பி.ஜே.பி. அமைக்கத் துடிக்கும் இந்துராஷ்டிரம் இதுதான்!

வளர்ச்சியை வான்முட்ட உயர்த்துவோம் என்று வாய்கிழியப் பேசி வாக்காளர்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்து விட்டது பி.ஜே.பி. ஆனால், ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் எந்தவொரு வளர்ச்சியும் வரவில்லை; அதற்கான எந்தச் செயல் திட்டங்களும் இல்லை. மாறாக, காங்கிரஸ் ஆட்சியில் ஏற்கனவே எளிய மக்களுக்குக் கிடைத்துவந்த வேலை வாய்ப்புத் திட்டங்களையெல்லாம், ஒதுக்கித்தள்ளி அவர்களுக்கு வருவாய் இல்லாமல் செய்ததோடு, நலிந்தோர்க்குக் கிடைத்துவந்த மானியங்கள், கல்விக்கடன் எல்லாவற்றையும் குறைத்துவிட்டார்கள்.
புரட்சித்திட்டம், புதியதிட்டம் என்று இவர்கள் கூறுவது எல்லாமே, காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர் மாற்றங்களே.
காங்கிரஸ் ஆட்சி ஆதார் அட்டை கொண்டுவந்த போது எதற்கு என்றார்கள். இன்றைக்கு அதைத் தீவிரமாகச் செயல்படுத்துகிறார்கள். ஆக, வளர்ச்சி என்பதெல்லாம் ஏமாற்று, மோசடி, வார்த்தை ஜாலம்!
ஆனால், அவர்களின் உண்மையான நோக்கமான, இந்துராஷ்ட்டிரம் அமைக்கும் முயற்சியை மட்டும் பதவி ஏற்ற அன்றே தொடங்கிவிட்டார்கள். காரணம் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. உள்ளிட்ட சங் பரிவாரங்களின் அடிப்படை நோக்கமே மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற அரசமைப்பை மாற்றிவிட்டு, இந்துராஷ்ட்டிரம் அமைப்பதுதான்.
இந்துராஷ்ட்டிரம் என்றதும், இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு  மக்கள் நமக்கு ஆரவானதுதானே! நமக்கு நல்லதுதானே! என்று மயங்குகின்றனர்.
ஆனால், உண்மையில் இந்துராஷ்ட்டிரம் என்பது ஆரியப் பார்ப்பன ஆதிக்க ஆட்சியைக் கொண்டுவந்து, மற்ற மக்களையெல்லாம் அவர்களின் அடிமைகளாக அடக்கி ஆள்வதை நோக்கமாகக் கொண்டதாகும். எனவே, ஆரியப் பார்ப்பனர் அல்லாத மக்கள் விழிப்போடிருந்து அவர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டும். அதற்கு அவர்களின் இந்துராஷ்ட்டிரம் எப்படிப்பட்டது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்துராஷ்ட்டிரம் என்றால் என்ன?
கடவுள், சட்டம், கல்வி, பதவி, இடஒதுக்கீடு, சமுதாயம், உணவு, உடை, கலாச்சாரம், காதல், திருமணம் என்று எல்லாமும் கீழ்க்கண்டவாறு மாற்றப்படும். அதற்கேற்ப ஆட்சி நடக்கும். ஒரே கடவுள் : இன்றைக்கு மதச்சார்பற்ற ஆட்சியில் மக்கள் தங்கள் கடவுளை குலவழியாக, தங்களுக்குள்ள கடவுளை வணங்குகிறார்கள். அதாவது, இந்துக்கள், தங்களின் பல்வேறு கடவுளை வணங்குகிறார்கள்; இஸ்லாமியர் அல்லாவையும், கிறித்தவர்கள் ஏசுவையும் மற்ற மதத்தார் தங்கள் தங்கள் கடவுளையும் வணங்குகிறார்கள்.
ஆனால், இந்துராஷ்ட்டிரத்தில் ஒரே கடவுளையே வணங்க வேண்டும். ஆம். சிவனை வணங்குகின்றவராயினும், விஷ்ணுவை வணங்குகின்றவராயினும், முருகனை, விநாயகரை, காளியை, வீரனை என்று பல கடவுளை வணங்குகின்றவர்களாயினும், ஏசுவை வணங்குகின்றவர்களாயினும், அல்லாவைத் தொழுகின்றவர்கள் ஆயினும், யாராயினும், அவர்கள் இந்தியாவின் எல்லைக்குள் இருப்பின், அவர்கள் தங்கள் கடவுளை விட்டுவிட்டு, ராமனை மட்டுமே கடவுளாக ஏற்க வேண்டும், வணங்க வேண்டும். அதாவது ஒரே தேசம், ஒரே கடவுள். மீறி தன் கடவுளைத் தான் வணங்க வேண்டும் என்று யாராவது பிடிவாதம் பிடித்தால் அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்றுவிட வேண்டும்.
இதை பி.ஜே.பி.யின் சங் பரிவார அமைப்பினர் வெளிப்படையாகவே பலநேரங்களில் கூறிவிட்டனர். எனவே, இப்படியெல்லாம் கட்டாயப்படுத்துவார்களா? என்று அய்யப்படத் தேவையில்லை.
இந்துக்கள் அல்லாத மற்ற மதத்தார் தங்கள் கடவுள் தங்கள் கலாச்சாரம் இவற்றை விட்டுவிட வேண்டும். இந்து கலாச்சாரத்தையும், சமஸ்கிருதத்தையும் தங்கள் கலாச்சாரமாகவும், தங்கள் மொழியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்துமதத்தை மதித்து பயபக்தியுடன் போற்றித் துதிக்க வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இந்து இனத்துடன் கலந்து, தாங்களும் இந்துக்களோடு கலந்துவிட வேண்டும். எந்த உரிமையும் கோராமல், எவ்விதமான சிறப்புச் சலுகையும் கேட்காமல், நாட்டின் குடிமகனுக்குள்ள உரிமைகளைக் கூடக் கேட்காமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து நடந்து, இந்த நாட்டில் தங்கிக் கொள்ளலாம்.
- (ஆதாரம் : நாம் அல்லது வரையறுக்கப்பட்ட இந்து தேசம்
(We or our Nationhood defined 1939)
இந்துக் கடவுள் என்றால் ராமன். அப்படியாயின் கலாச்சாரம் எது? இந்திய எல்லைக்குள் வாழும் யாராயினும் அவர்கள் இந்து கலாச்சாரத்தை (ஆரிய கலாச்சாரத்தை) ஏற்றே வாழவேண்டும். அதை விளக்கமாகக் காண்போம்.
கலாச்சாரம் : இந்தியாவின் கலாச்சாரம் என்றால் அது ஆரிய கலாச்சாரமே. இதை அவர்கள் பல வழிகளில் உறுதி செய்கிறார்கள்.
() நாடு : இந்திய நாடு அல்ல அது ஆரிய நாடு. இந்துராஷ்ட்டிர சிந்தாந்தப்படி, நோக்கப்படி இந்த நாடு ஆரிய நாடு.
மொழி : இந்துராஷ்ட்டிரத்தில் ஒரே மொழிதான். அது சமஸ்கிருதம். கோடிக்கணக்கான பெரும்பான்மை மக்கள் பேசும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, பஞ்சாபி யெல்லாம் கிடையாது. நூற்றுக்கணக்கானோர் பேசும், செத்தமொழியான சமஸ்கிருதம்தான் இந்தியா முழுமைக்கும் ஆட்சிமொழியாம். எல்லோரும் தங்கள் மொழியை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தை பயின்று அதையே தங்கள் மொழியாகக் கொள்ளவேண்டும். பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே! என்கிறீர்களா? இந்துராஷ்ட்டிரம் என்றாலே பைத்தியக்கார உளறல் தானே!
இதோ பி.ஜே.பி. பரிவாரங்களின் கோட்பாடுகளை உருவாக்கிய கோல்வால்கர் கூறுவதைப்படியுங்கள் அப்போது புரியும்.
இந்தியாவிற்கு ஒரே மொழிதான். அது சமஸ்கிருதந்தான். மற்ற மொழிகளெல்லாம் அதிலிருந்து பிறந்த அதன் குழந்தைகள்தான். அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதந்தான் தாய்மொழி. கடவுளால் பேசப்பட்ட சமஸ்கிருதமொழி இமயமலையிலிருந்து தெற்கேயுள்ள பெருங்கடல் வரை கிழக்கிலிருந்து மேற்குவரை வாழ்கின்ற அனைவருக்கும் பொதுவான மொழி. எவர் வேண்டுமானாலும் மிகச்சிறிய உழைப்புடன் சற்றே பழகிக் கொண்டால் சமஸ்கிருதத்தைப் பேசமுடியும்.
- (ஆதாரம் : நாம் அல்லது வரையறுக்கப்பட்ட
இந்து  தேசம் - 1939 கோல்வால்கர் பக். 43)
சட்டம் : சட்டம் என்றால் இன்றைக்குள்ள இந்திய அரசியல் சட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மனு சாஸ்திரமே அவர்களுக்கு மனுசாஸ்திரம் மனுவால் எழுதப்பட்டது. மனுதான் உலகின் தலைசிறந்த சட்டவல்லுநர் என்கிறார் கோல்வால்கர். அந்த மனுசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடிதான் இந்துராஷ்ட்டிரம் செயல்படும்.
பிறப்பால் ஏற்றத்தாழ்வு : வருணம் : பிரம்மா முகத்தில் பிறந்தவர் பிராமணன்; தோளில் பிறந்தவன் ஷத்திரியர்; இடையில் பிறந்தவர் வைசியர், காலில் பிறந்தவர் சூத்திரர்.
முகத்தில் பிறந்த பிராமணனின் புனிதக் காலில் விழுந்து வணங்கி முதல் வர்ணம் தவிர்த்த மற்ற மூன்று வர்ணத்தாரும் தங்களுடைய கடமைகளை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்கிறார் கோல்வால்கர்.
இதில் சூத்திரர் என்று சொல்லப்படுபவர்கள்தான் உழைக்கும் பெருவாரியான மக்கள். இந்துராஷ்ட்டிர சட்டப்படி இவர்கள் நிலை என்ன தெரியுமா?
சூத்திரனுக்கு இயற்கையாய் அமைந்த கடமை பிராமணனுக்கு பணிவிடை செய்வது                                       
 (மனு - 123, அத்-10)
பிராமணன் சாப்பிட்ட மிச்சம், பழைய துணிகள், ஒதுக்கித் தள்ளும் தானியங்கள், பாத்திரங்கள் இவையே சூத்திரனுக்குரிய கூலி
                                                                      (மனு - 125, அத்-10)
ஆரியர் அல்லாத முரட்டு மனிதர்கள் கறைப்பட்ட கருப்பையில் பிறந்தவர்கள்
                                                         (மனு - 58, அத்-10)
பெண்ணடிமையும் பெண்ணிழிவும்
பெண்களுக்கு சுயவாழ்வு இல்லை. அவர்கள் பிள்ளைப் பருவத்தில் பெற்றோரையும், அடுத்து கணவனையும், பின் பிள்ளைகளையும் சார்ந்தே வாழவேண்டும்.                                                                                                      
- (மனு 148, அத்-5)
கணவன் தீயகுணம், செயல் உள்ளவனாக விருந்தாலும், பல பெண்களோடு உறவு கொள்பவனாக இருந்தாலும் பெண்ணானவள் அவனை தெய்வமாக எண்ணிப் பூசிக்க வேண்டும் (தொழ வேண்டும்)
- (மனு 5 : 154)
கணவன் சூதாடுகிறவனாக இருந்தாலும், குடிகாரனாக இருந்தாலும், நோயாளியாக இருந்தாலும் அவனது மனைவி அவனை வெறுத்துப் பணிவிடை செய்யாமலிருந்தால், அவளை மூன்று மாதம் விலக்கி வைத்து அவளுக்கு ஆடை, படுக்கை, அலங்காரப் பொருட்கள் இவற்றை கொடுக்காமல் தண்டிக்க வேண்டும்
 - (மனு 9 : 78)
பெண்கள் கற்புறுதியும், உறுதியான மனமும், நட்புக்குத் ததியும் இல்லாதவர்கள்                                                          
  - (மனு 9 : 15)
தண்டனை
கொலைத் தொழில்புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போடவேண்டும். பிராமணன் கொலை செய்தால் அவன் தலையின் மயிரை அகற்றினால் அதுவே தண்டனையாகும். தருமம்
சண்டையில் பகைவர்களைக் கொன்று, பொருட்களைக் கைப்பற்றினால் அவற்றை பிராமணனுக்குக் கொடுத்துவிட வேண்டும். இதைவிட சிறந்த தர்மம் வேறு எதுவும் இல்லை.       (யக்ஞவல்கியார்)
பிராணம் : சூத்திரனிடத்தில் ஏதாவது பொருள் இருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம்.ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்கு அடிமையானதால் சூத்திரனுக்கென்று சிறுபொருள்கூட உரிமையில்லை                                                                 
- (மனு)
கூலி கொடுத்தோ அல்லது கூலி கொடுக்காமலோ சூத்திரனை பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் படைக்கப்பட்டிருக்கிறான்
                                                  - (மனு)
இப்படிப்பட்ட மனுதர்மந்தான் இந்துராஷ்ட்டிரத்திற்கு சட்டமாம். அதன்படி தான் ஆட்சி நடக்குமாம். இந்து மதத்தில் உள்ள சூத்திரர்களே! பெண்களே! இப்படிப்பட்ட இந்துராஷ்ட்டிரம் அமைக்க ஆதரவு அளிக்கப் போகிறீர்களா! சிந்தியுங்கள்.
பதவி எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாக விருக்கிறானோ அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசுவைப்போல கண்முன்னே அழியும்
    - (மனு)
மிகக் கொடியவனாக இருந்தாலும், பிறப்பால் பிராமணனாகப் பிறந்த ஒருவனை, அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், சூத்திரன் அறிவில் சிறந்தவனாக இருந்தாலும் அவனை ஒருபோதும் அரசுப் பதவிக்கு தேர்வு செய்யக் கூடாது.      
     (மனு)
திருமணம்            :               பிள்ளைப் பருவத்திலே, தன் ஜாதியிலே திருமணம் செய்யப்பட வேண்டும்.                  
காதல் திருமணம் கூடாது. கலப்புத் திருமணம் கூடாது. விதவைத் திருமணம் கூடாது. விவாகரத்து இல்லை. அடித்தாலும் உதைத்தாலும் கணவனே கதி. கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறி தீயில் வெந்து சாக வேண்டும்.
கல்வி :      பெண்கள், சூத்திரர்கள் படிக்கக் கூடாது. கல்வி பிராமணர்களுக்கு மட்டுமே உரியது.
நீதி         :      கொலை செய்த பிராமணனின் ஒரு தலை மயிரைப் பிடுங்குவதே தண்டனை. ஆனால், மற்ற ஜாதிக்காரர்கள் கொலை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை.
சொத்துரிமை:    சொத்துக்களுக்கெல்லாம் பிராமணன் மட்டுமே உரிமையானவன்.
பணி     :      உயர்பதவி பிராமணர்களுக்கு மட்டும், சூத்திரர்கள் அடிமை வேலை மட்டுமே செய்ய வேண்டும். பெண்கள் வீட்டில் சமைக்க வேண்டும். குழந்தை வளர்க்க வேண்டும். பூ கட்ட வேண்டும். கோலம் போட வேண்டும்.
உடை :       சூத்திரர்கள் நல்ல உடை உடுத்தக் கூடாது. காலில் செருப்புப் போடக் கூடாது. மேல் துண்டை இடுப்பில்தான் கட்ட வேண்டும். பெண்கள் விரும்பிய உடைகளை அணியக் கூடாது.
உணவு      :               மாட்டுக்கறி உண்ணக் கூடாது. மாட்டுக்கறி வழக்கமாக உண்பவர்கள் தாங்கள் விரும்பினாலும், விலைக் குறைவாக இருந்தாலும் உண்ணக் கூடாது.
கருத்துச்சுதந்திரம்  இந்துக் கோட்பாட்டுக்கு எதிராகவோ, கடவுள், சாஸ்திரங்களுக்கு எதிராகவோ கருத்துக் கூறக் கூடாது.
காதல் :      காதல் என்ற வார்த்தைக்கே வேலையில்லை. மீறி காதலித்தால் அடித்துக் கொல்லப்படுவர்.
பெயர்  :      நல்ல பெயர் கூட சூத்திரனுக்கு வைக்கக்கூடாது. கீழ்த்தரமான, வெறுத்தக்கப் பெயர்களையே சூட்ட வேண்டும்.
மனுஸ்மிருதி எல்லா காலத்திற்கும், அனைத்து மனித குலத்துக்கும் பொருந்தக் கூடியதாகும்.
அனைவருக்கும் மனுஸ்மிருதியால் நீதியை வழங்க முடியும். அதுவே இந்து ராஷ்ட்டிரத்தில், இந்து கலாச்சாரத்திற்கான சட்டம் என்று, மதுரையில் நடந்த விசுவ ஹிந்து மாநாட்டில், உத்திரபிரதேச அட்வகேட்டு ஜெனரல் வி.கே.எஸ். சௌத்ரி பேசினார். தற்போதுள்ள அரசியல் சட்டத்தை  அகற்றிவிட்டு மனுஸ்மிருதியைச் சட்டமாக வைக்க வேண்டும் என்று பேசினார். (18, 19.4.1992 - 2 ஆவது இந்து வழக்கறிஞர் மாநாடு) ஆக, பி.ஜே.பிமற்றும் சங் பரிவாரங்களின் இந்துராஷ்ட்டிரம் எப்படிப்பட்டது பாருங்கள். இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்கத்தான் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று அழைக்கிறார்கள், மதவெறியூட்டி உசுப்பேற்றுகிறார்கள்.
இப்படிப்பட்ட இந்துராஷ்ட்டிரத்தில் யாருக்குப் பயன், ஆரியப் பார்ப்பனர்களுக்குத்தானே. 90ரூ மக்களான சூத்திரர்கள், அவர்களுக்கு அடிமையாகவும் ஒட்டுமொத்த பெண் இனமும் ஆண்களின் அடிமையாகவும் கேவலமாகவும் வாழ இந்துராஷ்ட்டிரம் வேண்டும் என்கிறார்கள்! வேண்டுமா?
சூத்திர இந்துக்களும் பெண்களும் சிந்தியுங்கள்.
அப்படியானால் தாழ்த்தப்பட்டவர் நிலை என்ன? தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளின் காலில் பிறக்கக் கூட தகுதியற்ற இழிமக்கள். அவர்கள் பஞ்சமர்கள். தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம்.
பார்ப்பான் வீட்டில் மலம் எடுக்கக்கூட தாழ்த்தப்பட்டவர்கள் தகுதியில்லை! அப்படியா! அதிர்ச்சியாக இருக்கிறதா?
ஆம், கும்பகோணம் நகராட்சியில் அன்று ஒரு தீர்மானம் போட்டார்கள். என்ன தெரியுமா?
பிராமணன் வீடுகளில் மலம் அள்ள தாழ்த்தப்பட்டவர்  வரக் கூடாது. அதைவிட உயர் ஜாதியினர் வந்துதான் பிராமணன் மலத்தை அள்ள வேண்டும் இதுதான் அந்தத் தீர்மானம்.
இந்துராஷ்ட்டிரத்தில் இதுதான் நடக்கும்! இப்படிப்பட்ட இந்துராஷ்ட்டிரந்தான் வேண்டுமா? மானத்தோடும் அறிவோடும் சிந்தியுங்கள்.

சொல்வதும் செய்வதும்
பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவாரங்கள் அனைத்தும் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக நடந்து கொள்வதே வழக்கம்.
இந்துக்களே! ஒன்று சேருங்கள். இது நம் நாடு! நாமே இந்த நாட்டிற்கு உரியவர்கள். நம் உரிமையை காக்க வேண்டும்; நம் பெருமையை நிலைநாட்ட வேண்டும்!
இப்படி மதவாத அமைப்புகள் முழங்கும் போது, இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டும் சூத்திரனுக்கும், பெண்களுக்கும் உணர்ச்சி வருகிறது. ஆனால், அப்படி இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்தால் பலன் யாருக்கு? சமஸ்கிருதம் ஆட்சிமொழியாகும். மற்ற மொழியெல்லாம் புறக்கணிக்கப்படும்.
ஆரியப் பார்ப்பான் உயர்ந்தவனாவான். நாமெல்லாம் இழி மக்களாவோம். பெண்கள் வீட்டுக்குள் அடிமைப்படுத்தப்படுவார்கள். இஸ்லாம் மதத் தீவிரவாதிகள் கையில் ஆட்சி போனதும் என்னாயிற்று பெண்களின் நிலை! அதுதானே இங்கும் நடக்கும்?
பதவியெல்லாம் பார்ப்பான் கைக்குப் போகும் மற்றவனெல்லாம் அடிமைகளாவர். பகவத்கீதையை தேசிய நூல் என்பர். உலகில் உயர்ந்த திருக்குறளை ஒதுக்கித் தள்ளுவர்.
ஆக, இவர்கள் எல்லா இந்துக்களுக்கும் பாடுபடுவதாகச் சொல்வார்கள். ஆனால், நடைமுறையில் ஆரியர்களின் உயர்வுக்கும் நம் இழிவுக்குமே செயல் செய்வர். கருப்புப் பணத்தைக் கொண்டுவருவோம்; நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்குவோம்; பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று கவர்ச்சியாக முழங்கி, அவற்றை ஊடகங்களில் தினம் தினம் வெளிப்படுத்தி ஆட்சியைப் பிடித்தவர்கள், ஆட்சிக்கு வந்ததும், இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டு, மதம் மாற்றுவதாலும், சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக்குவதிலும், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பதிலும், இஸ்லாமியர்கள், கிறித்தவர்களைத் தாக்குவதிலும், அவர்களுக்கு எதிராக வெறியேற்றுவதிலும் பதவிக்கு வந்தநாள் முதலே தொடங்கி விட்டார்கள்.
சொன்னது வளர்ச்சி. ஆனால், செய்வது மத மோதலுக்கான கிளர்ச்சி! இவர்கள் சங் பரிவாரங்கள்!
இந்திய அரசமைப்புச் சட்டமே எங்களுக்கு வேதம், மதச் சார்பின்மையே எங்கள் கொள்கை என்று கூறிக் கொண்டே, குடியரசு நாள் விழாவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அரசமைப்புச் சட்டமுகவுரை விளம்பரத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய இரண்டு வார்த்தைகளையும் நீக்கிவிட்டார்கள்.
அப்படியென்றால் என்ன பொருள். இவர்கள் இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தானே. இந்த இரண்டையும் ஏற்கவில்லையென்றால் என்ன நோக்கு அவர்களுக்கு?
மதச்சார்பின்மையில் எங்களுக்கு உடன்பாடில்லை. மற்ற மதத்தார் இரண்டாந்தர நிலையில்தான், இந்துக்களின் தயவில் வாழவேண்டும்; இந்துக்களுக்குள்ள உரிமையை அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது; இந்துக்களாக அவர்களும் மாறிவிட வேண்டும் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறி விடவேண்டும் என்பதுதானே அதற்குப் பொருள்.
சோசலிசம் கூடாது என்றால் என்ன பொருள்? இந்தியர் எல்லோரும் சமம் என்றோ, இந்துக்களில் உள்ள எல்லா ஜாதியினரும் சமம் என்றோ கொள்ள முடியாது. இந்துக்களுக்குள்ளே பல ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்; ஆண் பெண் உயர்வு தாழ்வு இருக்கும்; இந்தியர்களுக்குள்ளும் ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பதுதானே அது பொருள்.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி தேர்தல் நடந்து, இந்திய அரசியல் சாசனமே வேதம் என்று பேசிவிட்டு, செயலில் அதற்கு நேர் எதிராக செயல்படுவதைத்தானே இதுகாட்டுகிறது?
தேர்தல் வாக்குறுதியில் ஏழைகளின் வாழ்வில் ஒளிவீசும் என்றார்கள். ஏழைகள் எல்லா வகையிலும் மேம்படுவார்கள். அவர்களுக்கு இந்த அரசு துணை நிற்கும் என்று சொல்லி வாக்கு வாங்கி ஆட்சிக்கு வந்தனர். ஆனால், செய்தது என்ன? இந்த பி.ஜே.பி. அரசால் விவசாயம் புறக்கணிக்கப்படுகிறது. தொழிலதிபர்களுக்கே எல்லா உதவிகளும் செய்யப்படுகின்றன. உர விலை உயர்த்தப்பட்டு விட்டது, விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கச் சட்டத்தை நிறைவேற்ற படாதபாடு, படு தோல்வி கண்டாலும் விட்டேனாபார்! என்று விடாபிடியான வீண் முயற்சி! ஏழை விவசாயக் கூலிகளுக்குக் கிடைத்துவந்த 100 நாள் வேலை முடக்கப்பட்டு விட்டது. ஏழைகளுக்குக் கிடைத்து வந்த மானியங்கள் எல்லாம் ரத்து!
சொன்னது என்ன செய்வது என்ன!
கல்வி : கல்வியில் புதிய எழுச்சியை உண்டுபண்ணுவோம் என்று முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள், ஏழைகளின் கல்வியைப் பறிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவும் செய்கின்றனர்.
() கல்விக்கடன் இல்லை : காங்கிரஸ் அரசில், குறிப்பாக .சிதம்பரம் அவர்கள் நிதி அமைச்சராக இருந்தபோது வங்கிகளுக்கு நெருக்கடி தந்து நிர்ப்பந்தித்து, நேரடியாகக் களத்தில் இறங்கி ஏழைகளுக்கு ஏராளமாய் கல்விக் கடன் கிடைக்கச் செய்தார். அதன் பயனாய் ஏழை மாணவர்கள் எளிமையாய் கடன் பெற்று படித்தனர். இன்று கல்விக்கடன் இல்லை. கல்வி பயிலுகின்றவர்களுக்கு உதவித் தொகை இல்லை. இதனால் கல்வி ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி நிற்கிறது.
() சிறார் தொழிலாளர் சட்டத் திருத்தம் : 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கட்டாய கல்வி என்று சட்டம் இயற்றி அனைத்து பிள்ளைகளும் படிக்க காங்கிரஸ் அரசு வழி செய்தது. ஆனால், மதவாத, ஆரியப் பார்ப்பன ஆதிக்க பி.ஜே.பி. அரசு சிறார் தொழிலாளர் தடைச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து மீண்டும் குலக்கல்வித்திட்டத்தைக் கொல்லைப்புறமாகக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.
குடும்பப் பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் என்பன போன்ற பொழுதுபோக்கு சார்ந்த பணிகள்; சர்க்கஸ் தவிர்த்துப் பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்கு உட்பட்டவர்களை ஈடுபடுத்தவும், மற்றபடி வேறு எந்தப் பணியிலும் அவர்களை அமர்த்த தடை செய்யும் வகையிலும் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதன் பொருள் என்ன?
பள்ளி நேரம் முடிந்ததும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிள்ளைகள் அவர்கள் பரம்பரைத் தொழிலை செய்ய தள்ளிவிடும் இந்த சூழ்ச்சி பழைய குலக் கல்வித் திட்டத்தின் மீட்சியல்லவா? ஏழை, அடித்தட்டு மாணவர்களின் கல்விக் கவனத்தை இதுசிதைக்காதாகல்வியை விட வழிவகுக்காதா? பி.ஜே.பி. ஆட்சியின் அசைவுகளை அணுஅணுவாய் கண்காணித்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உடனே கண்டன அறிக்கைத் தந்து, புரட்சி வெடிக்கும் என்ற போர்ச் சங்கும் ஊதியுள்ளார்கள். பி.ஜே.பி. உள்ளடக்கிய சங் பரிவாரங்களின் பாஸிச முயற்சிகளை உடனுக்குடன் முறியடிக்கும் திராவிடர் கழகத்தின் பின்னே மதச் சார்பற்ற சக்திகள் விழிப்புடன் வினையாற்ற வேண்டிய கட்டாயத்தை இவை உணர்த்துகின்றன.
இந்தச் சிறார் தொழிலாளர் சட்டத் திருத்தம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வியை கைவிடத் தூண்டும் சூழ்ச்சிச் செயலாகும். இதை அனைத்து மக்களும் சேர்த்து போராடி முறியடிக்க வேண்டும். 25ரூ இலவசக் கல்விக்கு நிதியில்லை
கல்வியை மேம்பாடடையச் செய்வோம். ஏழை மாணர்கள் தடையின்றி கற்க உதவுவோம் என்று மேடைக்கு மேடை முழங்கிய பி.ஜே.பி. ஆட்சியாளர்கள், மாநில அரசுக்குக் கொடுக்கும் நிதி உதவியைச் செய்யாததால் இன்று இத்திட்டமே முடங்கும் நிலை வந்துள்ளது. தனியார் பள்ளிகள் இலவசக் கல்வி அளிக்க முடியாது. அரசு நிதி எங்களுக்குக் கிடைக்கவில்லை என்று அறிவித்து விட்டார்கள்.
இந்த 25ரூ ஏழைக்குழந்தைகளின் கல்வி என்னவாகும்? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்.
தொழிலதிபர்களும், உயர்ஜாதியினரும் மேட்டுக்குடியினரும் வாழ்ந்தால் போதும், மற்றபடி சூத்திரனெல்லாம் வாழவழியின்றி அடிமைகளாய் ஆகட்டும் என்று திட்டமிட்டு செய்யப்படும் செயலாக அல்லவா இது இருக்கிறது.
அரசின் நிதிச் சிக்கனம் கல்வித்துறையிலா செய்வது? கல்வி அடிப்படை உரிமையாயிற்றே! கல்வி எதிர்காலத்தின் முதுகெலும்பாயிற்றே. அடித்தட்டு மக்களின் உயர்விற்கான உந்து சக்தி, உயிர் நாடியாயிற்றே!
பாடத்திட்டம் : கல்வியை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது பாடத்திட்டம்தான். பாடத்திட்டத்தில் வகுக்கும் முறையில்தான் மாணவர்களுக்கு என்ன கற்பிக்கப்பட வேண்டும்; மாணவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது.
அப்படியிருக்க, பாடத்திட்டம் அறிவிற்கு உகந்ததாய், வாழ்க்கைக்கு உதவுவதாய், வளர்ச்சிக்கும், விழிப்பிற்கும் துணை நிற்பதாய் இருக்க வேண்டும். ஆனால், இவர்கள் தங்கள் கொள்கைகளை மாணவர்களுக்குத் திணிக்கும் விதத்தில் பாடத்திட்டத்தை அமைக்கின்றனர். ஜோதிடம், புராணம், மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் முலாம்பூசி, வியாக்யானம் கொடுத்த மாணவர்களை மடயராக்கவும், மதவெறியர் ஆக்கவும் முயற்சி மேற்கொள்கின்றனர்.
தங்கள் இலக்கிற்கு ஏற்ப வரலாற்றைத் திரித்து அதை மாணவர்களைப் பயிலச் செய்யத் துடிக்கின்றனர். உண்மைக்கு நேர்மாறான செய்திகளைப் புனைந்து, அதை உண்மையென்று மாணவர்கள் ஏற்கச் செய்ய முயலுகின்றனர்.
இந்தியா திராவிடர் மண், ஆரியர்கள் வந்தேறிகள் என்பது வரலாற்றில் அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்ட உண்மை. ஆனால், இதை நேர் எதிராக மாற்றி இது ஆரிய நாடு; ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள் என்று ஆக்குகின்றனர்.
அதேபோல் தமிழ் எல்லா மொழிகளுக்கும் மூலமொழி, தொன்மொழி இந்திய மண்ணின் மொழி. இதை அப்படியே நேர் எதிராக மாற்றி சமஸ்கிருதந்தான் எல்லா மொழிகளுக்கும் மூலம். அதுவே இந்தியாவின் ஆதி மொழி என்று அப்பட்டமான பொய்யை மொழி வரலாறாக்கி, மாணவர்களுக்குக் கற்பிக்க முயலுகின்றனர். இன்றைக்கு இந்துத்துவாவாதிகள் தூக்கிப் பிடித்து சிலை வைக்கத் துடிக்கும் சர்தார் வல்லவாய்ப் பட்டேல்தான், மகாத்மா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்தவர்.
1948 பிப்ரவரி 4 ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேலால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசுச் செய்தி என்ன தெரியுமா?
சங் பரிவாரத்தின் ஆட்சேபணைக்குரிய மற்றும் தீங்கு தந்திடும் நடவடிக்கைகள் எவ்விதத் தடைகளும் இன்றித் தொடர்ந்திருக்கின்றன. சங் பரிவாரங்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் பல அப்பாவி உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. இதில் கடைசியாகப் பலியானவர், விலை மதிக்க முடியாத காந்திஜியாகும்!
காந்திஜி கொல்லப்பட்ட நேரத்தில், சர்தார் பட்டேலுக்கு ஓர் இளைஞர் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் அவர் தான் ஏமாந்துபோய் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததாயும், பின்னர் அந்த மாயையிலிருந்து நீங்கி விட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் காந்தியின் படுகொலையை கொண்டாடி மகிழ்ந்ததாயும், தில்லி உட்பட பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். கூடாரங்களில் இனிப்பு வழங்கினர் என்றும் எழுதியுள்ளார்.

(ஆதாரம் : மகாத்மா காந்தி : கடைசி கட்டம் என்ற நூல் (756ஆம் பக்கம்)

நூல்பி.ஜே.பி ஒரு பேரபாயம்
                                           ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை