வடநாட்டு ஆதிக்கமும் பெரியாரும்!
வடநாட்டு ஆதிக்கம் பற்றிக் கவலைப்பட்டார் பெரியார். இன்று எந்த ஒரு வியாபாரமானாலும் தமிழகத்தில் பெரிதும் துவங்கி நடத்துபவர் வட நாட்டுக்காரர்களே! ஒரு சமயம் பெரியார் சொன்னார்: தமிழ்நாட்டிலிருந்து வடநாட்டவர் ஆதிக்கம் அகற்றப்படவேண்டும். அவர்கள் காலூன்றினால் தமிழனுக்கு ஆபத்து அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டுமென்றார். நான் கேட்டேன். அவர்கள் இங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டால் பம்பாய் போன்ற நகரங்களிலுள்ள தமிழர்கள் விரட்டப்படுவார்களே என்றேன். இங்கு சுரண்டும் வடநாட்டுக்காரர்கள் சென்னை சவுகார்பேட்டை போன்ற இடங்களில் பாருங்கள். அவர்கள் பணமுதலைகள். ஆனால் அப்படி பம்பாயில் எந்த தமிழன் இருக்கிறான்? சில பார்ப்பான் இருப்பான். நம் ஆட்களில் சிலர் பியூனாக, குமாஸ்தாவாக, கூலியாகத்தான் இருப்பார்கள். திருப்பி அனுப்பட்டுமே என்றார்.
Comments
Post a Comment