அய்யாவின் இறுதிப் பேருரை பகுதி - 2

இனிமேல் நாம் இழிமகன்எனவேதான்மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டோம்அவைகளையெல்லாம் பார்த்தோம்மாற்றி ஆகணும்சட்டத்திலேயும்சாஸ்திரத்திலேயும் இருக்கிறதினாலேமுதல்லே அதைக் கேட்டோம்சட்டத்திலே இருக்கிறது ஒழியவேணும் என்றால்சட்டம் ஒழிந்தால் உண்டுசட்டத்திலே ஒழிக்கவில்லையானால்ஆட்சியை ஒழித்தால்தான் உண்டுஅவ்வளவுக்கு நாம் இப்போது பக்குவமாகணும்ஆட்சியை ஒழியும்படியாக இல்லாமல் பாதுகாத்துக் கொண்டான்தனியாக இருந்தால்எவனும் ஒன்னும் பண்ணமாட்டான்கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்று 15, 16 நாடுகளாகப் பிரித்தான்.

 அந்தந்த நாட்டைமற்ற நாட்டோடு சம்மந்தமில்லை என்று சொல்லிட்டான்அவனைப்பற்றி இவன் தெரிந்துகொள்ளக்கூடாதுஇவனைப்பற்றி அவன் தெரிந்துகொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டான்.

 16 மாகாணங்களில் ஜனங்கள் இருக்கிறார்கள்ஒருத்தருக்கு ஒருத்தர் சம்மந்தம் இல்லையேஅவனும்நானும் தாராளமாகப் பேசிக் கொள்ள முடியாதேஅவன் மொழி வேறு - இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் மலையாளம் பேசுவான்

இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் தெலுங்கு பேசுவான்இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் கன்னடம் பேசுவான்இன்னும் கொஞ்சம் தாண்டினால் மராட்டிஇன்னும் கொஞ்சம் தாண்டினால் குஜராத்திஇன்னும் கொஞ்சம் தாண்டினால் இந்திவங்காளிஅந்தந்த பாஷை ஒன்று சேராமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் பண்ணிவிட்டான்.

தனித்தனியாக இருந்தால் ஒன்று சேர்ந்துவிடுவான் என்று 15ம், 1 ம் 16 என்று அப்படியே நின்னுவிட்டான்

வேறு நாதி இல்லையேஇப்போது நாம் ஏற்பாடு பண்ணினோம்சூத்திரன் என்கிறதை ஒழிக்கணும் என்றுநாம் மாத்திரமா சூத்திரன்இந்தியாவில் உள்ள நாலரை கோடி மக்களில்ஏறக்குறைய மூன்று கோடி மக்கள் சூத்திரர்கள்தானே - முஸ்லிம்கிறிஸ்தவன் தவிரஅவர்கள் இரண்டு பேரையும் சேர்த்தால் இன்று ஒரு 50 லட்சம் கூட இருக்காதேகிறிஸ்தவர்  3 லட்சம் இருக்கலாம்முஸ்லிம் ஒரு 6 லட்சம் இருக்கலாம்இரண்டும் சேர்த்தால் 10 லட்சமாகும்மற்றவன் எல்லாம் சூத்திரன்பார்ப்பான் ஒரு இரண்டுமூணு லட்சம்தான் இருப்பான்அவ்வளவு பெரிய சமுதாயம் ஒன்றாக இருக்கும்போதே சிந்திக்க முடியவில்லை.

ஆகவேஇதை மாற்றியாகணும்பெரிய விஷயம்தான்பெரிய முயற்சி பண்ணணும்பெரிய முயற்சி பண்ணனும்என்ன அவசியம்அரசியல் சட்டமோ அரசாங்கம் நடத்துவதற்கு வேணும்ஒரு அரசாங்கம் நடக்கவேணும் என்றால்ஒரு சட்டம் இருக்கணும்ஒத்துக்கிறேன்அரசாங்கம் நடத்துவதற்கு சூத்திரன் இருக்கணுமோஅரசாங்கம் நடக்கணும்னா பார்ப்பான் இருக்கணுமோ - மனுஷன்தானே இருக்கணும்அமெரிக்காவிலே அரசாங்கம் நடக்கிறதுஅங்கே மனுஷன் தவிர வேற எவன் இருக்கிறான்பார்ப்பான் இருக்கிறானாசூத்திரன் இருக்கிறானாபறையன் இருக்கிறனாயார் இருக்கிறான் அங்கே?

ஆனதினாலேஅவன் வைத்திருக்கிற பாதுகாப்பெல்லாம் ஒண்ணு சேரக்கூடாதுஅவரவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிற கயிற்றை அறுத்துவிடக்கூடாதுஅடிமையாகவே இருக்கணும்அப்படி அடிமையாய் இருந்தால்நூற்றுக்குத் தொண்ணூறு பேரை 3 பேர் ஆளலாம்அதற்குத் தகுந்தபடி ஏற்பாடு செய்துகொண்டான்நாமதான் அதைப்பற்றி கவலைப்படுகிறோம்மாற்றியாகணும் என்கிறோம்.

நேற்று நடந்த மகாநாட்டுக்கு வேற கட்சிக்காரர்கள் யாரும் வரவில்லையேவரலாம் அல்லவாஅவனவன் எங்களுக்கு வந்து உதவி பண்ணலாமில்லேஒருத்தரும் வரவில்லைஎங்கள் ஆட்கள்தான்டில்லிக்காரன் சி.அய்.டி.யைப் போட்டுவிட்டான் - வேற கட்சிக்காரன் எவனாவது உள்ளே வருகிறானா பார் என்றுஅதைப் பார்த்து ஒருத்தனுமே வரவில்லைமந்திரிகளாஅவனாமற்ற கட்சிக்காரனா உம்வரவில்லைஇழிவு ஒழிய வேணும் என்று சொன்னால்இழிவுக்கு ஆளானவன் எல்லாம் வரணுமேவந்து உதவிக்கு நிற்க வேணுமேநாங்கள்தான்ஆனதினாலேவிஷயம் ரொம்ப முக்கியமானது மாறியே ஆகணும்மாறாவிட்டால் சாகணும்அந்த உணர்ச்சி உள்ளவன்தான் மிஞ்சுவான்மாறியாச்சின்னா சோறு தின்கணும்என்ன பண்ணியாவது வயிறு ரொப்பணும் அப்படி என்றால்அவனால என்னாகும்நினையுங்கள் நீங்கள்நம்மை அப்படிப் பண்ணிவிட்டான்.

நமக்கு மதம் என்றான்மதம் என்றால் என்னவென்று தெரியாதுநமக்குக் கடவுள் என்றான்கடவுள் என்றால் என்று தெரியாதுநமக்கு சாஸ்திரம் என்றான்சாஸ்திரம் என்றால் என்னவென்று தெரியாதுநமக்கு மனுதர்மப்படி என்றான்மனுதர்மம் ரூபாய்க்கு எத்தனைப்படி என்றுதான் தெரியும்ஒண்ணுமே தெரியாதுஆனால்அதற்கெல்லாம் நாம் அடிமை.

நான் கேட்கிறேன்பெரிய மதக்காரனையே கேட்கிறேன்இந்து மதம் என்றால் என்ன அர்த்தம்எப்ப வந்ததுஎவன் அதற்குத் தலைவன்என்ன அதற்குக் கொள்கைஅதற்கு என்று இருக்கிற சாஸ்திரம் என்ன?

கிறிஸ்துமதம் என்றால்கிறிஸ்து கடவுள். 2000 வருஷம் ஆயிற்று ஏற்பட்டுபைபிள் வேதம்இஸ்லாம் மதம் என்றால்முகமது நபி தலைவர்ஆயிரத்து நானூற்றுச் சில்லரை வருஷமாயிற்றுகுரான் இருக்கிறது சட்டம்.  வேதம் உனக்கு என்ன இருக்கிறதுயார் தலைவன்எவனோ ஒரு காலிப் பயலைப் பிடித்து அவனை ரிஷி என்கிறேஅவனை முனி என்கிறேஅவனை மகாத்மா என்கிறே அவனை வெங்காயம் என்கிறேஉனக்கு யார் இருக்கிறான்யார் அத்துப்படிமதத் தலைவன் என்றால் வசிஷ்டன் என்கிறேநாரதன் என்கிறேவிசுவாமித்திரன் என்கிறேஇன்னும் எவன் எவனையோ சொல்றஅவனுக்கு வயசு என்னடா என்றால், 5 கோடி வருஷம்மூன்று கோடி வருஷம் என்கிறேஉன் சாஸ்திரம் எப்படா எழுதப்பட்டது என்றால்அது மனுஷனாலே எழுதப்படவில்லை - கடவுளாலே எழுதப்பட்டது என்கிறேஎது நமக்குன்னு இருக்கிறது ஒரு ஆதாரம் சொல்லுங்களேன்.

கடவுள் என்று சொன்னான்நாம் சொல்கிறோம்கடவுளை உண்டாக்கினவன் முட்டாள் பயல் என்று சொல்றோம்மடப்பயல் என்று சொல்கிறோம்மற்றவனைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்துலுக்கனைப்பற்றிகிறிஸ்தவனைப்பற்றி அப்புறம் பேசுறோம்.

உன் கடவுளை உண்டாக்கினவன் யார்உனக்கு எங்கே  கடவுள் இருக்கிறான்கடவுள் தன்மை என்று ஒன்றைச் சொன்னேயானால்கடவுள் யோக்கியதை ஒன்றை சிந்திச்சியேனால்அந்தக் கடவுள் தன்மைப்படிஅந்தக் கடவுள் யோக்கியப்படிஎந்தக் கடவுள் இருக்கிறான் உனக்குகடவுளுக்கு உருவமில்லை என்றானேஎல்லாக் கடவுளுக்கும் உருவம்கடவுளுக்கு ஒன்றும் வேண்டாம் என்றாய்உன் கடவுளுக்குப் பெண்டாட்டிபிள்ளைவைப்பாட்டிசோறுகல்யாணம்கருமாதி எல்லாம் வேணும்மனுஷன்தானே அவன்மனுஷனுக்குப் பிறக்காத கடவுள் எது அய்யா உன்கிட்டே இருக்கிறதுமனுஷனுக்குக்கூடப் பிறக்கவில்லை என்று சொல்லவில்லைஎருமைக்குப் பிறக்காதவன்கழுதைக்குப் பிறக்காதவன்ஆனைக்குப் பிறக்காதவன்சிவனும் கடவுள் என்றால்எப்படிடா வந்தான் கந்தன் என்றால்சிவனும்அவன் பெண்டாட்டியும் லட்சம் வருஷம் வேலை பண்ணினார்கள்சினையாகி பிடுங்கிக் கொண்டார்கள்ஒழுகிற்றுஅதிலேருந்து வந்தான் என்கிறான்என்ன தைரியமாகஅவன் கடவுளைச் சொல்லுகிறான்

நம்மையெல்லாம் மனிதன் என்றா சொல்லுகிறான்சிவன் என்றால்அப்புறம் அவனுக்குப் பெண்டாட்டி என்னத்துக்குகடவுளுக்குபெண்டாட்டிகலவிபடுத்துக்கிட்டான்சாதாரணமாக மனுஷன் ஒரு நாள் பூராவுமா போவான்

ஒரு மணிநேரம் போவான்இரண்டு மணிநேரம் போவான்அதற்கே ரொம்பக் குளிகை சாப்பிடவேணும்இவன் என்னடா என்றால், 10 ஆயிரம் வருஷம், 20 ஆயிரம் வருஷம் தேவ வருஷத்தில்வேலை விட்டான்சினையாகவில்லை அவள்தேவர்கள் எல்லாம் வந்து பிடுங்கி விட்டுட்டார்கள்

அது கீழே சொட்டி விழுந்தது - அப்படி என்று ஒரு புராணம்இராமாயணம்அப்புறம் இன்னொரு பராணம்தேவர்கள் எல்லாம் வந்தார்கள்சும்மா இப்படியே பண்றியே அய்யாஇன்னும் இதிலே ஒரு பிள்ளை வந்தால்உலகமே கெட்டுப் போகும்வேலையை நிறுத்தப்பா என்று சொன்னார்கள்நடுவிலே எப்படியடா வேலையை நிறுத்துவேன் என்றான்நாங்கள் எல்லாம் பிழைக்கவேண்டாமாஎன்று தேவர்கள் எல்லாம் அழுதார்கள்அப்படியானால்அது போகுமடா வாய்க்காலாட்டம்எவனடா பிடிக்கிறது என்றான்நாங்கள் பிடித்துக் கொள்கிறோம் என்றார்கள்பிடுங்கினான்எல்லாருக்கும் கையிலே ஊற்றினான்விஷ்ணு எல்லாம் குடித்தான்இந்த மாதிரி கதை எழுதி அல்லவா கடவுளை உண்டாக்குகிறான்சிரித்தோம் நாம் - இப்படி உண்டாக்கித்தானே கடவுளை உண்டாக்கினான்அதிலே உண்டானவன்தானே கந்தன்.

கடவுள் என்றால்
அப்பா இல்லை,அம்மா இல்லைஉருவமில்லைகண்ணுக்குத் தெரியாதுகைக்குச் சிக்காது அப்படியெல்லாம் சொல்லிவிட்டான்ஒன்றும் வேண்டாம் என்கிறான் - ஆறு வேளை சோறு என்கிறான்கல்யாணம் என்கிறான்வருஷா வருஷம் கல்யாணமடா என்கிறான்.

கல்யாணமிருந்தும் அதற்கு ஒரு வைப்பாட்டிடா என்கிறான்நம்மை ஏதாவது மனுஷன் என்று நினைத்து அவன் சொன்னானோசொன்னதைக் கேட்டுக்கோடா மடப் பயலே என்றான்சும்மா ஊட்டிவிட்டான்கடவுள் ரொம்ப அன்பானவர்கருணையே வடிவானவர் அப்படி என்கிறான்கடவுளைப் போய்ப் பார்த்தால்அந்தக் கடவுள் கையில் அரிவாள்கொடுவாள்வேலாயுதும்சூலாயுதம்ஈட்டி - கொலைகாரப் பயல்களுக்கு என்ன வேணுமோ அதுவெல்லாம் கடவுள் கையில் இருக்கிறதுகடவுள் கருணையே உடையவர் என்கிறான்எந்தக் கடவுள் மனுஷனைக் கொல்லாதவர்அசுரனைக் கொன்றார்ராட்சசனைக் கொன்றார்மனிதனைக் கொன்றார்மூன்று கோடி பேரைக் கொன்றார்

கோடி பேரைக் கொன்றார் என்று கசாப்புக் கடைக்காரன் மாதிரிப் பண்ணிப் போட்டுஅவரைக் கருணை உள்ளவர் என்றால் எப்படிஇப்படி எல்லாம் சொல்லிநம்மைக் கழுதையாக்கிப் போட்டான்ஒரு உணர்ச்சியும் இல்லாதவனாக்கிப் போட்டான்கடவுள் என்றால் கல்லைக் கும்பிடவேண்டியதுபார்ப்பான் காலிலே விழ வேண்டியதுஅவனுக்குக் காசு கொடுக்கவேண்டியது.

நான் வந்துஇந்தப் பிரச்சினையிலேகடவுளைக் கும்பிடாதீர்கள் என்று சொல்லவில்லைநன்றாக நினைச்சுக்குங்கோஇந்தப் பிரச்சினையிலேநாங்கள் கடவுளைக் கும்பிடாதீர்கள் என்று சொல்லவில்லைகடவுளை நீங்கள் நினைக்காதீர்கள் என்று சொல்லவில்லைகடவுள் என்றால் என்ன என்று சொல்லுங்கள் - அவ்வளவுதான் நாங்கள் சொல்லுகிறோம்ஒன்றுமே இல்லாமல்எந்த முட்டாளாவது சொன்னான் என்றால்நினைத்ததெல்லாம் அரச மரம் கடவுள்வேப்ப மரம் கடவுள்பல்லி கடவுள்முடக்கான் கடவுள்பாம்பு கடவுள்அப்புறம் நினைத்ததெல்லாம் கடவுள்அது கடவுள் சங்கதியா?  அது முட்டாள்தனம்பைத்தியக்காரச் சங்கதியாஇந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு நம் வேதம்நம் பணம்நம் அறிவு எவ்வளவு நாசமாகிறதுஇவ்வளவும் பண்ணியும் தேவடியாள் மகன் என்கிற பட்டமல்லவா நம் தலைமேலே  இருக்கிறது?

ஆகவேதான்எந்தச் சங்கதி எப்படி ஆனாலும், ..................................................................................... நியாயமானது என்பதற்கு என்ன ஒரு உதாரணம் உங்களுக்கு வேண்டுமானால்இன்றைக்கு எத்தனை நாளாகிறது? 10 நாளாகிறதுநல்லா கவனிக்கணும்இரகசியமா இல்லை.

பத்தாயிரம் பேருக்கு மேலே வந்தார்கள். 30 பத்திரிகைக்காரர்கள் வந்தார்கள்எல்லாத் தீர்மானத்தையும் அவரவர் பத்திரிகையில் போட்டார்கள்இந்தியா பூராவும் பரவிஅடுத்த நாளே பரவியதுநான் கேட்கிறேன்கவனியுங்கள்இந்தப் பத்து நாளாவது ஒருவனாவது இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினானாஎந்தப் பத்திரிகையிலேயாவது செய்தி வந்ததாஏன் சொல்லுகிறேன் - நாம் பண்ணினது அவ்வளவு நேர்மையான காரியம்

எவனாலேயும் ஆட்சேபிக்க முடியவில்லைஎவன் தைரியமாகச் சொல்லுவான்நீ தேவடியாள் மகனாகத்தான் இருக்கணும் என்றுஅவ்வளவு நேர்மையான காரியத்தை நாம் செய்திருக்கிறோம்பண்ணிப் போட்டோம்இதிலேயே நாம் வீரனாக மாட்டோம்நாளைக்கு இதற்குப் பரிகாரம் பண்றத்திற்கு கிளர்ச்சி பண்ணுகிறோமேஅதிலேதான் நாம் யார் என்று காட்டிக்கொள்ளவேணும்.

பண்ணனும்நாளைக்கு கிளர்ச்சி பண்ணினால் அவன் பிடிப்பான்பிடிக்கவில்லையானால் பண்ணிக்கொண்டு இருப்போம்பிடிக்க ஆரம்பித்து விட்டான் என்றால், 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று ஜெயிலுக்குப் போவோம்நாம் தயாராய் இருக்கிறோம்காரியம் முடிகிறவரைக்கும் ஜெயிலிலே வேணுமானாலும் இருக்க தயாராய் இருக்கிறோம் என்று நாம் காட்டணும்அப்புறம் அவன் பரிகாரத்திற்கு வரணும்வரவில்லை என்றால்,  இந்தச் சாக்கை வைத்துநீ போப்பா வெளியேஉனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்நீ 2000 மைல், 1500 மைல் தூரத்திலே இருக்கிறேஉன் பேச்சு எனக்குப் புரியாதுஎன் பேச்சு உனக்குப் புரியாதுஉன் பழக்கம் வேறேஉன் வழக்கம் வேறேஉடன் நடப்பு வேறே  - எனக்குப் புரியாதுமரியாதையாகப் போரகளை வேணாம்என்னத்துக்காக இவ்வளவு தூரத்திலே இருக்கிறவன் எங்களுக்கு இராஜாவாகணும்நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நட்டம்எங்களுக்கு என்ன உப்பு இல்லையாதண்ணீர் இல்லையாமலை இல்லையாகாடு இல்லையாசமுத்திரம் இல்லையாஇல்லை நெல் விளையவில்லையா?

கம்பு விளையவில்லையாஎன்ன இல்லை எங்குளுக்குஉன்னாலே எனக்கு என்ன ஆகுதுதேவடியாள் மகன் என்னும் பட்டத்தைத் தவிரநீ எங்களுக்குப் பண்ணின நன்மை என்னமரியாதையாகப் போ!  அவ்வளவுதானய்யா நாம் கேட்கிறோம்இது எப்படி அய்யா தப்பாகும்இதனாலே எப்படி நாம் கெட்டவனாவோம்இதனாலே நாம் எப்படி அரசுக்கு விரோதமாவோம்?  கவனியுங்கள்தாய்மார்களேதோழர்களேஇந்த விஷயங்களையெல்லாம் முதலிலே சொன்னோம்இது நம்ம கடமை. 25 ஆம் தேதி ஆரம்பிப்போம்மளமள மளவென்று வரணும்என்ன சொல்கிறோமோ அதைச் செய்யணும்சட்டங்களை எரிக்கிறது முதற்கொண்டுமறியல் பண்ணுறது முதற்கொண்டு இன்னமும் பல காரியங்கள் திட்டம் போட்டுச் செய்யணும்.

கலகத்துக்குப் போகமாட்டோம்எவனையும் கையாலே தொடமாட்டோம்எவனாவது அடித்தாலும்பட்டுக் கொள்வோம்திருப்பி அடிக்கமாட்டோம்ஞாபகத்திலே வைத்துக்கொள்ளுங்கள்நான்நீ என்று மீசையை முறுக்கக்கூடாதுஅடித்தால் பட்டுக்கணும்போலீஸ்காரன் இருப்பான்அதிகமாக அடிக்காமல் பார்த்துக் கொள்வான்அப்புறம் என்னத்துக்கு நாம் ஒருத்தனை அடிக்கப் போகணும்நாம் யாரோடு சண்டைப் பிடிக்கிறோம்?

நான் தேவடியாள் மகனாக இருக்கக்கூடாது உன் ஆட்சியிலேஉன் சட்டத்திலேஇருக்கணும் என்றால்உன் ஆட்சி மாறும் உன் சட்டத்தை நெருப்பு வைத்துக் கொளுத்துகிறேன்.  முன்னையே நான் கொளுத்தினவன்தான்ஆனதினாலேதோழர்களேபக்குவம் அடையணும் நாம்எதற்காக இங்கே நான் நாத்திகப் பிரச்சாரம் பண்ணவரவில்லைகடவுள் இல்லை என்று உங்களுக்குச் சொல்வதற்காக வரவில்லைஅது வேறேநாங்கள் பண்ணிக்கிறோம்அவனவன் நம்பட்டும்ஆராயட்டும்இருக்கட்டும்முட்டாள்தனமான காரியங்கள்பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்கள்மானத்துக்குக் கேடான காரியங்கள் செய்கிறதற்கு நாம் இடம் கொடுத்துக்கிட்டுநாம் மனுஷனாக வாழணுமா?

மந்திரி ஆகணும் என்றால் வாழ முடியாது - ஆகிறவன் ஆகிட்டுப் போறான்சட்டசபை மெம்பர் ஆகணும் என்றால் ஆக முடியாது - ஆகிப் பொறுக்கித் தின்கிறவன் தின்னுட்டுப் போறான்இது இரண்டும் வேணாம் என்கிறவன் நாமே உறைத்து இருக்கலாமாஇல்லையாஇத்தனைப் பேருக்குமா மானம் இருக்காதுஆனதினாலேதயவு செய்து நீங்கள் விஷயங்களைத் தீவிரமாகக் கவனிக்கணும்ரொம்பத் தீவிரமாய்க் கவனிக்கணும்ஜெயித்தே ஆகணும்நான் சொல்கிறேன்என்று கேலி பண்ணாதீர்கள் - நீ என்ன நாளைக்கு சாகப் போறேதுணிந்து வந்திருப்பாய் என்றுநானே பண்ண வேணும் என்று இல்லைநீங்கள் பண்ண வேண்டிய காரியத்தைத்தானே நான் செய்கிறேன்அதனாலே எல்லோரும் துணியணும்மளமளவென்று கலந்துகொள்ளணும்ஆண் பிள்ளைகள் வர முடியவில்லை என்றால்அவர்கள் வீட்டுப் பொம்பளைங்களை அனுப்புங்கள்அனுப்ப முடியவில்லை என்றால்ஒரு நாலு பேரைப் பிடித்து அனுப்புங்கள்நீ போ எனக்காக என்றுநாம் எல்லோருமாகப் பாடுபட்டோம் என்று தெரியணும்.

நான் என்ன செய்கிறேன்இந்தச் சாக்கிலே நம்ம நாடு நம்மளது ஆகிடாதாஅவ்வளவுதான்நாம் விட்டது தப்புஅயோக்கியப் பசங்களுக்கு இடம் கொடுத்தோம் - காங்கிரசுப் பயல்களுக்குஅவன் பார்ப்பான்அதிலே பொறுக்கித் தின்னப் போனவன் நம்ம ஆளுஅதிலே முக்கால்வாசிப் பேர் பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன் என்று ஒப்புக்கொள்கிறவன்கள்அவர்களாலே கோளாறாகிப் போச்சு - கலகம் பண்ண முடியவில்லை அப்பொழுது.

நானும் என்னாலானவரைக்கும்தான் கலகம் பண்ணினேன்ஒரு நாட்டுக்காரனாகப் போய்விட்டேன் நான். 16 நாடுகளிலே தமிழ்நாடு ஒரு நாடுஅதிலே பத்துக் கட்சிகளிலே திராவிடர் கழகம் ஒரு கட்சிஎன்ன ஆகும் எங்களாலேமற்ற நாட்டுக்காரன் எல்லாம்புரியவே இல்லை அவனுக்குசூத்திரன் என்றால் என்ன தப்பு என்கிறான்சூத்திரன் இல்லை என்றால்நாம் யார் என்கிறான்பிராமணன் என்றால்மகராஜ் என்கிறான்தேவர் என்கிறான்அதிலே ஊறி இருக்கிறான்இப்போது அவன் எல்லாம் மாறி இருக்கிறான் என்று சொல்ல முடியாது.

நாம் செய்கிற தியாகத்தினாலேநாம் எடுத்துக்கிற முயற்சியினாலே - மற்றவன் எல்லாம் நம்கூட வருவான். 5 ஆயிரம் பேர் ஜெயிலே இருக்கிறார்கள், 10 ஆயிரம் பேர் ஜெயிலே இருக்கிறார்கள் என்றால்ஏண்டா இருக்கிறார்கள் என்று கேட்பானில்லைபார்ப்பானுடைய தேவடியாள் மகன் என்று இருக்கிறதற்கு இஷ்டமில்லை என்றுஜெயிலில் இருக்கிறார்கள் என்றால்அடே நாமும் என்ன சங்கதிஎன்று  நினைப்பானில்லைஅதனாலே கட்டாயம் கவனிப்பான்ஒருத்தனும் கவனிக்காவிட்டாலும்தெலுங்கனும்கன்னடியனும்மலையாளியும் கவனிப்பான்மலையாளிகளிலே பெரும்பாலும் பார்ப்பானுடைய தேவடியாள் மகன்தான்அதிலே ஒன்றும் ஆட்சேபணை இல்லைதிருட்டத்தனமல்லஅவனே பெருமை பேசிக்கொள்வான் - நான் யார் தெரியுமாநான் இந்த நாயர் பசங்களுக்கா பிறந்தேன்நான் அந்தப் பிரமாணனுக்குப் பிறந்தேன் என்பான்காசு கொடுத்துப் போவான்அவனுக்கும் இப்பொழுது உணர்ச்சி வந்துவிட்டதுஎங்களோடு சேர்ந்து பேசுகிறான்நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறான்அப்போதுமானம் என்றால்ரொம்ப ஒவ்வொருவனுக்கும் உணர்ச்சி வந்துதான் தீரணும்தெலுங்கன் இருக்கிறான்நாளைக்குக் கன்னடியனும் வருவான்அப்புறம் அடுத்தவன்அடுத்தவன்அடுத்தவன் வர முடியும்சங்கதி தெரியாது அவர்களுக்கு -  அதற்கு எவ்வளவு இழிவு என்பது புரியாதுநம் இயக்கத்தினாலே புரியும்எல்லோரும் இருட்டடிக்கமாட்டான்இத்தனாயிரம் பேர் ஜெயிலுக்குப் போனார்கள்,  அடி தின்றார்கள்இதைப் பண்ணினார்கள் என்று எழுதுகிறபோதுஅடேநான் என்றால் என்னஎன்று கவனிப்பானல்லஎல்லோரும் ஏககாலத்திலே வருவார்கள் என்று சொல்ல முடியாதுகொஞ்சம் கொஞ்சமாகத்தான் வருவார்கள்கவனித்தாகணும்.

தமிழ்நாடு தனியாகப் பிரிந்தாலும், 10 வருஷத்துக்குள்ளே நாம் எல்லாம் 100 வருஷம் இருப்போம்ஆகாயத்திலே ஒவ்வொருவரும் பறப்போம்உங்களுக்குத் தெரியாதுஎப்படி பறப்போம் என்று தெரியாது. 400 பேர், 500 பேரைத் தூக்கிக் கொண்டு பறக்கிறதில்லயா ஆகாயக் கப்பல்ஒரு மனுஷனை ஏன் தூக்கிக் கொண்டு பறக்காதுதனித்தனியாக வாங்கி முதுகிலே கட்டிக்கொண்டால்ஏறுது மேலே விர்ரென்றுஇறங்கு என்கிற பக்கம் இறங்குது.

இப்போதே, 10 வருஷத்துக்குள்ளேயே நமக்கு 10 வருஷம் உயர்ந்து போயிற்றேஆகவே தோழர்களே, 1952 லே நம் சராசரி வயசு 25. இன்றைக்கு 52 சராசரி வயது. 1952-க்கும், 1972-க்கும் 20 வருஷந்தான்இந்த 20 வருஷத்திலே 20 வருஷம் உயர்ந்து விட்டது நம் ஆயுள். 2000 வயது வருகிறபோதுநாம் 75 வயது இருப்போம்வெள்ளைக்காரன் 100 வருஷத்துக்கு மேலே இருப்பான்சாகமாட்டான்சாகிறதற்கு அவசியம் இல்லைஎல்லா நோய்க்கும் மருந்து வந்துவிட்டதுஏதோ 2, 3 நோய்க்கு இல்லைஅதுவும் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

ஆனதினாலேநல்ல வளர்ச்சியான காலத்திலே இருக்கிறோம்உலகம் வளர்ந்து கொண்டே போகிறதுகொஞ்ச நேரத்திற்கு முன்னே சொன்னேன் பாருங்கள் - நேற்று வந்த பத்திரிகையிலேமுந்தா நாள் வந்த பத்திரிகையிலேகுழந்தைகளை உண்டாக்குகிறான்முட்டையை எடுத்து வைத்தால்கூட 10, 20 நாளிலே அது குஞ்சு பொரித்துவிடுகிறதுமனுஷனின் முட்டையை எடுத்து வைக்கிறான், 10 வருஷத்துக்கு அப்புறம் குஞ்சு பொரிக்கணும் என்றால்பொரிக்கிறது அதுஇன்றைக்கே பொரித்து ஆகணும் என்று இல்லைபெண்கள் இந்திரியம் கொஞ்சம்அதை ஒரு டப்பியிலே - ஆண்கள் இந்திரியம்அதை ஒரு டப்பியிலே பாதுகாக்கிறான்பேங்க் என்று அதற்குப் பேர்அந்த பேங்கிலே வைத்துப் பாதுகாக்கிறான்என்றைக்குப் பிள்ளை வேணுமோ அன்றைக்கு இரண்டையும் எடுத்து வைத்தால்கியாகியா என்று கத்துகிறதுஇதெல்லாம் பொய் என்று சொல்ல முடியாதுபெரிய பிரசித்தியான பத்திரிகையிலே போட்டோவோடு வருகிறதுஅப்புறம் 5000 மைல் பறக்கிறான், 10 ஆயிரம் மைல் பறக்கிறான்சந்திர மண்டலத்துக்கெல்லாம் போய்விட்டு வந்தான்இதெல்லாமா பொய்?

ஆகையினாலேநாம் முதலாவது இப்போ மானத்துக்காகப் போராடுகிறோம்.  வேற எதுக்காகவும் இல்லைஇழிவு - தேவடியாள் மகன், ......... வைப்பாட்டி மகன்தாசி புத்திரன் அப்படின்னு சட்டத்திலே இருக்கிறது.  இது ஒழிந்து ஆகணும் என்று போராடுகிறோம்இது ஒருத்தனுடைய மானமே அல்ல பார்த்தாலும்எல்லோருக்கும் இதிலே உணர்ச்சி வரணும்வரணும் அவனவன் தேடிக்கிட்டுஜெயிலுக்குப் போனா பட்டினியாகவா போடுவான்இந்தக் கிளர்ச்சி நடந்தால்கிளர்ச்சி நடத்தியவர்களைப் பட்டினியாகவா போடுவான்ஜெயிலுக்குப் போகிறவரைக்கும் சோறு போடுவோமேநிறைய அரிசி அனுப்பியிருக்கிறான்ஒருத்தன் 10 மூட்டை, 5 மூட்டை இப்படி அனுப்பியிருக்கிறார்கள்பணம் கொடுத்திருக்கிறார்கள் - 50, 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும்லட்சம் பேரை ஜெயிலுக்கு அனுப்பலாம் - அவ்வளவு வசதி இருக்கிறதுஇன்னும் கொடுப்பார்கள்யார் மாட்டோம் என்பார்கள்யார் ஜெயிலுக்குப் போகப் பயப்படுகிறானோபோக முடியவில்லையோ - வைஎன்றால் சொன்னதை வைத்துவிடுவார்கள்ஜனங்களுக்கும் பயன்படும்உலகத்துக்கே ஒரு வழிகாட்டியாவோம் நாம்நம் சமுதாயமே புது உலகமாகும்.

தமிழன் இந்தியாவிலேயே முதல் நம்பராக இருப்பான்இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய சக்தி உடையவனாகி விடுவான்அனேகக் கோளாறுகள் இருக்கின்றனஅதெல்லாம் சுலபமாய் மாறிவிடும்அது செய்கிறவனுடைய லட்சியத்தைப் பொறுத்து இருக்கிறதுசெய்கிறவனுடைய துணிவைப் பொறுத்து இருக்கிறதுதாய்மார்கள் ரொம்ப நமக்கு உதவி பண்ணுவார்கள்அம்மா இப்போது இந்தச் சண்டை உங்களுக்காகத்தான்உங்களைத்தான் பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று சொல்லிவிட்டான்ஆனதினாலேநீங்கள் ஏதோ உங்களால் ஆனதை இந்தக் காரியத்திலே செய்யுங்கள் என்று நாம் சொன்னால்.

எனவேதோழர்களேநாம் இப்போது அதிசயமாக ஒன்றும் போராடவில்லைமதம் என்கிறது இல்லையாராலேயும் இப்போது எடுத்துச் சொல்ல முடியவில்லைகடவுள் என்கிறதும் தப்புஎவனும் கடவுளுக்கு அர்த்தம் சொல்லுகிறவனும் இல்லைஇன்றைக்கு நாம் கும்பிடுகிற ராமன்கிருஷ்ணன்சிவன்பிரம்மாமற்றக் கடவுள் அதுஇது இந்தக் குப்பைக் கூளமெல்லாம் கடவுளே அல்ல - பார்ப்பானாலே உண்டாக்கப்பட்டவையேஅவைகளைஅவன் முட்டாளாயிருக்கிறபோது உண்டாக்கினதினாலேஅதற்கு மனுஷத் தன்மை கொடுக்கிறதற்கே இல்லை - சும்மா குடிகாரன் எப்படி எழுதுவானோ அப்படித்தான் எழுதினான்.

சாதாரணமாக இப்போது இராமனைப்பற்றி - இராமாயணத்தைப்பற்றி மனுஷனிலே சிந்திக்காதவன் எவனும் இல்லைவெகுபேர் கடவுள் என்றுதான் நினைக்கிறான்அந்த இராமாயணத்திலே எழுதி இருக்கிறான் - இராமன் யாருக்குப் பிறந்தான் என்றால்அவனுடைய அப்பனுக்குப் பிள்ளை இல்லாமல் போய்அவன் பெண்டாட்டிகளைப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்துஅந்தப் பார்ப்பானே வேலை பண்ணினான் என்று சொல்ல இல்லைமுதலிலே குதிரை வேலை பண்ணி அவளுக்கு உணர்ச்சி ஊட்டிஅப்புறம் இவன் வேலை பண்ணினான்பாலகாண்டத்திலே பாருங்கள் - யாகம் பண்ணினவுடனே அந்தப் பெண்டுகளைக் குதிரையோடு விட்டான்உயிரான குதிரையாக இருந்தால் ஏதாவது உதைத்துப் போடும் அன்றுசாகடித்துஅதனுடைய ஆண் குறியை எடுத்து இராமனின் அம்மாளுடைய பெண் குறிக்குள்ளே விட்டு ஆட்டிஅவளுக்கு உணர்ச்சியை ஊட்டினான்அப்புறம் பார்ப்பானை விட்டான்அவன் சினை பண்ணினான்பணம் வாங்கிக் கொண்டு போனான் என்று இருக்கிறதுஞான சூரியன் என்கிற ஒரு புத்தகம் இருக்கிறதுஅதை வாங்கிப் படியுங்கள்தெரியும்.

ஆகவேகடவுளை மனுஷன் என்று அவன் எழுதவில்லை தேவடியாள் மகனாக - விபச்சார மகனாக உண்டாக்கினான்இதாவது பின்னிப் பின்னிச் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது - இராமன் பெண்டாட்டியை என்ன பண்ணினான்இராவணன் சினை பண்ணி, 4 மாத சினையோடு புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்புருஷனும் ஒத்துக்கிட்டான்அவளும் ஒத்துக்கிட்டாள் - அங்கே போனேன்அவன் பண்ணிவிட்டான்நான் என்ன பண்ணுகிறதுஎன்று சொல்லி விட்டாள்நீ அந்த மாதிரிப் போனவள்போடி காட்டுக்குஎன்று அனுப்பி விட்டான்இரகசியமாய் ஒன்றும் இல்லையே - சாமி பெண்டாட்டியைப் பற்றித்தானே அப்படி எழுதி இருக்கிறான்மற்றக் கடவுள்களைப் பற்றிச் சொல்லணுமாநிறைய இருக்கிறது.

ஆகவேநாங்கள் சொல்வது சுயநலத்துக்காகச் சொல்லவில்லைஉங்களை ஏய்க்கிறதற்காகப் பொய்யையும்பித்தலாட்டத்தையும் இட்டுக் கட்டிப் பேசவில்லைஎல்லா ஆதாரங்களையும் கையிலே வைத்துக்கிட்டுத்தான் பேசுகிறோம்உள்ளபடியேஅவர்களுக்கு வாய்ப்பு இல்லை - மடையனாய் இருந்தான் 2000, 3000 வருஷத்துக்கு முன்னேஅன்றைக்கு உண்டாக்கினான் இந்தக் கதைகளைஅன்றைக்கு அவனுக்கு அக்காள்தங்கை என்று இல்லைஅம்மாள்மகள் என்று இல்லை - சரி சமமாகப் புழங்கினான் - அதற்கேற்றாற்போலவே கடவுளையும் உண்டாக்கி விட்டான்.

பிரம்மா உண்டாக்கினான் என்றால்என்ன என்று எழுதி இருக்கிறான்பிரம்மா அப்பன்அவன் பெண்டாட்டி சரஸ்வதி அவனடைய மகள்இரண்டு பேரும் சேர்ந்தார்கள்இப்படிக் கற்பனை பண்ணி இருக்கிறான்இதுவெல்லாம் உண்மையாய் இருக்காதுஅந்த மானங்கெட்ட காலத்திலேஅறிவில்லாதகாட்டுமிராண்டிக் காலத்திலே உற்பத்தி பண்ணிய சாதனங்கள்நம் முட்டாள்தனத்தினாலேயும்அவன் கெட்டிக்காரத்தனத்தினாலேயும் இதைப் பாதுகாத்துக் கொண்டே வந்துவிட்டான்எவனாவது நாளைக்கு வந்தால் என்ன பண்ணுகிறதுஎன்று நினைத்து நிறையக் கோவிலைக் கட்டிப் போட்டான்நிறையச் சாமிகளை வைத்துவிட்டான்மறந்திடாமல் இருக்கிறாற்போல நித்தமும் 4 வேளை, 5 வேளை பூசை என்கிறான்வாரத்திற்கு இரண்டு நாள் உற்சவம் என்கிறான்வருஷத்துக்கு ஒரு தடவைஇரண்டு தடவை கல்யாணம் என்கிறான்.

மனிதனைச் சரியாக அதிலேயே முட்டிக்கிட்டு இருக்கிறாற்போல ஏற்பாடு பண்ணிச் செலவு பண்ண வைக்கிறான்பாதுகாக்கிறார்கள்இவ்வளவு பாதுகாப்போடு செய்தால் ஒரு கழுதையைக்கூட சாமி ஆக்கிவிடலாமேஅவ்வளவு முயற்சி பண்ணுகிறான்அவன்நம் ஜனங்கள் அதற்கு ஏமாந்து போகிறார்கள் - அந்த முயற்சியிலேயே பல உணர்ச்சிகள் - சாமிக்கு என்று போகாவிட்டாலும்வேடிக்கை பார்க்கிறதற்கு என்று போகிறான்கட்டிப் போட்டு இருக்கிற பெண் பிள்ளைகள் எல்லாம் உற்சவம் என்றால்தான் கோவிலுக்குப் பார்க்கப் போக முடிகிறது.

அங்கே போனால்தான் 4 ஆண் பிள்ளைகளோடு உராய முடிகிறதுவீட்டிலே இருந்தால் என்ன வேலை என்று மிரட்டுவான் புருஷன்அங்கே போய்விட்டால் - வா என்பான் புருஷன் - வர முடியலையேநசுக்கிறானேநசுக்கிறானே என்பாள் அவள்வாவா வா முட்டிக்கிட்டு வாஎன்பான் அவன்அந்தச் சுகமெல்லாம்பெண்டாட்டியைக் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போனால்தான் அவன் அங்கே அடைகிறான்அது பழக்கமாய்ப் போயிற்றுஎல்லாருடைய பெண்டாட்டியும் அந்தக் கதி ஆனதினாலே எவனும் பரிகாசம் பண்ணுகிறதற்கு இல்லைஇப்படிப்பட்ட காரியங்களினாலேஅது உயிரைப் பிடித்துக் கொண்டு இருக்கிறதுநாம் அதற்குத் தகுந்தபடி வேறே ஏற்பாடெல்லாம் பண்ணினால் பெண்டுகள் திரும்பி விடுவார்கள்.

எனவேஅருமைத் தோழர்களேநேரமாயிற்றுமணி 10-க்கு மேல் ஆகிவிட்டதுஏதோ எனக்குத் தோன்றினதைச் சொன்னேன்முக்கியமாய்ச் சொன்னதினுடைய கருத்தெல்லாம்நாளைக்கு நடக்கப் போகிற கிளர்ச்சியைப்பற்றி - அதனுடைய தத்துவம் என்னஅவசியம் என்னஎன்கிறதை விளக்கினோம்நம் கடமை என்ன என்கிறதை நீங்கள் சிந்திக்கவேணும்.

உங்கள் கடமை என்றால்உங்கள் ஒருவரைப் பொறுத்ததல்லதமிழர் என்று சொல்லுகிற நாம் இத்தனைக் கோடி மக்களையும் பொறுத்ததுபிறகு நாம் வட்டியும்முதலுமாய் உயரலாம் - ஒன்றும் தேங்கிப் போகாது நம் நாட்டு முன்னேற்றம் என்று உங்களை வணக்கத்தோடெல்லாம் கேட்டுக் கொண்டுஇந்த ஏற்பாடு பண்ணி இவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்ததற்கெல்லாம்என்னைக் காது கொடுத்துக் கேட்டதற்கு என்னுடைய மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.
வணக்கம்!


(19.12.1973 அன்று சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் அவர்கள் 

ஆற்றிய இறுதி பேருரை)

அய்யாவின் இறுதிப் பேருரை பகுதி - 1

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!