்னு சொன்னால்காங்கிரஸ்காரர் பதவியிலே இருக்கிற வரையிலும்காங்கிரசை ஆதரிச்சேன்ஜனங்கள் எங்களை கேட்கிறாங்கசிலபேராவது இல்லே சில பேரு நமக்கு ஆகாதவங்க நம்மைப் பற்றி பிரசாரம் பண்றாங்கஎன்னடா அவன் பேச்சைக் கேட்கிறீங்கஎவன் அதிகாரத்திலே இருக்கிறானோ அவன் பின்னாலே போறவன்காங்கிரஸ்காரன் இருக்கிறவரைக்கும் அவுங்களை ஆதரிச்சான்பதவி போச்சின்னா உடனே எவன் பதவிக்கு வந்தானோ அவன் காலடியிலே புகுந்துகிட்டான்அப்படீன்னு சொல்றாங்கநேரிலே நம்மகிட்டே சொல்லாட்டாலும்சரியா விசாரிக்காத ஆளுகஆமாம் ஆமாம்ன்னு நினைச்சிடுகிறாங்க.

அதற்கு நமது நண்பர்கள் இங்கே நல்ல விளக்கம் சொன்னாங்கநான் சொல்லறேன் (1967இல்பிப்ரவரி மாதம் 22 ம் தேதி வரைக்கும்காங்கிரஸ் வெற்றி பெற வேணும்கிறதுக்கு நாங்கள் பாடுபட்டோம்உங்க எல்லாருக்கும் தெரியும்இங்கெல்லாம் வந்து பல தடவை பேசியிருக்கிறோம்பிப்ரவரி 22ம் தேதி தான் எலெக்ஷன் கடைசிஅன்னைய வரைக்கும் பேசி இருக்கிறோம்எல்லா ஃஊரிலேயும் காங்கிரஸ் பேராலே நிறுத்தின பார்ப்பனர்களைக் கூட ஆதரிச்சோம்பக்தவச்சலம் தொகுதிக்கு நாம போயி இரண்டு கூட்டம் பேசியிருக்கிறோம்மற்றும் இங்கே நம்முடைய திருவையாறு தொகுதி நண்பர் பழனி அவர்களுக்கு கூட பல தடவை போனோம்மற்றும் பல தொகுதிக்கும் போயி பேசினோம்கொஞ்சம் கூட நாங்கள் காங்கிரஸ்காரரை தாக்கவே இல்லைபொதுக்காரியத்திலே அவர்கள் பண்ணின சில தவறுக்காக மற்ற நேரத்திலே நாங்கள்தாக்கி இருந்தாலும்எலெக்ஷன் போது மனசாரப் பாடுபட்டோம். (சிரிப்புகைதட்டல்)சில ஆளுக பேரிலே எங்களுக்கு வருத்தம் இருந்ததுஇருந்தாலும் காங்கிரசு வந்தாதானே வாழலாம் இல்லாட்டா பாப்பான் தானே வந்திடுவான்என்கிற பயத்திலே கண்ணை மூடிகிட்டு ஆதரிச்சோம் ஆதரிக்கிறதோடு மாத்திரம் அல்லாமல்முன்னேற்றக் கழகக்காரரை எவ்வளவு வைய்ய வேணுமோ அவ்வளவு வைதோம். (சிரிப்புஎவ்வளவு கண்டிக்க வேணுமோ அவ்வளவு தூரமெல்லாம் சொன்னோம்.

மக்கள் அதை வாங்கின முறையைப் பார்த்து  நம்ம பேச்சை ஜனங்கள் ஏத்துகிட்டாங்கஅப்படீன்னு சந்தோஷப்பட்டுகிட்டு இருந்தோம் ஒரு சின்னதவறைக்கூட நான் சொல்றேன்ராஜபாளையத்திலே நான் பேசுகிற போது எனக்கு ஒரு தந்தி வந்ததுகாமராஜரு 20,000 ஓட்டிலே ஜெயிச்சுட்டாருன்னு (சிரிப்புஅதை நான் அந்த கூட்டத்திலே சொன்னேன்எல்லாரும் கை தட்டினாங்க (சிரிப்புதிருவண்ணா மலைக்கு போனேன்அங்கே காமராசர் 15,000 ஓட்டிலே ஜெயிச்சாருன்னு தகவல் வந்ததுஎண்ணிப் பார்க்கலே ஓட்டைகொடுத்தான் நம்ம ஆளுக இச் செய்திகளை (பலத்த சிரிப்புகைதட்டல்அவ்வளவு நம்பிக்கையாய் இருந்ததுபொய் சொல்லலே அவனும்அப்புறம் நான் சொன்னேன், 20 ஆயிரம் ஓட்டல்லய்யா 15 ஆயிரம் ஓட்டிலே அவரு ஜெயிச்சி வந்திருக்கிறாருன்னுநம்ம புலவர் கோஇமயவரம்பன் கூட இருந்தார்அவரு என்னிடம் இந்த மாதிரி எல்லாம் சொல்லாதேஅது எலெக்ஷன் முறைக்கு விரோதம் எடுத்ததும் அந்த முடிவு சரியா தெரியறவரைக்கும் ஏதும் சொல்ல மாட்டாங்கநாமலும் முடிவு சொல்லக்கூடாதுஅதுவும் நீங்கள் சொல்லக் கூடாதுன்னாருஎன்னடா இரண்டு தந்தி வந்திருக்குது அப்ப நீங்க நம்பாதீங்கன்னு சொன்னேன்கடைசியிலே சங்கதி (முடிவுஎன்னா வந்திட்டுதுன்னா இத்தனாயிரம் ஓட்டிலே (காமராசர்தோத்துப் போய்ட்டாருன்னு. (கைதட்டல்நான் வருத்தம்தான்பட்டேன்அவர் தோற்றதுக்குஏன் முன்னேற்றக்கழகக்காரர் வரக் கூடாதுஇவுங்க தான் (காங்கிரஸ்பதவியில் தொடரவேண்டும்னு ஏன் நான் பாடுபட்டேன்னா?

முன்னேற்றக் கழகக்காரரு பாப்பானுடைய கையாளாய் இருந்துகிட்டு வேலை செய்தாங்கஅவுக ஜெயிச்சால் பாப்பான்தான் வருவான்பாப்பான் தான் (ராஜாஜிதான்ஆளுவான்என்கிறதாக அவுக (தி.மு.காட்டிகிட்டாங்க தேர்தலின் போதுபாப்பானுங்களும் நாங்கள் சொன்னபடிதான் அவுக (தி.மு.கேட்பாங்க ஆனதினாலே அவுங்களுக்கு ஓட்டு பண்ணுங்கன்னு அவுங்களும் பிரச்சாரம் பண்ணினாங்கஅண்ணாதுரையே பாப்பான்கிட்டே ஓட்டுக் கேட்கிற போதுநான் எனக்காகவா நிற்கிறேன்ராஜாஜிக்காக நிற்கிறேன்அவர் சொன்னபடி தான் கேட்கப்போறேன்அவருக்கு ஓட்டு பண்ணுவதே எனக்கு ஓட்டுப் பண்ணினாப்பிலே அப்படீன்ணிட்டாங்கஅப்படி சொல்லிதான் ஓட்டு கேட்டாருஇராஜகோபாலாச்சாரி யாரும் பிராமணாளுக்கெல்லாம் அறிக்கை ஒண்ணுவிட்டார் பாப்பாருக்குஎன்னாஅதுஅவுகளை (தி.மு.கவைநம்புங்கஅவுக ராமசாமி நாய்க்கரிட்டே இருந்துவந்தாக அவுகமீது சந்தேகப்படாதிங்கவர்ரபோதே (அந்த வாசனையைஎல்லாம் கழுவி வைச்சிகிட்டு (பலத்த வெடிச்சிரிப்புவந்திட்டாங்க. (பலத்தைகைதட்டல்கிளீன்னா வந்திருக்கிறாங்க. (சிரிப்புஆனதினாலே நம்புங்க.

உங்கள் பூணூலை பிடிச்சிகிட்டுஓட்டுப் போடுங்க. (சிரிப்புஇவுக இப்படி எல்லாம் சொன்னபோது இவுக பதவிக்கு வந்தால் என்ன பண்ணுவாங்கன்னு நான் இவர்களைப் பற்றி என்னாமா நினைக்கிறது? (சிரிப்பு) (கைதட்டல்காங்கிரசிலே பூராவும் ஒப்புக்கொள்ளக் கூடிய காரியமாய் இல்லாதது செய்ததுஆனாலும் கொஞ்சம் செய்திருக்கிறாங்ககாமராஜ் காலத்திலே (13-04-1954 முதல் 2-10-1963 வரைஅதை நாம ரொம்ப பாராட்டியிருக்கிறோம்இவுக (பாப்பாரும் தி.மு.கவும் சேர்ந்து பதவிக்குவந்தால் நம்மை ஒழிச்சே போடுவாங்கநமக்கு விரோதமாகவே நடந்துக்குவாங்கஅண்ணாதுரை தலைமையில் தான் இராசகோபாலாச்சாரி ஆட்சிக்கு பதவிக்கு வந்தாலும் வந்திடுவார்ஆனதினாலே இவுக வரக்கூடாதுன்னு நாம பாடு பட்டோம்எலக்ஷனில்லே நாம எதிர்ப்பார்த்ததுக்கு நேர் விரோதமாய் போச்சிஏன் இப்படி போச்சீன்னு எனக்கும் தெரியலே? (சிரிப்புகாங்கிரஸ் காரனுக்கும் தெரியலேஜெயிச்சவங்களுக்கும் (தி.மு.கவுக்கும்தெரியலியே எப்படி வந்தோம்னு (பலத்த சிரிப்பு கைதட்டல்எப்படி ஜெயிச்சிங்கன்னு அவரை (அண்ணாவை)கேட்டால் சிரிக்கிறாரு (சிரிப்புநீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படிதான் நானும் நினைக்கிறேன்னாரு. (சிரிப்பு கைதட்டல்என்னமோ ஒரு காரணத்தினாலே (காங்கிரஸ் ஆட்சிபோயிட்டுதுஆனாலும் நானும் என்னமோ கொஞ்சம் என் புத்தியைச் சரி பண்ணிகிட்டுதான் நான் கேட்டேன்அப்போ எலக்ஷன் ஆயிப்போச்சிநான் தோத்துப் போயிட்டேன் பாப்பான் ஜெயிச்சிட்டான் அப்படிதான் நான்சொன்னேன்காங்கிரஸ் தோத்துப் போச்சிநான் தோத்துப்போயிட்டேன் பாப்பான் ஜெயிச்சிட்டான்அப்படித்தான் நான் சொன்னேன்காங்கிரஸ் தோத்துபோச்சிமுன்னேற்றக்கழகக்காரரு ஜெயிச்சிட்டாங்கனு நான் சொல்லவே இல்லை.

நான் (விடுதலை'யில்எழுதிய முதல் தலையங்கத்திலே பார்த்தால் தெரியும்நான் தோத்துப் போயிட்டேன் பாப்பான் ஜெயிச்சுட்டான்நமக்கு எதிர்காலம் கஷ்டகாலம்தான்ஆனாலும் பயப்படாதீங்கஇதற்கு முன்னே இரண்டு தடவை (பாப்பான் ராஜாஜிஜெயிச்சான் ஒழிஞ்சான்ஒரு தடவையாவது கடைசிவரைக்கும் (பதவியில்இருக்கலேஇப்பவும் அப்படித்தான் ஆகும்ஆனால் நம்மனாலே ஆச்சின்னு சொல்லாதேஅவனாலேயே ஆச்சின்னு சொல்லிக்கலாம்தயவு செய்து அவுகளுக்கு ஒண்ணும் விரோதமா போகாதீங்கஅப்படீன்ன முதல் நாள் அந்த ரிசல்ட் (சுநளரடவவந்த உடனே எழுதின தலையங்கத்திலே நான் அப்படிதான் எழுதினேன்.

எப்படியோ ஒரு 4 நாள் பொறுத்து அண்ணாதுரையே திருச்சிக்கு வந்தாருகூட கலைஞர் கருணாநிதி வந்தார்நாவலர் நெடுஞ்செழியன் வந்தாருஎல்லாருமே என் வீட்டுக்கு (பெரியார் மாளிகைக்குவந்தாங்கஎனக்கு வெட்கமாயிருந்தது அவுங்களை பார்த்தபோது (சிரிப்பு) (கைதட்டல்நான் ரொம்ப அவுங்களை கண்டிச்சிப் பேசி இருக்கிறேன்அவுகளை எதிர்த்து குறை சொல்லி பேசியிருக்கிறேன்அவுக ஜெயிச்சிட்டாங்கஎன்னான்னு நினைக்கும் எனக்குஅவுக நம்மைக் கேலி பண்ணத்தான் வந்திருக்கிறாங்கன்னு (சிரிப்புமனசு எனக்குத்தானா தோணிச்சுஉங்களுக்கும் அப்படித்தான் தோணும்அப்புறம் அண்ணா வந்தாருபேச ஆரம்பிச்சாங்கசௌக்கியமா இருக்கிறீயா அப்படி இப்படின்னுவார்த்தை இல்லாமல் ஏதோ பேச வேணுமேன்னுஅதுக்கும் பதில் சொல்ல எனக்கு வாய் வரமாட்டேன்னுடுச்சிநான் பாட்டுக்கு பேசாமலே இருந்திட்டேன்அப்ப ஏதோ ஒரு வார்த்தை நான்கேட்டேன் கவர்னர் நல்லவரான்னுநல்லவர்தான்நாங்க அங்கே போயிட்டு தான் நாங்கள் இங்கே வர்றோம்னாங்கஅப்படிதான் சொன்னாங்க நாங்க அங்கே போயிட்டுதான் இங்கே வர்றோம்ன்னு நான் ரொம்ப சந்தோஷம் தான் என்றேன்அப்புறம் ஒண்ணும் பேசலேஎல்லாரும் கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டுநாங்கள் போயிட்டு வர்றோம்எங்களுக்கு வழி சொல்லுங்கநாங்கள் எப்படி நடந்துக்க வேணும்கிறதுக்கு நீங்க சொல்லுங்கஅப்படீன்னு அண்ணா சொன்னாரு.

அதையும் நான் அதை உண்மைக்கு அல்ல ஏதோ மரியாதைக்கு சொல்றாங்கன்னுதொந்தரவுஇல்லாது இருக்கட்டும்னு சொன்னதாக நினைச்சேன்நானும் என்னைத் தான் உங்களுக்கு தெரியுமே அதனாலே நான் மேற்கொண்டு ஏதும் சொல்லலேஅதையே தான் சொன்னேன்என்னைத்தான் உங்களுக்கு தெரியுமேன்னேன்சரின்னாங்க அவுங்க சந்தோஷமா புறப்பட்டு போனாங்கஅவுக என்னிடம் வந்ததும் என் மனசுஏதோமாறித்தான்அவுக இங்கு வந்திருக்கிறாங்க மனசிலே எண்ணம் மாறியிருக்குதுஆனதினாலேநம்ம ஆளுகளுக்குத் தெளிவு பண்ணிப் போடலாம்இவுக ஏதும் அவர்களோடு ரகளைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிடலாம்அப்படீன்னுட்டு என்னை வந்து பார்த்தாங்கஎனக்கு என்னமோ அவர்கள் பேசினது கவர்ச்சியாய் போச்சு அவர்கள் சொன்னதுஆனதினாலேஒருத்தரும் எதிர்ப்பு வேலை வைச்சிக்காதீங்கநம்மாளான அளவுக்கு அவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம்இல்லே நாம சும்மா இருக்கலாம்அப்படீன்னுட்டு நான் எழுதினேன் விடுதலையில்.

நம்ம ஆளுக எல்லாம் கோவிச்சுகிட்டு கடிதாசி எழுதினாங்கஎன்னா நீ பிளேட்டைத் திருப்பிப் போட்டிட்டே. (சிரிப்பு கைதட்டல்நீ அப்படி பேசினேஇப்படி பேசினேஇப்ப நீ திடீரென இப்படி சொல்றியேஎன்னா இதிலே நியாயம்சிலபேருஎன்னைக்கண்டிச்சும் பேசினாங்ககடிதாசி வருகிற வேகத்தை பார்த்தேன்கண்டிக்கிறதை எல்லாம் பார்த்தேன்ஆமாம் நான் அப்படி தான் சொல்றேன்இஷ்டப்பட்டால் (கழகத்தில்இரு இல்லாட்டா போயிடுன்னேன்? (கைதட்டல்அப்படீன்னு எழுதினேன் நான்ஏன்னாஎனக்கு ஆதரிக்க வேணும்கிற எண்ணம் எனக்கு வந்திட்டுது காரணம் நம்ம நண்பர்கள் இங்கு சொன்னது மாதிரி நாங்கள் இன்னமும் அந்த பழைய சுயமரியாதைக் கொள்கைக் காரர்கள் தான் அதிலே பழகினவங்கதான்அதிலே நாங்கள் பக்குவமானவங்கள்தான்அப்படீங்கிறதை எல்லாம் அவுக காட்டி கிட்டாங்கதெளிவாக காட்டிட்டாங்க.இரண்டாவது நமக்கு வந்த வாய்ப்பு என்னான்னா?

அந்த மந்திரி சபை அமைக்கிற போது ஒரு பாப்பானைக் கூட (மந்திரியாய்போடலேநண்பர் சொன்னாப்பிலே மந்திரியாகப் பதவி ஏற்றபோது கடவுளை வேண்டி பிரமாணம் பண்ணவுமில்லேஅவுங்க இவையெல்லாம் பாப்பாருடைய தயவை அலட்சியம் பண்ணி பண்ணினாங்கன்னு தான் அர்த்தமே தவிர வேறெ இல்லைஎனக்கு காதுக்கு வந்ததுராஜகோபாலாச்சாரி மந்திரியாக ஆகப்பாடுபட்டாருஒருபாப்பானுக்காவது (மந்திரிகொடுன்னு கேட்டுகிட்டாருஅண்ணா அதுக்கு மாட்டேன்னுட்டார்அப்படீன்னு வந்து உண்மையான ஆளுக வந்து சொன்னாங்க.அங்கே இருக்கிறவங்கஒரு மந்திரி சபையை அமைச்சதிலேயும் போதுமான மெஜாரிட்டி தங்களுக்கு இருக்குது என்பதையும் நல்லா காட்டிகிட்டாங்க.அண்ணா முதலமைச்சராக (06-03-1967இல் பதவி ஏற்றார்அதுக்குள்ளே இரண்டு பேரும் (ராஜாஜியும்அண்ணாவும்சண்டையும் போட்டுகிட்டாங்க.

சட்டசபைக்கு தலைவரை நியமிப்பதிலே அண்ணா சி..ஆதித்தனாரை நிறுத்தினாருஅதையாவது தங்களுக்கு கொடுன்னு கேட்டாரு ராஜாஜிஅதை எப்படி நான் வெளி ஆளுக்கு எப்படி பண்ணமுடியும்?எல்லாம் நமக்குள்ளே இருக்கிறபோது அப்படீன்னு சொல்லிப் போட்டு (அண்ணாமறுத்திட்டாருமறுத்தப் பின் அவரு (ராஜாஜி)ஒரு ஆளை போட்டு போட்டி பண்ணினாங்கஅந்த போட்டியிலே அண்ணா ஜெயிச்சிட்டாருநிறையா ஓட்டு இவருக்கு வந்திட்டுதுஇவ்வளவெல்லாம் ஆனதுக்கு அப்புறம் அவன் (பாப்பான்ரகளை கொடுக்கப் போறான்னு தெரிஞ்சிப் போச்சி பாப்பான் தொல்லை கொடுப்பான்னுநாமும் தொல்லை கொடுத்தா (தி.மு. ஆட்சிஎன்னாவாகிறதுகாங்கிரசும் சக்தியற்றுப் போச்சி (சிரிப்புவிளையாட்டா கூடஇல்லைஅடியோடு போயிடுச்சி. (கைதட்டல் சிரிப்புஎன்னாச்சு? 250 பேருக்கு 50 பேருதானேசட்டசபைக்கு காங்கிரசு பேரிலே வந்தாங்க. (சிரிப்பு) 200 பேராக வரலேபாக்கி எப்ப வரப்போவுதோஎப்போ காங்கிரஸ் ஆள போவுதோ? (சிரிப்புஆனதினாலேஒரு ஆட்சி நடக்க வேணும்இதையும் வேண்டாம்னுட்டா அப்புறம் ஆட்சி எப்படி நடக்கும்என்பதை எல்லாம் நான் யோசனை பண்ணி (அண்ணாவின் தி.மு.ஆட்சியை ஆதரிக்க வேண்டியதுதான் என்கிற முடிவுக்கே வந்திட்டோம்அவுகளும் ஆட்சியில் காரியத்தை எல்லாம் காட்டிகிட்டுவர்றாங்கஒண்ணும் விரோதமா நமக்குன்னாஎனக்கா எங்க கட்சிக்காரருக்காதமிழ் சமுதாயத்துக்குன்னுஅவரு சொன்ன மாதிரி பதவிக்கு வந்த உடனே அவருக்குத்தான் நாங்க ஒப்பிச்சிக் கிட்டோம்ன்னு சொல்லிட்டாங்கஎந்த அர்த்தத்திலே சொன்னாலும் அதிலே இருந்து மாறமுடியாத மாதிரியான வார்த்தைகள் தானே அதுவெல்லாம்.

அடுத்தாப்பிலேசுயமரியாதைத் திருமணத்தைச் செல்லும் என சட்டமாக் கிட்டாங்கஎல்லாத்தையும் விட சொல்லவேண்டுமானா இந்தி எதிர்ப்பிலே தற்கொலை பண்ணுகிற மாதிரி தைரியமாய் அடிச்சாங்க. (பலத்த கைதட்டல்இருமொழித் திட்டம் தமிழ்ஆங்கிலம் தான் ஆட்சி மொழிகள் என்று எவனாலேயும் இது முடியாதே.இது சட்டத்துக்கு விரோதம்வடநாட்டானுக்கு விரோதம்டெல்லி அரசு ஆட்சிக்காரங்களுக்கு விரோதம்துணிஞ்சி தானே இந்தி வேண்டிய தில்லைன்னு சொல்லிவிட்டாங்க.

இப்ப நாமும் சேர்ந்து இந்த ஆட்சிக்கு எதிராக ரகளை பண்றதுன்னு ஆரம்பிச்சோமானா டெல்லிக்கு பணிகிறாங்கஅப்புறம் யாரு(ஆட்சிக்குவருவாங்கடெல்லிக்காரரா பார்த்து இவர்களை விரட்டினாங்கன்னா பரவாயில்லைநமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.அடுத்தாப்பிலே ஆட்சிக்கு வர்நபோது இன்னும் பலமாக வருவாங்க.(சிரிப்புநாமலா அவுகளை விரட்டிடறோம்னா என்னா ஆகும்நாமலே அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறதுன்னு ஆரம்பிச்சோமானா அவுகளுக்கு உற்சாகம் போயிடுதுஆனதினாலேஇருக்கிற நிலைமையிலேஅது கெட்ட காரியம் அல்லஆவுகளை ஆதரிக்கிறது.அவுகபேரிலேகெட்டநோக்குடன் சொல்றாப்பிலே ஒண்ணுமில்லே.

நம்மகிட்டே இருக்கிற அன்பிலே நாமலே வெட்கப்படுகிற மாதிரியிலே காட்டிகிறாங்கநம்மிடம் நிலைமை மனுஷத்தன்மை என்ன ஆகும்ஆதரிக்கிறதை விட்டு எப்படி தப்பா நினைக்க முடியும்நான் சொன்னேன்இதற்கு முன்னே அண்ணா அவர்கள் ஜெயிச்ச போது அஞ்சு வருஷம் இவுக இருக்கவேணும்னு நான் ஆசைப்பட்டேன்இப்ப அவர்கள் நடந்துகிறதைப் பார்த்தால் இவுகளே கடைசி வரைக்கும் இருந்தால் தேவலேன்னு நினைக்கிறேன். (சிரிப்பு கைதட்டல்அப்படீங்கிற அளவுக்கு நான் சொன்னேன்அதிலே இப்ப ஒரு உற்சாகம் வரணும்நமக்கு வேண்டிய காரியம் எல்லாம் செய்ய அவுக துணியனும்காங்கிரஸ்காரன் ஒரு நாளும் (நமக்கானதைச்செய்யமாட்டான்ஏன்னாபேருதான் காங்கிரசே தவிரஉள்ளே இருக்கிறது எல்லாம்காமராசர் ஒருத்தரைத் தவிரமற்றதிலே எல்லாத்திலேயும் பாப்பான் தான் இருக்கிறான்அவனே இருக்கிறான்னு சொல்லாட்டாலும் அவனை விரோதித்துகிறதுக்கான உணர்ச்சி காங்கிரசிலே ஒரு 100 க்கு 5 பேர் கூட கிடையாதுஇவுக வந்தாலும் காங்கிரசைத்தானே ஆதரிக்க ஆசைப்படறாங்கஇவுக நம்ம காரியத்தைச் செய்ய ஆரம்பிச்ச உடனேஇவுக இந்த மாதிரி நினைச்ச உடனேஆனதினாலே நாம நமக்கு இந்த (தி.மு.ஆட்சி விரோதமான ஆட்சியல்லஅது மாத்திரமல்லநம்ம உணர்ச்சிக்கு ஏற்ற மாதிரிநம்முடைய மக்களினுடைய நலனுக்கு ஏற்ற மாதிரிஅவுகளாலே கூடுமானவரையில் செய்யறாங்ககாங்கிரஸ்காரரு செய்ததைவிட இவர்கள் கொஞ்சம் தாராளமாய்த்தான் செய்யறாங்க?

காங்கிரஸ்காரரு செய்த காரியம் என்னான்னாகாமராசர் செய்த அந்த சமதர்மம் என்கிற பேரை வைச்சி எல்லா மக்களையும் படிக்க வைச்சாருவேறு எவனாலேயும் முடியாது. 100க்கு 50 பேரைப் படிக்க வைச்சிட்டாருபடிக்கிற பிள்ளைகளுக்கு காலேஜ் வகுப்பு தவிர மற்றதுக்கெல்லாம் (படிக்கசம்பளமில்லேன்னு ஆக்கிட்டாருநாட்டினுடைய நலனைப் பற்றி ஒவ்வொரு துறையிலேயும் நல்ல அளவுக்கு முன்னேற்றம் காட்டிட்டாருஅவராலே ஒண்ணும் வஞ்சனை இல்லே.அவரை (காமராசரைஎந்தக் காரணத்தைக் கொண்டும் குற்றம் சொல்லஇடமில்லே.

ஆனால்இந்த தேர்தலில் தோற்றுப் போனதன் காரணமாக அவருடைய வலுவும் கொஞ்சம் குறைஞ்சிப்போச்சிமறுபடியும் இன்னமும் வலுவை சேகரிக்கவேணும்தோத்துப்போன காங்கிரஸ்காரரு எல்லாம்நம்மளை விரோதியாக நினைச்சிக்கிறான்நாமஒண்ணும் காங்கிரசுக்கு விரோதியல்ல.உண்மையிலேயேகாங்கிரசின் ஸ்தாபனத்திற்கும் நான் விரோதியில்லைஏன்னாஅவர்களுக்கு இந்தியா பூராவும் ஸ்தாபனம் இருக்குது. 200 பேரும் ஜெயிச்சாலும்அடுத்தத் தேர்தலிலே 250 தோ 300 பேரோஅத்தனை பேரும் ஜெயிச்சாலும்தமிழ் நாட்டிலேதான் ஆட்சி பண்ண முடியுமே தவிரமற்ற நாட்டிலேதான் ஆட்சி பண்ணமுடியுமாமுன்னேற்றக் கழகக்காரருஆனதினாலே இந்தியா பூராவுக்கும் உள்ள ஒரு ஸ்தாபனமும்மேல் இடத்திலே அதிகாரம் எல்லாம் இருக்கிற ஸ்தாபனமும்வெற்றி பெற வேணும்காமராசரே தலைவராக இருக்கணும்இருந்தால் சில காரியம் செய்யமுடியும் இன்னமும் பொருளாதாரத்துறையிலேஅது இவுகளாலே செய்ய முடியாதுஎன்னாஇந்த மாகாணத்தைப் பொறுத்த வரையில் தான் இவுகளாலே செய்ய முடியும்? (தி.மு. வினால்ஆனதினாலே அவுக (காமராசர்இருந்தால் தான் தேவலைன்னு தான் சொல்லணுமே தவிர அவுகளை ஒழிக்க வேணும்னு நாம சொல்லவே இல்லைஅதிலே ஒருத்தர் இருக்கிறாங்க ஒழிக்கப்பட வேண்டியவங்கமிஞ்சி வந்தாலும் பார்த்துக்கிறோம். (சிரிப்பு கைதட்டல்எப்ப அவுகளுக்கு வாய்ப்பு இல்லையோபாப்பான்கிட்டே விட்டுடறதோ,அதனாலே இருக்கிறவங்களை (தி.மு. ஆட்சியைஆதரிக்கணும்அவுகளை இன்னும் வலுப்படுத்த வேணும்சரியாகவோதப்பாகவோகாங்கிரஸ் காரருக்கு முன்யோசனை இல்லை.

காரணம் என்னான்னாஅவுகளாலே பதவிஇல்லாமல் இருக்கிறது நிர்வாணமாகஇருக்கிறமாதிரி நினைக் கிறாங்க. (பலத்தசிரிப்பு) (கைதட்டல்அவ்வளவு கஷ்டப் படறாங்கஅது என்னமோ அவுங்க (காங்கிரஸ் ஆட்சியில்) 15 வருஷமிருந்தும்அந்த பொது அறிவுவரலேபோச்சி (தேர்தல்னாஆம்பளை மாதிரி தைரியமாயிருக்கணும். (சிரிப்புசரிவாநடத்துஅப்படின்னுசொல்லணும்.

  ஏதோசாக்குப்போக்கைச் சொல்லிகிட்டு அவுங்கமேலே கீழ்த்தரமா அசிங்கமான குறைபாடுகளைச் சொல்லிகிட்டு மக்களை எல்லாம் படிக்காமல் அசிங்கப்படுகிற மாதிரியாய்தப்பட்டை எடுத்துகிட்டு வர்றாங்கஇப்ப காங்கிரஸ்காரருஅது எனக்குப் பிடிக்கலேஅதைப்பற்றி நான் சொன்னா இவன் புத்திமாறிப்போச்சி என்கிறாங்க (சிரிப்புஎன்னத்துக்காக வையணும்என்னத்துக்காக இதெல்லாம் சொல்லணும்அஞ்சி வருஷமிருக்குதுஅப்படி நீவையறதா இருந்தால் நாலாவது வருஷத்திலே ஆரம்பிச்சிக்குவேஇப்பவே நீ ஆரம்பிச்சா அது என்ன பைத்தியக்காரத்தனம்நிறைய ஜனங்கள் அவுங்களுக்கு (தி.மு.கவுக்குஓட்டு பண்ணியிருக்கிறாங்கநல்லா ஜவ்வுன்னு அவுகளை ஆதரிக்கிறாங்க.


எனக்கு தோன்றினவரைக்கும் ஆதரிச்சாங்கன்னா காங்கிரஸ் மீது வெறுப்பு கொண்டு ஆதரிச்சானே தவிரஇவுக மேலே ஓர் ஆசை வந்து (தி.மு. வைஆதரிச்சாங்கன்னு சொல்ல முடியாதுஎனக்கு அப்படித்தோணுதுஅப்படி இருக்கிறபோது மறுபடியும் காங்கிரஸ்காரன் மேலும் வெறுப்பு ஏற்படுகிற மாதிரியாக நடந்துகிட்டாஅடுத்த எலக்ஷன்லே கூட நம்ப முடியாதே காங்கிரசை. (சிரிப்புஇப்ப என்னா இந்த ஆட்சியைக் கமுத்துப் போடலாம்னு நினைக்கிறாங்ககமுக்கவே முடியாதுஎன்ன பண்ணலாம்னாபதவியிலிருந்து (இந்த ஆட்சியைநீக்கலாம்எழுதியிருந்தேனே நான் மேலேஇருக்கிறஅதிகாரம் அவுகளுக்கு இந்த மந்திரிசபையை நான் கலைச்சி போட்டேன்அவ்வளவுதான் சொல்லுவாங்ககலைச்சிப் போட்டு காங்கிரஸ்காரங்க பதவிக்கு வரச் செய்ய வாய்ப்பே இல்லைஅஞ்சி வருஷம் பொறுத்து இருந்தாதான்இப்பவேணும்னாஅதிகாரமில்லாமல் அவுகளைப் கலைச்சி போட்டான்களாம்களைச்சிப் போட்டு ராஷ்டிரபதி டெல்லியில் இருக்கிறாரே அவருடைய பார்வையிலே ஆட்சியை நடத்தலாம் இங்கேநடந்தாலும் அது எத்தனை நாளைக்கு நடத்தலாம்? 6 மாசத்துக்கு நடத்தலாம்.ஆறுமாசம்னா பொது எலக்ஷன் திரும்பவிட்டாகணும்.

இப்ப இவுகளை கலைச்சிப் போட்டு ஆறுமாசம் பொறுத்து பொது எலக்ஷன் நடந்தால்இப்ப வந்த காங்கிரஸ்காரன்களில் பகுதி பேரு கூட வர முடியாதே (பலத்த கைதட்டல்) (சிரிப்புஏன்னாஇப்ப ஓட்டு பண்ணினவனே நடப்பு தெரியுமேஇப்ப ஏன் நாம மாத்தி ஓட்டுப் பண்ணணும்னுநாம ஓட்டுப் பண்ணி இவனை கலைச்சிபுட்டான் பாருன்னுஓட்டு போட்டவனுக்குத் தோணுமா இல்லையா? (சிரிப்புஆனதாலே,இப்ப கலைச்சிட்டதினாலேஇவுக பயப்படவேண்டியதில்லேஇப்ப விட அதிக மெஜாரிட்டி வரும்இந்த காரியம் பொதுவாக இருக்கிற நிலைமையிலேபொது ஒழுக்கம் கெட்டுப் போச்சி.
என்னைப் பொறுத்தவரைக்கும்எனக்கு வேதனை என்னான்னாஜனங்களுடைய பொது ஒழுக்கம் கெட்டுப் போச்சிஎங்கேபார்த்தாலும் கலகம்.எங்கே பார்த்தாலும் நாசவேலைஎவனாலேயும் இதை அடக்கமுடியலேமந்திரிக்கு அடி விழுதுபோலீஸ் காரனுக்கு அடி விழுதுஅவனுக்கும் மண்டை உடைஞ்சிதுங்கிறான்இவனுக்கும் மண்டை உடைஞ்சிதுங்கிறான்அதிகாரிகளுக்கு எல்லாம் மரியாதை இல்லாமல் போச்சிஎந்த விதமான பாதுகாப்பும் இல்லேநிலைமை வருத்தப்படறாப்பிலே வந்திட்டுதுஅதுக்கு தான் நாம கஷ்டப் படலாம்.அதுக்காகத் தான் என் வண்டியை எல்லாம் உடைச்சிப் போட்டிருக்கிறான்விரிசலோடுஉடைசலோடு வண்டியைப் பார்க்கலாம்காரணம் ஏதுமில்லேநம்ம கிட்டே சண்டைக்கு வரஅந்த உற்சாகம் அப்படி ரகளை பண்றானுங்கஇவன் கூட்டம் போட்டால் இவன் கலவரம் பண்றான்எனக்கு நேற்றைக்கு வந்த சேதிப்படி காங்கிரஸ்தலைவர்(சிசுப்ரமணிய கவுண்டரு மீட்டிங் போட்டிருக்காரு.
அதைக் கலவரம் பண்ணி கலைச்சிப் போட்டான்கலைக்க வேண்டிய அவசியமில்லேஏதோ பேசி இருப்பாரு இருக்கட்டுமேகலகமாயிப் போச்சிஅதுபோல அவன் இவுக கூட்டத்திலே கலகம் செய்வான்அண்ணாதுரை(பேசும்கூட்டத்தைக் கலைச்சாலும் கலைப்பான்கலைக்கிறதுன்னு ஆரம்பிச்சதுக்கப்புறம் போதுமான பாதுகாப்பு இல்லேன்னு வந்ததுக்கு அப்புறம்எந்தக் கூட்டத்தைத் தான் எவனாலே கலைக்க முடியாதுஅந்த மாதிரி ஒரு அராஜகம்ன்னு சொல்லுவாங்களேதன்னடப்பு நாடாய்ப் போச்சிஇது நாளுக்கு நாள் நாளுக்கு நாள் வளருதே தவிர குறைஞ்ச மாதிரியா இல்லேநம்ம முடிவுதான் என்னாசாதாரணமா எந்தவிதமான சுயநலமும்அனுபவிக்காமே ஏதோ பொதுவுக்காகப் பாடுபட்டுகிட்டுவர்ர முடிவுஎன்னாஅப்பாவி ஜனங்களுடைய முடிவுதான் என்னாநாட்டிலே ஜனங்கள் நடுங்கிறாங்கன்னு தெரியுதுநான் உண்மையைச் சொல்றேன்எதை எடுத்தாலும் 10 லட்சம், 20 லட்சம் வசூலாகுதே ஜனங்ககிட்டே மனசாரவா (அப்பணத்தைக்கொடுக்கிறான்அவன் ஆரம்பிச்சாலும் பணம் நிறையாவருதுஇவன் (வசூல்னுஆரம்பிச்சாலும் பணம் நிறையா வருது. 50 லட்சம்கிறான் 35 லட்சம்கிறான். 1 (ஒருகோடீங்கிறான்யாரு கொடுக்கிறாஜனங்கள் கொடுக்கிறாங்கஏழைகளா கொடுக்கிறான்பணக்காரன் கொடுக்கிறான்பிரியத்தோடவா கொடுக்கிறான்பயந்துகிட்டு கொடுக்கிறான் (சிரிப்புநாட்டினுடைய நிலை என்னாயிப் போச்சி?

