தந்தை பெரியாரும் நெஞ்சம் மறவாத நிகழ்ச்சிகளும்
தஞ்சையில்
1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழக்கறிஞனாக வாழ்க்கையை ஆரம்பித்தேன்.
எனது அரசியல் பின்னணி தஞ்சை நகரத் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்கும்படி செய்தது.
1946ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சைக்கு அருகே உள்ள திருவையாற்றில் கழகத் தோழர்கள் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். கோடைக் காலத்தில் காவேரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வெறும் மணலாகக் காட்சி தரும். அந்த ஆற்று மணலில் பொதுக் கூட்டம் நடந்தது. தந்தை பெரியார் பேச ஆரம்பித்ததும் மேடையை நோக்கிச் சரமாரியாகக் கற்கள் வீசத் தொடங்கினர்.
அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த நான் நாற்காலியை விட்டு எழுந்ததும்,
பெரியார் என் கையைப் பிடித்து நாற்காலியில் உட்காரும்படி செய்தார். அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் போட்டிருந்த ஒரு தலையணையை என்னிடம் கொடுத்து மேஜையின் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு தலைக்குப் பாதுகாப்பாக இந்தத் தலையணையை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறித் தம் சொற்பொழிவைத் தொடர்ந்தார். பொதுக்கூட்டத்தில் நான் கல்லடிப் பெற்ற முதல் அனுபவம் அதுதான்.
ஃ ஜில்லா முன்சீப் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு பத்திரிகைகளில் விளம்பரம் வெளியானது.
என் பின்னால் கொடி பிடித்து வர எனக்குப் பல தொண்டர்கள் இருக்கிறார்கள்.
நீங்கள் நீதித் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம். ஆகவே, ஜில்லா முன்சீப் பதவிக்கு விண்ணப்பம் செய்யுங்கள் எனப் பெரியார் கூறினார். அரசுப் பதவிக்குப் போக வேண்டும் என்று நான் எண்ணிய காலத்தில் பெரியார் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால்,
அரசுப் பதவி பற்றி எண்ணாமல் கழகத் தொண்டனாகவே கடைசி வரையில் பணி ஆற்றலாம் என்று கருதியிருந்த என்னை அரசுப் பதவிக்குச் செல்ல வேண்டும் என்பதில் பெரியார் ஆர்வம் காட்டினார்.
நான் ஜில்லா முன்சீப் பதவிக்கு விண்ணப்பம் செய்தேன். அந்தப் பதவிக்கு என்னைத் தேர்வு செய்தார்கள்.
Comments
Post a Comment