பி.ஜே.பி. ஒரு பேரபாயம்!


மைபொதி விளக்கே யன்ன மனத்தினுள் கருப்பு வைத்து பொய்த்தவ வேடம் பூணல் என்ற கூற்று பி.ஜே.பிக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்.
வெளிப்பார்வைக்கு நல்ல அமைப்பாகவும், நல்லவர்களைக் கொண்டதாகவும் காட்டிக் கொள்ளும் பி.ஜே.பி.யின் அடித்தளம் மதவெறி, வன்முறை, ஆரிய ஆதிக்க முனைப்பு இவையே!
வெளிப்படையாக தன் உருவத்தைக் காட்டுகின்றவர்களைவிட, மனத்துள் இருட்டு வைத்து வெளியில் நல்லதாக நடிக்கும் பேர்வழிகளே மிகமிக ஆபத்தானவர்கள். அந்த நிலை பி.ஜே.பி.க்கு சாலப் பொருந்தும்.
பிள்ளை பிடிக்கின்றவன் மிட்டாய்க் காட்டுவது போல, மீன் பிடிக்கின்றவன் இரை காட்டுவதுபோல, சில கவர்ச்சித் திட்டங்களைக் காட்டி இந்துக்கள் என்ற போர்வையில் பெரும்பான்மை மக்களை அடிமை கொள்வதே - தங்கள் நலத்திற்கு இரையாக்குவதே பி.ஜே.பி. வகையறாக்களின் பிரதான இலக்கு.
படித்த முட்டாள்கள் பலர் நினைத்துக் கொண்டிருப்பதுபோல, பி.ஜே.பி. பிற்போக்குக் கட்சி என்பதோடு, இந்த நாட்டின் பாதுகாவலனோ, ஏன் இந்துக்கள் என்போரின் பாதுகாவலனோ கூட அல்ல. அவர்கள் அழிவுப்பாதைக்கு அடித்தளம் இடுபவர்களே தவிர, வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுப்பவர்கள் அல்ல.
ஆட்சியைப் பிடிக்கும் வரை வளைந்து நெளிந்து, குனிந்து, கூத்தாடி, கோழை கும்பிடுபோட்டு, இனிக்கப் பேசி, எளியோருக்காய் பேசி, பதவி தந்து, பல்லிளித்து சாகசம் புரிந்து சாதுர்யமாய் பலதரப்பு ஆதரவையும் பெற்று, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, மெல்ல மெல்ல ஆரிய ஆதிக்கத்தை ஏற்படுத்துவதே அவர்கள் இலட்சியம்.
அதிகாரத்தின் முக்கிய பதவிகளை ஆரிய பார்ப்பனர் (ஆர்.எஸ்.எஸ்.)களுக்கு அளித்து, இராணுவத்தில் கூட ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளை உட்புகுத்தி, அதன்மூலம், பெரும்பான்மை மக்களை மீண்டும் அடிமைப்படுத்திவிட வேண்டும் என்பதே பி.ஜே.பி.யின் செயல் திட்டமாகும்.
அதை அடைகின்ற வரை அவர்கள் எத்தகைய அணுகுமுறையும், அரவணைப்பும், கவர்ச்சியும் காட்டுவர். தாழ்த்தப்பட்டவரை பி.ஜே.பி. தலைவராகப் போடுவது கூட அந்த அடிப்படையில்தான்.
தான் அடிமை கொள்ளப் போகும் பேரின மக்களின் ஆதரவுடனே, அவர்கள் தோள்மீது ஏறியே அவர்களை அடிமை கொள்ளும் மோசடித் திட்டமே பி.ஜே.பி.யின் சூழ்ச்சியின் உச்ச நிலையாகும்.
ஆர்.எஸ்.எஸ்.இன் இலக்குதான் பி.ஜே.பி.யின் இலக்கும் ஆகும். எனவே பி.ஜே.பி.யின் பேராபத்தை அறிய ஆர்.எஸ்.எஸ்.இன் அடித்தளக் கொள்கையை அறிந்து கொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் குடும்ப அமைப்புகளின் நோக்கம் என்ன என்பதை, அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்பதை தனது நூலில் (நமது தேசியத்தை வரையறுத்தல்) மிகத் தெளிவாகக் கூறிவிட்டார். நூற்றுக்கு நூறு ஹிட்லர் பாணியில் அக்கருத்து அமைந்துள்ளது. அப்படியே அதன் மொழிபெயர்ப்பை கீழே தருகிறேன்.
தன் தேசிய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையைத் தக்க வைத்துக்கொள்ள ஜெர்மனி செமித்திக் இனங்களை, யூதர்களை அழித்து உலகுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது, அங்கே மிக உயர்ந்த அளவில் தேசிய கர்வம் காணப்படுகிறது. அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்ட இனங்களும் கலாச்சாரங்களும் ஒற்றுமையுள்ள ஒரே அமைப்பாக ஒருங்கிணைவது அநேகமாக முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டி விட்டது. இந்துஸ்தானில் இருக்கும் நமக்கு கற்கவும் (பின்பற்றவும்) லாபம் அடையவும் இது ஒரு நல்ல பாடம்.
இந்துஸ்தானில் வசிக்கும் இந்து அல்லாதவர்கள், இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்தை மதிப்பதற்கும் போற்றுவதற்கும் கற்கவேண்டும்.
இந்து இனத்தைப் பெருமைப்படுத்துவதைத் தவிர, வேறு எந்த கருத்துக்கும் இடமளிக்கக் கூடாது.
ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அவர்கள் அந்நியர்களாக இருக்கக் கூடாது அல்லது இந்து இனத்துக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக, எதையும் விரும்பாமல் சலுகைகளைக் கோராமல் அவர்கள் இந்த நாட்டில் வசிக்கலாம்; சிறப்பான முறையில் தங்களை நடத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. குடிமக்களின் உரிமைகூட அவர்களுக்குக் கிடையாது.
(ஆதாரம்: எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய, நாம் அல்லது நமது தேசியத்தை வளர்த்தல், நாக்பூர், 1938, பக்கம் 27 மற்றும் பக்கம் 52.)
இதற்குப் பிறகும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு பாஸிச அமைப்பு, ஆரிய ஆதிக்க வெறிகொண்ட அமைப்பு, வன்முறை அமைப்பு என்பதில் அய்யம் இருக்க முடியுமா?
இதைவிட கொடூரமான, மிருகத்தனமான மனித நேயமற்ற கொள்கையும், நோக்கமும் இருக்க முடியுமா? அவர் கூறும் கருத்தின் சாரம் என்ன?
1. இந்தியாவில் வாழும் இந்துக்கள் அல்லாத முஸ்லீம்களும், கிறித்தவர்களும், சீக்கியர்களும் இன்னும் மற்ற மதத்தவர்களும் இந்துக் கலாச்சாரத்தையும், சமஸ்கிருதத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
2. இந்துக்களுக்கு மற்ற மதத்தவர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும்.
3. மற்ற மதத்தவர்களுக்கு, சொந்த விருப்பங்களோ, சலுகைகளோ இருக்கக் கூடாது. சலுகைகளைக் கேட்கவுங் கூடாது.
4. இந்த நாட்டில் வாழ்ந்து கொள்ளலாமே தவிர, சிறப்பான முறையில் தங்களை நடத்தவேண்டும் என்று மற்ற மதத்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது.
5. இந்திய நாட்டில் வாழலாமே தவிர இந்த நாட்டின் குடியுரிமை அவர்களுக்குக் கிடையாது.
6. வேறு வேறு கலாச்சாரங்களை மதக்கொள்கைகளைக் கொண்டவர்கள் ஒரே நாட்டில் ஒருங்கிணைந்து வாழ முடியாது.
7. ஜெர்மனியில் நடந்ததைப் போல இந்தியாவிலும் ஒரு மதத்தவர் (இந்து மதத்தார்) அதிகார அரசே நடக்க வேண்டும். இதர இனங்கள் ஜெர்மனியில் அழித்தொழிக்கப்பட்டது போல இந்தியாவிலும் பிற மதத்தவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும்.
8. இந்துக்கள் என்பது ஒரு இனம்.
இவையே கோல்வால்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்றவர்களின் குறிக்கோள்; திட்டம். இவர்கள் எல்லாம் யார்? ஆடு மாடு மேய்க்க இந்தியாவிற்கு வந்தவர்கள். அயல் நாட்டுக்காரர்கள்.
இனிமேலாவது ஆரியப் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு சூடு, சொரணை, மானம், உணர்வு வரவேண்டாமா?
அயல் நாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு பிழைக்க வந்த கூட்டம், இந்த நாட்டில் பரம்பரையாய் வாழும், இந்நாட்டுக்கு உரிமையுள்ள மக்களைப் பார்த்து, அவர்கள் வேறு கடவுளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, நீங்கள் எங்கள் ஆரிய கலாச்சாரத்தை சாஸ்திரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது இந்த நாட்டை விட்டு ஓடிவிடுங்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?
இந்து என்பது ஓர் இனமாம்! அடிமுட்டாள் கூடச் சொல்வான் இந்து என்பது ஒரு மதம் என்று. இனம் என்பது இரத்த வழிவருவது; மதம் என்பது கொள்கை கொள்கையை - மதத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இனத்தை மாற்ற முடியாதே!
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியைத் துரத்தியது என்ற பழமொழி ஆரியப் பார்ப்பனர்களுக்கு அப்படியே பொருந்துவதைப் பாருங்கள்.
அவர்கள் மேலே கூறியுள்ள அனைத்தையும் ஒரே வரியில் சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, முஸ்லீம்கள் மற்றும் இதர மதத்தவர்கள் தம் கடவுளாக இராமரை ஏற்றுக் கொள்ளட்டும். எல்லாப் பிரச்சினையும் முடிந்துவிடும் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுருக்கியும் கூறியுள்ளார்கள்.
இதன் சுருக்கமான பொருள் என்ன?
இந்தியாவில் உள்ள பிற மதத்துக்காரர்கள் இந்துக்களாக மாறிவிட வேண்டும். இல்லையென்றால் நாட்டைவிட்டு வெளியேறி விடவேண்டும். இல்லையென்றால் அவர்கள் கொன்றழிக்கப்படுவார்கள். இதற்கு ஜெர்மனியில் நடந்ததே நமக்கு சரியான உதாரணம் என்பதுதானே?
ஆர்.எஸ்.எஸ். ஆக இருந்தாலும், இந்து மகா சபையாக இருந்தாலும், வி.எச்.பி.யாக இருந்தாலும், ஜன சங்கமாக இருந்தாலும், பி.ஜே.பி.யாக இருந்தாலும் இன்னும் இவர்களுடைய கிளைகள் எந்தப் பெயரில் இருந்தாலும் அவர்கள் அனைவரின் திட்டம், நோக்கம், கொள்கை இதுதான்! இதுதான்! இதுதான்!
இப்படிப்பட்ட மனித இனத்தின் துரோகிகளைத் தோளில் சுமந்து, ஓட்டுப் பொறுக்கி, உல்லாசமாய் வாழ அழைகின்ற அற்ப அரசியல் கட்சிக்காரர்களுக்கு இனிமேலாவது சொரணை வரவேண்டும் என்று விரும்புகின்றோம்!
இப்படிப்பட்டவர்களின் ஆட்சியில் மற்ற மதத்தவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உத்தரவாதம் கொடுப்பது எவ்வளவு பெரிய மோசடித்தனம்!
அடுத்தவர் தோளில் நிற்கும்போதே இந்த ஆட்டம் ஆடுகிறார்கள் என்றால், பெரும்பான்மை பலம்பெற்று ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டில் என்ன நடக்கும்?
மற்ற மதத்துக்காரன் விரட்டப்படுவது, கொல்லப்படுவது மட்டுமா? இந்து என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற சூத்திரர்களெல்லாம், பழையபடி ஆரியப் பார்ப்பனர்களின் அடிபிடித்து வாழவேண்டிய அவலம் வந்துதானே தீரும்!
சூத்திரத் தலைவர்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு என்னவென்றால், அப்படியொரு நிலை வந்தால் பஸ்ஸை மறித்து, மரத்தை வெட்டி, தண்டவாளத்தில் தலையை வைத்துப் போராட்டம் நடத்தி பி.ஜே.பி. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்பதுதான்.
பி.ஜே.பி.காரர்கள் இவர்களைப் போல ஏமாந்த ஏமாளிகளா?
13 நாள் ஆட்சியிலே, இராணுவத்திலும், உயர்நிர்வாக மட்டத்திலும் ஆரிய பார்ப்பனர்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நுழைத்து விட்டார்கள். 13 மாத ஆட்சியில் ஏராளமாய் நுழைத்துவிட்டார்கள். தற்போது தாராளமாய் நுழைத்து வருகிறார்கள்.
ஆரியர்க்கு அடிமையாகலாமா?
சும்மாவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் பி.ஜே.பி.காரர்களும் இந்தியாவை இந்து நாடாக்கு, இந்துத்துவாவை இராணுவ மயமாக்கு. அதாவது இராணுவத்தை இந்துத்துவா மயமாக்கு என்று கூறுகிறார்கள். அதன் விளைவு என்னாகும்! இந்தியாவின் இராணுவமே காவி மயமாகும். பெரும்பான்மை கிடைத்து விட்டால் சட்டம் முழுவதும் இந்துச் சட்டங்களாக மனு சட்டங்களாக மாறும். அதை நிறைவேற்ற ராணுவம் பயன்படுத்தப்படும். பெரும் நிறுவனங்களுக்கு சாதகமான ஆட்சியே நடைபெறுகிறது.
ஏழைகளின், ஒடுக்கப்பட்டோர் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான சலுகைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, மீண்டும் அடிமைகளாகக்கப்பட்டு வருகிறார்கள். நாம் கைகட்டி ஆரியப் பார்ப்பனர் காலில் விழவேண்டுமா? நாம் கை நீட்டி ஆணை இடவேண்டுமா?
பார்ப்பனர் அல்லாத சூத்திரர்கள் இந்து என்று சொல்லி ஏமாந்துப் போகின்றவர்கள் இதில் ஒரு முடிவை இன்றே இப்போதே எடுத்தாக வேண்டும்!
மானமும், உரிமையும் உள்ள மனிதர்களாக வாழ வேண்டும் என்றால், இப்போதே இந்த மனித இனத்தின் விரோதிகளை, மதவெறியர்களை அப்புறப்படுத்த வேண்டும். அவர்களின் அமைப்புகள், அவர்களின் அரசியல் கட்சிகளின் அடிச்சுவடே இல்லாமல் செய்ய வேண்டும்.
தங்களுக்கு இடையேயுள்ள பகைமைகளை மறந்து, கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி, மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து, மத்தியில் மதச் சார்பற்ற ஆட்சியை உருவாக்க வேண்டும்.
எக்காரணங்கொண்டும், எச்சூழலிலும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், பி.ஜே.பி. பாஸிஸ்ட்டுகள் ஆட்சி வரக்கூடாது என்பதில், அவர்களோடு கூட்டுச் சேரக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்க வேண்டும்.
மதவாத எதிர்ப்புச் சக்திகள் தங்களுக்கு இடையேயுள்ள எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, மதவாத சக்தியான பி.ஜே.பி.க்குத் தோள் கொடுத்ததன் விளைவாக ஏற்பட்ட சீர்கேடுகளைச் சீர்தூக்கினால் பி.ஜே.பி. ஒரு பேரபாயம் என்பது எளிதல் விளங்கும்.
முழுப் பெரும்பான்மையில்லாத, கூட்டணி ஆட்சியிலே அவர்கள் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுகிறார்கள் என்றால், முழு அதிகாரம் பெற்றால் - முழுப் பெரும்பான்மை பெற்றால் விளைவுகள் எவ்வளவு ஆபத்தாக இருக்கும் என்பதை ஒப்பிட்டு உணர வேண்டும்.
பி.ஜே.பி. பெருந்தன்மையான கட்சி; வாஜ்பேயி நல்லவர், வல்லவர் என்று எண்ணியும் பேசியும் வருகின்ற படித்த முட்டாள்கள் (அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்வோர்) கீழ்க்கண்டவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முதலில் 13 மாதங்கள் ஆண்டார்களே, அந்த ஆட்சி அமைக்கும்போது அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை, கூட்டணி ஆட்சி அமைத்தார்கள். அப்போது சூயவடியேட ஹபநனேய கடிச ழுடிஎநசயேஉந என்று பொது வேலைத் திட்டம் ஒன்றை வகுத்தார்கள். அதற்கு தேசிய அஜண்டா என்று பெயர் வைத்தனர்.
அதன் முக்கியக் கொள்கையாக,
1. சுதேசிக் கொள்கை.
2. வேலையில்லாத் திண்டாட்ட ஒழிப்பு (கரீபி அட்டாவோ)
3. உற்பத்தித் துறையில் தொழிலாளர்களுக்கு பங்கும் முன்னுரிமையும்(Make labour a proud partner in the production of national health)
4. விலைவாசியைக் குறைத்தல்
பெருந்தன்மையானவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் இவற்றுள் எதையாவது சாதித்தார்களா?
அயல்நாட்டு பொருளாதாரச் சுரண்டலை, தலையீட்டைத் தடுத்தார்களா? மாறாக தாராளமாக திறந்து விட்டுள்ளார்கள். உலகின் மிகப் பெரிய சுரண்டல் நாடான அமெரிக்காவோடு கூடிக் குலவுகிறார்கள்! தாங்கள் ஒரு பாஸிஸ்டுகள் என்பதை பறைசாற்றிக் கொண்டார்கள்.
தங்கள் ஆட்சியில் வேலையில்லாமை விடைபெற்றுக் கொள்ளும்; வேலையின்மையை ஒழித்துவிடுவோம் என்றார்களே என்ன கிழித்தார்கள்?
தொழிலாளர்களுக்கு உற்பத்தியில் பங்கு உரிமை, மரியாதை என்று தொண்டை கிழிய கத்தினார்கள். நடந்தது என்ன? அரசுத்துறை ஒவ்வொன்றும் தனியார் துறையாக மாற்றப்பட்டு தொழிலாளிகளை முதலாளிகளிடம் மண்டியிடச் செய்யும் முயற்சியல்லவா நடைபெறுகிறது!
அரசுத் துறைகளையெல்லாம் தனியார் துறையாக மாற்றுவதில் உள்ள அளவிட முடியாத ஆபத்தை அறிவுஜீவிகள் அறிவார்களா?
தனியார் துறையில் சென்றால்தான் நிர்வாகம் நன்றாக நடக்கும் என்று மேம்புல் மேயும் மேதாவிகள் அதிலுள்ள ஆபத்தை அறிவார்களா?
சோசலிசத்தை நோக்காகக் கொண்ட இந்திய நாட்டில், முதலாளித்துவத்தைக் கொண்டு வருகின்ற கொல்லைப்புற வழியல்லவா தனியார் மயமாக்கல் என்பது.
ஒவ்வொரு துறையாக அரசுமயமாக்கி, பயன் அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பை இதற்குமுன் இருந்த அரசுகள் மெல்ல மெல்ல செய்து வந்தன.
ஆனால், இவர்களோ (பி.ஜே.பி.) எல்லாவற்றையும் தனியாருக்குத் தாரைவார்க்கத் தாவிக் குதிக்கின்றனர்.
தனியார் மயமாக்கலின் அந்தரங்கச் சூட்சமம் என்ன தெரியுமா? இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்யவேண்டும் என்பதே.
ஆரியப் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பிற்கு அடித்தளமாய் அமைந்த இட ஒதுக்கீட்டை பலவகையிலும் முயன்று ஆட்டிப் பார்த்தனர்; அசைத்துப் பார்த்தனர். எந்த வகையிலும் அதைப் பெயர்க்க முடியாது தோற்ற ஆரியப் பார்ப்பனர்கள், தனியார் மயமாக்கலின் மூலம் இடஒதுக்கீட்டை அறவே ஒழித்துவிட்டு, முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தைக் கொண்டு வந்து விடலாம் என்பதே அவர்களின் திட்டம். இந்த ஆபத்தை அறியாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கூட பி.ஜே.பி.யின் பின்னால் ஜே! போட்டுக் கொண்டு நிற்கிறார்கள் என்றால் வேதனை மட்டுமல்ல, வெட்கக்கேடும் ஆகும்!
விலைவாசியைக் கட்டுப்படுத்தி, ஏழை எளிய மக்களுக்கு உதவுவோம், வறுமையைப் போக்குவோம் என்றனர்.
நடந்தது என்ன? ஏழைகளுக்கு கிடைத்துக் கொண்டிருந்த மானியங்கள் நிறுத்தப்பட்டு, விலைகள் விண்முட்ட உயர்ந்து போய்விட்டன?
வாஜ்பேயியாலே கையெழுத்திட்டு வைக்கப்பட்ட வரைவுதான் தேசிய அஜண்டா அதை நிறைவேற்றினார்களா? வல்லவர்கள் யோக்கியதை இதுதானா?
மேற்கண்ட வாக்குறுதிகள் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல. ஆட்சிக்கு வந்தபின் அவர்களாகவே முன்வந்து அறிவித்த வாக்குறுதிகள் - திட்டங்கள் இவை!
பி.ஜே.பி. பேர் வழிகள் எப்போதும் முகமூடிப் பேர்வழிகள். அவர்கள் வெளிப்பார்வைக்கு வேறு விதமாகத் தோன்றுவார்கள். உள்ளுக்குள் வேறொன்றை வைத்திருப்பார்கள்.
அவர்கள் வெளிப்படையாகத் தயாரித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல; அவர்கள் உள்ளுக்குள் வைத்திருந்த இரகசிய அஜண்டாவை (ழனைனந ஹபநனேய) ஓசை படாமல் நிறைவேற்றினார்கள்.
1. இடஒதுக்கீட்டை ஒழிப்பது.
2. ஆரிய மொழியை (சமஸ்கிருதத்தை) அரியணையேற்றுவது.
3. பார்ப்பன ஆதிக்கத்தைக் கொண்டு வருவது.
4. இராமர் கோயில் கட்டுவது.
5. பிற மதத்தாரை அச்சுறுத்திப் பணிய வைப்பது - போன்றவைதான் பி.ஜே.பி.யின் மறைமுகக் கொள்கைத் திட்டங்கள்; குறிக்கோள்கள்.
இடஒதுக்கீட்டை ஒழிக்க மண்டல் கமிஷனை எதிர்த்தனர். அரசுத் துறைகளை தனியார் துறையாக மாற்றி வருகிறார்கள். தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லையாதலால் தனியார் துறையாக மாற்றுவதன் மூலம் இடஒதுக்கீட்டை ஒழிக்க இதை நுட்பமான வழியாகக் கையாளுகின்றனர். ஓசையின்றி ஒழிக்கும் முறை இது. தனியார் துறையென்றால் அதில் முக்காலும் பார்ப்பனர் நுழைந்து கொள்வர். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவனெல்லாம் புறக்கணிக்கப்பட பழையபடி இவன் சூத்திர வேலைக்குப் போக வேண்டியே வரும்.
இப்பேராபத்தை நம் மக்கள் உணர வேண்டும். சமஸ்கிருதத்திற்கு ஆண்டு அறிவித்து செத்த மொழிக்கு உயிரூட்ட முயற்சிக்கின்றனர். தங்கள் மொழியென்றதும் செத்த மொழிக்கு உயிரூட்ட முயற்சிக்கின்றனர்.
இதன்மூலம் வளமான, உயர்வான தமிழ்மொழியையும், பிறமொழிகளையும ஒழித்து, சமஸ்கிருதத்தை நடைமுறைக்குக் கொண்டு வரவும், ஆட்சிமொழியாக்கவும் சூழ்ச்சி செய்கின்றனர். அதில் வெற்றி பெற்றும் வருகின்றனர்.
அலுவலகங்கள் முதல் இராணுவம் வரை அனைத்திலும் ஆரியப் பார்ப்பனர்களை அதிலும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களை நுழைத்து வருகின்றனர். இதன்மூலம் அதிகாரத்தைக் கையிலெடுத்து, ஆரிய ஆதிக்கத்தை எளிதாக கொண்டுவர முயலுகின்றனர். இது எவ்வளவு பெரிய ஆபத்து!
இராமர் கோயில் கட்டும் பிரச்சினையை எழுப்ப மாட்டோம் அதற்கான முயற்சி மேற்கொள்ள மாட்டோம் என்று கூறிக்கொண்டே, இராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இஸ்லாமியர் இடத்தில் இராமர் கோயில் கட்டினால் இரத்த ஆறு அல்லவா ஓடும்!
முஸ்லீம் பள்ளிவாசல்களை இடித்தும், கிறித்தவர்களை எரித்தும், கற்பழித்தும், சர்ச்சுகளை கொளுத்தியும் பிற மதத்தாரை நடுநடுங்கச் செய்கின்றனர். நாட்டில் இரத்த ஆறு ஓடவும், மதக்கலவரங்கள் வெடிக்கவும் சதி வேலை செய்கின்றனர். முழுப் பெரும்பான்மையை பி.ஜே.பி. பெற்றால், இரத்த ஆறு ஓடுவதையும், வெடி குண்டு வெடிப்பதையும் யாரும் தவிர்க்க முடியாது.
இவற்றைச் செய்ய பி.ஜே.பி.யின் கிளை அமைப்புகளான, கையாட்களான ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், ஜனசங், சிவசேனா என்ற வன்கரங்களை நீட்டி, பா... இந்த படுபாதகச் செயல்களைச் செய்து கொண்டு, தான் மட்டும் உத்தம பேர்வழியாகப் பசுத்தோல் போர்த்திக் கொள்கின்றது!
வன்முறை வெறியாட்டங்கள் மட்டுமல்ல ஊழல் புரிவதிலும் பி.ஜே.பி.யினர் கைதேர்ந்தவர்கள்.
பிரபல தொழிலதிபர் இந்துஜாவுக்குத் தொடர்புடைய மின் திட்டங்களுக்கு அதிவேக அனுமதியை (குயளவ கூசயஉம) பிரதமர் அலுவலகம் வழங்கியது. அதுவும் நிதியமைச்சகம் செய்யவேண்டிய பணிகளை பிரதமர் அலுவலகம் செய்தது. இப்படிப்பட்ட ஊழல் பேர்வழிதான் வாஜ்பேயி. ஒரு துறையின் பணியை இன்னொரு துறை செய்வது எப்படிப்பட்ட அத்துமீறல். அந்த அளவிற்கு ஆர்வம் என்றால் எந்த அளவிற்கு ஊழல் நடைபெற்றிருக்கும்?
காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் நெடுஞ்சாலைத் திட்டம் என்று, பயனற்ற - பயனைக் காட்டிலும் அதிகச் செலவு பிடிக்கும் திட்டம் ஒன்றை வாஜ்பேயி அறிவித்தார். இதை எதிர்த்து நிதியமைச்சர் சின்கா ராஜினாமா செய்யவே முனைந்தார்.
பி.ஜே.பி. ஆட்சியில் எஃகு இரும்பு வார்ப்பதற்கான ரோல்டு காயில் இறக்குமதி செய்வதில், நிர்ணயத் தொகையை விட கூடுதல் விலையை வாஜ்பேயியும், மகாஜனும் சேர்ந்து நிர்ணயம் செய்து ஊழல் செய்தனர். இதனால் இந்தியாவிற்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை விற்க பங்கு ஒன்றுக்கு ரூ.2500 என்று விலை நிர்ணயம் செய்வதற்குப் பதில் ரூ.800 என்று விலை நிர்ணயம் செய்த யோக்கியர்கள்தான் பி.ஜே.பி.யினர்.
மாநிலங்களில் ஆளுநர்களை அமர்த்தும்போது ஆர்.எஸ்.எஸ்.காரர்களையே அமர்த்தி ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து வெறி ஆதிக்கத்தையும் ஒரு சேர நிலைநாட்ட முயல்பவர்கள் இந்த பி.ஜே.பி. கட்சியினர்.
ஆட்சிக் கவிழ்க்கும் அடியாட்களாகவே ஆளுநர்கள் செயல்பட்டனர். பீகாரில் அது அப்பட்டமாக வெளிப்பட்டது. ராப்ரிதேவி ஆட்சியைக் கவிழ்க்க எத்தனை முறை முயற்சி? குடியரசுத் தலைவரே ஆட்சிக் கவிழ்ப்பை அங்கீகரிக்கமாட்டேன் என்று சொல்லும் அளவிற்கு அவலம்!
இந்தியப் பாகிஸ்தான் எல்லைத் தகராறை இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினை என்று கொள்ளாமல், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான பிரச்சினையாகத் திசைமாற்றிக் கொண்டு செல்கின்றனர். இந்தியா என்றால் இந்து நாடு. இந்தியர் என்றால் இந்துக்கள் என்ற கொடு நோக்கில் கொண்டு செல்கின்றனர்.
கர்நாடகத்திலே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் இடத்தில்தான் இந்துக் கடவுள் இருந்தது என்று அந்த இடத்தை இடிக்க முயன்றவர்கள் பி.ஜே.பி. வகையறாக்கள்.
தமிழ்நாட்டில், விருத்தாசலத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரியே கற்பழிக்கப்பட்டார். பெண்களைப் போல வேஷம் போட்டு ஏமாற்றி, கிறித்துவ பெண்ணை வேனில் ஏற்றிச் சென்று கற்பழித்த கயவர்கள் அல்லவா பி.ஜே.பி. கூட்டாளிகள்?
மனிதநேயத்தோடு ஒரிசாவில் தொண்டாற்றிய ஆஸ்திரேலிய பாதிரியாரை அவரது மகனோடு சேர்த்து ஜீப்பில் வைத்து உயிரோடு துடிக்கத் துடிக்க கொன்ற கொலை வெறிக் கூட்டமல்லவா பி.ஜே.பி.யின் பின்புலங்கள்! இதைவிட கொடுமை உலக வரலாற்றில் உண்டா?
பாதிரியாரை எரித்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான் என்று மதன்லால் குரானாவே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார். இச்செய்தியை அவுட்லுக், சண்டே பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. சமயத் தலைவர்களை கொலை செய்வது மட்டுமல்ல சமுதாயத்தையும் சமூக நீதியையும் கொலை செய்தவர்கள் இந்த பி.ஜே.பி.யினர்.
எல்லா மத மக்களும் அமைதியாகவும், அன்புறவுடனும், கூடிவாழ்ந்த மக்களை, சமூகத்தை மதவெறியைத் தூண்டி, எதிர் நிலைப்படுத்தி, மாய்த்துக் கொள்ளும் மடமையை, மனித நேயமற்ற நிலையை உருவாக்கி, உரமிட்டு வளர்ப்பதோடு, உசுப்பிவிட்டும் வருகின்றனர்.
இன்று நாட்டில் நடக்கும் வன்கொலைகள், அழிவுகள் அனைத்தின் ஆணிவேர் பி.ஜே.பி.யினரும் அவர்களின் வகையறாக்களுமேயாகும்.
ஜாதியின் பெயரால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய், சமுதாயத்தில் அடியில் தள்ளப்பட்டு, ஆமையாய், ஊமையாய், கல்வியறிவு மறுக்கப்பட்டவர்களாய் சமவுரிமை பறிக்கப்பட்டு அடிமைகளாய், மானவுணர்வு கூட இன்றி வாழவேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட கீழ்த்தட்டு மக்களை கைகொடுத்துத் தூக்கக் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட சமூக நீதித் தத்துவமான இட ஒதுக்கீட்டுக் கொள்கையினை, எப்படியாவது ஒழித்து, ஆரிய பார்ப்பன - பாஸிஸ, ஆதிக்க ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஆவலில், மண்டல் கமிஷனை மண்ணில் புதைக்க மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் இந்த பி.ஜே.பி.யினர்.
அதற்காக வி.பி.சிங் ஆட்சியையே கவிழ்த்தார்கள். இன்று ஆட்சி கிடைத்ததும் இடஒதுக்கீட்டுக்கு இறுதியை உறுதி செய்கின்றனர். ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 60 ஆக உயர்த்தி, இடஒதுக்கீட்டின் பயனை எளியவர்கள் அடைய முடியாமல் தடுத்தனர். உயர் ஜாதிக்காரர்கள் தொடர்ந்து பதவியில் இரண்டு ஆண்டுகள் நீடிக்க வகை செய்தனர். பிற்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் பதவியில் அமருவதற்கான வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போட்டனர். மேலும்,
முன்கூறியதுபோல், அரசுத் துறைகளையெல்லாம் தனியார் துறையாக ஆக்குவதன்மூலம் இடஒதுக்கீட்டையே இல்லாமல் செய்துவிடலாம் என்ற நூதன மோசடியை தற்போது அமல்படுத்த முனைகின்றனர் இந்த பி.ஜே.பி. பேர்வழிகள். உத்தியோகம் அதிகாரம் அனைத்திலும் ஆரியப் பார்ப்பனர்கள் முழுக்கக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தவே இச்சூழ்ச்சிகள்.
பி.ஜே.பி.யின் முதன்மை இலக்கு ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தைக் கொண்டு வந்து, பழைய வர்ணாஸ்ரம முறையை அமல்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
அதற்கு சமஸ்கிருதம் ஆட்சிமொழி ஆக்கப்பட வேண்டும். சாஸ்திரங்கள் சட்டமாக்கப்பட வேண்டும். வேற்றுமதமே இந்தியாவில் இருக்கக் கூடாது. இராமனே கடவுள். வேறு கடவுள்களுக்கு வேலையில்லை.
ஆரியரே உயர்ந்தவர், மற்றெல்லோரும் அவர்களின் அடிமைகள் என்கின்ற நோக்குகளை, எண்ணங்களை, விருப்பங்களை நிறைவேற்றவே ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரிய அமைப்பு, பி.ஜே.பி. என்ற பெயரோடு அரசியலில் வடிவந்தாங்கி அரசியலுக்குள் நுழைந்துள்ளதால், பி.ஜே.பி. என்பது ஆர்.எஸ்.எஸ்.அய் விட ஆபத்தானது!
எந்த சூழ்நிலையிலும் பி.ஜே.பி.யினர் மேற்கொண்ட கொள்கைகளை கைவிட்டு விட்டோம் என்று சொல்வதே இல்லை. தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம், இப்போதைக்கு அதை அமல்படுத்த மாட்டோம், தள்ளிப் போட்டுள்ளோம், முழு பெரும்பான்மை வந்ததும் முடிப்போம் என்றுதான் கூறுவார்கள்.
அதன் பொருள் என்ன?
கொக் கொக்க கூம்பும் பருவத்தை எதிர்நோக்குகிறார்கள் என்பதுதானே?

ஒருவனைக் கொலை செய்ய முடிவு செய்துவிட்ட ஒருவன், எதிராளியைப் பார்த்து, நான் உன்னைக் கொலை செய்யப்போவது உறுதி; ஆனால் இப்போது கொலை செய்யமாட்டேன். கொலையைத் தள்ளிப்போட்டுள்ளேன் என்று சொன்னால் எப்படியோ அப்படித்தானே பி.ஜே.பி. சொல்வதன் பொருளும்!

நூல்பி.ஜே.பி ஒரு பேரபாயம்
                                                 ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை