தொண்டறம்
தந்தை பெரியார் அவர்கள் தனது தள்ளாத வயதில் 95-லும், ஓய்வறியாது உழைத்தார்கள்;
நடமாட முடியாத உபாதை இருந்தபோதிலும் அதுபற்றிச் சிறிதும் கவலைப்படாது சுற்றுப்பயணம், ஒன்றரை மணிக்கும் குறையாத சொற்பொழிவு உரைகள்மூலம் தொண்டறம் புரிந்த நிலையில், அதற்கு அவர்கள் கூறிய சமாதானம் என்ன தெரியுமா?
ஒரு நாளைக்கு, நான் சாப்பிடும் உணவு, பழம் இவைகள்மூலம் ரூ.25-க்குமேல் ஆகிறது. சமூகம்தானே இதைத் தருகிறது. இதற்காகவே நான் உழைத்துக் கொண்டிருக்க வேண்டாமா? என்று உருக்கத்துடன் கேட்டார்கள்.
காரணம்,
மேலே சொன்னபடி அவர்கள் தன் உருவத்தை மட்டும் நிலைக் கண்ணாடி முன்னே நின்று பார்த்து மகிழ்வதிலேயே காலத்தைக் கழிக்காமல், சாளரங்களையும், கதவுகளையும் முழுதும் திறந்து வைத்துக்கொண்டு மற்றவர்களின் உருவங்களையும்,
அவர்களது நிலைகளையும் கண்டு, அதற்கான உதவிகளைச் செய்வதே தன் பணி என்று எண்ணினார்!
உவமைக்காக மட்டும் தந்தை பெரியார் அவர்கள் ஜன்னலைத் திறந்து பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டவர் என்பதல்ல; அவர்தம் அன்றாட வாழ்வில் கட்டிலில் அமர்ந்து இருக்கும் தந்தை பெரியார், ஜன்னல்கள் மூடப்படுவதை விரும்பாது, ஜன்னல்களைத் திறந்து வைத்து அதன்வழியே பார்ப்பதில்தான் அவர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள்.
- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 1
Comments
Post a Comment