ஆர்.எஸ்.எஸ். தோற்றம்!
ராஷ்ட்ரீய ஸ்வயம் ஸேவக் ஸங்
|
(Rastria
Swayam Sang) என்பதன் சுருக்கமே ஆர்.எஸ்.எஸ்.
என்பது.
1925 ஆண்டு விஜயதசமி நாளில் அய்ந்து பேர் சேர்ந்து அமைத்ததே இந்த அமைப்பு.
பி.ஜே.பி.யைப் பற்றி நூல் எழுத வந்தவர் ஆர்.எஸ்.எஸ்.
பற்றி ஆராய்கிறாரே ஏன் என்று சிலர் எண்ணக் கூடும். ஆர்.எஸ்.எஸ்.தான் பி.ஜே.பி;
ஆர்.எஸ்.எஸ்.
தான் வி.எச்.பி.;
ஆர்.எஸ்.எஸ்.தான் இந்து மகாசபை; ஆர்.எஸ்.எஸ்.தான் ஜனசங்.
எனவே, பி.ஜே.பி.யைப் பற்றி புரிந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ்.
பற்றி அவசியம் ஆராய வேண்டும்; அறிய வேண்டும். இவற்றை அடுத்தடுத்தக் கட்டுரைகளில் தெளிவாக விளக்கியுள்ளேன்.
1927ஆம் ஆண்டு இராம நவமியன்று இந்த அமைப்பிற்கு ராஷ்ட்ரீய ஸ்வயம் ஸேவக் ஸங் (ஆர்.எஸ்.எஸ்.)
என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அமைப்பின் கொடியான காவிக் கொடியும் அன்றுதான் முடிவு செய்யப்பட்டது.
இந்த அமைப்பைத் தொடங்கிய நாள், பெயர் சூட்டிய நாள், தேர்ந்தெடுத்த கொடி இவை அனைத்திற்கும் நோக்கு உண்டு, காரணம் உண்டு.
இராமன் இராவணனை வென்ற நாள் விஜயதசமி. எனவே, ஆரிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.
அந்நாளில் அமைக்கப்பட்டது.
அதாவது, அந்த நாள் தங்கள் இனப்போரில், தங்கள் இராமன் வெற்றி பெற்ற நாள் என்பதை எண்ணி, அதே போல் தங்கள் முயற்சியும், அமைப்பும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்த நாள் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த அமைப்பிற்கு பெயர் சூட்டிய நாள் இராம நவமி. இராம நவமி என்பது இராமன் பிறந்த நாள். எனவே, இராமனோடு தொடர்புடைய நாளைப் பெயர் சூட்டத் தேர்வு செய்தனர்.
காவிக் கொடியும் அதே நாளில் முடிவு செய்யப்பட்டது. அது நிறத்திலும், வடிவத்திலும் இராமனுடைய கொடி என்று அவர்களால் விளக்கம் கூறப்பட்டது.
ஆக,
ஆர்.எஸ்.எஸ்.
தொடங்கப்பட்டபோதே, திட்டமிட்ட நோக்கை மனதில் கொண்டே தொடங்கப்பட்டிருக்கிறது என்பது இதிலிருந்து விளங்குகிறது.
இவற்றை இந்நூலின் தொடக்கத்திலேயே இவ்வளவு ஆழமாக ஆராய்வதற்கு முதன்மையான காரணம் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.
முதல் அதன் இறுதி வடிவமான (இப்போதைய வடிவமான) பி.ஜே.பி.
வரையுள்ள அனைத்து அமைப்புகளும் (இந்து மகா சபை, ஜனசங், வி.எச்.பி.
போன்ற அனைத்து ஆர்.எஸ்.எஸ்.
வடிவங்களும்) முஸ்லீம் எதிர்ப்பை முதன்மை இலக்காகக் கொண்டவை; இந்து மதத்தைக் காப்பாற்றக் கூடியவை, இந்து ராஷ்டிராவை அமைக்கக் கூடியவை, இந்துக்களைப் பாதுகாக்கக் கூடியவை என்ற கணிப்பே பலராலும் செய்யப்படுகிறது; சிலராலும் நம்பப்படுகிறது.
ஆனால், உண்மையில் இவற்றின் இலக்கு இவை அல்ல! மேற்கண்டவாறு இவ்வமைப்புகள் கூறிக் கொள்வதெல்லாம், இந்து என்ற போர்வையில், கோர்வையில் இந்துக்களை ஒன்று திரட்டவும், முஸ்லீம் எதிர்ப்பை, மோதலை அவ்வப்போது செய்து, சூடேற்றி, வெறியேற்றி விரைவில் தங்கள் இலக்கை அடையவுமேயாகும். அப்படியென்றால், இந்த அமைப்புகளின் உண்மையான நோக்கு என்ன?
ஆரியப் பார்ப்பனர்கள், இந்த நாட்டைத் தங்களின் ஆதிக்கத்தின், அதிகாரத்தின், கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, இந்து மதத்தின் பேரால் தங்களின் வர்ணாஸ்ரம ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி தங்கள் இனத்தையும், தங்கள் மொழியையும், தங்கள் சாஸ்திரங்களையும் உயர்வாகப் பாதுகாத்து, தங்களின் சாஸ்திரக் கருத்துக்களை சட்டங்களாகச் செயல்பட சட்டம் செய்து, அதன் மூலம் ஆரியர் அல்லாத அனைவரையும் அடக்கி ஆள்வதே ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புகள் அனைத்தின் உண்மையான நோக்கமாகும்.
இப்படித் தங்களின் உண்மையான நோக்கை வெளிப்படையாகக் கூறினால், இந்துக்கள் அனைவரும் ஒன்று சேரமாட்டார்கள். எனவே, தங்கள் சுயநல நோக்கை மறைத்து, இந்துக்களின் நலனுக்கான அமைப்பாக அதைக் காட்டி வருகின்றனர்.
இந்து என்று தங்களை எண்ணிக்கொண்டு, நமக்காக அமைக்கப்பட்ட அமைப்புகள்தானே இவை! பி.ஜே.பி.
ஆட்சி செய்தால் நமக்குத்தானே நல்லது என்று எண்ணி ஏமாந்தால், அதன் விளைவு, ஆரியர்க்கு நாம் அடிமையாகி, இதுவரை நாம் பெற்ற உயர்வு உரிமை அனைத்தையும் இழந்து, அவலத்தை, அவமானத்தை அடைய நேரிடும் என்பதைச் சரியான ஆதாரங்களோடும், ஆய்வுளோடும் விளக்கி விழிப்பூட்டவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நூல், ஆர்.எஸ்.எஸ்.,
வி.எச்.பி.,
பி.ஜே.பி.
போன்றவற்றின் வரலாற்றை எழுதுகின்ற வழக்கமான வரலாற்று நூல் அல்ல. அதற்கு நாட்டில் எத்தனையோ நூல்கள் உள்ளன. பல மொழிகளிலும் உள்ளன.
இந்நூல் ஒரு விடுதலைக் காவியம்!
ஆரிய ஆதிக்கத்திலிருந்து ஆரியர் அல்லாதாரை மீட்டு எடுக்கின்ற, விழிப்பூட்டி வெளிக் கொணருகின்ற ஓர் ஆய்வு நூல்!
இது ஒரு விடுதலை முரசு! ஓர் ஒளி விளக்கு
!
!
இப்படித்தான் இதைக்கொள்ள வேண்டும்.
இவை தற்பெருமையாய் கூறப்படும் புகழ்ச்சிகள் அல்ல. நாங்கள் தற்புகழ்ச்சியை விரும்பக் கூடியவர்களும் அல்லர். இந்நூலின் உள்ளடக்கத்தையும், அவசியத்தையும், நோக்கையும், பயனையும் உணர்த்தவும், ஒவ்வொருவரும் படிக்கவேண்டும் என்று வற்புறுத்தவுமே இவைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
எனவே, இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது;
படித்து விழிப்பு பெற வேண்டிய நூல்; ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டிய நூல்.
விழிப்புப் பெறாது அவர்களின் வலையில் வீழ்வோமேயானால், விபரீத விளைவுகளை, அழிவை, இரத்தக் களறியை, நிம்மதியின்மையை, நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கும் நிலையில்லா வாழ்வை, குண்டு வெடிப்புகளை, குத்துவெட்டுகளை நாம் அன்றாடம் அனுபவித்தே தீரவேண்டும்!
இவை வெறும் அச்சுறுத்தல்களோ, அதிகப்படுத்தி எழுதப்பட்ட அலங்கார ஆரவார வார்த்தைகளோ அல்ல. இவை அப்பட்டமான உண்மை நிலைகள்; ஏமாந்தால் நாம் கொடுக்க வேண்டிய விலைகள்!
எனவே, காலத்தின் கட்டாயம் கருதி இந்நூல் எழுதி வெளியிடப்படுகிறது. அடுத்தத் தேர்தலை (நாடாளுமன்றத் தேர்தல்) சந்திக்கும் முன் இந்த நாட்டு மக்கள் விழிப்புப் பெற்றாக வேண்டும். அறுதிப் பெரும்பான்மையோடு பி.ஜே.பி.
ஆட்சியா? அல்லது அறவே வீழ்ச்சியா? என்பதை அது தீர்மானிக்கும். கூட்டாட்சி என்பதால் குனிந்து போகும் அவர்கள், முழுப்பெரும்பான்மை பெற்றால் முகமூடியை விலக்கிவிட்டு, தங்களின் உண்மை உருவத்தை, உண்மைத் திட்டத்தைக் காட்டுவர். அரசியல் அமைப்புச் சட்டங்கள் அனைத்தும் ஆரியச் சட்டங்களாக அவர்களால் ஆக்கப்படும். ஆம்.
இந்து ராஷ்ட்ரா அரங்கேறும்!
விளைவு, மேற்சொன்ன அனைத்து அவலங்களும், வன்கொடுமைகளும் அன்றாடம் நடக்கும், ஆரிய ஆதிக்கம் தலைவிரித்தாடும்!
எனவே, அடுத்த தேர்தலுக்குள் இந்திய மக்கள் அனைவரும் தெளிவு பெற்றாக வேண்டும்; தெளிவுபெறச் செய்தாக வேண்டும்!
ஆகவே, ஆரிய ஆர்.எஸ்.எஸ்.
கூட்டத்தின் உண்மை உருவத்தை, உள்ளத்தை, வஞ்சகச் சூழ்ச்சியை விரிக்கும் வலையை, இந்நாட்டின் அமைதிக்கு அவர்கள் வைக்கும் உலையை உணர்த்தி, அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் வளர்த்தாக வேண்டும். அதற்கு, மக்களும் விழிப்பும் தெளிவும் உண்டாக்க வேண்டும். அதற்கான முயற்சியே இந்நூல்.
எனவே, அனைவரும் படிப்பதோடு, ஆழமாகப் படித்து, அனைத்தையும் படித்து, படிக்காத மக்களுக்கும் எடுத்துச் சொல்லி, விளக்கி விழிப்புண்டாக்க வேண்டியது விவரந்தெரிந்தோர், விழிப்புடையோர் கடமையாகும்!
ஆர்.எஸ்.எஸ்.
முதல் பி.ஜே.பி.
வரையிலான இந்த அமைப்புகளின் பேராபத்தை, சூழ்ச்சியை, வஞ்சனையை சதித் திட்டங்களை ஆதாரப்பூர்வமாக விளக்கிச் சொல்லுகின்ற வகையிலே, இவற்றின் வரலாற்றையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுகின்ற வகையிலே இந்நூல் எழுதப்பட்டுள்ளமையால் இதை ஓர் ஆய்வு நூலாகவும், வரலாற்று நூலாகவும், விழிப்பூட்டும் நூலாகவும் கொள்ளலாம்.
அந்த நோக்கில்தான் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பைத் தோற்றுவித்த நாளிலும், பெயர் சூட்டிய நாளிலும், தேர்ந்தெடுத்த கொடியிலும் எவ்வளவு பெரிய திட்டமும், இலக்கும், காரணங்களும் உள்ளடங்கியிருக்கின்றன என்பதை விளக்கினேன்.
இந்துமதத்தில் எத்தனையோ கடவுள்கள் உண்டு; எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு. என்றாலும், ஆரியர்கள் (ஆர்.எஸ்.எஸ்.
பரிவாரங்கள்) தங்கள் தலைவனான இராமனை மட்டுமே இந்து மதத்தின் ஏகக் கடவுளாக காட்ட திணிக்க முற்படுகின்றனர். அந்த முயற்சியின் அடிப்படையில்தான், ஆர்.எஸ்.எஸ்.
தொடங்கிய நாளும், பெயர் சூட்டிய நாளும், தேர்ந்தெடுத்தக் கொடியும் இராமனை அடிப்படையாகக் கொண்டே தேர்வு செய்யப்பட்டன. இது அவர்களை அடையாளம் காட்டுகின்ற முதல் ஆதாரம்.
ஆர்.எஸ்.எஸ்.
பரிவாரங்கள் கூறிக்கொள்வதற்கும், செயல்படுவதற்கும் எப்போதுமே தொடர்பு இருக்காது. சொல்வது ஒன்றும் செய்வது வேறாகவும் இருக்கும்.
அவர்களின் உண்மையான நோக்கு ஆரிய ஆதிக்கத்தை ஏற்படுத்துவதுதான். என்றாலும், சொல்லும்போது ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புகள் இந்துக்களின் நன்மைக்கான அமைப்புகள் என்றே சொல்வார்கள். இதை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட அவர்களின் அறிவிப்பு உதவும்.
ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பின் தோற்றம் பற்றி அதன் அதிகாரப்பூர்வ வெளியீடு கூறுவதைக் கீழே படியுங்கள்.
இந்துக்கள் மட்டுமே இந்துஸ்தானை விடுவிப்பர். அவர்கள் மட்டுமே இந்துக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பர். இந்து சக்தியே நாட்டைப் பாதுகாக்கும். இந்து இளைஞர்களை நற்பண்போடும், தாய்நாட்டுப் பற்றோடும் அமைப்பு முறையில் திரட்ட வேண்டும். வேறு வழியில்லை. இந்த மாபெரும் ஆன்ம வேதனையே ராஷ்டிரிய சுயம் சேவக் சங் அமைப்பதில் வெளிப்பட்டது. ஹெட்கெவார் தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து (இவரையும் சேர்த்து அய்ந்து பேர்) ஆர்.எஸ்.எஸ்.ன் அன்றாடச் செயல்திட்டத்தைத் தொடங்கினார். அந்தப் பொன்னாள் 1925ஆம் ஆண்டு விசயதசமி நன்னாள்.
- (சி.பி.
பிஷிகார் எழுதிய சேகஷங் சங் நிர்மாதா - 1979, பக்கம் 251).
இது,
ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படை நோக்கம் என்ன என்பதை பற்றி அவர்களே அறிவித்தது.
மேற்கண்ட அறிவிப்பில், ஆர்.எஸ்.எஸ்.-
அய் அமைத்த நோக்கில் ஓர் ஆதிக்க வெறி தெறிக்கிறதே அல்லாமல் அதில் அறிவுப்பூர்வமான ஆதங்கம், அக்கறை ஏதாவது உள்ளதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும், இவர்கள் கூறும் நோக்கங்களுக்கும் இவர்களின் செயல்பாடுகளுக்கும் தொடர்பே இல்லை என்பதையும் கீழே விளக்கியுள்ளதைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டை இந்துக்கள் மட்டுமே விடுவிப்பர் என்கின்றனர். இந்த நாட்டை இவர்கள் யாரிடமிருந்து விடுவிக்கப் போகிறார்கள்?
இந்த முழக்கம் முழங்கப்பட்ட ஆண்டு 1925. அப்போது இந்தியாவை ஆண்டது பிரிட்டிஷ்காரர்கள். அவர்களிடமிருந்து நாட்டை மீட்கவேண்டும் என்றால் இந்தியர்களே ஒன்று சேருங்கள் என்றல்லவா அழைக்க வேண்டும்? அதை விடுத்து இந்துக்களே ஒன்று சேருங்கள் என்றா அழைக்க முடியும்? இந்த நாட்டில் இந்துக்கள் மட்டுமா வாழ்கிறார்கள்?
பிரிட்டிஷாரிடமிருந்து நமக்கு விடுதலை பெற்றுத் தந்த காந்தியும், நேருவும், வ.உ.சி.யும் மற்றவர்களும் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று அழைத்தா விடுதலை பெற்றார்கள்?
விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், தலைவர்கள், தொண்டர்கள் இவர்களிடம் மத ரீதியான எந்த உணர்வுகளுமே இருந்ததில்லையே! எல்லா மதமும், எல்லா இனமும், எல்லா மொழியினரும் ஒன்று சேர்ந்தல்லவா உரிமைக்குப் போராடி விடுதலை பெற்றனர்?
விடுதலைப் போராட்டத்தில் எத்தனை இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிரைத் தந்தனர்? எத்தனை கிறித்தவர்கள் தங்களைத் தியாகம் செய்தனர். அவர்களெல்லாம் மதவெறி நோக்கிலா விடுதலைக்குப் போராடினர்?
அன்றைக்கு மட்டுமா? இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தபோது இந்தியாவிற்காக வீரசாதனை புரிந்த இஸ்லாமியர்கள் எத்தனை பேரைக் காட்டவேண்டும்? கிறித்தவர்கள் எத்தனை பேரைக் காட்டவேண்டும்?
தீரத்தோடு போரிட்டு தியாகத் தீயில் மாண்டு போன சீக்கியர்களின் தியாகம் என்ன சாதாரணமானதா?
இன்றைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அரசின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக உள்ளவர் ஆ.பெ.ஜே.
அப்துல் கலாம் அல்லவா? அவர் ஒரு முஸ்லீம் அல்லவா?
இந்திய நாட்டின் பாதுகாப்பே ஒரு முஸ்லீம் கையில், முஸ்லீம் அறிவில், முஸ்லீம் திறமையில் இருக்கிறது என்று சொல்லும்போது இங்கு இந்து என்ன வேண்டியுள்ளது?
இந்த நாட்டு இந்துக்களை விட இந்த நாட்டு முஸ்லீம்கள் எந்த வகையில் நாட்டுப்பற்றுக் குறைந்தவர்கள்?
இன்னும் சொல்லப் போனால் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு தன் உடல், பொருள், உயிர் அனைத்தையும் இழந்து தியாகம் புரிவதில் முன்னணியில் நிற்கக் கூடியவர்கள் முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள்.
ஆனால், இந்த நாட்டை அக்காலத்திலிருந்து இக்காலம் வரை அயல்நாட்டினருக்குக் காட்டிக் கொடுத்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் - இந்துக்கள் என்று மார்தட்டக் கூடியவர்கள்.
கஜினி முகமது போன்ற வெளிநாட்டு மன்னர்களை இந்தியாவின் மீது படையெடுத்து வரும்படி அழைத்தவர்களே - ஆரியப் பார்ப்பனர்கள் என்பது ஆணித்தரமான வரலாற்று உண்மை. அவர்களின் தேசத்துரோகம் அன்றோடு முடிந்து விடவில்லை; இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இந்திய நாட்டின் மிக முக்கியமான இராணுவ இரகசியங்களைத் திருடி பாகிஸ்தானுக்கு விற்றவன்; இந்திய நாட்டுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்தவன் கூர்ம நாராயணன் என்ற ஆரிய பார்ப்பான் அல்லவா? அவர் ஓர் இந்து அல்லவா?