இப்படியே இந்த நிலைமை வளர்ந்துகிட்டே போச்சுதானா அப்புறம் எல்லாருக்கும் ஆபத்துதான்பெரிய மனுஷன் இல்லேசின்ன மனுஷன் இல்லேயோக்கியன் கிடையாதுஅயோக்கியன் கிடையாதுஎல்லாரும் ஒண்ணுதான்ஏழைபணக்காரன் கூடாதுன்னு சொன்னால் யோக்கியன்அயோக்கியன் எல்லாம் ஒண்ணுன்னுட்டாங்கஅப்படி ஆயிப்போச்சி இரண்டு பேரும் பயப்படுகிறாங்கஜனங்கள் ஏதாவது பேசினால்நமக்கு ஆபத்து வருமேன்னுநாம ஏதாவது கண்டித்தால்நம்ம ஆட்சிக்கு ஆபத்துவருமேன்னுஇரண்டு பேரும் பயப்படறதினாலேநாட்டிலே கோளாறு அதிகமாகுதுஏண்டா இப்படி ஆகுதுன்னா?நம்ம யோக்கியதை அவ்வளவுதான்என்னைக்கு ஜன நாயகம்ன்னு சொன்னாங்களோ நான் அன்னைக்கே சொன்னேன்.இதுகாலி பசங்கநாயகமாத்தான் ஆகப்போவுதுன்னு (கைதட்டல்காரணம்அப்ப எல்லாம் என்ன சொன்னான் காங்கிரஸ்காரன்அவன் வெள்ளைக்காரனுக்கு அனுகூலமாய்ப் பேசறான்அவன் சுதந்திரத்துக்கு எதிரியாக இருக்கிறான்தேசத்துக்கு துரோகம் பண்றான்வெள்ளைக்காரன் காலை நக்கறான்அப்படீன்னு எல்லாம் சொன்னானுங்கவெள்ளைக்காரன்கிட்டே போகவேண்டிய அவசியம் எனக்கு ஒண்ணுமில்லேவெள்ளைக்காரனாலே நான் ஒண்ணும் பதவி பெற்றுக்கலே.
இவனுங்க யோக்கியதை என்னான்னு எனக்கு அப்பவே தெரியுமே (சிரிப்புஇல்லாட்டா நான் ஏன் 30 வருஷமாய் காங்கிரசிற்கு விரோதியாய் இருக்கிறேன். 1925லே காங்கிரசுக்கு விரோதமாக வெளியே வந்தவன், 1955 வரைக்கும் நான் காங்கிரசக்கு விரோதிதானே எதற்காக நான் அதுக்கு விரோதம்இல்லேகாங்கிரசிலே எனக்கு பதவி இல்லேன்னா நான் இருந்தேன் அப்படிகாங்கிரசை விட்டு நான் போன பிறகுகாங்கிரசைக் கண்டிச்சிகிட்டு இருக்கிறபோதுராஜகோபாலாச்சாரி என் வீட்டுக்கு வந்து நீ ஒரு கையெழுத்துப் போடு நான் (காங்கிரசில்உன்னை மெம்பராக்கித்தர்றேன்நீ ஒண்ணும் செலவு பண்ணாதேநீ ஒருத்தனிட்டே போய்ஒரு ஓட்டு கேட்க வேணாம்கையெழுத்து மாத்திரம் போடு (மந்திரியாகஅப்படின்னுவந்து என்னைக் கேட்டாருஎதிலேயும் எனக்கு எதிர்ப்பு இல்லாமல் இருக்கணுமேன்னுஅது மாத்திரமில்லைகோவை அய்யா முத்து கவுண்டர் கூட வந்தாருஅவினாசிலிங்கம் செட்டியாரு வந்தாருடெல்லியிலே இருக்கிற ஈசுவான் வந்தாருநான் கையெழுத்துப் போட்டேன்னா நானும் ஒரு மெம்பராகிவிடுவேன்அப்படி எதிர்ப்பு இல்லாமல் போயிடும்ன்னுஏன்நான் போவலேஅப்புறம் தான் அடுத்துகோவை சுப்பய்யாவுக்கோயாருக்கோ அந்தஇடத்தை பூர்த்தி பண்ணினாங்கமந்திரி வேலை ஆச்சிஅவுக ஆட்சி ஜெயிச்சுது அப்புறமும் நீ ஒரு மந்திரியை ஒத்துக்கன்னாங்கராஜாஜியே எனக்கு ஆள் அனுப்பிச்சாருஒரு மந்திரி இடம் வைச்சிருக்கிறேன்நாமினேஷனிலே ஒரு இடம் இருக்குதுஅப்படீன்னுபதவியிலே சேருணும்ன்னா நான் டக்குன்னு சேர்ந்திருப்பேனே?

நான் பதவிக்கு வந்திட்டா அப்புறம் யார் முகத்திலே முழிக்கிறதுஎன்னா ஆகிறது என்வாழ்வுஉனக்கு அரசியல் தெரியாதுன்னாருஎன்னமோ என் அரசியல் இப்படித்தான்மன்னிக்கணும்ன்னு சொன்னேன் நான்மறுபடியும் கூட காங்கிரசு பதவியை விட்டு போயிட்டுது. (27-10-1939இல்எப்போஇந்தியை (சென்னை மாகாணத்திலேகொண்டு வந்து புகுத்தினார் ராஜாஜிஅப்ப நான் தான் அவரை எதிர்த்துச் சண்டைப் பிடிச்சேன். (1938இல்யாரும் இந்தியை எதிர்க்கவே இல்லைநான் ஒண்டியாளுதான் (இந்திக்கு எதிர்ப்பாஆரம்பிச்சேன்எங்க கட்சிதான்ஆரம்பிச்சது. 2000பேர்வரைக்கும் ஜெயிலுக்குப்போனோம்கடினமா தண்டிச்சார் ராஜாஜிஎன்னை அப்ப மூணு வருஷம் தண்டிச்சார். (6-12-1938இல்பெல்லா சிறையிலே வைச்சாருஅந்த கதையெல்லாம் உங்களுக்குத் தெரியும்.அப்புறம் அவுங்களாலே (ஆட்சியில் இருந்துவாழ முடியலே (பதவியைவிட்டுட்டுப் போயிட்டாங்க.(29-10-1939லேநான் ஜெயிலிலே இருக்கிறபோதே இவுகவிட்டுட்டாங்கஇவுக விட்டுட்டு போன உடனே திராவிடர் கழகத்துக்கு நான் தலைவராக இருக்கிறபோதே, 29-12-1938லே ஜஸ்டிஸ்கட்சிக்காரர் என்னைத் தலைவனா ஆக்கிப்போட்டு,
அதிலிருந்து ஒவ்வொருத்தரா நழுவிட்டாங்கஏன்னா இவுங்க (காங்கிரஸ்கலகம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கஅதிலே ஜெமிந்தாருக்கு எதிராக ரகளை பண்றதுஅவுக இதனாலே கஷ்டப்பட்டாங்கநமக்குஎன்னாத்துக்கு இந்த தொல்லைன்னு கட்சியைவிட்டுட்டு போறதுக்குசும்மா போறதுக்கு பதிலாக என் தலையிலே ஜஸ்டிஸ் கட்சித் தலைமையை போட்டுட்டுப் போனாங்கஅப்புறம் ஜஸ்டிஸ் கட்சியினரால் வாழமுடியாது போச்சிஅவர்கள் விட்டுட்டுப்போன பிறகு நான் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தலைவனாக வந்தேன்அப்ப (உலகச்சண்டை நடக்குதுவெள்ளைக்காரன் என்னைக் கூப்பிட்டு நீ மந்திரி சபை அமைக்கச் சொன்னான்ராஜாஜி
(29-10-1939இல் பதவியைவிட்டுட்டுப் போயிட்டாருன்னுதான் அதை வைச்சிக்கணும்னான்.

அய்யா,என்னாலேமுடியாதுநாங்ககஷ்டப்பட்ட கூட்டம்இப்ப நான் மந்திரியானால் அவன் காங்கிரஸ்காரன் பொசுக்குன்னு வந்திடுவான்.எனக்கு மந்திரி பதவிகளைக் கொடுண்ணுநீ கொடுப்பேநான் போயிடணும்விட்டுட்டுப்போன்னுடுவேஇல்லாட்டா அவன் எதிர்த்து எங்களுக்கு எதிராக (காங்கிரஸ்அவன் ரகளை பண்ணுவான்அவனை நல்லா அடக்கவேணும்அடக்கினியானால் அடுத்தாப்பிலே நாங்கள் பதவிக்கு வந்தாலும் எங்களாலே ஒரு காரியமும் நடத்த முடியாதுநீங்களே (வெள்ளையரையேஆட்சி செய்யுங்கநாங்க எங்களால் ஆனவரைக்கும் உங்களுக்கு வெளியில் இருந்து கொண்டு ஆதரவு கொடுக்கிறோம்ன்னேன்பதவியை வேண்டாம்ன்னு சொல்லி கவலை எடுத்துக்கிட்டோம்ஒத்துழைக்கிறேன்னு. (உலகசண்டைக்கு நாங்கள் ஒத்துழைக்கிறேன்னு சொன்னதற்காகஇவுக (உலகசண்டையிலே வெள்ளைக்காரனுக்கு விரோதமாகவே (காங்கிரசார்அப்ப இவுக சண்டை போட்டாங்கஜெர்மனிகாரனை இங்கு இவுககூட்டி வர்றதுக்கு (காங்கிரஸ் காரங்கபாடுபட்டாங்கஆனதினாலே நாங்கவெள்ளைக் காரன் எப்படியாவது ஜெயிக்கவேணும் அப்படீன்னு நம்மாளான உதவியை வெள்ளைக்காரனுக்குச் செய்தோம்.  

ஆகவே தோழர்களேஅந்த மாதிரி நான் ஆதரிச்சிகிட்டு இருக்கிறபோதுஉண்மையாகவே சொல்றேன்ராஜாஜி என்கிட்டே வந்தாருஆனதாச்சிபோனது போச்சி இப்ப நீயாவது மந்திரி பதவியை ஒத்துக்கஇந்த சமயத்திலே அவன்கிட்டே (வெள்ளைக்காரனிடத்திலேவிடாதே அப்படீன்னு என்னைக் கட்டாயப்படுத்தினாருநான் அவரிடம் என்னாலே முடியாதுங்கன்னேன்வேணும்ன்னா நீ எனக்கு ஒரு மந்திரி கொடு உன் மந்திரிசபையிலேநான் ரொம்ப பொறுமையான மந்திரிசபையாக நான் ஆக்கிடறேன்மீதி எல்லா காரியத்தையும் நீயே செய்யின்னாருஅப்பவும் அவருகிட்டே நான் ரொம்ப கேட்டுகிட்டேன்என்னாலே முடியாது மன்னிக்க வேணும்நான் மந்திரியானால் மறுபடியும் பொதுவாழ்வில் என்னாலே வாழவே முடியாதுஎங்க ஆளுகளிலேயும் 100 பேர் இருக்கிறாங்க மந்திரியாக வேணும்ன்னுஅவுங்களோடு எனக்கு விரோதமெல்லாம் வரும்இம்மாதிரி ராஜாஜியிடம் சொன்னேன்மந்திரி பதவியே வேண்டாம்ன்னுட்டேன்.

எப்படியோ (உலகச்சண்டையிலே வெள்ளைக்காரன் ஜெயிச்சான்ராஜாஜி பதவிக்கு வந்தார்நம்மை பழிவாங்க ஆரம்பிச்சார்பள்ளிக்கூடத்தை எல்லாம் மூட ஆரம்பிச்சார். (1954இல்இரண்டு நேரம் படிக்ககூடாதுஒரு நேரம் தான்படிக்கவேணும்னுட்டார்பத்தாததுக்கு அவனவன் ஜாதிப்படி படீன்னார்ஜாதித் தொழில் செய்யுன்னாருஅப்புறம் அவரை எதிர்த்து நான் தான் நேருக்கு நேராக சண்டைபிடிக்க ஆரம்பிச்சிட்டேன்நம் எதிர்ப்பினாலே ராஜாஜி பதவியை விட்டுட்டு போயிட்டாரு. (12-04-1954இல்அவருக்கு அடுத்துகாமராசர் அந்தப் பதவிக்கு முதல் மந்திரியாக (13-04-1954இல்வந்தாருஅப்ப பாப்பான்பார்ப்பான் அல்லாதவன்,என்கிறஉணர்ச்சி வலுத்துப் போச்சிஅவரை நாம வலுவிலேபோய் ஆதரிக்க வேண்டியதாய்ப் போச்சிகாமராசரும் எதிர்பார்த்தார்நம்ம ஆதரவு வேணும்னுசரின்னுட்டு நாங்கள் அவருடைய ஆட்சியை ஆதரிக்க ஆரம்பிச்சோம்நான் ஆதரிக்கிறபோது அவரும் (காமராசரும்சொன்னாரேஅண்ணாவைப் பற்றி அவருயாருன்னு பெரிசா பேசறோம்அவர் கொள்கைப்படி அவரு சொன்னபடிதான் நடத்துகிறோம்ஆட்சியைன்னு காமராஜர் சொன்னாரேபெரியார் சொல்றபடித் தான் நாங்கள் நடக்கிறோம்அவரு போட்ட ரோட்டிலேதான் நாங்கள் வண்டி ஓட்டறோம்.

ஆனதினாலேஅவரு எங்களை ஆதரிக்கிறாருன்னார்அதிலே என்னா அதிசயமிருக்குதுஅப்படீன்னு அவரே சொன்னாரேஅவராலே நாங்க என்ன காரியம் கவனிக்கணும்நம்மலட்சியம் எல்லாம் நம்ம சமுதாயம் முன்னேற்ற மடையணும்ஏன்னாநாம ரொம்ப கீழே இருக்கிறோம்ஒண்ணிலே கூட நமக்குப் போதுமான அறிவு இல்லேநம்மமொழி நமக்கு உபயோகப்படலேநம்ம இலக்கியங்கள் எல்லாம் நம்மை இழிவு பண்றதாய்ப் போச்சிமற்றும் நம்முடைய மதத்திலே நாம கீழ் மகனாக இருக்கிறோம்கடவுள் காரியத்திலேநாம சுத்தமடையனாக இருக்கிறோம்எப்படி நாம வாழ்றதுமற்ற நாட்டுக்காரன் எல்லாம் போறான் மேலே மேலேநம்மை நிபந்தனையில்லாத அடிமையாக ஆக்கிப் போட்டானுங்கஎன்னைக்கும் நம்மைத் தலையெடுக்க முடியாத மாதிரியிலே இந்துங்கிறவன் எல்லாம் ஒண்ணுன்னுட்டான்இந்துவாகவே நாம ஒரு நாடுங்கிறான்இந்தியா 51 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடு. 51 கோடி மக்கள் உள்ள நாட்டிலேநாம 3ஙூ கோடி மக்கள் (1968இல்அவுகளோடு சேர்ந்திருக்கணுமாம்நாம 3ஙூ கோடி அவுக சுமார் 48 கோடி ஜனங்களாயிடுகிறாங்களேஎந்தக் காரியத்தை நாம சமாளிக்க முடியும்அவன் (வடவன்சொன்னபடி நாம கேட்கணும்எனக்குத் தெரியும் நிபந்தனை.

இந்தியா கூட நாம ஒண்ணாய் இருக்கிற வரைக்கும்அவுகளோடு இணைஞ்சிருக்கிற வரையிலும் நாம அடிமைஆனதினாலே நாம மத்தவனுங்களைப் போல நினைக்காமேஎப்படி நாம இந்த இந்தியாவின் ஒரு கட்டிலேயிருந்து நாம விலகி அடிமைத்தன்மையில் இருந்து நீங்குகிறது இப்ப நம்முடைய கவலை.

அரசாங்கத்திலே நம்மை மிரட்டுவான்எவனாவது (தனிநாடாகபிரிவினை கேட்டால் 10 வருஷம் தண்டிக்கிறாப்பிலே சட்டம் பண்ணுவோம்கிறான்அது சரிபிரிவினையில்லாமல் இவன்கிட்டே அடிமையாய் இருப்பதைவிட ஜெயிலுக்குப் போய் அங்கேயிருந்தால் நமக்கு என்னா நஷ்டம்? (பலத்த கைதட்டல்இதன் விளைவைத் தெரிஞ்சிதான்நாமபேசறோம் நம்மைப் போலஅரசியலில் இருக்கிறவன் எவனும் இதைப் பற்றி பேசமுடியாதுஏன்னாபிரிவினையைக் கேட்கிறவன்எலக்ஷனுக்கு நிற்கமுடியாதுன்னு சட்டம் பண்ணிட்டான்எலெக்ஷன் இல்லாட்டா இவுகளுக்கென்னா அரசியல் அழுகுதுகாங்கிரஸ்காரன் எலக்ஷனுக்கு நிற்கமுடியாதுமுன்னேற்ற கழகக்காரரு எலக்ஷனிலே நிற்க முடியாதுபிரிவினைன்னு இவுக சொல்லிப் போட்டா அப்படி அவன் வேணும்னே சட்டம் பண்ணிகிட்டான்வேறு எந்தக் கட்சிக் காரனும் பிரிவினைன்னு சொன்னா எலக்ஷனிலே நிற்கமுடியாது.
எல்லாக் கட்சிக்காரனும் தன் லட்சியம் எலக்ஷன்னுதான் நினைச்சிகிட்டு இருக்கிறான்அதனாலே இன்னொருத்தனை நாம எதிர்ப்பார்த்து சேர முடியாதுநாமதான் இந்த காரியத்தை ஆரம்பிக்கணும்ஆரம்பிச்சா கஷ்டம் வரும். 1000 பேர், 2000 பேர் நாமளும் ஜெயிலுக்குப் போகணும்அப்புறம் தான் ஜனங்கள் நம்பக்கமா வருவாங்கஅந்த மாதிரி நிலைமை வந்தால் முன்னேற்றகழகத்துக்காரங்க (ஆட்சியிலிருந்துராஜினாமா கொடுத்துட்டுக் கூட வருவாங்கஆதரவு பலமா இருக்குதுன்னா அவுக வந்திடுவாங்கஇன்னும் மற்ற ஜனங்களும் இதற்காக நம்மோடு சேருவாங்கஅடுத்தாப்பிலே எலக்ஷன் வந்தால் நாம மனுஷனாகணுமேன்னுஅதனாலே இவுகளோடு போயிட்டு அப்ப இல்லேன்னு சொல்லிட்டாபோகுது அப்படீன்னு நம்மகிட்டே வந்து சேருவாங்க.

ஆதலினாலே இன்னைக்கு நம்முடைய நிலைமை ஜெயிலோ எந்தக் காரியமோ எப்படி இருந்தாலும் எப்படியாவது அந்த இந்தியாவிலிருந்து இருக்கிறதிலேயிருந்து தப்பி வரணும்காரணம், 16 தேசமிருக்குதுன்னா 12 தேசம் அவன். 4 தேசம் (தென்னாடுநாமஇந்த நாலுபேரிலேயும் மற்ற 3 பேரை (கேரளகர்னாடகஆந்திரம்நம்ப முடியாதேமலையாளத்துக்காரனை நம்ப முடியாதுஅவனை முன்னாலே பார்த்தா தமிழன்பின்னாலே பார்த்தால் பாப்பான்அவன் வரமாட்டான்தெலுங்கு நாட்டுக்காரனும்கன்னடிய நாட்டுகாரனும் இதற்கு (பிரிவினைக்குபயப்படுவான்நமக்கிருக்கிற அவ்வளவு ஆத்திரம்அவுங்களுக்குக் கிடையாதுஇப்ப இந்தி ஒரு பிரச்சினையாக அவன் சொல்றானே தவிரகாங்கிரஸ்காரன் இவுங்களை மிரட்ட ஆரம்பிச்சால் நாமதான் மிஞ்சுவோம்மற்றவன் எல்லாம் நம்மோடு வருவானா என்பது நமக்கு கஷ்டம் தான்ஆகணுமே?

என்னைக்கு நமக்கு வந்து மெஜாரிட்டி ஆகப்போவுதுஎன்னைக்கு நம்ப காரியம் (பிரிவினைக்காகசட்டமாக நிறைவேறப்போவுது? 532 மெம்பர்கள் இருக்கிற சபையில் நாம 40 பேர்தானேபாக்கி 492பேர் இருக்கிறானேஅதிலே எத்தனை பேர் நம்ம கூட (ஆதரவுக்குவருவான்?. எல்லாம் வடநாட்டுக்காரன்ஆனதினாலேஎத்தனை நாளைக்கு நாம இந்தியாவிலேஒரு நாடாக யூனியனுக்குள் இருக்கிறோமோஅத்தனை நாளைக்கும் நாம வடநாட்டானுடைய அடிமைதான்அவன் தான் இங்கு வந்து பொறுக்கித்தின்பான்வந்து கொள்ளை அடிச்சிகிட்டுப் போவான்அவனுக்கு அடிமையாய் இருந்து நாம வாழ்க்கை நடத்தியாகணும்ஆனதினாலே நாம மற்ற எல்லா லட்சியத்தையும் விட பிரிஞ்சிக்கவேணும்எங்கள் நாடு எங்களுக்குத் தனியாகணும்.

நாங்கள் சுதந்திரத்தோடு வாழ்கிறோம்எதுக்காக ஒரு நாட்டான் இன்னொரு நாட்டானுக்கு அடிமையாக இருக்கணும்ஏதற்காக இன்னொருத்தன்நாட்டோடு கூடத்தான் இருக்க வேணும்கிறதுஎன்ன கட்டாயம்அப்பன் மகனோடு இருக்க மாட்டேன்கிறான்அண்ணன் தம்பியோடு இருக்கமாட்டேன்கிறான்பொண்டாட்டி புருஷனை இஷ்டமில்லேன்னா நீ போக வேண்டியதுதானே என்கிறாள்?(சிரிப்புநீ மட்டும் என்னா கடைசி வரைக்கும் உன்னோடு இருந்துதான் ஆக வேணும்கிறதுக்கு? (சிரிப்புஎன்னமோநாம மாட்டிகிட்டோம்இஷ்டம்போல சட்டத்தை உண்டாக்கிட்டான் பிரியக் கூடாது இந்தியா ஒண்ணாதான் இருந்தாக வேணும்னுட்டான்இப்ப சட்டத்திலே பிரியவேணும்னா தண்டனைங்கிறான்சட்டம் பெருசாநம்ம சுதந்திரம் பெருசாநாம பார்க்கவேணுமா இல்லையாஅப்படியாவது இந்த நாட்டை ஆளத்தகுதியிருக்கோ?

இன்றைக்கு இருக்கிற நடவடிக்கைகளை நீங்க எடுத்துகிட்டீங்கன்னாகாங்கிரஸ்காரனுக்கோமத்திய ஆட்சிகாரனுக்கோஇந்தியாபூராவும் ஒண்ணுன்னு பண்ணிட்டு இருக்கிறவனுக்கோ நாட்டை ஆள யோக்கியதை இருக்குதோஎங்கே இப்ப ரகளை இல்லைஒவ்வொரு ஊரிலேயும் ரகளைதபாலாபீசைத் தகர்க்கிறான்கட்டிடத்துக்கு நெருப்பு வைக்கிறான்ஆளுங்களை உதைக்கிறான்வீதியிலே போற பஸ்சுக்கெல்லாம் நெருப்பு வைக்கிறான்நினைச்சா புகுந்து கொள்ளையடிச்சிகிட்டுப் போறான்.சேதிவந்துகிட்டே இருக்குதேஇது ஒரு பக்கம் வருதுநம்முடைய ஒழுக்கம் என்னடான்னு பார்த்தால்நேற்று காங்கிரசுங்கிறான்இன்னைக்கு வேறு ஒரு கட்சிங்கிறான்நாளைக்கு இன்னொரு கட்சிங்கிறான்என்னடான்னா? 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு ஆளை சேர்த்துகிட்டேங்கிறான்இவன் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து மந்திரி திருப்பிட்டாருங்கிறான். (சிரிப்புஇதுவெல்லாம் நமக்கு முடியுமோநம்ம நிலைக்கு இந்த நிலைப் பயன்படுமாநீங்க தான் பார்க்கிறீங்களேகாத்தாலே ஒரு கட்சி சாயந்தரம் ஒரு கட்சிவிடிய காலையிலே ஒரு கட்சிஇன்னைக்கு அந்த மந்திரிசபைநாளைக்கு இது தோத்துப் போவுது.நாளறனைக்கு இன்னொருமந்திரிசபை.காங்கிரஸ்காரன் எவ்வளவோ வீம்பு பேசிகிட்டு வந்தான்இப்ப நானும் கூட்டு சேர்ந்துக்கிறேங் கிறான். (சிரிப்பு)

ஆகவே ஒரு பெரிய நாடுன்னு பேரு வைச்சிகிட்டுபஞ்சாப் முதல் கன்னியாகுமரி வரைக்கும்ஒவ்வொரு மாகாணத்திலேயும் ரகளைமந்திரியைக் குறுக்காட்டிகிறதுமந்திரியை ரகளை பண்றதுமந்திரிகளுக்கு தலைவர்களுக்குக் கொடியை பிடிச்சிகிட்டு அவமானம் பண்றதுவிடிஞ்சா எல்லாத்துக்கும் சமாதானத்துக்கும் வர்ரேன்சொன்னாஅவனை வரவேண்டாங்கன்னு சேதி அனுப்புகிறான் யாருஉப பிரதமர் இப்ப வந்தால் இங்கே நிலைமை சரியாய் இல்லே வர வேண்டாம்னு எழுதிட்டாங்கன்னுஅவனும் பயந்துகிட்டு இருந்திட்டான். (சிரிப்புஅந்தம்மா பிரதமர் (இந்திராகாந்திஅவர் பாட்டுக்கு வந்திட்டு அவர் பாட்டுக்கு போயிட்டாரு. (சிரிப்புஅப்புறம் எங்கே இருக்குது பந்தோபஸ்துஎங்கே இருக்குது அமைதிஇதுக்குப் பேருதான் ஜனநாயகம்இதுக்குப் பேருதான் இந்திய யூனியன்னாஒரு மனிதனுக்கு அறிவு இல்லேமானமில்லேன்னு பேரு?

ஆகவே தான் நாம கண்டிப்பாய் பிரிஞ்சி போகவேண்டியதைத்தவிர வாழ்றதுக்கு வேறு மார்க்கமில்லே. (பலத்த கைதட்டல்)பிரிஞ்சிகிட்டோமானால்இப்ப இருக்கிற தொல்லை எல்லாம்நாளைக்கு நமக்கு வராதுஎன்னாஎல்லாம் நம்மாள்கள் தான் இருப்பாங்கநம்ம சொன்னாப்பிலே நடந்தால் தான் முடியும் என்கிற எண்ணம் அவர்களுக்கும் வரும்இப்ப அது இல்லையேஅவன் டெல்லியில் இருக்கிறானே.இப்பத்திய காங்கிரஸ்காரனுங்கநம்மை மிகக் கேவலமாகப் பேசுகிறாங்ககாரணம் என்னாஇங்கு இல்லாட்டாலும் நமக்கு டெல்லி தயவு இருக்குதுன்னு நினைக்கிறான்.அப்படிதான்அவுக நினைக்கிறாங்கஅப்படிதான் அவுக எதிர்ப்பார்க்கிறாங்கஇங்கே தோத்துப்போச்சீன்னா அங்கே போயி கேக்கிறான் அதனாலே வசதிப்பட்டவன் எவனும் நம்ம ஜனங்களைப் பற்றிக் கவலைப் படமாட்டான்.நமக்குஎப்ப நடந்துக்கிறதுங்கிறதைப் பற்றிக் கவலைப் படமாட்டான்.

எனவே தான் தோழர்களேநாம இன்றைய நிலைமையைப் பார்த்துகிட்டுசும்மா இருந்தோமானால்நம்ம நிலைமை இன்னும் கேவலமாய்ப்போயிடும்நாம சீக்கிரத்தில் துவக்கவேணும்பிரிவினைன்னுஅந்த நடவடிக்கை எடுத்துக்க வேணும் அப்புறம் நடக்கிறது நடக்கட்டும்அதுதான் எங்களுடைய கருத்தே தவிரவேறு நாங்க ஆளவேணும்னோஇல்லை வேறு ஆட்சி வேணும்னோ அல்லஇதிலே நாம முன்னேற்றக் கழகக்காரரை கூப்பிடலேநான் எழுதிட்டேன்நீங்க உங்க பாட்டுக்குப் பதவியைப் பார்த்துகிட்டு இருங்க.நாங்க செய்றோம்எங்களுடைய கதை பலப்பட்டுதுன்னா அப்ப நீங்க வாங்க. (சிரிப்புஇப்ப நீங்க பொசுக்குன்னு வந்திடாதீங்கன்னு அதுவும்கெட்டுஇதுவும் கெட்டுப் போறாப்பிலே ஆயிடும் (கைதட்டல் சிரிப்புஆனதினாலே நீங்கள் வரவேண்டாம்னு நான் சொல்றேன்.

அவுகளும் (தி.மு.கவும்எங்கள்கிட்டே பிரிவினை எண்ணமில்லேன்னு சொல்றாங்க(சிரிப்புசரிநாங்களும் ஒத்துக்கிறோம்அப்படியே நீங்க இருங்க. (சிரிப்புநாங்க எங்களால் ஆனதை பார்க்கிறோம். (சிரிப்புஇதை நாங்கள் சீக்கிரத்தில் ஆரம்பிக்கத்தான் போகிறோம்ஆதனாலே நாம எல்லாத்தையும் சேர்த்துத்தான் சொல்லறேன்ஏதோ குடும்பம் பிள்ளை குட்டி - அது இது வெங்காயம்கிறவங்க தனியா இருக்கட்டும்தொல்லை இல்லாத இளைஞர்கள் எல்லாம் சேரணும்இளைஞர்கள் மூலம் தான் இதற்கு விதாயம் ஏற்படவேணும்ஆனதினாலே,நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி நல்லபடி ஒவ்வொருவரும் சிந்திக்க வேணும்.இந்தக் காரியத்திலே யாருக்கும் சுயநல எண்ணமிருக்கக் கூடாதுதமிழர்ங்கிற முறையிலேநான் அடிக்கடி சொல்லிகிட்டு வருகிற மாதிரிஎல்லாருமா சேர்ந்து ஒற்றுமையாய் இருக்கவேணும்ஏதோ பதவியில் இருக்கிற முக்கியமான ஆளுக விலகி இருக்கட்டும்காங்கிரஸ்காரரு கூட நான் கேட்டுக்கிறேன்அங்கே இருக்கிற இளைஞர்கள் எல்லாம் தமிழன் என்கிற உணர்ச்சியோடு இருக்கவேணும்எப்பவும் நீஅந்தக்கட்சிஇந்தக்கட்சி என்கிற எண்ணத்தை விட்டிட வேணும்தமிழர்கட்சி தமிழர் அப்படீன்னு எண்ணனும்கூடுமானவரைக்கும் பிரிவினை உணர்ச்சிக்குப் பலம் கொடுக்கணும்காங்கிரஸ்காரர்களையும் கேட்டுக்கிறேன்பிடிவாதமா நமக்கு விரோதின்னு நினைச்சிகிட்டு இருக்கிறவங்க போகட்டும்.

நம்மை சாதாரணமாகவிரோதமில்லாது நினைக்கிறவங்கதான் இந்த சமயத்திலே ஆதரவு கொடுத்தாகணும்காங்கிரஸ்காரரு மாத்திரமல்ல முன்னேற்றக் கழகத்திலேயும் மந்திரிகள் சட்டசபையில் இருக்கிறவங்க போகட்டும்மற்றவங்க எல்லாம் நமக்கு ஆதரவு கொடுக்கலாம்அப்பதான் அது பலப்படும்அதுக்கப்புறம் அவுகளும் வந்திடறாங்கநாம இந்த காரியங்களை செய்யணும்மற்றும் இன்னும் ஒவ்வொரு கழகத்திலும் பாப்பானுங்க இருக்கிறாங்கதமிழனா இருக்கிறவங்க எல்லாம்வந்திடவேணும்.அதிலே பிழைக்கிறவனுங்களை விட்டிடுங்க. (சிரிப்புஏதாவது ரகளைகாலித்தனம் பண்ணி அதனாலே பிழைக்கிறவன் இருக்கிறானேஅவன் போகட்டும்அவனை எல்லாம் விட்டுடுங்கமற்ற ஆளுக வந்திடவேணும்இன்னும் சுதந்திராகட்சிஅந்தக்கட்சிஇந்தகட்சின்னு பல கட்சிகளைவைச்சிகிட்டு இருக்கிறவன் தான் தமிழர் - தமிழருடைய விடுதலை - தமிழருடைய அடிமையை ஒழிக்கிறது - என்ற பேராலே பலமாக ஒரு கூட்டம் சேர்ந்துதான் நாம் வெற்றி பெறவேணும்அதில்லாமல் நம்மாலே ஒரு காரியமும் சாதித்து விட முடியாதுங்க.

நான் நல்லா யோசனை பண்ணிதான் சொல்றேனே தவிர சும்மா ஏதோ ஒருவேகத்திலியோஒருகாரியத்தை நான் என்னை பெரிசு பண்ணிகிட்டோசெய்றேன்னு நினைக்காதீங்கரொம்ப கஷ்டமான நிலைமையிலே நாம இருக்கிறோம்உலகத் தமிழ் மாநாடு நடப்பதாக எனக்கு அழைப்பு வந்தது என்னையும் ஜாடையாக வந்து கூப்பிட்டாங்கஅங்கே போயி நான் பேசி கசப்பு பண்ணிக்கஇஷ்டமில்லைநான் என் கொள்கை என்னமோ அது பற்றி சொல்லிப்போட்டேன் அதுக்கு விரோதமாக - சம்பிரதாயமாக அது நடக்குதுஅங்கு வந்து நான் ஏன் கசப்பு பண்ணிக்க வேணும்நமக்கு வேண்டியவங்க எல்லாம் அங்கே இருக்கிறாங்கஅப்படீன்னு சொல்லிட்டு நான் போகலேஆனால் நிறையா பணத்தை வசூல் பண்ணினாங்கஒரு பண்டிகை மாதிரி கொட்டமடிச்சாங்க. (சிரிப்புஎன்னா முடிவு பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியலேஇன்னமேதான் (அந்த மாநாடு பற்றிதெரிஞ்சிக்க வேணும்பல பேரெல்லாம் படிச்சாங்க.

அதெல்லாம் பேச்சுக்குத்தான் அவர்கள் படிப்பு பயன்படுதே தவிர வயிறு வளர்க்கிறதுக்குஅந்தப் புலமையினாலேஏதாவது நாட்டுக்கோ - கருத்துக்கோ - நீதிக்கோ - இலக்கியத்துக்கோ - செய்யலாமாங்கிற எண்ணமில்லேஇலக்கியங்கள் எல்லாம் புராண சம்பந்தமான இலக்கியங்கள் தான்எந்தபுலவனும் மதத்தைக் கட்டிகிட்டு அழுகிறான்?நாமம் போட்டுகிட்டுவிபூதிபூசிக்கிட்டுபட்டுக் கட்டிகிட்டுள்ளான்அவன் கருத்திலே எந்த மதமோஎந்த உட்பிரிவோ எல்லாம்,அந்தப் பாப்பானுக்கு அனுகூலமானதேதவிரஇவுங்களுக்கு (தி.மு..விற்குஅனு கூலமா ஒண்ணுமேயில்லே.

எந்த இலக்கியத்தை நாம எடுத்துகிட்டாலும்நமக்கு ஏற்ற இலக்கியம் எதிலாவது இருக்குதான்னா - ஒண்ணும் கிடையாதுஅந்த உணர்ச்சியே ஏற்படலேஉண்டாக்கியிருக்கிற இலக்கியங்கள் பூரா நான் சாதாரணமாகச் சொல்லறேன்கம்பனுக்கு ஒரு சிலை வைச்சாங்ககண்ணகிக்கு ஒரு சிலை வைச்சாங்ககொஞ்சமாவது மானமிருந்தால் வைப்பாங்களா? (சிரிப்புநான் பச்சையாகவே கேட்கிறேன்ஒரு கடுகளவாவது தமிழனுக்கு மானமிருந்தால் கம்பனுக்கு ஒரு சிலை வைக்கமுடியுமாஅவன் தான் இராமாயணத்தைப் பரப்பினவன் கம்பன்பாப்பானோடு இருந்த இராமாயணத்தை அவன் தான்பரப்பினான்.

ராமாயணத்திலே இருக்கிறஅசிங்கத்தை எல்லாம் இவன் தான்கழுவிவிட்டவன். (சிரிப்புஅதனாலே பாப்பானோமற்றவனோகம்பனுக்கு இவ்வளவு மரியாதை பண்றான்னாராமாயணத்தைத் தூக்கிவிட்டுட்டானேகாறிதுப்பவேண்டிய ஒரு ராமாயணத்தை கம்பராமாயணம் தானே இப்ப கடவுள் கதையைப் படிக்கபடுதுவால்மீகி ராமாயணம் நாறுதுஎங்கே அதிலே படிச்சாலும்அதிலே அயோக்கியத்தனம்அக்கிரமம்விபசாரத்தனம்பித்தலாட்டம்பிரட்டுதுரோகம்எல்லாம் இருக்குது அதிலேஅதையெல்லாம் இவன் (கம்பன்தான் மறைச்சான்மறைச்சிப் போட்டு நேரா வால்மீகி சொல்லாத அவ்வளவு வசையை ராவணனுக்கும் மற்ற நம்ம ஆளுகளுக்கும் அவ்வளவு அதிகமாகச் சேர்த்திருக்கிறவன் இவன் தான்(கம்பன்). இவைகளை எல்லாம் கொஞ்சம் கூட இலட்சியம் பண்ணாமே அவனுக்கு (கம்பனுக்குஒரு சிலைன்னுட்டான்என்னா நியாயம்?.

கண்ணகிக்குஒருசிலைன்னுவைச்சாங்ககண்ணகிக்கு என்னா உயர்ந்த குணமிருந்ததுஅவளுக்காக ஒரு சிலை வைக்கிறதுக்குஎன்னா அவள் பண்ணினாள்புருஷன் தேவடியாள் வீட்டுக்கு (கோவலன்போயிட்டான்னாஇவள் பதிவிரதை வேஷம்னுட்டு சோறு திங்காதேபாயிலே படுக்காமேதலையை முடியாமேரொம்ப-புருஷன் (கோவலன்ஏக்கத்திலேயே உட்காந்திருந்தாளுன்னு ஒரு கதை போட்டாஇதுவா ஒரு பொம்பளைக்கு இலட்சணம்? (சிரிப்புநான் கேட்கிறேன்புருஷன் போயிட்டான்னு இவள் (கண்ணகிபட்டினி கிடந்தாள்.

எவனாவது அவன் பொண்டாட்டி இன்னொருத்தனோடு போயிட்டாள்ன்னு பட்டினி கிடப்பானா? (சிரிப்பு கைதட்டல்). நான் கேட்கிறேன்அவன் போயிட்டான்னு இவளுக்கு காதல் இல்லைநாம் இருந்தென்னா பிரயோஜனம்இப்படி வேணுமானா வைச்சிக்கோஅதேமாதிரி தானேஆம்பளைக்கும் பொண்டாட்டி இருக்கிறாள்அவன் பொண்டாட்டி இன்னொருத்தனோடு போயிடறாள்இவன் அவளுக்குப் பணம் கொடுப்பானாநீ எவனோடு போனியோ,அவனுக்கு இன்னும் கொஞ்சம் செலவுக்குக் கொடு என்பானா? (சிரிப்புஇவன் அவளிடம் பணத்தைக் கொடுத்து அனுப்புவானா? (பலத்த கைதட்டல்அது என்னாஅது ஒரு காட்டுமிராண்டி காலத்து ஒரு எண்ணமே தவிர மனித தன்மையான காரியமாகுமாஅவளைப்பற்றி இவ்வளவு பேசறதுன்னா நாம பேசுகிறவருடைய பிள்ளைகளுக்கு எல்லாம் இவள் அந்த மாதிரி மரியாதை பண்ணுவானாஅவன் மருமகன் போயிடறான் எங்கேயோஇவன்பணம் கொடுத்து இன்னும் போயிசெலவு பண்ணிட கொடுப்பானா? (சிரிப்புஇவை இயற்கைக்கு மாறானதுஅனாவசியமா அந்தப் பெண்கள் சமுதாயத்தை நாசமாக்க வேணும்அடிமையாக்கவேணும் எண்ணத்தோடு கற்பனையாக்கப்பட்டுள்ளதுஅது மாத்திரமில்லாமல் அவள் (கண்ணகிஎன்னா யோக்கியமாய் நடந்துகிட்டாள்அவளுடைய வீரத்தைப்பற்றி எழுதி இருக்கிறானேதவிரஅவளுடைய புத்தி எவ்வளவு அயோக்கியத்தனமான புத்திஎன்னென்னமோ அதிசய அற்புதங்களைச் சாமிபூதம்பேயிபிசாசுதெய்வம் என எல்லாத்தையும் அதிலே கொண்டாந்துவிட்டான்அது எப்படியோ நாசமா போகட்டும்அவள் புருஷனை(கோவலனாஎவனோ திருட்டுகேசு போட்டுதண்டிச்சிப் போட்டான். (சிரிப்பு)அதுக்காக இவள் என்ன பண்ணவேணும்ஆத்திரமிருந்தால் அவனோடு சண்டைக்குப் போயாரோடுஅந்த ராஜாவோடஅதை விட்டுப் போட்டுமதுரை உன்னை என்ன பண்ணுச்சி? (பலத்த சிரிப்புமதுரைக்கு ஏன் நெருப்பு வைச்சேகாரணம் சொல்ல வேணுமே அய்யா - மதுரையில் இருந்தவங்க என்னா அக்ரமம் பண்ணினாங்கஅதிலேயும் எவ்வளவு முட்டாள்தனமா அந்தக்கதையைப் பொறுத்தறான்அவள் தம் முலையைப் பிடிச்சி திருகினாளாம்அது கையோட வந்திட்டுதாம்.(சிரிப்பும் கைதட்டலும்அவள் அதை (முலையைவீசினாளாம்மதுரையே நெருப்பு பிடிச்சிகிட்டுதாம். (சிரிப்புஒவ்வொரு பொம்பளை முலையிலேயும் நெருப்பு இருந்தால் நெருப்புக்குச்சியே வேண்டாமே (பலத்த கைதட்டல் சிரிப்புஎன்னா கதையாருக்குத்திருகினா முலை கைக்கு வரும்? (பலத்த சிரிப்புஅதை வீசினால் எப்படி நெருப்பு பிடிக்கும்? (சிரிப்புநெருப்பு பிடிச்சால்இவள் யோக்கியஸ்தி என்ன சொல்றாள்பாப்பானை விட்டுட்டு மற்றவனை எல்லாம் எரிச்சிடுங்கிறாள் (சிரிப்புஎன்னா அர்த்தம் இதுக்குஅப்ப அந்த கதையினுடைய கருத்து என்னாபாப்பானை வாழ வைக்க வேணும்அவனுக்கு உதவி பண்ணணும்மதுரையே நெருப்பு பிடிக்கணும்னா பாப்பானை ஏன் விடறேநம்மாளு கதியெல்லாம் என்னாகிறதுஅவனெல்லாம் உனக்கு என்ன பண்ணினான்அதை தமிழ்படுத்தினவனுக்கு புத்தியே இருக்காதே நான் தான் சொல்றேனே (பலத்த சிரிப்புஅறிவுக்கு அது கொஞ்சம் கூட உதவி பண்ணாது.

ஆகவே இந்த மாதிரி அவுக கொஞ்சம் கூட பகுத்தறிவை பயன்படுத்தாமேஅவுக அங்கே வைச்சிகிட்ட கதைகளும்அவுங்க வைச்சிகிட்டே கோலாகலமும்அவுக பேசினதும் கொண்டதையும் பார்த்தால் எல்லாம் அந்த மூடநம்பிக்கை அந்த பழைய தமிழனுடைய உணர்ச்சிதான்ஏதோ சிலபேர் சொல்றாங்கவெளியே வந்துதான் பேசுவாங்களேதவிர அங்கே உள்ளே பேசமுடியலேபெரிய பணம் செலவுபண்ணினாங்கஅந்த பணத்தைக் கொண்டாவதுஏதாவது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினாங்களாஆராய்ச்சின்னா என்னாஅதிலே இருக்கிற கருப்பொருள்நுண்பொருள்வெங்காயப் பொருளைக்கண்டு பிடிக்கிறதாஅதிலே இருக்கிறதை ஆராய்ச்சிப்பண்ணி தமிழனுக்கு எது எது அனுகூலம்தமிழனுக்கு எது எது கேடானதுஅறிவுக்குப் பொறுத்தமானது எதுஎதுஅறிவுக்குக் கேடானது எது எதுஅந்த மாதிரி நீ ஆராய்ச்சி பண்ணி அதைத் தள்ளி இதைச் சேர்க்கிறதுன்னு சொன்னா உன்னுடைய ஆராய்ச்சிக்கு ஒரு அர்த்தமாகவாவது இருக்கும்எதைக் கொண்டு ஆராய்ச்சி பண்ணப்போறே?

குறள்ஆராய்ச்சிக்குன்னு பணம் கொடுத்தாங்களாம்குறளை யோக்கியமாய் ஆராய்ச்சி பண்ணினா 1330 குறளிலே அதிலே சரிபகுதி 665 குறளை நீக்கிப்போட்டுதான் வேறே புத்தகமாய் போடணும்அதிலே அந்தக் காலத்துக்கருத்து மழிஞ்சி இருக்குதுஅந்த பழைய காலத்து பார்ப்பானுடைய கருத்துஎன்னென்னமோ தந்திரமா வேறெ கருத்தைச் சொல்றேனுங்கிறானே தவிர அந்தக் கருத்தை இவன் சொல்றதுக்கு இடம் எங்கே மிச்சமிருக்குதுஅதிலே கடவுள் வர்ரான்அதிலே தெய்வம் வர்ரான்அதிலே மேல்லோகம் வருதுகீழ்லோகம் வருதுஎதெது நாம மூட நம்பிக்கைன்னு சொல்றோமோ அதெல்லாம் அதிலே இருக்குது.

அந்தக் காலத்திலே அவனுக்கு அவ்வளவு தான் புத்தி இருக்குதுன்னு சொல்றதோ அதுக்குவேறு ஒரு கருத்து இருக்குதுனு சொல்றதோ அது நம்மளை தற்கொலை பண்ணிக்கிறதுதான்என்னா அவசியம்இவ்வளவு தெளிவான காலத்திலேஎவ்வளவோஅதிசயங்கள் அற்புதங்கள் எல்லாம் நடக்கிற காலத்திலேநமக்கு வேண்டியது 2000 வருஷத்துக்கு முன்னாலே பண்ணின (குறளிலேஇருக்குதுன்னாஎப்படி அதிலே இக்காலத்தியது இருக்கமுடியும்இன்றைய தினம் நமக்கு வேண்டியதை அதிலே இருந்து எப்படி பார்க்க முடியும்ஆகவே பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்க வேணும்மொழின்னா என்னா அதுநாம பிறக்கிற போது நம்மோடு ஒட்டிகிட்டாவந்ததுஏதோ நமக்குப் பொண்டாட்டி வாய்க்கிறாப்பிலேயாரு பிறக்கிறபோதோ இவனுக்குன்னு வந்தாள் பொண்டாட்டிங்கிறாஎல்லாம் வயசாயிடுச்சிஇங்கே இருக்கிறா அங்கே இருக்கிறான்னாகேட்கிறோம்பார்க்கிறோம்பின்னே அவளோடு மாட்டிக்கிறோம்அப்புறம் புருஷன் பொண்டாட்டியாக ஆயிடுகிறோம். (சிரிப்புஏன்னா நமக்குஅது கூடவேவந்தது
அதே மாதிரி நமக்கு மொழி வாய்ச்சிதுன்னா தமிழன் வயிற்றிலே பிறந்ததினாலே தமிழ் மொழியாச்சிதமிழன் வீட்டிலேயே பிறந்துதமிழன் கிட்டேயே வளர்ந்ததினாலேதமிழ்மொழியாச்சிதமிழன் வீட்டிலே பிறந்த பிள்ளையை தெலுங்கன் வளர்த்தினானா அது தமிழ் பேசுமாதெலுங்கு பேசுமாதமிழன் வீட்டிலே பிறந்து இங்கிலீஸ்காரன் வளர்த்தினானாகன்னடியன் வளர்த்தினானாதமிழ் நாட்டிலே பிறந்தவன் சீமைக்குப் போயிட்டான்னாபாகிஸ்தானுக்குப் போயிட்டா அங்கே துலுக்குப் பேசறான்இங்கிலாந்துக்குப் போயிட்டா இங்கிலீசு பேசறான்ரஷ்யாவுக்கு போனா ரஷ்யா பேசறான்எது அவனுக்குத் தாய்மொழிமொழிப் பயிற்சிக்கு ஒரு உணர்ச்சியை ஏற்படுத்துறோம் - சிந்திக்கணும் நாம எல்லாம்.

தாய் மொழின்னாலும் அப்படித்தான்தாய் நாடுன்னாலும் அப்படித்தான்எங்கே இருந்தாலும் மொழி ஒரு வாய்ப்புவந்து சேர்ரதுசுற்றுச் சார்புஎப்படி இருக்குதோ அது போல வர்ரதுஅதுக்காக வேண்டிஅதுக்குத்தான் (தமிழுக்காகநான் உயிரை விடுவேன்அது தான் என்னுடைய மொழின்னாஎன்னா கட்டாயம் இதுஎனவே தான் நாங்கள் மொழியைப் பற்றி நாங்கள் ஏதாவது சொல்லணும்ன்னா நமக்குப் பயன்படுதாநம்மை நடத்தக் கூடியதாக இருக்கிறதாநமக்கு இருக்கும் இழிவை எல்லாம் நீக்கத் தக்கதாக இருக்குதாஎன்றெல்லாம் சிந்தின்னுகேட்கிறோம்இனிமேல் தமிழில் பண்ணிக்கலாம் என்கிறான்இனிமேல் நீ பண்றதுக்கு இதுவரை பண்ணியிருக்கிறதை எடுத்துக்கிட்டாஉனக்கு என்னா நட்டம்என்னா அவசியம்அந்தக் கண்ணோடு நீங்க பார்க்கிறதில்லேஇதுமொழி வெறின்னுபேசறதுநீ யாருக்கு பிறந்தேங்கிறான்? (சிரிப்புஇதைத் தான் கேட்க முடியுது அவனுக்கு .என்னை நீயாருக்கு பிறந்தேன்னு கேட்க வேண்டாம்நீ உன் அம்மாகிட்டே போயி நான் யாருக்குப் பிறந்தேன்னு உன் அம்மாளை கேளு (சிரிப்பு வெட்கம்வெட்கம்அப்ப தான் தெரியும் எவன் எவனுக்குப் பிறந்தான்னு, (சிரிப்பு)

அதை விட்டுவிட்டு சும்மா நீ யாருக்குப் பிறந்தேயாருக்கு பிறந்தேன்னு கேட்டால் அது குறும்புதானேயாருக்குப் பிறந்தான்னு அவன் முதுகிலே யார் எழுதி அனுப்புறாங்கஇவன் இன்னாருக்குத் தான் பிறந்தான்னா (சிரிப்புஅது என்னா இப்ப பெரியப் பிரச்சினைநேற்றைய தினம்நேற்றுன்னா நேற்று தான் (08.02.68இல்நான் பார்த்தேன் பத்திரிகையிலே அமெரிக்காவிலே 1,23,000 குழந்தை பிறந்திருக்குதுஒரு வருஷத்துக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் குழந்தையிலே 26 ஆயிரம் குழந்தை கல்யாணமில்லாமலேயே பிறந்திருக்குது (சிரிப்புஎங்கேஅமெரிக்காவிலேஜப்பானிலே கணக்கு எடுத்துகிட்டா 100க்கு 30 பேர் முதல் 40 பேர் வரைக்கும் தகப்பன் பேரு போட முடிகிறதே இல்லை (சிரிப்பு). அதைக் கேட்கிறதே ஒரு மரியாதைக் குறைவா நினைக்கிறான்மரியாதைக் குறைவாகயில்லை அதை ஒரு நாகரிகக் குறைவுன்னு நினைக்கிறான் தகப்பன்பேரு கேட்பதைஅதுவெல்லாம் கர்நாடகநாடாகாட்டுமிராண்டி நாடாஇன்னும் எவ்வளவோ நடக்குதுஆஸ்பத்திரியிலே 10 ஆயிரம் குழந்தை பிறந்தால், 2500 முதல் 3000 குழந்தைகளுக்கு தகப்பன் பேரு பதிவாகாத குழந்தைகளாகும்  என ஆஸ்பத்திரி ரிப்போர்ட்டிலிருந்து வருது.
உலகத்திலே சாதாரணமாக பழக்கப்படி அங்கங்கே இருக்கிற அந்தந்த  சமயத்து நாகரிகத்தின்படி காரியம் நடக்குதுஎனக்குக் கல்யாணம் வேண்டாம் ஆம்பளையும் சொல்றான்அவளை கட்டிகிட்டு அழுவனுமே என்கிறான்பொம்பளையும் சொல்றாங்கஒருத்தனை கட்டிகிட்டா அவங்கிட்டேய    இருக்கிறதுன்னா எனக்கு அசிங்கமாயிருக்குதுங்கிறாள் (சிரிப்புஏன் என் கையைக் கொண்டு நான் பிழைச்சிக்கிறேன்இன்னொருத்தன் தயவு எனக்கு என்னாஇஷ்டப்பட்ட போது வாபோ அப்படீங்கிறாள் (சிரிப்பு-கைதட்டல்நமக்குஇதுவெல்லாம் அதிசயமாயிருக்கிறதினாலேநாம சிரிக்கிறோம்.

மலையாளத்திலேயும் இன்னைக்கு (1968இல்பெரிய பெரிய வீடுபிராமணர் வீடுராஜா சமுதாயம்இன்னும் பெரிய ஜமின்தாரன்பரம்பரையான பணக்கார குடும்பம்அங்கெல்லாம் புருஷனே இல்லையே அவுக (பொம்பளைபிள்ளைகளுக்கு இவள் இஷ்டம் போல ஒருத்தன் வரப்போக இருப்பான்அவள் இஷ்டம் போல ஒருத்தன் வரப் போக இருப்பான்இல்லைன்னா நின்னுக்குவான்வேண்டாம்னா போயிடுவான்கேளுங்களே இங்கேயிருக்கிற பெரிய மலையாள உத்தியோகஸ்தனைநீ எங்களைப் பார்த்து இப்படி சொல்றியேஉன் அப்பன் இப்படிம்பான்உங்க அம்மா எப்படி இருந்தாங்கஉங்கள் பாட்டி எப்படி இருந்தாங்கஅப்படி எத்தனையோ நாட்டிலே அந்த முறை இருக்குதுஇப்படி ஒவ்வொரு நாட்டிலே அப்பப்ப தோணுகிற உணர்ச்சிக்கு ஏற்ற வண்ணம் அவுகவுங்களுக்கு எது எது மானம்எது எது சுதந்தரம்-ன்னு நினைக்கிறாங்களோஅந்தப்படி நடந்துக்கிறாங்கஇங்கே அதுவஸ்துக் கணக்காய்ப் போச்சிஅவன் யாருக்கோபிறந்தவன்அவன் அவுசாரிக்கு பிறந்தவன்அவன் அப்படிப் பிறந்தவன்னு பேச்சு இங்கே வழக்கமாய்ப் போச்சிஅந்த மாதிரி மற்ற நாட்டிலே இப்படி பேசறதில்லே.

நமக்கு இந்த சுதந்திரம் கிடைச்சுதுஜனங்களுக்கு ஓட்டு
கொடுக்கிறதுங்கிறதுக்கு முன்னேமலையாளத்திலே தகப்பன் பேருக்கே காலம் இல்லியேநாமினேஷன் கொடுத்தான்னா நம்ம பேரு போட்டு கீழே தகப்பன் பேருன்னு போடுவோம்அங்கே (மலையாளத்திலேஅவன் பேரை போட்டுகீழே குயவாநச டிச ஆடிவாநச டிச காரணவன் ஒண்ணு தகப்பன் பேரைக் கொடுஇல்லேன்னா உன் அம்மாபேரு கொடுஅதையும் கொடுக்கலேன்னா உங்கள் குடும்பத்திலே எவன் பெரியவனோ அவன் பெயரைக் கொடுஒரு ஏற்பாடு பண்ணிகிட்ட பழக்கம்கிறது இல்லாமேஅதிலே என்னா அவமானம்இன்னும் கொஞ்ச நாளாய்ப் போனால் கலியாணமே நின்னு போகும்.கலியாணம் என செய்து கொள்ள யாரும் சம்மதிக்க மாட்டாங்க.

பெண்களையெல்லாம் நாம நல்லபடி படிக்க வைச்சிட்டோமானா அதுகள் எல்லாம் தன்னுடைய ஜீவனத்துக்கு மாசம் ரூ.200, 300, 1000 என சம்பாதிக்கும்படியான வசதி ஏற்பட்டுப் போச்சின்னா இந்தப்பயல் எனக்கு எதுக்குன்னுதானே கேட்பாங்கஒருத்தனைக் கட்டிக்கிறதுன்னா காப்பாத்த ஒரு ஆளு வேணுமேன்னுதானே அவள் கட்டிக்கிறாள்தனியாக இருந்தால் நான் எப்படி வாழுவதுஎவனாவது இழுத்துகிட்டு போயிடுவானேன்னு பயந்துகிட்டுதானே அவள் கழுத்திலே ஒரு கயிறு கட்டவேண்டியதாயிருக்குது.அவளுக்கு ஒரு புருஷன் தேவையிருக்குதுஇது எல்லாம் மாறிட்டா அவுங்களே ஒருகைபார்த்துகிறாங்கஅது இன்னைக்கு வரலேன்னாளும்வர வேண்டியது தானே நாளா வட்டத்திலே,
ஆகவே தோழர்களே இந்த மாதிரி காரியமெல்லாம்ஒரு முன்னேற்றமான ஒரு காரியம் பண்றதுக்கு யாரும் தடையாய் இருக்கக் கூடாது.எனவே ஏதோ வாய்ப்பை வைச்சி சொல்லவேண்டிய பல விஷயங்களை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன்தயவு செய்து நீங்கள் எல்லாம்கடைசியா உங்களைக் கேட்டுகிறேன்நான் சொன்னதை எல்லாம் நம்பாதீங்க. (சிரிப்புநான் சொன்னேன்கிறதுக்காக ஒன்னையும் ஏற்றுக்காதீங்கஉங்களுக்கு எப்படி பல கருத்துக்கள் தோணுதோ அதுபோல எனக்கும் தோணிச்சிநீங்கள் ஒரு பழக்கவழக்கம்நாட்டுப் பழக்கவழக்கம்மதப்பழக்கவழக்கம்சமுதாயப்பழக்கம்ன்னு வைச்சிக் கிட்டுகருத்துக்களை புக வைக்கிறீங்கஎன்னைப் பொறுத்தவரைக்கும் நான் அப்படி இல்லேநாடு சமுதாயம் ஜாதிகடவுள்ன்னு ஒண்ணும் நினைக்காமேஅறிவுக்கு என்ன தோணுதோ அதைப் புரிஞ்சிகிட்டு நான் சொல்லறேன்ஆனதினாலே அதை நீங்கள் நான் சொல்றதைப் பற்றி வருத்தப்படாதீங்கஏதோ ஒரு மாறானபேச்சி ரேடியாவிலே வந்தால் அதைப் போட்டு உடைப்பீங்களாஉங்களுக்கு ஆகாத காரியம் சொன்னாஅந்தமாதிரி நினைச்சிகிட்டு என்கருத்துக்களில் ஏற்றுக்கிறதை ஏற்றுகிட்டு மற்றதைத் தள்ளி விடுங்க.

என்னைச் சில கேள்வி கேட்கிறாங்கஎனக்கு அது சரியா தோணலேதமிழ்வாணன்னு ஒருத்தரு என்னைப் பற்றி தரக்குறைவாக எழுதினதுக்குத் தங்கள் கருத்தென்னநான் அதைப் பார்க்கவே இல்லைஅவரு எழுதினா என்ன நட்டம்அவுகவுங்களுக்கு எழுதுகிற வசதி இருக்குது உரிமைப்படிஇப்ப நான் சொல்லலியா நான் திட்ட வில்லையாதமிழ்புலவன் எல்லாம் முட்டாளுன்னு(சிரிப்பு)புலவன்னாஅவனுக்குமானமிருக்காதுன்னு சொல்றேன்படிக்கிறதுக்குதான் அவுங்க புலமைப் பயன்படுதுன்னுஅவுங்க எல்லாம் என்கிட்டே அடிக்க வர்ரதுன்னுபேராஅது போல என் கருத்து பிடிக்காத ஒருத்தன் என்னைக் குறை சொல்றான்அனுமதிக்க வேண்டியதுதான் அதைஎனக்கு நாலு பேரைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறபோது என்னைப் பத்தி இன்னொருத்தன் சொல்லக் கூடாதுன்னா என்ன அர்த்தம்நான் என்னா நெய்யிலே பொறிச்சவன்அவன் என்னா எண்ணையிலே பொறிச்சவன்? (சிரிப்பு) (கைதட்டல்ஆனதினாலேஇந்த மாதிரி சொல்றதுக்கு எல்லாம் நானும் வருத்தப்படறதில்லேஎன்னைப் பேசினான் - பேசினான் அவ்வளவு புகழ்ந்து பேசியிருக்கிறான்ஏதோ அவன் பத்திரிகை அதனாலே விற்குதுன்னு நினைச்சான் (சிரிப்பு). அதுக்கெல்லாம் நாம கஷ்டப்பட்டோமானால்நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னே சொன்னேனேசெருப்பிலே (என்னைஅடிச்சான் நான் பொறுத்துகிட்டுதான் போனேன்னுஎழுதினேன்.

கடலூருக்கு ஒரு மகாநாட்டுக்குப் போயிட்டுதிரும்பி வர்ரேன் நானுரிக்ஷாவிலே போனேன்இருட்டிப்போச்சிசின்னதா மழையோ பேயிதுடிராவலர்ஸ் பங்களாவுக்குத் தான் நான் போறேன்ஒரு கட்டிடத்திலே நின்றுகொண்டிருந்தான்அவன் காலிலே மரச்செருப்பு போட்டிருந்தான்ஒரு செருப்பை தூக்கி வீசிஎறிஞ்சான்அது ரிக்ஷா மேலேயே வந்து விழுந்ததுபார்த்தேன்மரச்செருப்பு நல்லாயிருந்ததுஅடே இன்னொன்னையும் போட்டிருக்கக் கூடாதா? (சிரிப்பு கைதட்டல்நிஜமா நடந்ததுங்கஅவன் அங்கேயே இருந்திருக்கிறான்என் கூட வந்தவன் யார்ரா அயோக்கியப் பயல் அப்படீன்னு சத்தம் போட்டான்அவனை ஏன் சத்தம் போடறேன்னேன்போயிட்டு திரும்பி வந்தேன்அதையும் இன்னொரு செருப்பையும் போட்டான். (சிரிப்பு)இரண்டுசெருப்பாச்சின்னேன்அதை ஒரு மாசம் இரண்டு மாசம் நான் பேசுகிற கூட்டத்திலே எல்லாம் அதைக் காட்டினேன்வீரமணி சொன்னாருநானும் தான் இருந்தேன் அப்போஅவரு கடலூர்காரர் தான்நானும் இருந்தேன் அப்போஅதைப் போட்டவன் யாருன்னு கூட எனக்குத் தெரியும் அப்படீன்னு கூடச்சொன்னார்என்னா ஆயிப்போச்சி அதனாலே.

 நான் சின்னாளப்பட்டியில் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன்நான் அப்ப காங்கிரஸ்காரன்கல்லு விர்விர்னு வருதுலைட்டு சிம்னியெல்லாம் உடைஞ்சிப் போச்சிநான் ஆரம்பிச்ச புதிசுஒரு கல்லு கையில் விழுந்ததுபோலீசாலே கூட்டத்தை அடக்க முடியலேபேச்சை நிறுத்துன்னான் போலீஸ்காரன்நான் நிறுத்த மாட்டேன்னேன்அவனா கூட்டத்தைக் கலைச்சிபோட்டான்எல்லாம் வீட்டுக்கு போக வேண்டியது அப்படீன்னுட்டான்அப்புறம் எல்லாம் எழுந்திரிச்சாங்கஎன்னை ஒரு வண்டியிலே உட்காரவைச்சி முன்னாலே கான்ஸ்டேபிளை உட்காரவைச்சிபின்னாலே அந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்து கிட்டுரயில்வே ஸ்டேஷனில் என்னை விட்டுட்டு அவன் போனான்கொஞ்ச நாள் கழித்து அதே ஊருக்கு என்னைப் பேச கூப்பிட்டான்எனக்கு பண்ணாத மரியாதை எல்லாம் பண்ணினாங்க.

எனவே தோழர்களே நீண்ட நேரம் உங்களை காக்க வைத்து விட்டேன்என்னைப் பாராட்டியவர்களுக்கு நான் நன்றி கூறி என் பேச்சை முடிச்சிக்கிறேன்வணக்கம்.


நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை