17.01.1968 ம் நாள் கரூர் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் தந்தை பெரியார் உரை!
.
தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இங்கு இன்று (17.01.1968ஆம் நாள்)
பொங்கல் விழா என்னும் பேரால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனக்கு முன் பல அறிஞர்கள் உரையாற்றினார்கள்.இந்த பொங்கல்விழா என்பது அறுப்புப் பண்டிகைன்னும் சொல்லுவார்கள்.
அதே போல நாமும் அறுப்பு அறுத்துப் பண்டங்களைக் குடும்பத்துடன் உபயோகப்படுத்துகிற மற்றும் நம்மாலான வசதிகளை விவசாயத்துக்காக நமக்கு உதவியாய் இருந்து தொண்டாற்றின ஆளுகளுக்கு அவர்களுக்கு நாம ஏதாவது திருப்தி பண்ணுகிறதுக்கு சாப்பாடு போடுகிறதோ, அவர்களுக்குத் துணிமணி எடுத்துக் கொடுக்கிறதோ அல்லது ஏதாவது காசு கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறதோ இவ்விழாவில் தான்.
அய்யா தலைமையில் பொங்கல்விழா நேற்று (16.01.1968இல்) இந்த நேரத்துக்கு, சேலத்திலே பெரிய மிராஸ்தார் இரத்தினசாமி பிள்ளை என்கிறவர் தோட்டத்திலே இந்த பண்டிகை வைச்சார். என்னைத்தான் தலைமையாய் அவர் விரும்பினார். போயிருந்தேன். பொங்கல் தடபுடலாக ஒரு அய்ம்பது, அறுபது மாடுகளை வைச்சி நம்ம எதிரிலே நடத்தினாரு.
இம்மாதிரி இரு நூறு பேருக்குச் சீலை வேட்டி சேர்ந்தது இந்த மாதிரியாக ஒரு புலவர் அம்மையார் காமாட்சி அம்மையாருன்னு அந்த அம்மாளைக் கொண்டு நம்முடைய தலைமையிலேயே மக்களுக்கு எல்லாம் எடுத்துக் கொடுக்கச் சொன்னார். கொடுத்தாங்க. இரண்டு மணி நேரம் நடந்தது அந்தப் பண்டிகை. அப்புறம் பத்து, பதினைந்து நாளைக்கு முன்னே 1ஆம் தேதி
(01.01.1968ம் நாள்) திருநெல்வேலி ஜில்லாவிலே வள்ளியூர் என்கிற ஊரிலே ஒரு விவசாயி அவர் பண்டிகை நடத்தினார்.
என்னைக் கொண்டே எல்லாருக்கும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.
மூடநம்பிக்கையற்ற உழைப்பவர் திருநாள் இது மதத்தைப் பொறுத்தது அல்ல. மனிதனுடைய இயற்கையான தன்மையைப் பொறுத்ததுதான் இந்தப் பண்டிகை. வேறுயாரும் இதற்கு வேறு கருத்தை ஒண்ணும் சொல்ல முடியாது. ஏனென்றால், இதைத்தான் நாம செய்கிறோம். இதிலே ஒண்ணும் மூடநம்பிக்கையான காரியங்கள் ஒண்ணும் பண்றதில்லே.
இதற்கு அவனுடைய பாப்பானுடைய ஆதாரத்தின் படி இதற்கு என்ன கருத்து கொடுத்திருக்கிறான் என்றால், இதை மூணு நாளாக ஆக்கினான்.
ஒருநாளைக்கு பொங்கல், இன்னொரு நாளைக்கு மாட்டுப் பொங்கல்; மற்றொரு நாளைக்குக் கரிநாள் என்று. இதுக்கெல்லாம் அவன் என்ன கதை எழுதி வைத்திருக்கிறான் என்றால் இந்தப் பண்டிகைகளிலே புராணங்களையும் கடவுள்களையும், மற்றும் முட்டாள்தனங்களையும் ரொம்ப கொண்டு வந்து நிறையா புகுத்திருக்கிறான். ஏன்னா இந்தப் பண்டிகைக்குத் துவக்கத்துக்கே, காரணமானதால் இந்தப் பண்டிகை ஆரம்பிச்சது,
இந்திரனுடைய உற்சவம் இந்திரவிழான்னு அதிலேஎழுதியிருக்கிறான். அது இந்த சிலப்பதிகாரத்திலே கூட இருக்கும்.
இந்திரவிழான்னு.
அதாவதுமக்கள் எல்லாம் இந்திரனைக் கும்பிடறதுக்காக, அவனைப் பெருமைப்படுத்துகிறதுக்காக,
இந்த விழாவை ஆரம்பிச்சாங்களாம் பாருங்கள் அதிலே அவர்களுடைய புத்திசாலித்தனத்தை.
உழைப்பவர் திருநாளை பிழைப்பவர் கெடுத்தனர்
இந்திரனுக்கு இந்தப் பண்டிகை நடத்துகிறதைப் பார்த்து; கடவுளுக்குப் பொறாமை வந்திட்டுதாம்.
நம்மைவிட்டுட்டு அவனுக்குப் பண்றாங்களேன்னு.
எந்தக்கடவுளுக்கு?
கிருஷ்ணனுக்கு.
கிருஷ்ணன்கிறவனைக் கடவுள்னு அல்லவா சொல்றாங்க. அவன் இருந்தானா இல்லியோ? கிருஷ்ணன் கடவுள்னு அவனுக்குப் பெருமை வந்திட்டுதாம்.என்னடா இந்த ஜனங்கள் நமக்குப் பொங்கல் வைக்காமல் இந்திரனுக்குப் போயி வைக்கிறாங்களேன்னு. இந்திரனுடைய அர்த்தம் என்னான்னா, இந்திரன் தன்னைபற்றி என்னாநினைச்சிகிட்டு இருக்கிறான்னா?
தான் கிருஷ்ணனுக்கும் ராமனுக்கும் கடவுள்ன்னு நினைச்சிகிட்டு இருக்கிறான்.
ஏன்னா இந்திரனுடைய கணக்குப் படி இவர்கள் எல்லாம் தேவர்கள் தானே தவிர கடவுள்கள் அல்ல. யாரு? சிவன் - விஷ்ணு - பிரம்மா மற்றும் பல கடவுள்களாக;
இன்னைக்கு நாம கும்பிடுகிறோமே,
இவனுங்க எல்லாம் தேவர்கள். எதிலே தேவர்கள்ன்னு வர்ராங்கன்னா?
வேதத்திலே.
வேதத்திலே வருகிறபோது வேதத்திலே இந்திரன்தான் தலைவன். எல்லா தேவர்களுக்கு அவன் தான் அரசன். அவனுக்குப்பேருதே வேந்திரன்னுபேரு. தேவராஜன் சொல்லுவாங்க.
அந்தத் தேவேந்திரன்தான் பெரியவன்கிற முறையிலேஅவனுக்குஎல்லாம் வைச்சிகிட்டான்.
இதற்குக் கிருஷ்ணன். அவன் தான் கடவுள்னு நினைச்சிகிட்டு நாம இருக்கிறபோது அவனுக்கு இதுவெல்லாம் பண்றதுஎன்ன நியாயம்? என்பதாகப் பொறாமைப்பட்டு மக்களை எல்லாம் கூப்பிட்டு நீங்கள் இந்திரனுக்குப் பொங்கல் வைக்காதீங்க.
இந்திரவிழா கொண்டாடாதீங்கன்னு சொன்னானாம்.
ஜனங்கள் இந்திரனுக்குக் கொண்டாடலே.
போகியும் புரட்டும்
உடனே இந்திரனுக்குக் கோபம் வந்திட்டுதாம். நமக்கு நடக்கிற பண்டிகையை இவன் சொல்லி நிறுத்திப்போட்டானேன்னு.
இவன் பேச்சை இந்த முட்டாள் ஜனங்கள் ஏற்றுகிட்டு பண்டிகை நடத்தாது விட்டுட்டாங்க.
அதனாலே அவர்களை நாம சும்மாவிடறதான்னுச் சொல்லி அவன் பெரிய மழையை கொட்ட ஆரம்பிச்சிட்டானாம். மழை பெய்யுது. அந்த மழை வந்த வேகம் நாடெல்லாம் வெள்ளத்திலே அடிச்சிகிட்டு போற அளவிற்கு அவன் மழையை உண்டாக்கிட்டானாம்.
இதைப் பார்த்த உடனே ஜனங்கள் கிருஷ்ணன்கிட்டே போயி என்னப்பா நீ சொன்னபடி கேட்டோம். அவன் இந்த மாதிரி ஆரம்பிச்சிட்டானே இப்ப மழை வந்தால் எங்கள் கெதி எல்லாம் என்னாகும். இருண்டு இருக்குது.
இடி இடிக்குது அதாகுது, இதாகுதுன்னு போயி கிருஷ்ணன்கிட்டேஅழுதாங்களாம்.அவன் சொன்னானாம். நீங்கள் அதுக்காகப் பயப்படாதீங்க. நான் உங்களை எல்லாம் காப்பாற்றுகிறேன்னு
(கிருஷ்ணன்)
பெரிய மலையை விரலிலே தூக்கிக் கொடையாட்டம் பிடிச்சிகிட்டானாம். (சிரிப்பு) வந்து எல்லாரும் அதுக்குள்ளே பூந்துகிட்டாங்கன்னு அவன் அதே மாதிரி மலையைத் தூக்கிப் பிடிச்சான். இந்த மாடுகள் மக்கள் மற்ற ஜீவப்பிராணிகள் அது சம்பந்தப்பட்ட ஜீவப்பிராணிகள் அவைகள் எல்லாம் வந்து அந்த மலைக்குள்ளே இருந்து, கிருஷ்ணன்கிட்டே வந்து நீ ஏன் இந்த மாதிரி பண்ணினியேன்னு கேட்டானாம் இந்திரன். கிருஷ்ணன் சொன்னானாம் எண்ணாத்துக்கு உனக்கு இதுவெல்லாம்.
இது மாதிரி செய்யறதுன்னு என்ன கட்டாயம்? நீஉன்னால்ஆனதைப்பாரு.நான்என்னாலானதைப் பார்க்கிறேன்னு
கிருஷ்ணன் சொன்னானாம். அப்புறம் இந்திரன் பார்த்து ஓ இவன்கிட்டே நம்ம கை செல்லாது; அப்படீன்னு நினைச்சி மன்னிப்புக் கேட்டானாம். மன்னிப்பு கேட்டதுக்கு அப்புறம் உன் பண்டிகை உனக்கும் நடக்கட்டும் என் பண்டிகை எனக்கும் நடக்கட்டும்ன்னு. இரண்டுபேரும் பண்டிகை நடக்கிறதுக்கு அனுமதிச்சாங்களாம்.
அது தான் போகிப் பண்டிகை என்கிறது.போகி என்றாலே இந்திரன்னு ஒரு அர்த்தத்திலே அந்த வார்த்தைக்கு அகராதிப்படி, சமஸ்கிருத அகராதிப்படி,
போகின்னா இந்திரன்னுபேரு. இன்னொரு தத்துவார்த்தம் சொல்லுகிறவன், போகின்னா போக போக்கியங்களை அனுபவக்கிறது.
ஆனதினாலேஅதுக்கு போகின்னு பேருவைச்சிதுன்னு அப்படியும்சொல்றாங்க. ஆகவே எந்தக் கதையிலே சொன்னாலும் அது ஒரு முட்டாள்தனமான கருத்தே தவிர வேறு இல்லை.
மாட்டுப் பொங்கலுக்கு மடையர்களின் விளக்கம்
மற்றும் இந்த தனியா மாட்டுப் பொங்கலுக்கு ஒரு கருத்து சொல்றது. இதெல்லாம் அவுக ஆதாரப்படி நான் சொல்றேன். மாட்டுப் பொங்கலுக்கு என்ன சொல்லி இருக்குதுன்னா? வருஷத்துக்கு ஒரு தடவை இந்த சங்கராந்திங்கிற போது சங்கராந்தி மூதேவியாக வருகிறாளாம். அந்த மூதேவியாக வருகிற சங்கராந்தி இந்த மாடுகன்னுகளை எல்லாம் அழிக்க வேணும்னு சொல்லி புலிஉருவம்எடுத்துமாடுகளை எல்லாம்பிடிக்கப் போவுதாம். அப்போது ஜனங்கள் கூட்டமாய்ச் சேர்ந்து புலியை விரட்டுகிறது.
அது பிடிக்க வருகிறது. இவுக எல்லாம் புலியைவிரட்டுகிறது.அதுதான்அந்தமாட்டுச்சங்கராந்தீங்கிறதுக்கு அதைத்தான் கேட்டு இருக்கிறான்.
பண்டிகையும் பாப்பானும்
கரிநாள்
- ன்னு என்னமோ வைச்சி அவனும் மடத்தனமாய் முன்னே என்ன சொன்னோம். பின்னாலே என்ன சொன்னோம்னு அவன் கவனிச்சி எழுதினவன் அல்ல. பாப்பான் ஆயிரம் கதையை எழுதிவைச்சாலும் ஒண்ணிலே கூட அறிவைக் கொண்டு எழுதியிருக்கமாட்டான். ஆனதினாலே, அப்புறம் தான் நமக்குக் கூட தெரிஞ்சுது,
இந்த பொங்கல் வைக்கிறபோது பொங்கலோ, பொங்கல் புலியோ புலி ன்னு சேவணிதட்டுவாங்க. இல்லாட்டா தட்டத்தைத் தட்டு வாங்க - கரும்புத் தடியிலே எனக்கு ஞாபகம் இருக்குது.
எங்கள் வீட்டிலேஎல்லாம்எல்லாப்பொங்கலும்நடக்கும். விவசாயம் பண்ணிகிட்டு இருந்தது. மாட்டை எல்லாம் குளத்துக்குள்ளே விடுவாங்க. சாணியினாலே குளமாட்டம் கட்டி அதிலே புல்லு பூவு எல்லாம் போட்டு அதைமிதிக்கச் சொல்றபோது அதுபாட்டுக்கு அதை மிதிச்சிகிட்டுவரும். ஒருத்தன் அதுக்கெல்லாம் பூசை பண்ணிகிட்டு வருவான். இதைக் குடியானவங்க சில பண்ணையத்து ஆளுங்க தட்டத்தை எடுத்துகிட்டு கரும்பினாலே தட்டுவாங்க.
இங்கேயும் இருக்குதோ என்னமோ அந்த வழக்கம். அங்கே அந்த மாதிரி செய்வாங்க எங்க ஊரிலே. அப்போது சொல்றது பொங்கலோ பொங்கல், புலியோ புலி பொங்கலோ பொங்கல் புலியோ புலி- ன்னு. அப்படி சொன்னதினாலேஅந்தப்புலிபயந்துகிட்டு ஓடிட, மாட்டை பாதுகாத்துகிறதாம்.
இதுக்குத்தான் மாட்டுப் பொங்கல்ன்னு பேரு வந்ததுன்னு அப்படி எழுதியிருக்கிறான்.
இந்த மாதிரியான முட்டாள்தனமான கருத்துக்களில் தான் பண்டிகை பூராவையும் அமைச்சிகிட்டானுங்க.
பகுத்தறிவு பண்டிகை பொங்கல்
நமக்கு எத்தனை பண்டிகை இருக்குதோ, அத்தனை பண்டிகையும் இந்த மாதிரியான முட்டாள்தனமான கடவுள்
கதைகள் மூலம் மூட நம்பிக்கையானது. இந்தமாதிரியாகவே
அமைச்சிகிட்டானுங்க உள்ள பண்டிகைகளிலே ரொம்ப
கவலையோட பார்த்தால்இந்தஒருபண்டிகை தான் பகுத்தறிவுப்படி
ஒப்புக்கொள்ளக்கூடியதாகவும் இயற்கையாய் நடக்கக் கூடியதாகவும் இருக்கிறதாகச் சொல்லப்படுகிற பண்டிகை. மற்ற பண்டிகைகள் உங்களுக்கு நல்லா தெரியும்.
மூட பண்டிகைகள்
தீவாளி யை எடுத்துக்குங்க.
அப்புறம் இந்த கிருஷ்ணன் பண்டிகை, மற்றபண்டிகையை எடுத்துக்கங்க.
பிள்ளையார் சதுர்த்திப் பண்டிகையை எடுத்துக்குங்க. இந்த நவராத்திரி,
சரஸ்வதிபூஜை என்கிறதை எடுத்துக்குங்க.
இன்னம் எத்தனையோ அசிங்கமான பண்டிகைகள் எல்லாம் அதை எல்லாம் பார்த்தால் சுத்த முட்டாள் தனமும், மடத்தனமும் தான் அதிலே இருக்குமே தவிர, ஒரு கடுகளவு அறிவுக் கூட அதிலே இருக்காது.
தீபாவளி
உங்களுக்குத் தாராளமாய்ச் சொல்லுகிறேன்.
இரண்டொன்னை மாத்திரம் உதவிக்கு. தீபாவளி நம்மல்லே பெரியபண்டிகை.எல்லாரும் கொண்டாடுகிறோமே. இதைப்போல அஞ்சுபங்கு,
பத்துபங்கு அதிகமாகக் கொண்டாடுகிறாங்க வடநாட்டிலே. அந்தப் பண்டிகைக்குச் சமமான பண்டிகை வடநாட்டிலே வேறே இல்லை. அன்னைக்கு லீவு-பண்டிகை.
ஆடல் பாடல் அதுகள் எல்லாம் உண்டு. என்னென்னமோ கதை தீபாவளிப் பண்டிகைக்கு. முக்கியமானகதை, அதிலே இருக்கிற அறிவு என்னான்னு நீங்க சிந்தித்தீங்கன்னா நான் பல தடவை சொல்லியிருப்பேன். இங்கே சொன்னேனோ என்னமோ? தீபாவளி பண்டிகைக்கு ஒரு காரணம் சொல்லுகிறான்? அந்த காரணம் ரொம்ப வேடிக்கையாய் இருக்கும். எவனோ ஒரு அரக்கன், இராட்சதன் உலகத்தையே சுருட்டிகக்கத்திலே வைச்சிகிட்டு போயிட்டானாம்.(சிரிப்பு) உலகத்தையே!
தேவர்களுக்கு இருக்கிறதுக்கு இடமில்லாமல் போச்சாம். அவுங்கபோயி கடவுளைக் கேட்டுகிட்டாங்களாம் விஷ்ணுவை.
என்னப்பா எங்களுக்கு இடமில்லையா?
இராட்சதன் தூக்கிகிட்டு சமுத்திரத்துக்குள்ளேயே பூந்துகிட்டானே நாங்கள் எங்கே இருக்கிறது?
என்னபண்றது?அப்படீன்னாங்களாம்.
அவன் கடவுள் உடனே பரிகாரத்துக்கு வந்தானாம்.
இது என்னா? நான் போயி கொண்டாந்து விரிச்சிக் போடறேன்னு. அப்புறம் அவன் தேடிகிட்டுப் போனான் கடவுள். அவன் ராட்சதன் சமுத்திரத்துக்குள்ளே போயி புகுந்துகிட்டானாம். சமுத்திரத்துக்குள்ளே போயிஎப்படிடா அவன்கிட்டே இருந்து பிடுங்கிக்கிட்டு வர்ரதுன்னு விஷ்ணு சமுத்திரக் கரையிலே இருந்து யோசனை பண்ணினானாம். அப்புறம், அவனுக்கு தோணிச்சாம். பன்னியானோமானால் சட்டுன்னு உள்ளே போயிடலாம்.
ரொம்பக் கணமாயிருக்கும் தண்ணிக்கு உள்ளேயே போயிடலாம் சீக்கிரம், அப்படீன்னு அவன் பன்னி உருவமெடுத்து கிட்டானாம். யாரு? விஷ்ணுக் கடவுள். அந்தப் பன்னி உருவமெடுத்து உள்ளே (சமுத்திரத்துக்குள்ளே) போயிட்டானாம்.
போன உடனே அந்த ராட்சதன் இவனோடு சண்டை போட்டானாம்.
இவன் அவனைக் கொன்னான். கொன்னு போட்டு அந்த பூமியைக் கொண்டுவந்தான்.
மேலே விரிச்சிப் போட்டான் பூமியைக் கொண்டாந்து.
விரிச்ச உடனே விஷ்ணு பண்ணி உருவில் அந்த விரிச்ச பூமிமேலே உல்லாசமாய்ப் போனானாம். சட்டுன்னு அங்கே ஒரு கரணம் அடிக்கிறான்.
இந்த பூமிக்கு; அந்த பன்னிகிட்டே படுத்துக்க வேணும்னு ஆசை வந்ததாம்.
(சிரிப்பு)
பூமி அதைக்கேட்டதாம். பன்னியே பன்னியே நான் உன் கிட்டே படுத்துக்கவேணும்.
நீஎன்னைக் கலவி பண்ணனும்ச்சாம்.
சரின்னு இந்தப் பண்ணி அந்த பூமியோடு கலவி பண்ணுச்சாம்.
உடனே ஒரு குட்டிபோட்டுதாம் பூமி. (சிரிப்பு)
கொலைகாரக் கடவுளும் மனைவியும்
அந்த குட்டி ஒரு அசுரனாய்ப் போச்சாம். அவன் யாருடான்னா அவன் நரகாசுரன்னு ஒரு அசுரன். அவன் என்ன பண்ணினான்? தேவர்களை மாத்திரமல்ல கடவுளையே ஒழிக்கிறதுக்குச் சண்டைக்கு போனானாம்.
(சிரிப்பு)
அந்தக் கடவுள் கிருஷ்ணன்.
இவனை அடிக்கிறதுக்கு விஷ்ணு கையாளான வரைக்கும் பார்த்தான் முடியலே. அந்த நரகாசுரன் அவனைத்தலை எடுக்கவிடாமல் அடிச்சானாம்.
அப்புறம் கிருஷ்ணனுடைய பொண்டாட்டி வந்து உதவி பண்ணி நரகாசுரனைக் கொன்னாளாம். ஆகவே புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நரகாசுரனைக் கொன்னதினாலே,
இந்த நரகாசுரன் பெரிய அயோக்கியன் அவனைக் கொன்னதினாலே, உலகத்துக்கு சேமம்.
அந்த சேமத்தை மக்கள் அறிவதற்காக, அனுபவிக்கிறதுக்காக, நரகாசுரனைக் கொன்னதினாலே கொன்ற நாள் அப்படீன்னு ஒரு கொண்டாட்டம்.
அவனை அவமானப் படுத்துகிற அளவுக்கு ஜனங்கள் கொண்டாட வேண்டியது.
அதற்காக வானம் வேடிக்கை, சாப்பாடு,
துணிமணி எல்லாம் போட்டு நரகாசுரசதுர்த்தின்னு அதற்குப் பேரு வைச்சி நரகாசுரனை கொல்லுவதற்காக அப்படிச் செய்தாங்க.
கொன்னதைச் சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காகத்தீபாவளிக் கொண்டாடுகிறாங்க அப்படீங்கிறது அந்தக் கதை.
இந்தக் கதையிலே நீங்கள் எதை ஏற்றுக்க முடியும்? ஒரு ராட்சதன் அவன் பூமியெல்லாம் பாயாகச் சுருட்டிகிட்டு கக்கத்திலே வைச்சிகிட்டு தண்ணிக்குள்ளே போயி பூந்துகிட்டான்னா பூமியெல்லாம் சுருட்டுகிறபோது சமுத்திரம் ரோடு எல்லாம் அவன் கக்கத்துக்குள்ளே தானே போயிருக்க முடியும்? (சிரிப்பு) (பலத்த கைதட்டல்) பூமி போனதுக்கு அப்புறம் இவன் எதுமேலே இருந்தான்? விஷ்ணு எது மேலேவந்தான்? சமுத்திரம்எதுமேலே இருந்தது?அதைப் பற்றியெல்லாம் அவன் சிந்திச்சி இருப்பானோ? ஜனங்கள் முட்டாள்கள்.
எதைச் சொன்னாலும் நம்புவாங்கன்னு பாட்டி கதைச் சொல்லுகிற மாதிரி அவன் சொல்லி வைச்சிருக்கிறான். அப்படியே தான் நீங்க. மற்ற எந்தக் கதைகளை எடுத்தாலும் பத்து அவதாரம் கடவுள் எடுத்ததாகச் சொல்லப்படுகிறதிலே அனேகமாய் இந்த முட்டாள்தனமான கதைதான். ஆம் முட்டாள் தனமான கதை. கடவுள் மீன் அவதாரம் எடுத்தாருங்கிறான். என்னத்துக்காக மீன் அவதாரம் எடுத்தார்னா,
எவனோ ஒரு ராட்சதன் வேதத்தையே திருடிகிட்டு போயிட்டானாம். தேவர்கள் எல்லாம் போயி கடவுள்கிட்டே அழுதாங்களாம். என்னஅப்படீன்னு? அவன்கடவுள் நான் போயி கொண்டுகிட்டு வருகிறேன்னு மீன் அவதாரம் எடுத்துத் தண்ணிக்குள்ளே போயி அந்த ராட்சதனைக் கொன்னு அந்த வேதத்தை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தானாம் தேவர்களுக்கு.
வேதம் அவனே (பார்ப்பானே) சொல்றான். பார்ப்பானே அது ஒரு புஸ்தகம் அல்ல. அது ஒரு அமைப்புமல்ல. அது சும்மா சப்த ரூபமாக மனுஷனுக்கு மனுஷன்சொல்லிகிட்டேஇருக்கிற சங்கதிகளைத் தவிர அதற்கு வேதம் என்கிறது சொல்லினாலே.
அதை ஒருத்தன் எப்படி திருடிகிட்டுப் போகமுடியும்?
திருடிகிட்டுப் போறதுக்கு என்ன சொல்றான்? பிரம்ம தேவன் தூங்கிட்டுஇருந்தானாம்.தூங்குகிறபோதுஇவன்அடிச்சிகிட்டுப் போயிட்டானாம் .(சிரிப்பு )பிரம்மன் யாரு? அவன் தூங்குகிறதுன்னா என்னா? அப்புறம் அவனுக்குக் கடவுள் சக்தி என்ன ஆச்சி. இதை ஒருவன் வந்து திருடிகிட்டுப் போயிட்டான்னாஎன்னகெட்டுப்போச்சி?
உண்டாக்குகிறதே பிரம்மாதானே? அவன் இன்னொருவன் வேதத்தை உண்டாக்க முடியாதா? இல்லே அவன் எழுதி வைச்சிருந்தாலும் மடக்க இன்னொன்னு இவனாலே எழுத முடியாதா? வேதம்னாபுஸ்தகமாயில்லே.அமைப்பாக இல்லே.அப்படீன்னு சொல்லிப் போட்டு வேதத்தைத் திருடிகிட்டுப் போயிட்டான்.
ஒரு ராட்சதன் அப்படீன்னு சொன்னா?அதுக்காக இவன் வந்தான்னா? பூமியைத் திருடிகிட்டு போயிட்டான்னா? இன்னொன்னு இன்னொன்னு இப்படியே எவ்வளவு முட்டாள் தனமா, அந்த முட்டாள் தனத்தின் எல்லை, இந்தப் பண்டிகைகளும் இந்தக் கடவுள்களும் இந்தக் கதைகளும்தான்.
சரஸ்வதி பூஜை என்னா சரஸ்வதி பூஜை? எதுக்காக சரஸ்வதி பூஜை? எதுக்காக சரஸ்வதி கதை? ஏன்?
எழுதியிருக்கிறான்.
அவன் எவ்வளவு காட்டுமிராண்டியாய் இருந்திருப்பான்?. இந்தக்கதை எழுதினவனை நினைச்சால்? சரஸ்வதிங்கிறது பிரம்மாவினுடைய மகள். பிரம்மாவிலே உண்டாக்கப்பட்டவள்.
உண்டாக்கி நல்லா அமைப்பா அந்த சரஸ்வதி உருவகம் ஏற்பட்டது அழகாய்.அதை இவன் பிரம்மா பார்த்தானாம்.
தானா உண்டாக்கினதை. இவன் சற்று உற்றுப் பார்த்தானாம்.
அவளுடைய அழகைப் பார்த்து இவனுக்கு அவள் மேலே ஆசை வந்திட்டுதாம். வந்த உடனே இவன் போய்க் கட்டிப்பிடிச்சானாம். அவள் அடடே! அடடே! நான் உனக்கு மகளாச்சி, வந்து என்கிட்டே இம்மாதிரி எல்லாம் பண்ணுகிறாயே இது எல்லாம் யாச்சியமா
-ன்னாளாம்.
மகளுக்கும் ஆசைக்கும் சம்பந்தமில்லே.
ஆசைப் பட்டால் யாராய் இருந்தாலும்ஒண்ணுதான். அப்படீன்னு அவன் சொன்னானாம் சரஸ்வதி நான் அதற்குச் சம்மதிக்கமாட்டேன்னு ஓடினாளாம். இவன் விரட்டினானாம்.
அவள் மான் வேஷமா, முயல் வேஷமா, எடுத்துகிட்டு அவள் ஓடினாள். இவன் பின்னாலேயே துரத்திகிட்டு மான் உருவம் எடுத்துகிட்டு இவன் துரத்தினான்.
இப்படியே துரத்தி துரத்திகிட்டு போயி கடைசியில் சிவன்கிட்டே போய் சேர்ந்தாள் அவள். என்னடி அம்மான்னான்?. எங்க அப்பன் வந்து என்னைக் கட்டிப்பிடிக்கிறான். அதற்குக் கேள்வியே இல்லையா? நாதியே இல்லையான்னாளாம்? அவன் பிரம்மாவைக் கூப்பிட்டு கேட்டானாம்?
என்னடா உனக்குப் புத்திகிடையாதா?
உன் மகள்கிட்டே இந்த மாதிரி எல்லாம் பண்றியே? அப்படீன்னு. நான் அவளைப் பிடிக்கிறேன்ன்னான். (சிரிப்பு) சிவன் பிரம்மாவைத்திட்டுகிறதுக்கு கண்டிக்கிறதுக்கு வகையில்லை. மகளுக்கே புத்தி சொன்னானாம். கிடக்கிறானம்மா போ அவன் கூடவே என்ன பண்றது?
அவன் உன் மேலே ஆசைப் பட்டுட்டான் அப்படீங்கிறான், சிவன். (சிரிப்பு கைதட்டல்)அப்புறம் போய் இவள் (சரஸ்வதி) அப்பனோடவே இருக்கிறாளாம்.
அப்பனும் மகளும். யாரு? பிரம்மாவும் சரஸ்வதியும் அவுக இரண்டு பேரும் பொண்டாட்டி புருஷனாய் வாழ்கிறாகன்னு அர்த்தம். அவுக வாழ்க்கையிலே எவன் எவனோடவோ சண்டைக்குப் போனான். எவனோட வந்தாள். அதுக்காக சரஸ்வதி பூஜை பண்ணவேணும்.
சரஸ்வதி பூஜைன்னா சரஸ்வதி அறிவுக் கடவுளாம், என்னென்னமோ அவன் பாப்பான் எவன் என்ன சொன்னாலும் எவன் தட்டிப் பேசுகிறான்?.
எனக்கு முன்னே பேசிய தோழர்கள் சொன்னபடி நம்ம புலவர்கள் எல்லாரும்முட்டாள்பசங்க.ஒருவன்கூடஇதையெல்லாம்எடுத்துச் சொல்றதில்லே, ஜனங்களுக்கு இவுக.
நல்லதனமாய்ச் சொல்ல ஆரம்பிச்சிருந்தாங்கன்னா,
நம்ம ஜனங்கள் மறுத்து இருப்பாங்க. எல்லாப் புலவர் பசங்களும் அதுக்கு அனுகூலமாகவே பாடிடறானுங்க.
நம்புகிறானுங்க அந்தக் கதையை. நாடு பூராவிலும் ஏன் முட்டாளாக்கி இருக்கிறாங்கன்னா?
எவனாவது ஒருத்தன் இந்த விஷயத்தைச் சொன்னாலல்லவா மனிதன் திரும்புவான்?
எவனுமே பேசமாட்டேங்கிறானே?இப்படி ஒவ்வொரு புராணம், ஒவ்வொரு பண்டிகை விநாயகர் சதுர்த்திங்கிறான்.
வினாயகப் பண்டிகைன்னா அதுக்கு சர்க்காரிலே கூட, லீவ் விடறான். என்னடான்னா வினாயகன். வினாயகன் யார்ரான்னா? 4,5 கதை வினாயகனுக்கு.
ஒரு கதை இரண்டு கதை அல்ல.
சிவனும் பார்வதியும் வனத்திலே உலாவினாங்களாம். ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கலவி பண்ணிகிட்டு இருந்ததாம். இவகளுக்கும் உடனே உணர்ச்சிவந்ததாம். இவுக உடனே கலவி பண்ணினாங்களாம்.
அவுக ஆனைகளைப் பார்த்துகிட்டு கலவி பண்ணினதாலே
(சிரிப்பு கைதட்டல்) அவள் பொண்டாட்டி வயிற்றிலே ஆனைக்குட்டியாட்டம் பிள்ளை சினையாகிப் போச்சாம். (பலத்த கைதட்டல் வெடிச் சிரிப்பு நீண்டநேரம்) நான் சொல்றது விநாயகர் புராணம். கட்டுக்கதையல்ல.
அப்படி ஒரு கதை இருக்குது. (சிரிப்பு)
இன்னொன்று நந்தவனத்திலே சுற்றினாங்களாம் சிவனும் பார்வதியும்.
அந்த
நந்தவனத்திலே இருக்கிற ஒரு மாளிகையிலே ஆண் யானையும், பெண் யானையும் கலவி பண்றாப்பிலே பொம்மை எழுதியிருந்ததாம்.
அதைப்பார்த்து இரண்டு பேருக்கும் உணர்ச்சிவந்ததாம். அதைப் பார்த்துப் படுத்தாங்களாம். ஆனைகுட்டி பிறந்திட்டு தாம்.சிரிப்பு)மற்றும் இன்னும் இரண்டு மூணு கதையெல்லாம் போட்டிருக்கிறான்.
கடைசியா ஒண்ணு சொல்றான். சிவனோட பொண்டாட்டி குளிக்கப் போனாளாம். அவள் குளிக்கப் போன ரூமூக்குக் கதவு இல்லை. எவனாவது குளிக்கும் போது வந்துவிட்டா என்ன பண்றதுன்னு, சொல்லி அதுக்கு ஒரு காவல் வைக்கலாம்ன்னு நினைச்சாளாம்.
என்னா காவல் இருக்கிறதுன்னா ஒண்ணையும் கானோம்? தன் உடம்பிலே இருக்கிற அழுக்கை எல்லாம் உருட்டினாளாம். அது ஒரு அழுக்குருண்டையாச்சுதாம்.
அந்த
அழுக்குருண்டையை வாசற்படியிலே போட்டு
ஏ!
அழுக்கு உருண்டையே, அழுக்குருண்டையே, நான் குளிக்கிறேன்.
அதுவரை எவன் வந்தாலும் உள்ளே விடாதேன்னு அவள் சொல்லிட்டுப் போனாளாம்? அவள் (பார்வதி) போய்க்குளிச்சாளாம்? சிவன் வந்திட்டானாம் குளிக்கும்போது.
இந்த அழுக்குருண்டை என்ன பண்ணிச்சீன்னா சிவனைபோகக்கூடாது உள்ளேன்னுதாம். நீ யார்ரா சொல்றவன் என் வீட்டுக்காரிகிட்டே போறதுக்கு நீ யார்ரா தடுக்கிறது (சிரிப்பு) உன் வீட்டுக்காரியோ யாரோ அது எனக்குத் தெரியாது. அந்தம்மா எனக்கு எஜமானிச்சி,
அவள் உத்தரவு போட்டாள். நீ போகக்கூடாதுன்னு தடுத்தானாம்.
அவனை மிஞ்சிப் போக இவனுக்கு சக்தி இல்லே. உடனே சிவனுக்குக் கோபம் வந்துவெட்டினானாம்.
தலை எங்கேயோ போய் விழுந்திட்டுதாம் உள்ளே போயிட்டான் (சிவன்) பொண்டாட்டி அம்மனமாகுளிச்சிகிட்டுஇருக்கிறாள்
(சிரிப்பு)
கோபம் வந்தது. யார் உன்னை இங்கு விட்டதுன்னாளாம்?
என்னை விடறதுக்கு ஆள் யாரு? நான் உன்கிட்டே வருவதற்கு, இன்னொருத்தன் என்னா? நான் காவல் வைச்சிருந்தேனே.
அது என்ன ஆச்சின்னாளாம்?
தடுத்தான் அடிச்சேன். தலையை வெட்டிப்போட்டு,
நான் உள்ளே வந்திட்டேன்னானாம்?
(சிரிப்பு)
பார்வதி உடனே கூ கூ- ன்னு படுத்துகிட்டு என் பிள்ளையை நீ வெட்டிட்டியே,
நான் உன் கிட்டே பேச மாட்டேன்னு குருகிப் படுத்துகிட்டாளாம்.
சிவன் என்னென்னமோ சமாதானம் சொன்னானாம். சரி நானே அந்தப் பிள்ளையை உசுராக்கிக் கொடுக்கிறேன்.
உயிரை உண்டாக்கிறதுக்கு அந்த வெட்டின தலை எங்கேயாவது இருந்தா எடுத்துகிட்டுவான்னு இவன் தன்னுடைய கணங்களுக்கு உத்திரவு போட்டானாம்.
அந்த கணங்கள் போயி சுற்றிச் சுற்றி சுற்றிச்சாம். உலகமெல்லாம் அந்த வெட்டின தலையைக் காணவே காணமாம். அப்புறம் அவன் பொண்டாட்டிக்குச் சமாதானம்சொல்லனுமே பொண்டாட்டிக்காகன்னு.
அடே வேறு ஏதாவது ஒரு மிருகத்தோட தலையையாவது கொண்டுவாங்க அல்லது எது சிக்கிச்சோ அதைக் கொண்டுவாங்கன்ன சொன்னான். அவனுங்க போனாங்களாம். அங்கே ஒரு ஆணைக்குட்டி போயிட்டு இருந்ததாம். அதை வெட்டினான்.
அந்தத்தலையை தூக்கிட்டு வந்தான். கொண்டு வந்த உடனே இந்த முண்டத்திலே சிவன் அதை ஒட்டவைச்சான். அதுக்கு உயிர் வந்திட்டுது. இவள் பார்வதி சரீன்னு அதை எடுத்துப்பால் கொடுத்தாளாம்.
அது பால்சாப்பிட்டுது. பார்வதி வளர்த்தால்,
இவளுக்குக் கணபதிபிள்ளையாய்ப் போயிட்டான்.அதுதான் கணபதி பிறந்ததற்கு கதைன்னபேரு. இப்படியாக அய்யா கதைகளுக்கெல்லாம் இதே மாதிரியாகத்தான்.
ராமாவதாரம்
:- ராமன்- பிறக்கிறான்னு ஒரு கதை எழுதினான்.
ஏதாவது யோக்கியமாக எழுதியிருக்கிறானான்னா?
விஷ்ணு ராட்சதர்களைக் கொல்லுவதற்காகன்னு தத்துவம் வைச்சான். முறை என்னடா எழுதினான்னா?
விஷ்ணு யாரோ ஒருத்தனோட பொண்டாட்டியைப் போயி ஏமாற்றிப் பலாத்காரமாய் அவளைக் கலவி பண்ணிப்போட்டான்.அவள்ரொம்ப பதிவிரதையாமாம்.
அவள் ஜலந்த- ராசுரனுடைய பொண்டாட்டி பிரந்தைன்னு, துளசின்னும் சொல்கிறாங்க.
அவன் நாரதன் வந்து சொன்னானாம். இப்படி ஒரு பொம்பளை நல்லா அழகாய் இருக்கிறாளுன்னு அப்படியானால்
சரி நமக்குக் கொண்டு வந்து முடிச்சிப் போடுன்னானாம். இவன் கேட்டானாம்,
அவள் மாட்டேன்னுட்டாள். அவளை ஒண்ணும் பண்ணமுடியலே. அவள் ரொம்ப பத்தினியாமாம். அப்புறம் விஷ்ணு கிட்டே வந்து சொன்னாங்களாம். அவள் பதிவிரதையாம் அவளை ஒண்ணும் பண்ணமுடியலே.
அப்படீன்னான் அப்படியாக சங்கதி அவளைப் பண்ணுகிறதைப் பண்ணினால் முடியும்னு சிவன்கிட்டே வந்து சொல்லி அவனைக் கொல்லு புருஷனை. எனக்கு அவள் மேலே ஆசையாய் இருக்குது.
சிவன் அவனைக் கொன்னானாம் யாரை? ஜலந்தராசுரனை. ஜலந்தராசுரனை கொன்ன உடனே விஷ்ணு என்ன பண்ணினான்?
அந்த கொன்னு போட்ட பிணம் இருக்குதே அதுக்குள்ளே விஷ்ணு போயி புகுந்துகிட்டு இவன் புருஷன் மாதிரியா அவள் கிட்டே போனானாம். அந்த பிருந்தைங்கிறவளிடத்திலே அவன் கலவிக்கு போனான். அவள் நம்ம புருஷனாட்டம் தான் இருக்குதுன்னு கலவிக்குச் சம்மதிச்சிகிட்டாள்.
எப்படியோ அதிலே (கலவியின்போது) சந்தேகப்பட்டு ஓ!நம்மபுருஷன் மாதிரிஇல்லியேஇதிலே கோளாராய் இருக்குதே (சிரிப்புகைதட்டல்) என்ன ஏதுன்னு சிந்திச்சதிலே அவளும் பதி- விரதையானதினாலே,அவளுக்கு இவன் திருட்டுப் பயல்ன்னு தெரிஞ்சிப் போச்சி. உடனே விஷ்ணுவைப் பார்த்து அயோக்கியப் பயலே நீ இந்த மாதிரி பண்ணிட்டேஉன்பெண்டாட்டியை நீ பதற பதற இன்னொருத்தன் சினை பண்ணவேண்டியது.(வெடிச்சிரிப்பும் கை ஒலிகளும்) அவள் சாபம் கொடுத்திட்டாளாம்.
யாரு?
அந்த பிரந்தைங்கிற அம்மா. அந்த சாபம் நிவர்த்திக்கிறதுக்கு எப்படியாவது மனுஷனாய்ப் பிறந்து ஆக வேணுமேன்னு இவன் பாடுபட்டு இவன் இராமன் மனுஷனாகப் பிறக்க வந்தானாம்.
தேவர்கள் எல்லாம் போயி எங்களை இராட்சதர்கள் எங்களைத் தொந்தரவு பண்றாங்க.
நீங்க வந்து எங்களை காப்பாற்ற வேணும்ன்னாங்களாம். விஷ்ணு சொன்னானாம்,
அடே எனக்கு ஒரு சாபம் இருக்குது.
இந்த சாபம் நிறைவேறுவதற்கு நான் மனுஷனாய் பிறக்கவேணும், வருகிறேன். அப்ப நான் அந்த ராட்சதனைக் கொல்லுகிறேன்.அப்படீன்னு தேவர்கள்கிட்டே வாக்குறுதி கொடுத்திட்டு மனுஷனாய்ப் பிறக்க வந்தானாம்.
யார் வயிற்றிலே பிறக்கிறான்னா?
ஒரு பெரிய அயோக்கியன் வயிற்றிலே பிறக்கிறான்னா?
ஒரு பெரிய அயோக்கியன் வயிற்றிலே பிறக்கிறான்.
அவனுக்குப் பெயரு தசரதனாம்.
இந்த தசரதனுக்கு அறுபதினாயிரம் பொண்டாட்டிகள். ராமனுக்கு அவுக அம்மாயார்? இவன் அங்கே வந்தான். தசரதன் அறுபதினாயிரம் வருஷமானவன். இவன் வருஷம் ஒரு பொண்டாட்டி கட்டுகிறவன். முடியலே பிள்ளைபெக்கஅவனாலே.
யாகம் பண்ணி பிள்ளை பெக்கலாம்னு ஆரம்பிச்சான்
. யாகம் பண்ணினான்னாம் யாகமெல்லாம் வெற்றிக்கரமாக நடந்தது. பிள்ளை பிறக்கணுமே? யாராவது சினை பண்ணினாதானே முடியும்?
(சிரிப்பு)
தசரதனோ கிழவனாயிப் போயிட்டான்.
அந்த யாகம் பண்ணின பாப்பான்களை இவன் (தசரதன்)
கேட்டுகிட்டான்.
அப்பா எப்படியாவது என் மனைவியை சினை பண்ணி கொடுன்னான்
(சிரிப்பு கைதட்டல்) அவனுங்க சுற்றியடிச்சி மூணு பொம்பளைங்களுக்கும் இரண்டு பொம்பளைங்களுக்கு இரண்டு பிள்ளை. இன்னொருத்திக்கு இரட்டை பிள்ளை.ஆக நாலு பிள்ளை. இப்படிப் பெற அந்த பாப்பானுங்க நல்லா சினை பண்ணி ஒப்புவிச்சானுங்க. (சிரிப்பு) இவன் (தசரதன்)
அதுக்குப் பணம் கொடுத்து அந்தப் பிள்ளைகளையும் பொண்டாட்டிகளையும் ஏற்றுகிட்டு வந்து வளர்த்தினான்.
இவன்
(ராமன்)
வளர்கிறபோது அவன் வந்திட்டான்.
யாரு?
தாடகையைக் கொல்லுவதற்கு உன் பையனைக் கொடுன்னு விசுவாமித்திரன் வந்தான்.
எப்போது
? அஞ்சு வயசிலே கதை எழுதி அப்புறம் மேலே மேலே அவனுக்கு எத்தனையோ அயோக்கியத் தனங்களை எல்லாம் பன்னினான்னு அவன் வீரத்தைக் காட்டுகிறதுக்கு வாலியைக் கொல்லுவதற்குப் பின்னாலே இருந்து அடிச்சிக் கொன்னான்னு.
மற்றவங்களுக்கெல்லாம் பொய் பேசினான்னும்.
இப்படி இருக்கு கதையிலே. பொறுத்தமில்லாத யாருக்கு நாடு பட்டம் கட்டுகிறதுக்கு உரிமையோ அவனை விட்டுட்டு அவனை ஏமாற்றி அப்பனும் மகனும் தந்திரம் பண்ணி இந்த ராஜ்யத்துக்குப் பட்டாபிஷேகம் செய்ய பாடுபட்டாங்கன்னு இப்படி நேரமாகும் இதை எல்லாம் விளக்கி சொல்லிகிட்டுப் போனால், ஏராளமான பொய்யான கருத்துக்கள்,
ஒழுக்கக் கேடானக் கருத்துக்கள்,
ஏமாற்றினது சாத்தியப்படாத கருத்துக்கள் இந்த மாதிரி நிறையா வைச்சி அதுக்கொல்லாம் பண்டிகை கடவுள்ன்னு சொல்லுகிறது.
கடவுள் இறப்பில்லே. பிறப்பும் இல்லாதவர்.
உருவம் இல்லாதவர். அது இல்லாதவர்.
இது இல்லாதவர்ன்னு சொல்லுகிறது.
அந்தக் கடவுளுக்குக் கதை எழுதினால் அவன் வயிற்றிலே பிறந்தான் இவன் வயிற்றிலே பிறந்தான். அந்த அக்ரமம் பண்ணினான். இந்த அக்ரமம் பண்ணினான். கடைசியிலே செத்தான். இப்படி எல்லாம் கதை எழுதிப்போடறது. நம்ம புலவன் சொல்ல வேண்டாமா?அவன்கடவுள்ஆகாதுடாஅவன்மனுஷன்தான்.
அவன் பிறந்தவன் தான். மனுஷனுக்குள்ள எல்லா அயோக்கியத்தனம் எல்லாம் அவன் கிட்டே இருந்தது அப்படீன்னு நம்ம புலவன்கள் எல்லாம் சொல்ல வேண்டாமா?
இந்த முட்டாள் புலவன்களே பிரசாரம் பண்ணினான்னா அப்புறம்? ஜனங்களுக்கு எப்படி அறிவு வரும்? அதேமாதிரி
கிருஷ்ணன் கதை பாரதத்தைப் பற்றி இங்கு நண்பர் கன்னைய்யன் சொன்னார். என்ன ஒழுங்கு? அடே ஒரு கதையோ அல்லது ஒரு கடவுள் சங்கதியோ அல்லது ஒரு நீதிக்காக மதத்துக்காக எழுதப்படுகிற சாதனமோ எதுவாயிருந்தாலும் அதிலே ஒழுக்கம் -
நாகரிகம்
- அன்பு
- கடவுள்
- சங்கதி எல்லாம் அதிலே இருக்க வேண்டாமோ? இந்த மாதிரி எல்லாம் பண்றவன் கிட்டே கடவுள் சங்கதி ஏது? ராமாயணத்தைவிட பாரதத்திலேதான் இப்ப நம்ம ஜனங்களுக்கு எல்லாம் கொஞ்சம் படித்தவனுக்கெல்லாம் பற்று பாப்பானுங்களெல்லாம் இராமாயணத்தை விட பாரதத்தைதான் ரொம்ப பரப்புகிறானுங்க.
ஏன்னா?
அதிலே கடவுள் (கிருஷ்ணன்) பேசுகிறாரு. கீதை சொன்னாருன்னு ஒரு சங்கதியைப் புகுத்தி கிட்டு எல்லாருமா இப்ப அதிலே அந்தப்பாரதப் பிரச்சாரம் பண்றானுங்க.
ராமனுக்குச்சமாதானம் சொல்ல முடியலே? பல இடத்திலே அவன் அயோக்கியத் தனம் பண்ணியிருக்கிறான். மூடி மூடி பார்த்தாங்க அது ரொம்ப தெளிவாய்ப் போச்சி. இப்ப பாரதத்தைக் கையிலே பிடிச்சிகிட்டாங்க.
பாரதத்தைப் பரப்ப போறாங்க. நண்பர் கன்னைய்யன்
இங்கே சொன்ன மாதிரி பாரதத்திலே ஒரு பொம்பளை கூட யோக்கியமாய் பத்தினிதனமாய் அவள் புருஷனுக்கு பிள்ளை பெற்றவள்ன்னு கிடையாது.
பாரதத்திலே வர்ர எந்த முக்கிய புருஷனும் அவுக அப்பனுக்கு,
பிறந்தான்ன அதிலேஎழுதலே.பாரதம் நடந்ததோ, இல்லையோ.
அது வேறு சங்கதி. நடக்காததை ஏதோ மனித ஒழுக்கத்துக்காக எழுதினான்னு வச்சிகிட்டாலும் முக்கியமான கதைகளை எழுதினான்.
அவனை ஒழுக்கமாய் எழுதவேண்டாமோ?
கிருஷ்ணனை உண்டாக்கி அவன் பிறந்தநாள் தொட்டு அயோக்கியத்தனமா? அவனுக்கு வயசுவந்ததோ இல்லையோ நினைச்சவன் பொண்டாட்டியை எல்லாம் கெடுக்கிறது. 1000, 10,000, 15,000 பொம்பளைங்களை வைப்பாட்டிகளாகக் கொள்ளுகிறது.
அடிக்கடி
1000 பொம்பளைங்களை - 2000 பொம்பளைங்களைக் - கல்யாணம் பண்ணிக்கிறது.
இதெல்லாம் என்ன? கடவுள் கதையிலே எழுதுகிற சங்கதிகளா?
என்னத்துக்காக அவனுக்கு இத்தனை பொம்பளைங்களை எழுதவேணும்?
இவ்வளவு பொம்பளைங்களைக் கொடுத்தான்னு எழுதுகிறதிலே கடவுளுக்கு என்ன பெருமை? நல்லா நீங்கள் கவனிக்கணும் கடவுள் பிரச்சாரம் பண்றாங்களா இந்தப் பசங்க? இல்லே. முட்டாள்தனமான, அயோக்கித்தனமான பிரச்சாரம் பண்றாங்களா? அண்ணன் தம்பி ஆறு பேரு, பஞ்சபாண்டவனுங்கன்னு.
அவுக அப்பன் இரண்டு பேரு. ஒருத்தன் துரியோதனனுக்கு அப்பன் ஒருத்தன். அவர் சொன்னார் அந்த பாரதத்திற்கு காரணமாயிருக்கிறவனை.
ஒரு மீனு. ஏதோ இந்திரியம் வந்து விழுந்ததை அந்த மீனு முழுங்கிச்சி. அந்த மீனு சினையாச்சி. அது ஒரு மனுஷனாட்டம் குட்டி போட்டது. அதை இவன் என்னமோபார்த்தான். அவசரப்பட்டு அவன் நந்தவனத்துக்குப் போனான்.நல்லதுன்னுஎன்னமோசொன்னான்னு.
அவள் மேலே நாறுச்சி. இவன் வாசனை பண்ணினான்.
அதை இவன் கலவி பண்ணினான்னு சொன்னாங்க.
அவன் கிட்டேயும் இந்த பஞ்ச பாண்டவர்கள் பிறக்கிறதைப் பற்றியும்அவன் பாண்டுவுக்குப் பொம்பளைங்ககிட்டே படுக்க முடியாது. அவன் நிலைமை மோசமாய்ப் போச்சி. அதனாலே அவனக்குப் பிள்ளை வேணும். சாஸ்த்திரத்திலே எவன்கிட்டே போயாகிலும் பிள்ளை உண்டாக்கிக்கலாம்.
அதிலேகுற்றம் இல்லேன்னதுனாலே
அவள் என்னமோ சிரிச்சாள்
. வேறெ தேவர்கள் வந்து பிள்ளை கொடுக்க ஆரம்பிச்சாங்க. சூரியன் வந்து ஒரு பிள்ளை கொடுத்தான். அவனுக்கு பேரு கர்ணன். எமன் வந்து ஒரு பிள்ளை கொடுத்தான். அந்த எமனுக்கு பிறந்தவன்தான் தர்மன். வாயு வந்து ஒரு பிள்ளை கொடுத்தான்.
அந்தவாயுக்கு பிறந்தவன்பீமன்.இந்திரன்வந்த ஒரு பிள்ளை கொடுத்தான்.
அந்த இந்திரனுக்குப் பிறந்தவன் அர்ச்சுனன். அப்புறம் இரண்டுபேரு அசுவணி தேவர்களுக்குப் பிறந்தான்னு. (நகுலன் - சகாதேவன்) யாரோ அதற்கு என்ன அர்த்தமோ? இவள் யாரு? இவள் எங்கே இருக்கிறாள்?
இந்த பாண்டுங் கிறவன் பொண்டாட்டி குந்திங்கிறவள்.
சூரியன் எங்கே இருக்கிறான்?
எமன் எங்கே இருக்கிறான்?
வாயு எங்கே இருக்கிறான்?
இந்திரன் எங்கே இருக்கிறான்?
இவுங்க எல்லாம் இருக்கிற டெல்லியிலே அஸ்தினாபுரத்திலே.சூரியன்இருக்கிறது,
இந்த
பூமிக்கு ஒன்பது கோடி மைலுக்கு மேலே இருக்கிறான். எமன் இருப்பது தேவலோகத்திலே.இந்திரன்இருக்கிறது தேவலோகத்திலே. தேவலோகத்துக்கும் பூமிக்கும் வழிஎங்கேஇருக்கிறது அவன் எப்படி வந்து எந்த ரூபத்திலே வந்து இவளுடன் (குந்தியுடன்) சேருகிறான்? வாயுக்கு என்ன ரூபம் காற்று? காற்று எப்படி வந்து சினை பண்ணும்? (சிரிப்புகைதட்டல்)எமன் என்ன ரூபத்திலே இருக்கிறான்னுகண்டோம்?
அவனைப்பற்றி சொல்லுகிறாங்க. அவ்வளவுபெருசு இவ்வளவுபெருசுன்னு.
இவள்(குந்தி)
சாதாரண பொம்பளையோடு சேர்ந்தவள்.
என்ன மாதிரி இதுவெல்லாம் நடக்கிற காரியம்? இவுக கூப்பிட்டால் வந்திடறது.
வந்த உடனே பிள்ளை கொடுத்திட்டுப் போகிறதுன்னா?
என்னசம்பந்தம் தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இவுக எல்லாம் மனுஷர் தானே, கிருஷ்ணன் உள்பட. மனிதராய் பிறந்தவங்க பாண்டு துரியோதனன் அவுக இவுக எல்லோரையும் சொல்லுகிறபோது அவுகளை எல்லாம் ஒரு மனிதனாக ஆக்கித்தான் எழுதிட்டான்.
அவள் சமயரதுக்கு (பூப்பு அடையும்) முன்னமேயே குந்திக்கு சூரியன் வந்து பிள்ளைக் கொடுத்திட்டுப் போனான்னு கதை. அவன் கர்ணன் பிறந்தான். வைச்சிக்கங்க.
சூரியன் எங்கே இருக்கிறான்.
இந்த பூமிக்கு ஒன்பது கோடியே 30 லட்சம் மைலிலே இருக்கிறான். ஆம் ஒன்பது கோடியே 30 லட்சம் மைல் (தூரத்திலே)
இருக்கிற சூரியன் ஒவ்வொரு நாளைக்கும் அதிகமாய் வெயில் அடிக்க ஆரம்பிச்சால் இப்பத்திய வெயில் 120 டிகிரிங்கிறாங்க. அப்ப தானா நெருப்பு பிடிச்சி உடனே அநேக ஊரு எரிஞ்சிப் போகிறது. அங்கே (சூரியன்) இருக்கிறபோதே நம்மாலே தாக்குப் பிடிக்காமல் வெப்பம்னு அலைகிறோம்.
மனுஷன் எல்லாம் குளிர் இருக்கிற இடத்துக்குப் போகிறான். எங்கெங்கேயோ பறக்கிறான்.
சூரியன்
9 கோடியே
30 லட்சம் மைல் தூரத்திலே இருக்கிறபோதே மனுஷனுக்கு இந்த கதியானால்,
அந்த பயல் (சூரியன்) இங்கே (பூமிக்கு) இவள் (குந்தி)கிட்டே படுத்துப்பிள்ளை கொடுத்தான்னா அந்த வெயில் என்னாகிறது?
(மக்கள் கைதட்டி ஆரவாரச் சிரிப்பு) சூடு என்னாகிறது?
அவன் இங்கே வந்தா நாடெல்லாம் வேகாமல் இருக்குமா? சூரியன் அவள்கிட்டேபடுத்திருந்தால் அவள் (குந்தி)
சாம்பலாகாமல் இருந்திருப்பாளா (சிரிப்பு) என்ன லட்சியத்தை வைச்சி கிட்டு இந்தக் கதையெல்லாம் சொல்றான் அவன்? ஜனங்கள் முட்டாள். இதைச் சொல்லிச் சொல்லி மேலும் மேலும் சொல்லி அவர்களை மடையனாக்கணும். மடையனாக்கினால்தான் அயோக்கியப் பசங்க பிழைக்க முடியும்? அதுக்கேற்றதே தவிர கதைகள் உள்ளபடி மனிதன் அறிவு பெற்றாப்பிலே என்ன இருக்குது இந்த சாதனங்களிலே?
ஆகவே அருமைத் தோழர்களே! இவைகள் எல்லாம் வேண்டுமென்றே அறிவில்லாமல் இருந்தபோது இதுகளைப் புகுத்தி வஞ்சித்து, அதிலே வருகிறதெல்லாம் கடவுள், அது செய்கிற காரியமெல்லாம் கடவுளுக்கு வேண்டிய காரியம். எவனை எவன் கொன்னானோ, உதைச்சானோ,
அடிச்சானோ,
அவனெல்லாம் நாம அவனெல்லாம் ராட்சதன். இந்த மாதிரி நம்மையெல்லாம் நிரந்தரமாய் இழிவுபடுத்துகிற மாதிரியாக ஏற்பாடு செய்த காரியங்கள். இதை 1000, 2000 வருஷமாக நாட்டிலே பரப்பப்பட்டு எல்லோரின் மனசுக்குள்ளே இன்ஜக்ஷன் ஊசி போடறாப்பிலே அறிவையே நாசமாக்கிட்டாங்க.
வருகிறவன் எல்லாம் அந்தக் கதையைத்தான் வளர்த்தான்.
வளர்த்துக்கொண்டே இருக்கிறான். எந்தப்புலவன்வந்தாலும்அதுக்குவியாக்கியானம் எழுதுகிறான். அதை ஆதரிக்கிறான்.
மற்றும் இன்றைய தினம் மக்களுக்கு இலக்கியம் மூலமாக, காரியங்கள்மூலமாக அறிவைப் பெற்றிருக்கிறாப்பிலே, பக்தி பெற்றிருக்கிறாப்பிலே கடவுள் தன்மை உண்டாக்கிறாப்பிலே செய்கிறதுக்கு இருக்கிற புஸ்தகங்கள் என்னா இருக்குது? நீங்களே சொல்லுங்கள் என்ன இருக்குது?
முட்டாள் எல்லாம் நேற்று (உலக தமிழ் மாநாடு) தமிழ்ப் பண்டிகை கொண்டாடினானே.
தமிழிலே என்ன இருக்குதுன்னு சொல்லுகிறான் அவன்? தமிழைப்பற்றி என்ன மரியாதைக் காட்டினாங்க?
சொல்லுகிறான் அவன் தமிழிலே என்னடா இருக்குதுன்னா?
குறள்இருக்குது,
சிலப்பதிகாரம்இருக்குது,
பாரதம் இருக்குது. கந்தபுராணம் இருக்குது.
இவைகள் தானே இன்னைக்கு மனுஷன்கிட்டேஇலக்கியங்கள்கிறமுறையிலே மக்களுக்குள்ளே புகுத்தப் பட்டிருக்கிற சாதனங்கள். என்ன பெரிய புராணம் யோக்கியமான புராணம்? மற்றதாவது அந்த காலத்திலே உண்டாக்கின கற்பனை. எவனோ சுமார்
1000 வருஷமிருக்குமோ என்னமோ அவன் பேரென்னா? வெங்காயம் அவன் எழுதினானாம்(சிரிப்பு)இளங்கோவடிகள் எழுதினானாம் சிலப்பதிகாரம்ன்னு.
அவன்வைணவன்நிறைய பக்தவிஜயம்ன்னு ஒரு கதை எழுதினான்.
அதிலே நூற்றுக் கணக்கான பக்தர்களை அதிலே போட்டுக் கதையைப் பெருக்கினான். அந்த தாசர்,
இந்த தாசர், அவரு இவருன்னு நிறையா? வடநாட்டிலே உண்டாக்கினது அதுவும். இந்த நாட்டிலே உண்டாக்கினதல்ல அது. இந்த நாட்டுக்கு வந்த வைணவம் கொஞ்சம் வலுத்தது.சைவன் அவனுக்குப் போட்டியா ஒரு கதை எழுத ஆரம்பிச்சான். அவ்வளவு தான் பெரியபுராணத்திலே பாப்பானுக்குப் பொண்டாட்டியைக் கொடுத்து மோட்சத்துக்குப் போனான்னு.
அப்படியே எழுதுகிறான். இயற்பகை நாயனாருன்னு இருந்தாரு. அவன் ஒரு பார்ப்பான் வந்து பொண்டாட்டியைக் கொடுன்னான் கொடுத்தான். அந்த பொண்டாட்டியைச் சேர்ந்தவங்க எல்லாம் நாங்கள் உனக்குத் தான் கொடுத்தமே தவிர கண்டவனுக்கு விட்டுக் கொடுக்கலேன்னாங்க.
அவனை இவன் வெட்டினான்.
அப்புறம் பாப்பானோடு போனாள் அவள். உடனே கடவுள் வந்து மோட்சம் கொடுத்தாரு. இவ்வளவு பெரிய தியாகம் பண்ணினாய் நீயி.
என்ன நியாயம்? அந்த சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதின ஆசிரியர் அவன் பொண்டாட்டியைக் கொடுப்பானா இன்னொருத்தனுக்கு மோட்சம் போகிறதுக்காக?.
எழுதிப் போட்டானே தவிர, ஊரான் எப்படியோ நினைச்சிகிட்டுபோகட்டும்?.
நமக்கென்ன அக்கறை கவலைன்னு அவன் கொடுப்பானோ?
இப்பெரிய
புராணத்தை கண்ணிலே ஒத்துக்கிறான்ங்களே தவிர இந்த சைவனுங்க எவனாவது தன் பொண்டாட்டியை இன்னொருத்தனுக்குக் கொடுக்க சம்மதிப்பாணுங்களா? கேட்டா உதைப்பானே. செருப்பல்லவா எடுத்துக்குவான்?.
ஏண்டா என் பொண்டாட்டியைக் கேட்கிறேன்னு? அவன் எவனாயிருந்தாலும் இந்த காலத்திலே
? இந்த காலத்திலே அந்தக் கதைகளை எல்லாம் கொண்டாந்து போடறதுன்னா என்ன அர்த்தம்? ஒவ்வொரு நாயன்மார்களுடைய கதைகள் எவ்வளவு முட்டாள் தனமாக எழுதுலாமோ அப்படி எழுதுகிறான்.
மகளை மயிரை அறுத்தான்.
இன்னொருத்தன் பொண்டாட்டிகிட்டே பேசாமல் வெறைச்சிக் கிட்டான் இன்னொருத்தன். இம்மாதிரி என்னென்னமோ?
ஒரு கதையாவது அறிவுக்கோ
- ஒழுக்கத்துக்கோ-
கட்டுப்பட்ட கதை அங்கே ஒண்ணுமே இல்லை. பக்தி வந்து பக்தி காரணமாகப் பயித்தியக்காரன் போல நடந்து கிட்டான். பக்திவான் அப்படிதான் இருப்பான்னு காட்டினான்.
அவன்எதை?
பெரியபுராணக் கதையை வைச்சிகிட்டு அந்தக் கதைப்படி எந்த பக்தன் நடக்கமுடியும்?
அதே மாதிரிதான் பக்த விஜயம் ன்னு வைணவன் அவன் கதை எழுதினான்.
அவனும் அப்படிதான். எவனோ வீட்டுக்கு வந்தான் ஒரு பக்தன். சாப்பாடு போடூன்னான்.
வீட்டிலே ஒண்ணுமே இல்லை. மார்வாடி கிட்டே போயி கடன் கேட்டான் அவன். உன் பெண்டாட்டியை என்னிடம் விட்டா சாமான் கொடுக்கிறேன்னான் மார்வாடி. அவன் தன் பொண்டாட்டியை அவன் கிட்டே ஒப்பிச்சிவிட்டு சாமான் வாங்கிக்கிட்டு வந்து பொங்கிப் பக்தனுக்குப் போட்டான். இதுவா கதை? இதுதான் மதமா? இது தான் கடவுள் சம்பிரதாயம் பக்தி நூல்கள் மதநூல்கள்.
இப்படியாகவே ஏராளமாக பாரதம் - அப்படி இராமாயணம் இப்படி. சிலப்பதிகாரத்தின் யோக்கியதை அப்படி. பெரியபுராணக்கதைகள் அப்படி. கந்த புராணம் ஒரு பெரிய கதையாகச் சொல்லுகிறேன்.
கந்த புராணத்தை வீதிக்கு வீதி, பிரசாரம் பண்றானுங்க சைவனுங்க. என்னா கந்தபுராணம்?
இராமாயணத்திலேயே எழுதியிருக்கிறானே? தேவர்கள் எல்லாம் போயி சிவனிடம் இந்த இராட்சதர்களுடையகொடுமை சகிக்க முடியலே, அவர்களோடு நாங்கள் சண்டைக்குப் போகிறோம். எங்களுக்கு ஒரு சேனாதிபதியைக் கொடுன்னு கேட்டானுங்களாம். சரி, அப்படியானால் நான் ஒண்ணு பெத்துக் கொடுக்கிறேன்னுட்டு பெண்டாட்டியைக் கூட்டிவந்து நாம ஒரு நல்ல பிள்ளை பெத்துக் கொடுக்க வேணும், அதனாலே நாம இருவரும் படுத்துக்க வேணும்ன்னானாம். (சிவனும் - பார்வதியும்)
இரண்டு பேரும் படுத்துக் கிட்டாங் களாம் பிள்ளை பெக்க. ஆயிரம் வருடம் கலவி செய்து கொண்டே அதே வேலையாய்ப் படுத்திருந்தாங்களாம். அப்படியே எழுதுகிறான். நூறு தேவ வருஷம்கிறான். ஒரு தேவ வருஷத்துக்கு நம்ம வருஷம் நூறு போகணும். அவ்வளவு நாள் படுத்தும் அந்தம்மா (பார்வதி)
சினையாகலே
(சிரிப்பு கைதட்டல்) அப்புறம்.இந்ததேவர்கள்எல்லாம்பயந்திட்டாங்களாம். அய்யய்யோ நூறு தேவ வருஷம் ஆகியும் ஒரு பிள்ளை பிறந்தால் நம்ம கதி. என்ன ஆகிறது? அவன் இராட்சதர்களை மட்டும் கொல்லமாட்டான்.
நம்பளையும் ஒழிச்சாலும் ஒழிச்சுடுவான்.
எங்களுக்குப்பிள்ளையும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம். நீங்கள் சும்மா (வேலையை-கலவியை செய்யாமல்)
இருங்கப்பான்னு சொல்லி கேட்டுகிட்டாங்களாம்.
கதை எழுதுகிறது அப்படி. நான் சொல்லுகிறது எனக்கு வெட்கமாய் இருக்குது.
அந்த அயோக்கியப் பசங்க எழுதினது வெட்கமில்லையே?
இப்படியே எழுதுகிறானே. சிவன் கேட்கிறான்
(தேவர்களை பார்த்து)ஏண்டாஎன்னை நடுவிலே வந்து (கலவியை) நிறுத்துங்கறியே எப்படி முடியும்?(சிரிப்பு) அதுஎன்னா விளையாட்டா?
இவனுங்கவிஷ்ணுமுதற்கொண்டு கெஞ்சுகிறானாம். எப்படியாவது நிறுத்தப்பா இல்லாவிட்டால் உலகம்
நாசமாய்ப் போயிடும். அசிங்கமாயிருக்குது சொல்றதுக்கே.
இடையில்நிறுத்தினா அந்த இந்திரியங்களைத் தாங்குகிறது யாரு? அதை எங்கே விடட்டும்?
அதுவும் ஒரு விஞ்ஞானத்துக்கு பொறுத்தமாய் இல்லே. அப்படிச் சொல்றான் அவன். இடையில் வேலையை (கலவியை) நிறுத்தினால்வருகிற இந்திரியத்தை எங்கே விடறதுன்னனு கேட்டானாம் சிவன். எங்ககிட்டே விடுன்னான்களாம். சரி பிடியுங்கடா கையைன்னானாம் சிவன்.(சிரிப்பு)
ஒவ்வொருத்தன் கையிலேயும் கொஞ்சம் கொஞ்சம் (விந்தை) ஊத்தினானாம் சிவன். தேவர்கள் வாங்கி குடிச்சாங்களாம் (சிரிப்பு)
உடனே அவனுங்க (எல்லாம்) குடிச்சி சினையாகிட்டான்களாம்
(சிரிப்பு)
அப்புறம்
சிவன்கிட்டேபோயி (தேவர்கள்) அழுதாங்களாம். என்னா இப்படி எங்களை எல்லாம் சினைபண்ணி போட்டியே என்ன பண்றதுன்னு? (சிரிப்பு)
காஞ்சிபுரத்துக்குப் போயி , அங்கே ஒரு குளம் இருக்குது.
சுரகதீசுவரர் குளம். அங்கே போயி குளிங்க. இந்தக் கர்ப்பம் எல்லாம் கழிஞ்சி நல்லாகிப் போகும்ன்னானாம் சிவன். இந்த தேவர்கள் விஷ்ணு முதற்கொண்டு அதிலேபோயி குளிச்சானுங்களாம்!.
அது எல்லாம் கறைஞ்சதாம்.
இது காஞ்சிபுரத்திலே இருக்குது.
இராமாயணத்திலே இருக்குது.
கொஞ்சம் கொஞ்சம். இதை சைவன் மாற்றி எழுத ஆசைப்பட்டிருக்கிறான்.
ஆனாலும் விஷயத்தை மறைக்க முடியலே. கடவுள்பிறந்தால்இப்படியா பிறக்கணும்?
இவ்வளவு வேலை செய்துதான் பிறக்க வேணுமா? இவனுக்குப் பேருதான் கந்தன்னு பேரு வைச்சாங்க.
பார்க்கலாமே அந்த கந்தங்கிற பேருக்குப்பேரே, ஸ்கந்தன்னு கந்தனல்ல அவன். தமிழிலே உச்சரிப்பு கந்தன். அந்த வடமொழிஉச்சரிப்புஸ்கந்தம் ஸ்கலிதம்ன்னுபேரு. இந்திரியம் ஸ்கலிதமான இந்திரியத்திலே உருவானவன் ஆனதினாலே ஸ்கலிதம்னு சொல்லுகிறதை ஸ்கந்தம்ன்னு ஆச்சி.ஸ்கந்தம்ன்னா என்னான்னாநீங்க அகராதியை எடுத்துப்பார்த்தால்,ஸ்கலிதம் ஆன இந்திரியம் ன்னு இருக்குது.
நாளைக்கும் பாருங்க. ரகசியமாய் ஒண்ணுமில்லே.
நம்ப ஆளுங்கதான் அதை மூடிவைச்சி திருத்தி மக்களை ஏய்க்கிறானுங்களே தவிர, அவன் எவ்வளவு முட்டாளாயிருந்து, அவ்வளவு பச்சையாய் அசிங்கமாய் எழுதி வைச்சிருக்கிறான். இன்னமும் ஒவ்வொரு கடவுள் உற்பத்திக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் அவனங்க நடந்துகிட்ட மாதிரி அப்படியேதான்.
கடவுள்ன்னா என்னான்னா? உன் மனசுக்கு எட்டாது. உன் கண்ணுக்கு எட்டாது. உன் உடம்புக்குத் தெட்டுபடாது. உன் புத்திக்குப் படாது. உருவம் இல்லாதவர்,
பிறக்காதவர் சாகாதவர் எல்லாத்தையும் செய்யக் கூடிய சக்தியுடையவர். எல்லாம் அறியக்கூடியவர்.
இந்தமாதிரி எல்லாம் சொல்லி கடவுள்ன்னு உங்களுக்குள்ளே புகுத்திப்போட்டு, அப்புறம் கடவுள்ன்னா என்னாடான்னா? அயோக்கியப்பயல், காலிப்பயல்,
கொலைக்காரப்பயல்,
ஒழுக்கக் கேடாய் திரிஞ்ச பசங்க, இவுங்களைக் கடவுள்ன்னு பண்ணிக்கும்பிடச் சொல்றாருன்னா சொன்னா கேட்க வேண்டாமோ அறிவு இருக்கிறவன்?. என்னடா கடவுள்ன்னு சொன்னே, ராமனை ஏன் கும்பிடச் சொல்றே? சிவனை ஏன் கும்பிடச்சொல்றே?
இவனையெல்லாம் மனிதனாட்டம் தானே இருக்கிறான்?. மனித உருவம்தானே,
கையி காலு இதுவெல்லாம்.
மனிதன்கிட்டே என்னென்ன அயோக்கியத்தனம் இருக்குமோ அதெல்லாம் தானே இவன்க கிட்டே இருக்குது?
பிறக்கிறான்,
சாகிறான்.
ஜனங்களை கொல்லுகிறான்.
இந்த மாதிரி எல்லாம் வைச்சா மனுஷன்னு தானே அர்த்தம். கடவுளைச் சொல்லுகிறபோது நீ அப்படிச் சொல்லலியே?. மனதுக்கு எட்டாதவன்.
உருவமே இல்லாதவன். குணமே இல்லாதவன்.
எல்லாமாயிருக்கிறவன் எங்கேயுமாயிருக்கிறவன். இப்படி இருந்துதான் புடுங்கிப்போட்டு,
ஒரு அயோக்கியத்தனங்களை எல்லாம் கற்பனை பண்ணிட்டு,
கடவுள்ன்னு சொன்னாஎன்னா?அப்படீன்னு கேட்கவேண்டாமோ?
இந்த புலவர்மடப் பசங்களும் சாம்பலடிச்சிகிறது நாமத்தைப் போட்டுகிறது கொட்டையைக் கட்டிக்கிறது. இப்பநாம தோன்றினதுக்கு அப்புறம் இப்ப அனேகப் பசங்க கொட்டையை அவிழ்த்து எறிச்சிட்டானுங்க. இல்லாட்டா ஒவ்வொருத்தன் கழுத்திலேயும் ஒரு கொட்டையிருக்கும் மாலையாய்ப் போட்டுக்குவான்.
எல்லாம் அந்த முட்டாள்தனத்திலேயே,
அதைப் பரப்பியே அதைப் பிரச்சாரம் பண்ணியே புலவனாகிறான். அதற்கு கொஞ்ச நாளைக்குப் புலவனாயிருக்கிறான்.
அதற்கு அப்புறம் அயோக்கியப்பசங்க ஸ்வாமியாகிட றானுங்க. ஒவ்வொரு புலவனுக்கும் இப்பஸ்வாமின்னு தான் பேரு. மறை மலையடிகளுக்கு சாமின்னு தான் பேரு. அந்த ஆளுக்குப் பெயரு வேதாசலம். அவர் ஒரு புலவர். அவ்வளவு தான். நீரு பூசிப் போட்டார். அது பண்ணினார்.இதுபண்ணினார். ஸ்வாமி வேதாசலம் பின்பு மறைமலை அடிகளானார். இது மாதிரி இன்னும் எத்தனையோ பேரு. எல்லோரும் சாமியாகிடறான்
.
அந்தக் காலத்திலே படிச்சவங்க கொஞ்சம் அதிகம் இல்லை. சில பாட்டுக்களைத் தெரிஞ்சு பாடுகிறவங்க கொஞ்சம் கம்மியாய் இருந்தாங்க.
அவனுங்கெல்லாம் பாட்டுக்காரனாகி கவி,
பாட்டு,
எழுதக்கூடிய யோக்கியதை வந்ததும் நாலு பேரு அவன் கவியை மதிக்க ஆரம்பிச்சாங்க.
அடுத்தாப்பிலே என்ன ஆனான் அவன்னா? சுவாமிஆகிவிட்டான். அவன் பக்தராகிட்டான்.
அவன் ஆழ்வாராகி விட்டான். அவன் நாயன்மாராகிட்டான். யார் இவர் இந்த தாயுமானவர்,
பட்டிணத்துப்பிள்ளை.
இந்த வெங்காயம் (சிரிப்பு) இவர் ராமலிங்கம் இவுங்க எல்லாம் யாரு? புலவனுங்க. பாடத்தெரிஞ்சால் ஜனங்கள் மரியாதை பண்ணினாங்க.
சாம்பலடிச்சான் சாமி ஆகிட்டான்.
எல்லாரும் அப்படிதான் வந்தான் எனக்குத் தெரியும். இப்ப சங்கரதாசு சுவாமிகள் என்கிறார்களே அவர் எங்க வீட்டிலே (ஈரோட்டிலே)
வந்து சோறு தின்னது எனக்குத் தெரியும். வந்து செலவுக்குப்பணம் கேட்டது,
எனக்குத் தெரியும். முத்துசாமி கவிராயர் அவருக்கு ஒரு பேரு வைச்சி சுவாமிகள்ன்னு பேரு வைச்சிவிட்டு வீட்டிலேபடம்வைச்சி கும்பிடுகிறாங்க.அந்த ஆள் ஒரு சாதாரண பண்டிதர். என் கிட்டே சம்பளத்துக்கு இருந்தார்.
நான் பள்ளிக்கூடத்துக்கு மேனேஜராக இருந்தபோது அந்தப் பள்ளிக்கூடத்திலே அவர் ஒரு தமிழ்ப்பண்டிதன்.
அப்புறம் கவி எழுதிக்கொண்டு திரிஞ்சார். கொஞ்சம் தாரளாமாய் எல்லோர்கிட்டேயும் வேடிக்கையாய்ப் பேசுவார். செத்துப்போனார். இப்ப அவரை சாமியாக்கிட்டாங்க. இப்படி சாமியாரானவனுங்கதான்.
இப்படி சித்து ஆனவன்தான் இப்படி வெங்காயமானவன்தான்.
(சிரிப்பு)
இப்ப இருக்கிறானே தவிர அறிவினாலே முன்னுக்கு வந்தான். கொள்கையைப் பரப்பி பெரிய மனஷனான்னு ஒண்ணைச் சொல்லுங்க பார்க்கலாம். ஏன் அப்படிச் சொல்றேன்னா? நாட்டு மக்களைத் திருத்தவோ, முன்னேற்றம் அடையும் படியாகச் செய்யவோ, இருந்து வருகிற அக்கிரமம் அநீதி இதையெல்லாம் ஒழிக்கவோ எவனுமே இல்லையே? புலவன்லே அவனவன் எப்படிடா பெரிய மனுஷன்ஆனான்னா? ஒருத்தன் பெரிய புராணத்துக்கு வியாக்கியானம் எழுதி டாக்டரானான்.
இந்த மாதிரி நாலு கதைகளையும் குப்பைக் கூலங்களையும் இலக்கியங்கள் எனச் சொல்லித் தலைவராய் ஆனான்கிறான்.
நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி
Comments
Post a Comment