நயத்தக்க நாகரிகம்
`நான் மிகவும் பரிசுத்தக்காரன் என்று எங்கு சென்றாலும் பிரகடனப் படுத்துவதுபோல பழக்கவழக்கங்களைக் கொண்டமையைக் கூட, தந்தை பெரியார் கண்டிக்கத் தவறியதில்லை!
ஒரு சிறிய அனுபவம் - படியுங்கள்.
அய்யா அவர்களுடன் சென்றபோது அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தார்கள். ஒருவர் தவிர அனைவரும் அருந்தினர்.
உபசரிப்பாளர்களிடம் இவர், `நான் காபி சாப்பிடுவதில்லை என்று கூறியவுடன், அவர்கள் பதற்றத்துடன்,
வேறு என்ன சாப்பிடுவீர்கள்,
டீயா,
பழச்சாறா?
மோரா?
என்ன சாப்பிடுவீர்கள்? உடனே ஏற்பாடு செய்கிறோம் என்று அலைமோதினர்! `பரவாயில்லீங்க என்று சொன்னாலும், அவர்கள் கேட்கவில்லை.
அவருக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தார்கள்;
குடித்துவிட்டுப் புறப்பட்டார்கள்.
வேனுக்கு வந்ததும், அந்த ``ஒருவரை தந்தை பெரியார் கண்டித்தார்.
``ஏம்பா,
வெளியில் சென்றால் வேறு எதைக் கொடுத்தாலும் குடிக்க வேண்டியதுதானே நியாயம்; அவர்களிடம் இப்படி `காபி குடிக்கமாட்டேன் என்று இறுதியில் கூறும்போது,
அவர்களுக்கு எவ்வளவு தர்ம சங்கடம்! இது ஒருவகையான விளம்பரம் தேடுவது அல்லாமல் வேறு என்ன? என்றார்! அந்த நபர் வேறு யாருமல்லர்,
நான்தான்.
இந்த அறிவுரை எனக்கு சுருக்கென தைத்தது. அதை அப்படியே நெஞ்சில் பதிய வைத்துக்கொண்டேன்.
அதுமுதல் பிறகு எங்கு சென்றாலும், யார் கொடுத்தாலும் தட்டாமல் குடித்துவிடுவேன்.
`நயத்தக்க நாகரிகமுடைய வனானேன்!
- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 4
Comments
Post a Comment