வீரத்திலாகட்டும், விளையாட்டிலாகட்டும் முஸ்லீம் இந்திய நாட்டுக்கு என்ன செய்யவில்லை? முகமது அஸாருதீன் கிரிக்கெட் அணிக்குத் தலைமை வகித்து மற்றவர்களை விட சாதித்துக் காட்டவில்லையா?
அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போகும் இந்திய முஸ்லீம்கள் தான் சம்பாதித்த பணத்தை தாய்நாடான இந்தியாவிற்கு அனுப்பி, இந்தியாவின் அந்நியச் செலாவணியை உயர்த்திக் கொண்டுள்ளார்கள்.
ஆனால், இந்திய ஏழைகளின் வரிப்பணத்தில் படித்துப் பட்டம் பெற்று, விஞ்ஞானியாகவும், டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும் அமெரிக்கா, அய்ரோப்பா, இங்கிலாந்து என்று சென்று அங்கேயே வசதியாக குடியமர்ந்து சுகபோகம் அனுபவிப்பவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள். இந்தியாவை உயர்த்துகின்றவர்கள் இதில் யார்?
உண்மைகள் இப்படியிருக்க, இந்தியாவை இந்துக்களால்தான் விடுவிக்க முடியும் என்று 1925இல் ஆரிய பார்ப்பனர்கள் ஆர்ப்பரித்தது அசல் மோசடி அல்லவா? அதற்குத்தான் ஆர்.எஸ்.எஸ்.
உருவாக்கப்பட்டது என்பது அயோக்கியத்தனம் அல்லவா?
இந்தியாவை விடுவிக்கப் போகிறேன் என்ற ஆர்.எஸ்.எஸ்.
பார்ப்பனக் கூட்டம் இந்திய விடுதலைக்காக ஏதாவது செய்ததுண்டா? (இதைத் தனியொரு அத்தியாயத்தில் விளக்கி இருக்கிறேன்.) இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்பவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் அல்லவா பங்கு கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு முஸ்லிம்களோடு மோதுகிறார்கள் என்றால் அவர்கள் உண்மையான நோக்கு இந்திய விடுதலையாக எப்படியிருக்க முடியும்? மாறாக இவர்கள் தூண்டிய மதவெறி பாகிஸ்தான் பிரிவினைக்குத்தான் வழிவகுத்தது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை உணர்வு இந்த ஆதிக்க வெறிபிடித்த ஆரியக் கூட்டத்தின் அடாவடித்தனங்களால் தான் சூடுபடுத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டு முஸ்லீம்கள் இந்தியாவோடு இரண்டறப் பின்னிப் பிணைந்தே வாழ்ந்தனர். வாழவும் விரும்பினர்.
காரணம், இஸ்லாமியர்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த நாட்டு முஸ்லிம்கள் அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அயல்நாட்டினர் அல்லர். அவர்கள் இந்த மண்ணின் உரிமையாளர்கள். நமது இரத்தத்தின் இரத்தம்; சதையின் சதை.
இறைவழியில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அவ்வளவே!
இறை நம்பிக்கை என்பது கொள்கை. யார் எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அதனால் அவர்கள் அந்நியர்கள் ஆகமாட்டார்கள்.
நம் உடன்பிறந்த ஒருவன் இஸ்லாம் மதத்திற்கு போய்விட்டால் அவன் அந்நியன் ஆகிவிடுவானா? அவன் எந்த மதத்திற்குச் சென்றாலும் சகோதரன், சகோதரன் தானே? இதில் மதம் என்ன வேண்டிக் கிடக்கிறது?
பின் ஏன் ஆரிய பார்ப்பனர்கள் மதத்தை ஒரு முக்கிய கருவியாக கையில் எடுக்கிறார்கள்? அங்கு தான் அவர்களின் சூழ்ச்சியே அடங்கியுள்ளது.
ஆரியர்கள் இந்திய நாட்டிற்கு உரிமையானவர்கள் அல்லர். அவர்கள் அயல் நாட்டிலிருந்து ஆடுமாடு ஓட்டிக் கொண்டு இந்தியாவிற்குள் பிழைக்க வந்தவர்கள். அதிலும் சிறுபான்மையினர்.
இன அடிப்படையில் பார்த்தால் அவர்கள் 2 சதவிதம் கூட தேறமாட்டார்கள். எனவே, இன அடிப்படையில் நோக்கினால் அவர்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவர். அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அவர்களால் ஆதிக்கம் செலுத்த இயலாது.
எனவே, இந்நிலையை மாற்றி, தங்களுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளவும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் அவர்களுக்குச் சரியான ஆயுதமாகப் பயன்படுவது மதம்.
மதம் என்ற போர்வையில் - கோர்வையில் நுழைந்து கொண்டால் அவர்கள் பெரும்பான்மை என்ற தகுதியைப் பெற்றுவிடலாம் என்பதாலேயே அவர்கள் மதத்தைக் கையில் எடுக்கின்றனர்.
உண்மையில் சிறுபான்மையினரான ஆரிய பார்ப்பனர்களை பெரும்பான்மையினராகக் காட்டவும், உண்மையில் பெரும்பான்மையினமான இஸ்லாம் மற்றும் கிறித்தவர்களை சிறுபான்மையினராகக் காட்டவும் இந்த மதம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. ஆரிய சூழ்ச்சியின் அடித்தளமே இங்குதான் உள்ளது. நம் மக்கள் இங்குதான் விழிப்போடு இருந்து ஆரிய பார்ப்பனர்களை முறியடிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக - தமிழ் நாட்டைப் பார்ப்போம். தமிழ்நாட்டில் தமிழர், ஆரியர் என்ற இரண்டு இனங்கள் உண்டு.
இன அடிப்படையில் நோக்கினால் தமிழர் 98 சதவீதம்; ஆரியர்கள் 2 சதவீதம்.
இந்த இன அடிப்படையில் மோதல் வந்தால் ஆரிய பார்ப்பனர்களால் தாக்குப் பிடிக்க முடியாது. அவர்களுக்கு என்றென்றும் ஆபத்து; நித்த நித்தம் செத்துப் பிழைக்க வேண்டும்.
இந்நிலையிலிருந்து தங்களுக்குப் பாதுகாப்புத் தேடவே மதத்தைக் கையில் எடுக்கின்றனர்.
மதம் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, இந்து என்ற கோர்வையில் பெரும்பான்மையைக் காட்டிக் கொண்டு விடுகிறார்கள்.
உண்மையிலேயே பெரும்பான்மை இனமான தமிழர்களில் சிலர் இஸ்லாம் மதத்தையும், கிறித்தவ மதத்தையும் ஏற்றுக் கொண்டதற்காக அவர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்படுகிறார்கள்.
நம் இன எதிரிகளை நம்மோடு சேர்த்து, நாமே அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும், நம் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகள் வேறு மதக் கடவுளை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக அவர்களை எதிரிகளாக நினைத்து மோதவும்கூடிய ஓர் அவல நிலையை மதம் ஏற்படுத்துவதால், அது ஆரியர்களுக்குப் பாதுகாப்பும் உயர்வும் அளிப்பதால்; அவர்கள் ஆதிக்கம் செய்ய வாய்ப்பு தருவதால் ஆரியர்கள் மதத்தை உயிராக மதிக்கின்றனர்.
எனவேதான், எந்தப் பிரச்சினையிலும் மதம் என்ற அடிப்படையிலே அவர்கள் நோக்குகின்றனர். மதம் என்று ஒன்று இல்லையென்றால், அவர்களுக்குப் பாதுகாப்பும் இல்லை, உயர்வும் இல்லை; ஆதிக்கம் செலுத்த வாய்ப்பும் இல்லை.
எனவே, இச்சூழ்நிலையை நம் மக்கள் - ஆரியர் அல்லாதார் - நன்றாகப் புரிந்து கொண்டு, மத மயக்கத்திலிருந்து விடுபட்டு, ஆரியர் அல்லாதார் என்ற பார்வையில், கோர்வையில் நாம் ஒன்றிணைந்து, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற வேண்டும்; அவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
மாறாக, இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஆரிய சூழ்ச்சியை அறிந்துகொள்ளாமல், நம் இனத்தவர்களை, நம் உடன் பிறப்புகளை, நம் உறவினர்களை, முஸ்லிம் என்றும், கிறித்தவர் என்றும், சீக்கியர் என்றும் எதிர் நிலைப்படுத்தி நமக்கு நாமே மோதிக் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?
மதம் என்பது கொள்கை. அது மாற்றிக் கொள்ளக் கூடியது. விரும்பும் மதத்தை ஒருவர் பின்பற்ற முடியும். ஆனால், இனம் அப்படிப்பட்டதல்ல. இனம் என்பது இரத்தவழித் தொடர்பு. எனவே, மதபோதையில் மயங்கி இனவுணர்வை இழக்கக் கூடாது!
தேசிய ஒருமைப்பாட்டை ஏற்று இந்தியாவை நேசிக்கிறோம் என்றால் இந்தியன் என்ற உணர்வு மட்டும்தான் இருக்கவேண்டுமே தவிர, இதில் இந்து என்ற மத உணர்வு வரக்கூடாது!
கடவுள் நம்பிக்கையிருந்தால் கடவுளை வழிபட வேண்டுமே தவிர, இதில் மதத்திற்கு என்ன வேலை?
உண்மையான பக்தனுக்கு எல்லா கடவுளும் ஒன்றே! எல்லா மதமும் ஒன்றே! எல்லா கோயில்களும் ஒன்றே!
மசூதியை இடித்துவிட்டு, கோயில் கட்டவேண்டும் என்பவனும், கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டவேண்டும் என்பவனும் எப்படி பக்தனாக, கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்க முடியும்.
உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் காலங்காலமாக எல்லா கடவுளையும் சமமாகவே மதித்து வணங்கியிருக்கின்றனர். அவர்களிடம் எந்த வேறுபாடும் வெறுப்பும் இருந்ததில்லை.
ஒவ்வொருவனுக்கும் தன் மார்க்கம் சிறந்ததென்று கூறிக்கொள்ள உரிமையுண்டு. விரும்புகின்றவர்கள் விரும்புகின்ற மார்க்கத்தை ஏற்கின்றனர்; பின்பற்றுகின்றனர். இதில் மற்றவர்கள் ஆத்திரப்பட என்னவுள்ளது?
எந்த மதம் எவன் வீட்டுச் சொத்து? உலகிலுள்ள மதம் அனைத்தும் உலகப்பொதுதான்! யார் வேண்டுமானாலும் எதையும் பின்பற்றலாம். யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை விட்டும் விலகி வேறு மதத்தைப் பின்பற்றலாம். மதமே வேண்டாம் என்று மறுக்கவும் செய்யலாம். இவையெல்லாம் தனி மனித விருப்பங்கள். இதில் மற்றவர்கள் தலையிட, கட்டுப்படுத்த - கட்டாயப்படுத்த கடுகளவும் உரிமையில்லை!
நீதியும் நேர்மையும் விரும்புகின்ற எவரும் இதைத்தான் சொல்வர்.
ஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் மட்டும் - மதம் மாறுகிறார்கள் என்றால், அலறித் துடிப்பார்கள்; ஆர்த்தெழுவார்கள்; ஆவேசப்படுவார்கள். இவர்களுக்கு ஏன் அவ்வளவு அக்கறை?
நான் முன் கூறியபடி, அவர்களின் ஆதிக்கமும், பாதுகாப்பும் மதத்தில் அடங்கியிருக்கிறது என்ற சுயநலமும், சுயலாபமுந்தான் அதற்குக் காரணம்.
ஆரியர்களின் சுயலாபத்துக்காகத்தான் நாட்டில் மதப் பிரச்சினைகளை அவர்கள் தூண்டுகிறார்கள். ஆரியர்களைத் தவிர வேறு எவனுக்கும் மதத்தால் எந்த லாபமும் இல்லை. எனவே, எங்கு மதப்பிரச்சினை எழுந்தாலும் அதன் மூல காரணமாக நேரடியாக அல்லது மறைமுகமாக ஆரியப் பார்ப்பனர்களே இருப்பர்.
எனவே, அவர்கள் எதை நோக்கினாலும் மதக் கண் கொண்டே நோக்குவர். எதைச் செய்தாலும் மதக்கண் கொண்டே செய்வர்.
அந்த அடிப்படையில் சுதந்திரப்போராட்டம் நடக்கின்றபோது, மற்றவர்களெல்லாம் இந்தியர்களே ஒன்று சேருங்கள்; அந்நிய ஆட்சியை விரட்டுங்கள் என்றபோது, ஆரியப் பார்ப்பனர்கள் மட்டும் - இந்துக்களே ஒன்று சேருங்கள், இந்துக்களால் மட்டுமே இந்துஸ்தானை மீட்க முடியும் என்றனர். இந்தியா என்றுகூட அவர்கள் இந்த நாட்டை அழைக்க விரும்பவில்லை. இந்துஸ்தான் என்றே அழைத்தனர். அதிலும் மதப் பார்வைதான். இப்படிக்கூறி மதவெறியைத் தூண்டியவர்கள் உண்மையிலேயே இந்திய விடுதலைக்கு எதுவுமே செய்யவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் ஒப்புக்குக் கலந்து கொண்டார்களே தவிர, அவர்கள் உருப்படியாய் எதுவும் செய்யவில்லை.
ஆரியப் பார்ப்பனர்களின் முக்கிய பித்தலாட்டமே, தனக்குச் சம்பந்தமில்லாதது எல்லாம் தன்னால்தான் நடந்தது என்பதுதான்.
கோயிலை எவரோ கட்டுவர், எவரோ பணம் செலவு செய்வர், எவரோ சிலை செய்வர், எவரோ பாரம் சுமப்பர். ஆனால், கோயில் கட்டி முடித்தவுடன் ஒரு செம்பு தண்ணீரைக் கலசத்தில் ஊற்றிவிட்டு, கோயிலுக்குச் சக்தியை நான்தான் கொடுத்தேன். எனவே, கோயில் எனக்கே சொந்தம் என்பர்.
எவர் வீட்டிலோ திருமணம் நடக்கும். அங்கு செல்லுகின்ற ஆரிய பார்ப்பனர், திருமணம் செய்யும் உரிமையே மணமகனுக்குத் தான் தான் தந்ததாகச் சொல்வார்.
நாட்டைப் பாதுகாக்க ஆயிரமாயிரம் வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்கின்றனர். நாட்டின் உற்பத்தியைப் பெருக்க எத்தனையோ பேர் காடுமேடெல்லாம் உழைக்கின்றனர். நாட்டிலே மழை இயற்கையாய் பொழிகிறது. ஆனால், தாங்கள் யாகம் செய்ததால்தான் இந்த வளமெல்லாம் வந்தது என்பர்.
கணவனின் உயிர் தங்கள் கையில் இருப்பதாகக் கூறி மாங்கல்யம் - பலப்பட கணவனின் ஆயுள் கெட்டியாக இருக்க - தாங்கள் அருள் கொடுக்க முடியும் என்பர். கணவன் ஆயுளுக்கு இவர்கள் சொல்லும் மந்திரத்திற்கும் என்ன சம்பந்தம்? என்றாலும், தங்கள் மந்திரந்தான் கணவன் உயிரைக் காக்கும் என்று மந்திரம் சொல்லி பெண்களிடம் பணம் பறிப்பர்.
இவ்வாறு எதுவும் செய்யாத இவர்கள் எல்லாமே தங்களால்தான் என்பர். அந்த அடிப்படையில்தான் சுதந்திரப் போராட்டத்திலே ஒதுங்கி நின்ற ஆர்.எஸ்.எஸ்.
ஆரியக்கூட்டம் விடுதலைக்கு தாங்களே பெருங்காரணம் என்றனர். இந்திய விடுதலை இந்துக்களாலே முடியும் என்றனர்.
சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும் என்பதே இவர்களின் வரலாறு.
பாபர் மசூதியை இடிக்கமாட்டோம் என்று சொல்லிக் கொண்டே இடித்தவர்கள் இவர்கள்.
பிரச்சினைக்குரிய இடத்தில் இராமர் கோயில் கட்ட மாட்டோம் என்று சொல்லிக்கொண்டே, அங்கு இராமர் கோயில் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்பவர்கள் இவர்கள்.
சிறுபான்மையினருக்கு எங்களால் ஆபத்து வராது என்று சொல்லிக் கொண்டே அவர்களை உயிரோடு கொளுத்துகிறவர்கள் இவர்கள். அதே வகையில்தான், ஆர்.எஸ்.எஸ்.
தொடங்கப்பட்டபோது, இந்து இளைஞர்களை நற்பண்புகள் மற்றும் தாய் நாட்டின் மீது பற்றுதலைக் கொண்டவர்களாக அமைப்பு முறையில் திரட்டவேண்டும் என்று கூறியவர்கள், நடைமுறையில் அதற்கு முரணாக, வன்முறையாளர்களாக, ஆயுதப் படைவீரர்களாக, இதர மத விரோதிகளாக அவர்களை வளர்த்தனர்.
நற்பண்பு மற்றும் நாட்டுப் பற்றுக்கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்று கூறிவிட்டு, முஸ்லீம்களைத் தாக்குவதே தங்களின் புனிதக் கடமைகளில் ஒன்று என்று போதித்தனர். அதுவும் சாமியார்களே இவ்வாறு தூண்டினர்.
பசுக்களை கொல்பவர்களை கொலை செய்ய வேண்டியது இந்துக்களின் கட்டாயக் கடமை என்று 1990இல் (அக்டோபர் மாதம்) அயோத்தியிலும், பைஸாபாத்திலும் உள்ள கோயில் சுவர்களிலும் வீடுகளிலும் எழுதினார்கள்.
ஆக,
ஆர்.எஸ்.எஸ்.
தொடங்கும்போது அவர்கள் எவற்றையெல்லாம் தங்களின் நோக்கங்கள் (ஆன்ம வேதனை) என்று சொன்னார்களோ அவையெல்லாம் உண்மையில் நோக்கங்கள் அல்ல.
அவர்களின் உண்மையான நோக்கு இந்து நாட்டை உருவாக்கி இந்துச் சட்டங்களை அமல்படுத்தி, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டுவதுதான்.
அவர்களின் உண்மையான நோக்கு, இந்திய நாட்டு விடுதலையும், நற்குணமுள்ள இளைஞர்களை உருவாக்குவதும்தான் என்றால் தங்கள் முழு ஆற்றலையும் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் முஸ்லீம்களோடு மோதுவதிலேதான் செலவிட்டனர்.
இந்து மதத்தைக் காக்கவேண்டும் என்பவர்கள், முஸ்லீம்களோடு ஏன் மோத வேண்டும்? இங்குதான் அவர்களின் சூழ்ச்சியே அடங்கியுள்ளது.
வெறுமனே இந்து மதத்தைக் காக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தால்யாரும் ஆர்வத்துடன் முன்வரமாட்டார்கள். இந்துக்களை ஆர்வத்தோடு ஒன்று திரட்ட வேண்டும் என்றால் அவர்களை உணர்ச்சியூட்டவேண்டும், ஆவேசப்படுத்த வேண்டும்; வெறியேற்ற வேண்டும்.
அந்த ஆவேசமும், வெறியும் ஏற்படவேண்டும் என்றால், அவர்களை முஸ்லீம்களோடு மோதவிட வேண்டும். முஸ்லீம்களோடு மோத காரணம் எதுவும் இல்லையென்றால் காரணங்களை உருவாக்க வேண்டும்; வலிய வம்புக்கு, வீண் பிரச்சினைக்குச் செல்ல வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிப்படைச் சித்தாந்தம்; செயல் திட்டம்.
அதற்காகவே அவர்கள் முஸ்லீம் மீது வெறுப்பையும் மோதலையும் உண்டாக்கி வருகின்றனர்.
பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் கோயில் இருந்தது என்று எப்படி ஒரு புதுப் பிரச்சினையை உருவாக்கி பாபர் மசூதியை இடித்து ஒற்றுமையாய் வாழ்ந்த இந்து முஸ்லீம் இடையே இரத்தக்களறியை ஏற்படுத்தினார்களோ அப்படியே ஆர்.எஸ்.எஸ்.
தொடங்கப்பட்ட காலத்திலும் பல கலவரங்களை உருவாக்கினர். இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ்.
தொடங்கப்படுவதற்கு முன் 25 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் முஸ்லீம் எதிர்ப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் தூண்ட ஆரம்பித்தனர்.
அவ்வாறு தூண்டிய ஆரிய பார்ப்பனர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மராட்டிய மாநிலத்ச் சேர்ந்த சித்பவான் பிராமணர்கள் ஆவர்.
மராட்டிய மாநிலம் மாவல்குன்று பகுதியைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்ட இந்த ஆரிய பார்ப்பனர்கள்தான் இந்த நாட்டில் மத விஷத்தைப் பரப்பி மதவெறியைத் தூண்டியவர்கள். ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புகளின் முதுகெலும்பும், மூளையும் இவர்களே!
இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் முதலே முஸ்லீம் வெறுப்புணர்ச்சியைத் தூண்டி, ஆங்காங்கே கலவரங்களையும், கொலைகளையும் உண்டு பண்ணியவர்கள் இவர்கள்.
இவர்களால் தூண்டப்பட்ட மதவெறியின் எதிர் விளைவாகவே முஸ்லீம் தீவிரவாதிகளும் உருவாயினர். இவ்வாறு தோன்றிய முஸ்லீம் தீவிரவாதிகளின் வளர்ச்சியே பாகிஸ்தான் பிரிவினைக்கு வழிவகுத்தது. ஆக,
இந்திய நாட்டின் மதவெறி மோதல்கள் அனைத்திற்கும் காரணமாக அமைந்தவர்கள் இந்த ஆரிய பாப்பனர்களே!
இந்த நாட்டை 500 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்டவர்கள் முஸ்லீம் மன்னர்கள் - வற்புறுத்தி, அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்துக்களை முஸ்லீம்களாக மாற்ற அவர்கள் முயன்றிருந்தால் இந்த நாடே முஸ்லீம் நாடாக மாறியிருக்கும் என்பதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம் எந்த முஸ்லிம் மன்னனின் வற்புறுத்தலால் நடந்தது.
இந்தியாவில் முஸ்லீம்களாக மாறியவர்கள் கூட, அரேபிய வணிகர்களின் தொடர்பால் மாறியவர்கள்தான் என்பது வரலாற்று உண்மை.
அப்படி மதம் மாறியவர்களும் உயர்ஜாதியினரோ அல்லது பிராமணர்களோ அல்லர்.
ஆரிய பார்ப்பனர்களால் பல நூறு ஆண்டுகளாய் நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களே, இந்து மதத்தை வெறுத்து, இந்து மதத்தில் உள்ள இழிவை எதிர்த்து மதம் மாறினர். இந்து மதத்தில் உள்ள ஜாதிக் கொடுமைகளும், இழிவும், ஆதிக்கப் போக்குகளுமே அவர்களை வேறு மதத்திற்கு மாறத் தூண்டின.
வரலாற்றைத் தங்களுக்குச் சாதகமாக எப்பொழுதும் மாற்றியும், திரித்தும் பழக்கப்பட்ட ஆரிய பாரிபார்ப்பனர்கள், மதமாற்ற நிகழ்விலும் முஸ்லீம் மன்னர்கள் மீது பழியைப் போட்டனர்.
ஹரி பிரசாத் என்பவர் எழுதிய இந்திய வரலாறு என்ற நூலில், திப்பு சுல்தான் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயன்றதால் அதை எதிர்த்து 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற குறிப்பு இருந்தது.
இதைப் படித்த காந்தி தர்ஷன் சமிதியின் தலைவர் பி.என்.பாண்டே என்பவர் (இவர் திப்பு சுல்தான் ஆட்சி பற்றி ஆய்வு மேற்கொண்டவர்). இதற்கான ஆதாரம் எது? என்று கேட்டு நூலில் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினார்.
மைசூர் கெசட்டரில் இருந்து எடுத்தேன் என்று நூல் ஆசிரியர் பதில் எழுதினார். ஆனால், எந்த ஆதாரமும் அதில் இல்லையென்பது அதை பரிசீலித்தபோது தெரிய வந்தது.
இப்படித்தான் ஆரியப் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் திட்டமிட்டே பொய்யான தகவல்களை வரலாற்றில் சேர்த்து, முஸ்லீம்கள் மீது ஒரு வெறுப்புணர்ச்சியை உண்டாக்கினர்.
இன்றைக்கும் வரலாற்றைத் திரித்து மாற்றும் வேலையை பி.ஜே.பி.
அரசு செய்து வருவதை இங்கு ஒப்பிட்டுத் தெளிவடைய வேண்டும்.
உண்மையில் திப்புசுல்தான் இந்துக்களையும் இந்து ஆலயங்களையும் மிகவும் நேசித்தவர்.
தனது அரசின் பிரதம அமைச்சராக புர்னியா என்ற ஆரிய பார்ப்பனரை வைத்திருந்தார்.
156 இந்துக் கோயில்களை தனது நேரடிப் பார்வையில் பராமரித்துக் காத்தார். ஒவ்வொரு நாளும் காலை உணவு உண்டபின் ஸ்ரீரங்கப்பட்டினம் அரங்கநாதர் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இன்றைக்கும் ஸ்ரீரங்கநாதர் திருச்சி உறையூர் துலுக்க நாச்சியார் கோயிலுக்கும், தர்க்காவிற்கும் செல்வது வழக்கமாகவுள்ளது. அந்த துலுக்க நாச்சியார் கோயில் தற்போது இந்து தெய்வமாக பாப்பனர்களால் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு சமீபகால மோசடி.
ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக சாமி கோயில் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான கோயில். மாசி மகத்தன்று பூவராக சாமி பரங்கிப்பேட்டைக்கு அருகில் உள்ள கிள்ளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள தர்காவில் வைத்து வழிபாடு செய்வது பல நூறு ஆண்டுகளாய் நடந்து வருகிறது. இங்கு இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாகத்தான் வழிபாடு செய்திருக்கின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முஸ்லீம்கள் சென்று வழிபடுகின்றனர். தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அம்மை வந்தால் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குக் கொண்டு சென்று படுக்க வைப்பதை முஸ்லீம்கள் வழக்கமாகச் செய்கின்றனர்.
வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு இந்துக்களே அதிக அளவில் சென்று வணங்குகின்றனர்.
நாகூர் தர்காவிற்கு ஆயிரக்கணக்கான இந்துக்கள் சென்று வேண்டிக் கொள்கின்றனர்.
இவையெல்லாம் இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் வழிபாடுகள்.
இப்படி எந்த மதவேறுபாடும் இன்றி எல்லாம் நம் கடவுள்தான் என்று மத நல்லிணக்கத்தோடு மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் மதவெறியைத் தூண்டியவர்கள் ஆரிய பார்ப்பனர்கள். குறிப்பாக சித்பவான் பிராமணர்கள்.
இவர்கள், மதவெறியைத் தூண்டுவதற்கு முக்கியமாகக் கூறும் காரணங்கள்:
1. இந்துக் கோயில்களை இடித்துவிட்டு அவற்றில் முஸ்லீம் மசூதிகளைக் கட்டிவிட்டனர். எனவே மீண்டும் அந்த இடத்தில் இந்துக் கோயிலைக் கட்ட வேண்டும். அதற்கு மசூதிகளை இடிக்க வேண்டும்.
2. இந்துக்களை முஸ்லீம்களும், கிறித்தவர்களும் மதமாற்றம் செய்கிறார்கள். இப்படியே சென்றால் இந்துமதம் அழிந்துவிடும். எனவே, முஸ்லீம்களையும், கிறித்தவர்களையும் தடுத்தாக வேண்டும்; எதிர்த்தாக வேண்டும்.
3. இந்தியா இந்துக்களுக்கு உரிய நாடு. எனவே இந்தியாவை இந்து நாடு என்று அழைக்க வேண்டும்; முஸ்லிம்களும் இந்துமதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அவர்கள் இராமரைக் கடவுளாக ஏற்கவேண்டும்.
4. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பொதுவான சட்டங்கள் இருக்கவேண்டும். முஸ்லீம்களுக்கு தனிச் சலுகை (சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காய்) கொடுக்கக்கூடாது.
5 இந்து மதத்தின் சாஸ்திரங்களே சட்டமாக்கப்படவேண்டும். இந்துமதத் தலைவர்களின் ஆணைகளே அரசால் அமல்படுத்தப்பட வேண்டும்.
6. இந்து கலாச்சாரத்தை பாதுகாத்து பரப்ப வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே கடவுள், ஒரே சின்னம், ஒரே அடையாளம் உருவாக்கப்பட வேண்டும்.
7. இந்து ராஷ்ரா உருவாக்கப்பட்டு, இந்துமத ஆட்சியே நடைபெற வேண்டும்.
இப்படிப்பட்ட கோரிக்கைகளை ஆர்.எஸ்.எஸ்.
மற்றும் அதன் குடும்ப அமைப்புகள் எழுப்புகின்றபோது, ஒரு சாதாரண இந்து, அவர்கள் கேட்பது பெரும்பாலும் நியாயம்தானே? என்றே எண்ணுகிறான். அவர்களின் இந்த கோரிக்கைகளில் உள்ள சதியை, வெறியை உள்நோக்கத்தை அவன் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பில்லாமல் இருக்கிறான்.
எனவே, இவை நியாயமான கோரிக்கைகளே என்று எண்ணி, அவர்கள் பின்னே அணிவகுத்து, முஸ்லீம் மீதும், கிறித்தவர் மீதும் வெறிகொண்டு மோதுகிறான். அது மதக்கலவரமாக மாறுகிறது.
இந்து மதம் என்ற போர்வையில், ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்க ஆட்சியை அமைக்க நினைத்த சித்பவான் பிராமணர்கள், இந்து மக்களின் இந்த ஏமாளித்தனத்தைப் பயன்படுத்த திட்டமிட்டனர். அதன் விளைவுதான் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புகள்.
ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புகளை அவர்கள் ஒரே நாளில் தொடங்கி விடவில்லை. 20ஆம் நுற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அவர்கள் முயற்சி செய்து, 1925இல் ஒரு அமைப்பை உருவாக்கினர்.
அப்படி அந்த அமைப்பை உருவாக்கியபோது உருவாக்கியவர்கள் பெயரும், அந்த இயக்கத்தின் நோக்கங்களும், அவர்கள் அனுப்பும் உத்தரவுகளும், அவர்களின் உறுப்பினர் விவரங்களும் இரகசியமாகவே வைக்கப்பட்டன. இன்றளவும் இரகசியமாகவே வைக்கப்படுகின்றன.
உண்மையிலே இவர்கள் இந்துக்களின் மேன்மைக்கும், இந்து மதத்தின் பாதுகாப்பிற்கும் பாடுபடுகின்றவர்களாக இருந்தால், இவர்கள் இவற்றை ஏன் இரகசியமாக வைக்க வேண்டும்?
எந்தவொன்றையும் மறைக்க விரும்பினால், அதில் ஏதோ சூழ்ச்சியும் மோசடியும் இருக்கிறது என்பதுதானே பொருள்?
அப்படியென்றால் இவர்கள் ஏதோ சூழ்ச்சியை மோசடியை மனதில் வைத்தே செயல்படுகிறார்கள் என்று தானே அர்த்தம்?
அப்படி ஏன் இவர்கள் இவற்றை மறைக்கிறார்கள்? இவர்களின் உண்மையான திட்டம்தான் என்ன? இவர்களின் அமைப்பினால் யாருக்கு நன்மை? இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன? இவர்களின் கோரிக்கைகள் நியாயமானவையா? என்பவற்றை ஆராயும் முன், இந்திய நாட்டின் மதிப்புமிக்க பொறுப்புமிக்க தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.
பரிவாரங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்; என்ன கூறினார்கள்? என்பதைப் பற்றி முதலில் பார்த்துவிட்டு, பின் ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.
இன்றைக்கு இந்தியாவில் வேறு எல்லா பிரச்சினைகளையும், அபாயத்தையும்விட ஆர்.எஸ்.எஸ்.
முதல் பி.ஜே.பி.
வரையிலான அமைப்புகளின் ஆபத்தே பயங்கரமானது என்பதால் ஒவ்வொரு இந்தியனும் இவற்றை அவசியம் அறிந்து கொள்ளவேண்டும்.
நூல்- பி.ஜே.பி ஒரு பேரபாயம்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment