வீரமணிக்கு ஒரு சிலை!



அவ்வப்போது ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுவார் பெரியார். ஒரு சமயம், தமிழகத்தில் உள்ள அத்தனை கடவுள் மறுப்பாளர்களுக்கும் ஒவ்வொரு சிலை வைக்கமேண்டுமென்றார். திரு.வீரமணிக்கு ஒரு சிலை, இயக்க முன்னோடிகளுக்கு, சிலைகள் கடவுள் மறுப்பு வாசகங்கள். எங்கெல்லாம் கடவுள் சிலை உண்டோ அந்த அளவுக்கு கடவுள் மறுப்பாளர்களின் சிலை நிறுவினால்தான் சுயமரியாதை கருத்து மக்களைச் சென்றடையும் என்றார்.
தந்தை பெரியாரின் சிக்கனம்பற்றி சொல்ல வேண்டியதில்லை. தனக்கு ஒரு மருந்தோ களிம்போ எழுதிக் கொடுத்தால் கூட அது எவ்வளவு விலை, அதற்கு ஈடாக குறைந்த விலையில் மருந்து உண்டா என்று தனக்கு வேண்டிய மருந்துகளுக்குக்கூட கணக்கு பார்த்து செலவழிப்பார்.
தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தாலும் சில சம்பிரதாயங்களுக்கு ஏற்று நடப்பார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பற்றிய அவரது கருத்து மாறுபட்டது. தமிழை உருவகப்படுத்துவதில் அவருக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்பார்.
சாதாரண மக்கள் கூட அன்புடன் வீட்டில் ஏதாவது பலகாரம் கொண்டு வந்தால், உடனே அவர்கள் முன்னிலையிலேயே பிரித்து, ஒரு பங்கு சுவைத்து நல்லாயிருக்கு என்று பாராட்டி, அவர்களுக்கு உற்சாகத்தையும், மரியாதையையும் அளித்து மகிழ்விப்பார்.
- டாக்டர் .ராஜசேகரன்

தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை