Posts

Showing posts from December, 2017

தமிழ்ப் புலவர்களின் தன்மை

நம் புலவர், பண்டிதர், தமிழறிஞர் என்பவர்களுக்கு தமிழ் மொழிபற்றிய இலக்கியம், இலக்கணம் என்னும் துறையில் ஏதாவது அறிவு, பயிற்சி இருந்தால் இருக்க முடியுமே ஒழிய உலகம், சரித்திரம், பூகோளம், பகுத்தறிவு, விஞ்ஞானம் என்னும் துறைகளில் அறிவோ, ஆராய்ச்சியோ இருக்க முடியுமா? என்பது பெரிதும் ஆலோசிக்கத்தக்கதாகும். இதைச் சொன்னால் நம் புலவர்களுக்குக் கோபம் வருவதில் குறைவில்லை. ஆனால் அப்புலவர்கள் தங்களைப் பற்றிச் சிறிது யோசித்துப் பார்க்கட்டும். தங்களால் நாட்டுக்கோ, தங்கள் சமுதாயத்துக்கோ சிறிதாவது பயன் ஏற்படும்படியான காரியம் ஏதாவது அவர்கள் செய்கிறார்கள்? செய்யத் தகுந்த சக்தியோ, அறிவோ அவர்களுக்கு இருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்த்து பிறகு கோபித்துக் கொண்டால் அதற்கு மதிப்பு இருக்கும். அப்படிக்கில்லாமல் புராணங்களை உருப் போட்டுக் கொண்டும், புராணங்களுக்குப் புதிய கருத்து சொல்லிக் கொண்டும் உலக தற்கால நிலையை உணராமல் பார்ப்பனர்களைப் போல் வேடம் போட்டுக் கொண்டு தங்களை மேல் ஜாதியார் என்று பிறர் மதிக்க வேண்டும் என்கின்ற ஆசையோடு திரிவது புலவர் தன்மையாகுமா என்று கேட்கிறோம். புலவன் என்றாலும்,...

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன். ஆங்கிலத்துக்கு ஆதரவு ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும், முயற்சித்தும் வந்து இருக்கின்றேன். அக்காலத்திலெல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100-க்கு சுமார் 5 முதல் 10 பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்கவழக்கப் பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ - வருகிறதோ அதுபோன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்ட...

அயோக்கியர்களா? அல்லது முட்டாள்களா?

 நடை, உடை, பாவனை, மற்றவர்களை நடத்துதல் ஆகிய சகல காரியங்களிலும்  கோவில், சத்திரம், சாவடி முதலிய சகல இடங்களிலும் பேதமும், பிரிவினையும் வைத்து அதன் மூலமே மக்களின் இழிவையும் சிறுமையையும் நிலைநிறுத்தி ஒருவனுக்கு ஒருவனைக் கீழ்மைப்படுத்தி வைத்திருக்கும் முறைகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும், அதற்கு ஆதரவளிப்பவர்களை அடக்க வேண்டும் என்றும் சொன்னால், அதை வகுப்புவாதம் என்று சொல்லுவதும், அந்தப்படியான பேதத்தையும் இழிவையும் சிறுமைகளையும் நிலைநிறுத்த வேண்டுமென்று சொல்லுவதும் வகுப்புவாதம் அல்ல என்றும் சொல்லப்படுமானால் சொல்லுகின்றவர்கள் அயோக்கியர்களா அல்லது கேட்டுக் கொண்டிருக்கிறவர்கள் முட்டாள்களா என்று கேட்கின்றோம். Š-  பகுத்தறிவு, தலையங்கம், 02.12.1934

பள்ளிக்கூடத்தின் அவசியம்

இன்று நம் நாட்டில் நம் பிள்ளைகள் படிக்கப் பள்ளிக்கூடங்களுக்குத் தேவை அதிகமாகி விட்டது . இந்த 4,5 வருஷங்களாகச் சண்டை ஏற்பட்ட பிறகும் மேன்மை தங்கிய கவர்னர் சர் . ஆர்தர் ஹோப் துரை வந்தபிறகும் , பள்ளிக் கூடங்களில் படிக்கும் பிள்ளைகள் அதிகமாக ஆகிவிட்டதுடன் , அதிகமான எண்ணிக்கையுள்ள பிள்ளைகள் பாஸ் செய்து காலேஜ் வகுப்புகளுக்கு யோக்கியதை உடையவர்களாகவும் ஆகிறார்கள் . இந்தப் பிள்ளைகள் பெரிதும் தங்களுக்குப் போதுமான பள்ளிக்கூடங்கள் இல்லாமல் தவிக்கின்றார்கள் . அதிலும் இவ்வருஷம் அதிகமான தவிப்பு . சென்றவாரம் வந்த மெயில் பத்திரிகையில் சென்னை காலேஜ்களில் படிக்க வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை அமோகமாய்ப் பெருகிவிட்டது என்றும் , அனேக காலேஜ்களில் இடமில்லை என்று வெளியில் பலகை எழுதி தொங்கவிட்டிருக்கிறது என்றும் , பிள்ளைகள் இடமில்லாமல் தெருத்தெருவாய் அலைகிறார்கள் என்றும் , உதாரணமாகச் சென்னை பச்சையப்பன் காலேஜுக்கு 600 புதுப்பிள்ளைகள் சேர்க்க வேண்டியதற்கு 2000 விண்ணப்பங்கள் வந்து அப்போதே குவிந்து கிடக்கின்றன என்றும் எழுதி...