அய்யா வேதனை
ஒருமுறை ஒரு பெரியவர், தந்தை பெரியார் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று விடுதலை அலுவலகத்திற்கு வந்தார்; அது அட்மிஷன் சீசன்; அதிகமானோர் வருவது வாடிக்கை. நான் விடுதலைக்கு அன்றைய நாள் தலையங்கத்தினை எழுதிக் கொண்டிருக்கிறேன்;
வந்த பிரமுகர் - பெரியவர் - எதிரே வந்தவுடன்,
அமரச் சொல்லிவிட்டு தலையங்கம் எழுதுவதைத் தொடர்ந்தேன்.
அது மாலை ஏடு; குறிப்பிட்ட நேரத்துக்குள் அது அச்சுக் கோர்க்கப்பட்டு அச்சிடப்பட்டு பத்திரிகை மாலை 4 மணிக்கு வெளியே செல்லவேண்டுமல்லவா, அதனால்!
வந்தவர் நான் எழுதும் தலையங்கத்தின் மேலேயே அந்தக் கடிதத்தை வைத்தார் - எழுதிக் கொண்டிருக்கும்போதே!
நான் அடைந்த வேதனை - எரிச்சல்,
கோபம் கொஞ்சநஞ்சமல்ல; அதைத் தள்ளி வைத்தேன். அவ்வளவுதான், அவர் தந்தை பெரியார் கடிதத்தை அலட்சியப்படுத்தினேன் என்று அய்யாவிடம் புகார் செய்தார். அய்யா அவர்கள் உண்மையை அறிந்து வேதனை அடைந்தார்!
- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், வ.எண். 44
Comments
Post a Comment